Saturday, February 27, 2010

8டாத அறிவு ..

காப்பி 

ஒருவர் தன் நண்பரை புதுமனை புகு விழாவிற்கு அழைக்க சென்றிருந்தார்.

"அவசியம் வந்துவிடுகிறேன்...கொஞ்சம் காபி சாப்பிடுங்களேன்..."

"ஐயோ!மன்னிச்சுடுங்க ....காப்பி சாப்பிடுகிறது கெட்டப் பழக்கம் ...அதனால உடம்புக்கு தான் கெடுதி..."

"என்ன கெடுதியா..?"

"ஆமா!ஆரம்பத்திள்ள சுறுசுறுப்ப கொடுக்கிற மாதிரிதான் இருக்கும் ....நாளடைவில் மூளையின்   செயல்பாட்டை மந்தமாக்கிடும்..."

"அப்ப  ...காப்பி பத்தி முழுவிபரமும் தெரியும்ன்னு சொல்லுங்க...."

"காப்பி..ரூபியெசி...தாவர குடும்பத்தை சேர்ந்தது....காப்பி மரமா வளர்ந்தா ...பதினைந்து அடி உயரம் கூட வளரும்....ஆனா ...நாம வியாபார நோக்கத்தில் ...அதை வளர விடுகிறது இல்லை ...காப்பி கொட்டைகளை பறிக்கிற விதமா...ஐந்து அடிகளிலே....அடிகடி வெட்டி விடுகிறோம்..."

"அப்படியா?"

"அபிசிநியாவில் ...கப்பா (caffa )  ...என்ற இடத்தில தான் காப்பியை முதன் முதலில் பயன் படுத்தினாங்க ...காப்பி கண்டுபிடிச்சதில்ல...சிறு கதையே இருக்கு ..."

"கதையா...சொல்லுங்களேன்..."

"அரேபிய பள்ளத்தாக்கில் ஆடு மேய்க்கும் சிறுவன் ...தன் ஆடுகள் ...ஒரு வித செடியின் காய்களை சாப்பிட்டால் ..உற்சாகத்துடன் குதித்து விளையாடுவதை கவனித்தான்...அப்புறம்...அவனும் ..அந்த காய்களை சுவைத்து பார்த்தான்....ஒரு விதமான தெம்பும்  . .. உற்சாகமும் ...கிடைக்க பெற்றான்...தான் பெற்ற இன்பத்தை பிறரிடமும் கூற ...காப்பி கொட்டையை பானமாக்கி பருகும் பழக்கம் ஏற்பட்டது."

"அப்ப அரேபியாவில தான் காப்பி கடை ஆரம்பிச்சாங்கள...?"

"இல்லை...லண்டன்ல...ஜார்ஜ் யார்டு என்ற இடத்தில் தான்....1652    ல்ல முதன் முதல்ல காப்பி கடை ஆரம்பிச்சாங்க ,,,அயல் நாடுகளில் பால் சேர்க்காம...இனிப்பு குறைவா ...சாப்பிடுவாங்க ..."

"அப்படி சாப்பிட்டா...நல்லதா...?"

"அப்படி சாப்பிடிகிறது...தான் சரியான முறையாக அவுங்க கருதுறாங்க...ஆனா மருந்தாகவும் காப்பி பயன்படுகிறது..."

"மருந்தா...?"

"ஆமா..மலேரியா காச்சலின் போது ... உடல் நடுக்கத்தையும் , குளிரையும் குறைக்க சுடன காப்பி சாப்பிடலாம்...அது போல் ஆஸ்துமா தொல்லைய  குறைக்க ...கக்குவான் இருமல் ..ஹிஸ்டீரியா...போன்ற பயணிகளின் கடுமையை  குறைக்க காப்பி சாப்பிடலாம்.."

"என்னை குழப்பிறீங்க...காப்பி சாபிடலாமா...வேண்டாமா...?"

"கப்பியினால ...நன்மையை விட ..தீமைகள் தான் அதிகம்...இரத்த குழாய்களின் சீரான செயல்பாட்டை குழப்பத்துக் குள்ளாக்கி ..நரம்பு தளர்ச்சி விரைவில் வந்து விடும்...இதய நோய்க்கு வாய்ப்பு அதிகம்....அஜீரணம் ...மலசிக்கல்...உறக்க கேடு ...போன்ற தொல்லைகள் கொடுக்கும் ..உடலின் ஜீவா அணுக்களின் வளர்ச்சியை  கெடுக்கும் ..."

"அப்ப ...இனிமே ..காப்பி சாப்பிட நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன்...சொல்லவும் மாட்டேன்..."

"அப்ப நான் கிளம்புறேன்...அவசியம் வந்துடுங்க..."

"அது சரி ...இப்ப நீங்க என்ன தொழில் பண்ணுறீங்க..."

"அதுவா...மதுரையில ..காப்பி கடை இரண்டு வச்சுருக்கேன்....சென்னையில ...காப்பி தூள் ஏரியா டிஸ்ட்டிரிபுஷன் ....எடுத்து பண்ணுகிறேன் ..."

"!!!!!"



8டாத அறிவு ..

சூரியன்

கோடை வெயில் கொளுத்தியது...பெரியவர் தள்ளாடியபடி நடக்க ...திடீரென்று கீழே விழுந்தார்..கூட்டம் கூடியது.
"வெளிச்சத்தை மறைக்காதீங்க ...காற்று படட்டும்...அப்படி மர நிழலில் கொண்டு போங்க ..."கூட்டத்தில் ஒரு குரல்.

"தண்ணீர் கொடுங்கப்பா...குடிக்க .."மற்றொரு குரல்.

"தண்ணீரோட கொஞ்சம் உப்பு சேர்த்து கொடுங்க ..."என நடுத்தர வயது இளங்கற் கூறினார் .

"ஏன் உப்பு கொண்டு வர சொல்லுறீங்க ..."என கல்லூரி செல்லும் மாணவன் வினவ...

"இது சண் ஸ்டோர்க் (sunstrock ) அதுனால உப்பு தண்ணீர் தான் கொடுக்கணும்"

"சன்ஷ்டோர்க் .அப்படின்னா..."

"பெரியவர் வெயில்ல நெடு நேரம் நடந்து வந்ததால ...உடம்பில இருக்கிற நீர் அதிகமா வெளியேறி இருக்கு ....அதனால தலை வலி,வயிற்றில் சங்கடம் ,காலமல் வலிமை இழந்து விடல், தலை சுற்றல் ..ஆகியன ஏற்படும் . இது எல்லாம் ஆரம்ப அறிகுறிகள் ..தான் இத டாக்டர்கள் .."சால்ட் டிபிசியன்சி ஹீட் எச்ஷாஷ்டன் " ன்னு சொல்லுவாங்க.."

"அப்ப  உப்பு ..தண்ணி அடிகடி குடிக்கணும்..அப்புறம் என்ன சார் ஆகும்?"

"லோ பிபி ...குறைந்த இரத்த அழுத்தம் ...நோயாளி மயங்கி விழ நேரிடலாம்...இரத்தத்தில நீர் சத்து குறைந்து ..தலை சுற்றல் ஏற்படும் ..இருபத்தி நான்கு மணி நேரத்தில ஐந்து லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் ...இருபத்தைந்து  கிராம்  உப்பு நீருடன் கலந்து தரவேண்டும்...வெயில்ல இல்லாம பார்த்துக்கணும்..."

"அதனால தான் பெரியவர ...மர நிழலில கொண்டு போக சொன்னீங்களா..."என கல்லூரி மாணவன் நக்கலாக கேட்க ..

"ஆமாம்பா ..அதன்னால தான் அந்த காலத்தில சாலை ஓரத்தில மரம் நட்டாங்க..."

"ஆமா ஆமா..சாலை நடுவில மரம் நட்டா ..வாகனங்கள் போக முடியாதில்லை .."  என மாணவன் கூற அனைவரும் சிரித்தனர்.

"தம்பி உன்கிட்ட சின்ன கேள்வி கேட்கலாமா...?"என நடுத்தரவயதினன் கேட்க...

"ஓ, தாரளம கேளுங்க ..."

"பாகிஸ்தான் தூரம்மா..?சூரியன் தூரமா. ...?"

"என்ன சார் சூரிய வெயில்ல பத்தி இவ்வளவு அருமையா சொன்னீங்க...எப்படி கேட்டு புட்டீங்க ...சூரியன் தான் தூரம்..."

"அது எப்படி தம்பி ...சூரியனை கண்ணால பார்க்க முடியுது...ஆனா பாகிஸ்தான் பார்த்த  தெரிய மாட்டிங்கீது..அப்பா பாகிஸ்தான் தான் தூரம்.."

"!!!!!"
(கல்லூரி மாணவன் கூ ட்டத்திலிருந்து நழுவ...

கூட்டம் "நல்ல பதில் அடி கொடுத்தீங்க..."





   

உழைப்பு

        'மெய் வருத்தக் கூலி தரும் ' திருவள்ளுவரின் இவ்வரிகள் வாழ்வியலின் உயர்வுக்கு வழி வகுப்பவை. வெற்றி கனியை பறிக்க நினைப்பவர்கள் கனவு  காண்டால்  மட்டும் போதாது. அதற்கான செயலில் முழுமூச்சாக இறங்கி வேலை பார்க்க வேண்டும். கடினமான உழைப்பு தான்  முழுமையான ஊதியத்தை பெற்று தரும் .  

        "வாய்ப்பு தானாக   வருவதில்லை .மனிதன் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும்,"பெர்னார்ட்ஷா சொல்லுவது போல் எதுவும் தானாக நிகழ்ந்து விடாது.வாழ்வில் எதுவு தானாக வராது. எதையும் தேடிச் செல்பவருக்கு வாய்ப்பு கிட்டும் .நல்ல வழியில் நாம் எதையும் அணுகினால் அதை அடைந்துவிடலாம்.தெளிந்த சிந்தனை ,நல்லது எது?கெட்டது எது ? என அறிந்திட உதவும் அறிவு. இவையே வெற்றியின் ரகசியம்.

       "எழுதிருங்கள், விளித்து கொள்ளுங்கள் இனியும் தூங்க வேண்டாம் .எல்லாத் துன்பங்களையும் நீங்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."
       சுவாமி விவேகனந்தரின் இவ்வரிகள் வெற்றி பெற்றவரின் வாழ்கையின் உண்மை சம்பவங்கள் ஆகும். தூங்குபவனிடம் விடியலை பற்றி பேசிவிட முடியாது. விடியலின் அருமை தூங்குபவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
  
      "அதிகாலையில் சென்று இரைதேடும் பறவை போல் நான் விழித்தி செயல் பட வேண்டும்."

""என்ன சார் ...என்னதான் உழைச்சாலும் ...அதுக்கான ஊதியம் ..வரமாட்டீங்கதே..."

"மாங்கு மாங்கு ன்னு வேலை பார்க்கிறேன்...ஆனா ..கம்பெனியில எனக்கு மட்டும் புரமோஷன் தரமாட்டுகிராங்களே.."

"என்ன தான் கூவி கூவி வந்தாலும் ..அந்த காலணா லாபத்தை தவிர வேற இதை பார்க்க முடியுது..."

"வாங்கிற சம்பளம் ..கைக்கும் வாய்க்கும் பத்தல இதில என்னத்தை சேமிக்கிறது..."

இப்படியாக பல விதமாக புலம்புவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
எதுலையும் புதுமை வேண்டும் ,உழைப்பில் புதுமை ,கடினம் ..நிரந்தரமான வெற்றியை பெற்று தரும்.

    என் அருமை நண்பர் திரு. சுரேந்திர பாபு அவர்கள் கூறிய கதையை சொன்னால் ஆச்சிரியப்படுவீர்கள். கதை என்பதை விட உண்மை சம்பவம் என்று தான் கூறவேண்டும்.எதார்த்தமாக ஒருநாள் பேசும் போது நடந்தது...
  
"சார்..என்னதான் சொல்லுங்க உழைச்ச உழைப்பு என்னைக்கும் வீண் போகாது.."

"ஆமா..சரவணா..நீ சொல்லுறது..நிஜம் தான் .என் கண் முன்னாடி நடந்த சம்பவத்தை சொன்ன நம்ப மட்ட..."

"சொல்லுங்க..."

"ரவி ௮ய்ஸ் கம்பெனி தெயரியுமில்ல .."
"தெரியும் சொல்லுங்க..."

"அதன் ஓனர் அய்யா ..வயதானவர் ...அவர  நீ பார்த்திருப்ப ..."
"ஆமா தெரியும்.."
"அவர் கடவுள் இல்லை என்பாரு ...சாமி கும்பிட மாட்டார்..உழைப்பு மேல நம்பிக்கை  வச்சிருக்கிராவரு ...ஆனா இப்ப அவரு மகன் கவனிக்கிறான் ஆனா எதிர்மறை ..."
"அப்படியா.."

"தவறாக  சொல்லவில்லை .சாமி சாமி ன்னு ஊர்ல  உள்ள  எல்லா கோவிலுக்கும் போறவன்   அப்பாவை விட அதிகமாக உழைகிறவன் ... "

""அது தானே நல்லது ..."

"அன்ன ..அவங்க அப்பா ...தன் கொள்கையை விட்டு கொடுக்காம கடைசி வரை வாழ்ந்தார்..தெரியுமா.."

"சாகிற வரைக்கும்  சாமி கூம்பிட மாட்டாரா.."

"அது இல்லப்பா ..பேசும் போது குறுக்க குறுக்க பேச கூடாது ...அப்புறம் சொல்லமாட்டேன்..பொறுமையா கேளுங்க வாத்தியாரே..."

"சரி குறுக்கிடல ...சொல்லுங்க..."

"கம்பெனிக்கு முன்னால  போர்டு வச்சிருப்பார்...தினமும் ஒரு தத்துவம்எழுதி  போடுவாரு...படிச்சா நமக்கு புல்லரிக்கும்..."

”"சிலநேரம் நான்..போர்டுல எழுதாவான்னுக் கேட்பேன்...”

“எழுது ...நல்ல விசயம் நாலு பேருக்கு தெரியனும்ன்னு தானே போர்டு வச்சுருக்கேன் ...நான் எழுதுனா என்ன நீ எழுதுனா என்னா ..."
"நான் எழுதி முடிப்பதர்ர்க்குள் வந்து இந்தா அயிஸ் என்று கொடுப்பார்..சந்தோசமா இருக்கும் "

"இதை விட பிரமாதம் என்னன்னா ..அவரிடம் வேலை பார்ப்பவன் எல்லாம் வாழ்கையில் மிகவும் மோசமானவர்கள் ...உதவி காசு கொடுங்க அப்படி சொன்னா...உடனே ..அயிஸ் வண்டிய  கொடுத்து...வித்திட்டு வா...அப்படின்னு அனுப்புவார்...வந்த பின்னாடி ...அவன் விற்றாலும் விற்க்கா விட்டாலும் ..பத்து ரூபா தருவார்....அய்ந்து ரூபா தந்தா ஜனதா சாப்பாடு ...வயிறு நிறைய சாப்பிடலாம்..உழைத்து தினம் சாப்பிட நினைக்கிறவங்க...அவர் ஒரு வழிகாட்டி ...வாழ்கையில் மோசமானவங்களுக்கு அயிஸ் வண்டியோட ஓடி போக மாட்டானான்னு கேட்டா..."

"நிச்சயமா வருவான் ...உழைக்க வழி காட்ட வேண்டியது நம் கடமை ...என்ன ஆரம்பத்தில் வண்டிய கொண்டு எங்கயாவது போட்டு கச்சா அடிச்சுட்டு படுத்திருப்பான்...சாயங்கலம் வந்து வண்டிய கொடுத்திட்டு என்கிட்டே பத்து  ரூபா  வாங்கிட்டு போவான்...அவன் வண்டி கொடுக்கும் போது நாலு பேரு ..அண்ணனே...காசுக்கு அயிஸ் கொடுங்க அப்படி சொன்னா....உழைப்பின் அருமை தெரிந்து ...திருந்த மாட்டானா ..நம்பிக்கை தான்..."

அவர் கூறிய அந்த விசயம் எனாக்கு ஆச்சரியமாக தான் இருந்தது .வாழ்க்கையில் கொள்கைபிடிப்புடன் உழைப்பவர்கள் அதிகம் ...அவர்களுக்கு தான் சமுதாயம் அங்கிகாரம் கிடைகிறது...அவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

  எங்கள் ஆசிரியர் வாழ்விலும் பலர் தங்கள் கொள்கைகளுக்கு மாணவர்களை கண்ணடிப்பது கிடையாது.

   எங்கள் பள்ளியில் ஒரு சமயம் தொடர்ந்து ஆசிரியர் பையில் இருந்து பணம் காணாமல் போனது.மாணவர்கள் பலர் கேட்டு பார்த்தும் கிடைக்க வில்லை...விசாரித்தால்...

"மிஸ் ...நான் எடுக்கவில்லை ..மிஸ் "
"மிஸ் யாரும்...டேபிள் பக்கத்துல போகல..."
"

திடீர்ன்னு ஒரு நாள் ...மாணவன்  ஒருவன் மீது சந்தேகம்  வர ..அவனை அழைத்து விசாரிக்க ...
"நான் டேபிள் பக்கத்தில்ல வரலை சார் ..."

"கேண்டீன்ல அம்பது ரூபாய்க்கு வங்கி சாப்பிடையாமே ..."

"இல்லை சார் .."
"டேய்  பொய்  சொல்லுறியா...   சார் இவனுக்கு டி. சி.   கொடுங்க அப்பத்தான் இவன் அடங்குவான்...அவுங்க அம்மா அப்பாவ  அழைத்து வர சொல்லுங்க ...இல்லைனா போலிசுக்கு போன் போட்டு ..மைனர் ஜெயில்ல போடுங்க ...அப்பா தான் சரிபட்டு வருவான்..."

"பொறுமையா இருங்க மிஸ் ..டேய்  யாருக்கு எல்லாம் மிட்டாய் வாங்கி கொடுத்த ..."
"சார் ...சிவா...பி கிளாஸ் ராமு ..ஐந்தாம் வகுப்பு கார்த்தி "என சக மாணவர்கள் அடுக்கினார்கள்.

  கார்த்தி..."சார் நூறு ரூபா வச்சுருந்தான் சார் ...எனக்கு மிட்டாய் வாங்கி கொடுத்தான்...சாப்பிட்டேன்...கேட்டதுக்கு மாமா தந்ததா சொன்னான்.."
"சார் ..எனக்கு ஒரு பேனா , சாக்கிலேட்..." என அடுத்தவன்.
"சரி அவன் பையை தேட சொல்லுங்க..."
"சார்..மிஸ் நல்ல பார்த்திட்டாங்க ...ஒண்ணும் இல்லை ....."
"டேய் ..உண்மைய சொல்லுடா......"
"சார்...எங்க அம்மா மேல சாத்தியமா...நான் திருடல சார்...எங்க மாமா கொடுத்தது தான்...சார்.."என அடம் பிடித்தான்.கடைசி வரி உண்மையாய் சொல்ல வில்லை .
"டீச்சர் அவுங்க அம்மாவை நாளை  வர சொல்லுங்க ..அப்புறம் முடிவு எடுப்போம்."
என கூறிவிட்டு என்வகுப்பிற்கு சென்றேன்.

சிறிது நேரத்தில் .."சார்...அவன்கிட்ட இருந்து பானம் கண்டு பிடிச்சாச்சு ..."

எப்படி என விசாரித்த போது ...அதிர்ந்தேன்.
"அவன் பேனாவை ஆசிரியர் கேட்டார் ...தரவில்லை ..சந்தேக பட்டு ..பேனாவை புடிங்கி ...பார்த்த போது ..பேனா ரீபில் உடன் ஐம்பது ரூபாய் நோட்டை ...சுற்றி வைத்து இருந்தான்..."
"பலே ..கில்லாடி ...திருடன் தோர்த்து போயிட்டான்..."
"சார் இவன் சாதாரண திருடன் இல்லை ..பலே..திருடன்.." என மாணவர்கள் சொன்னார்கள்.
அவன் வாங்கி கொடுத்த மற்றொரு பேனாவை பார்த்த போது அதிலும் ஒரு ஐம்பது ரூபாய் இருந்தது .

"சார்..பாவம்..தெரியாம செய்துட்டான்..இனிமே திருட கூடாதுன்னு சொல்லி அனுப்புங்க ..என் நேரமே ..சரி இல்லை...எதோ இந்த மட்டுமாவது என்பணம் கிடைத்ததே.. இனமே யாரி பயிலும் திருடாம இ ருந்தாலே ..போதும்..."என்று அந்த ஆசிரியர் மன்னித்தார்.


   வங்கி கடன் கட்ட மூத்த ஆசிரியர் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தார்.தலைமை ஆசிரியர் ஆளைபின் பெயரில் அவரை பார்த்து  வந்த ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.  பணம் காணாமல் போகியது ..தலைமை ஆசிரியரிடம் கூ றியதோடு சரி...யாரையும் விசாரிக்கவில்லை.அவரிடம் காரணம் கேட்டபோது ...

"சார்..என்ன்ன செய்யுறது ...நம்ம அஜாக்கிரதை...பையன குத்தம் சொல்ல கூடாது...அப்படி சொல்லி என்ன ஆகிட போறது..."என மாணவர்களுக்காக தனக்குள்ளே அழுதுகொண்டார்கள்.

"மாணவர்களை நன்முறையில் கொண்டு செல்லவது தான் தன் இலச்சியம் என தன் இலச்சியத்தின் மீது பிடிப்பு உள்ளவர்கள் ...ஜீவன் போக சொல்லி கொடுப்பதுடன்...ஆவி போக கற்று தருவதுடன் , பல நேரங்களில் தன் பொருளையும் பறிகொடுக்க நேரிடும்.

     குடும்பம் மறந்து, தன் சுற்றம் மறந்து,தன் வகுப்பு மாணவர்களையே தன் குடும்பமாக வின், சுற்றமாகவும் எண்ணி தன் வாழ்வையே தியாகம் செய்து வாழும் பல ஆசிரியர்கள் என்றும் இருக்கிறார்கள்.
இவர்கள் லியோ டால்ஸ்டாய் சொல்ல்வது போல் வாழ்பவர்கள்.
"வாழ்வதில் தான் இன்பம் ,உழைப்பதில் தான் வாழ்வு "
ஆம் ...உண்மையே.    

Friday, February 26, 2010

உனக்கு என்ன கவலை ...?

      நான் வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகள் ஆகி  இருக்கும் ....அந்த சமயம் நடந்த சம்பவம் இது ...

      பொதுவாக அனைவரும் கூறும் விஷயம் "உனக்கு என்னையா கவலை ...?மணி அடிச்ச காசு ...கவலை இல்லாத வேலை...கலையில போக வேண்டியது ...மலையிலே வர வேண்டியது ..அப்புறம் ஜாலி  தான்..."

எல்லா தொழிலும் ஆபத்து உண்டு . ஆனந்தமும் உண்டு . கண்ணுக்குத் தெரியும் விஷயத்தை தான் நாம் கூறுவது உண்டு. ஒருவருக்கு சாதகமாக அமைந்திருப்பது ,அடுத்தவருக்கு அவர் பார்வையில் பாதகமாகத் தெரியும்.இது உலக உண்மை. மனித வாழ்வு எப்போதும் நம்மில் இல்லாத ஒன்றையே தேடும்.

    சூரியனின் 'அல்ட்ர வயலட்' கதிர்கள் நம் கண்ணுக்கு தெரியாது. ஆனால், நமக்கு தெரியாமல், நம் உடலின் மேல் படிந்து தாக்கும் நோய் கிருமிகளை அழித்து விடுகிறது. 'சூரிய நமஸ்காரம் ' செய்யும் போது அழிகின்றன. இது போல் நம் கண்ணுக்கு தெரியாத  பல நல்ல விசயங்கள் நடக்கின்றன. மனிதன் எப்போதும் தன்னை அடுத்தவருடன் ஒப்பிட்டே வளர்கிறான் அல்லது  தாழ்கிறான்.

"சார் , வியாபாரம் ன்னு எடுத்துகிட்டா லாபம்,நஷ்டம் இருக்கு ...ஆனா ..உங்களுக்கு ஆபத்தோ ...நஷ்டமோ  இல்லியே..."

"விவசாயிக்கு கூட மழை பெய்யவில்லைன்னாலும் நஷ்டம்..பெய்தாலும் கஷ்டம் ...ஆன ..உங்களுக்கு மழை பெஞ்சா என்ன ..?வெயிலடித்தால் என்ன...?டான்னு தேதி பிறந்தா சம்பளம் .."

"கவர்மெண்டு வேலையிலும் வாத்தியார் வேலைன்னா ரெம்ப ஈசி , வாய்க்கு  வந்தத சொல்லி தர வேண்டியது ..வசதிக்கு தகுந்த மாதிரி ..மனசுக்கு பிடிச்ச மார்க்க போடவேண்டியது...மாசம் மாசம் சம்பளம் ..."  

மேலே கூறிய அனைத்து விசயங்களும் பல சமயங்களில் ஆரம்பத்தில் "ஆமா ,ஆமா "; என மறுக்க முடியாத உண்மை தான் என்று  நினைப்பு இருந்தது. இச்சம்பவம் நடக்கும் முன்பு வரை ....
 
பல வியாபாரிகள் கஷ்டம் இல்லாமல் பணம் சாம்பாதிக்கும் தொழில் 'கல்வி' என்று பள்ளிகூடங்களை ஆரம்பித்த பின் ..கல்வியின் தரம் மக்கி விட்டது . கல்வி நிலையில் மாற்றமும் மாறிவிட்டது.

   அன்று காலை என்  தாயிடம் மதிய உணவு பெற்றுக் கொண்டு  ...பள்ளி விரைந்தேன் . அந்த சம்பவம் நடந்த போது...' நான் பத்தாம் வகுப்புக்கு ஆசிரியர்'.காலை எட்டு முப்பது மணிக்கே வந்து விட்டேன்.    
  
    காலையில் பூத்த மலராய் ...மங்காத புன்னகையின் மலர்கள் பள்ளித் தோட்டத்தில் பூக்கத் தொடங்கின . மொட்டுக்கள் அரும்பு விட ஆரம்பித்தன.

     காலை சூரியன் என் உடலுக்கு எரிச்சலூட்டியது ..எதோ நடக்கப்  போகிறது என்பதற்கு கான எச்சரிக்கையோ..!

     எங்கள் பள்ளி நாடார் சமுகத்தை சார்ந்த ..கமிட்டி பள்ளி ...பள்ளி நிர்வாகிகளும் ஆனந்தமாய் பள்ளியை  பார்வையிட வந்தனர்.

     எங்கள் பள்ளி மூன்று தளங்களை உடையது .நான் இரண்டாவது மடியில் பாடம் நடத்த சென்றேன்.    பள்ளிக்கு ஒரு அகலமான பனிரெண்டு அடி வாசல் கதவு உண்டு . அதற்கு பத்தடி தொலைவில் மற்றொரு ஆறடி வாசல் கதவு உண்டு. பள்ளி ஆரம்பித்த உடன் அகலமான வாசல் கதவு மூடப்படும். பின்பு குறுகிய வாசலை தான் பயன்படுத்த வேண்டும்.

       மணி ஒன்பது முப்பது . பள்ளி நிர்வாக அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது . 'பாபு' இணைச்செயலர் என்னை அலுவலகத்திற்கு  அழைத்தார்.

"சார் , நீங்க பாடம் நடத்தினது போதும் ...இன்னைக்கு லீவு..."

""சார்..."
"மிஸ்டர் ...வேகமாக போய் ....அமைதியாக ..முதல் வகுப்பு மாணவர்களை ..கேட் வெளியில் நிற்க வை ..."

"சார் ..விளையாடாதீங்க ....நிஜமாக தான் சொல்லுறீங்களா ..."


பாபுவின் முகத்தில் படபடப்பு காணப்பட்டது.முகம் வியர்த்து இருந்தது...விளக்கம் கூறாமலே ...தரை தளத்திற்கு விரைந்தார்.முதலாம் வகுப்பு மாணவர்களை வரிசையாக காலை பிரார்த்தனைக்கு வர செய்வது போல் ...வருசையாக வர செய்தார்..நானும் பிற ஆசிரியர்களுடன் மாணவர்களை வரிசையாக கேட் வெளியில் நிற்க செய்தோம். என்னை போல் பிற ஆசிரியர்களும் அவரின் செயல் கண்டு புரியாமல் முழித்தோம்.

    அவர் ஒவ்வரு வகுப்பாக சென்று பர பரப்பாக அனுப்புவது தெரிந்து எனக்கு சுழல் மெதுவாக புரிய ஆரம்பித்தது.

முதல் தளத்தில் மூன்று நிமிடத்தில் மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.இரண்டாவது தளம் ...ஓடும் பாபுவை பார்த்து ..ஆசிரியர் ஒருவர் .."எனா நடக்குதுன்னு  தெரியலை ...பிள்ளைகளை பையை வைத்து விட்டு கேட்டுக்கு வெளியில் அனுப்ப சொல்றார்..."

 "கிறுக்கு பிடிச்சு போச்சா...விஷயம் என்னான்னு சொல்லாம...வரிசையா கூட்டிகிட்டு aபோகனுமா..." மற்றொரு ஆசிரியர் புலம்பல்.
அத்தனையும் பாபு காதில் விழுந்தாலும் மாணவர்களை அனுப்புவதில் தான் மும்மரமாக இருந்தார்..அவருடன் தற்சமயம் மேலும் சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டனர்..

"சரவணா ...கூடவே இரு..எங்கையும் ..போகாத ...இனிமேல் தன் வேலை இருக்கு..."

"அனைத்து துவக்க பள்ளி மாணவர்களும் வெளியில் சென்று விட்டனர்.மெதுவாக என்னை அழைத்தார்..

"ரக்சியம்மா வச்சுக்க...இன்னும் பத்து நிமிடத்தில .....இங்க 'பாம்' வெடிக்க போகுதாம் .போன்  வந்தது..."

"சார் ...உண்மையுமா..." பயத்துடன்...கேட்டேன்.

"வாய பிளக்கத்தே..வேகமா...பெரிய பையலுகள...அனுப்பு ..."

"பக்கத்துக்கு பள்ளி கூடத்தில அறிவியல் காண்காட்சி நாடக்குதாம் அனைத்து மாணவர்களும் விரைந்து கேட் வெளியில் நிற்கவும்..."என சமயோசித புத்தியை பயன்படுத்தி அனைவரையும் வெளியேற்றினேன்.

இப்படி நடக்கும் போதே...பள்ளியின் வாயிலில் கூட்டம் கூட தொடங்கியது..
ஆண்டவன் புண்ணியத்தில் அனைவரையும் அனுப்பிவிட்டோம்..பாம் விஷயம் தெரியும் ஆதலால் எனக்குள் பயம் பரவியது...இன்னும் வகுப்பறை விட்டு நான் வெளியில் செல்லவில்லை .உள்ளுக்குள் பயம் பரவியது .உண்மையிலே ...பாம் இருந்தால் ...நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது...

 
     விஷயம் தலைமை ஆசிரியர் மூலமாக பிற ஆசிரியர்களுக்கு பரவ ..பலர் எஸ்கேப் ..
  
     பாபு என்னை அழைத்து ...(மிகவும் தைரிய சாலி ...எனக்கு தானே ..மனசு தெரியும்..)

"ஒவ்வரு வாகுப்பா பார்க்கணும் ..ஏதாவது மாணவர்கள் உள்ளே இருக்கிறார்களா...?"

"சார்..எல்லாரையும் அனுபிவிட்டேன் .. "

"அவசரபடாதே...பதட்டபடாதே...நானும் உன்னோடு தான் வருவேன்..."
"ம்ம்ம்ம்...சரிங்க சார்.."

"உள்ளே..சந்தேகத்திற்கு இடமான பொருள்கள் இருந்ந்தா...அதை கவனிக்கணும்...வித்தியாசமா எது இருந்தாலும் ..சொல்லு .."


அவருடன் சில நிர்வாகிகளும் உடன் வந்தனர்...அனைவரும் அச்சமின்றி ..அனால் அச்சத்துடன் ..தேடினோம்..
 
   விஷயம் காட்டு தீ போல் பரவி பெற்றோர்கள் பள்ளிமூன் தன் பிள்ளைகளை அழைத்து செல்ல வருகை புரிந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமே...? பாம் வெடித்து எத்தனை குழந்தைகள் பலி யோ...? என்ற வதந்தியுடன் ...பதட்டத்துடன் தங்கள் குழந்தைகளை வாரி அனைத்து சென்றனர்.

      'பாம் ஷ்குவார்டு ' வந்தது...எங்கள் யாரையும் அனுமதிக்க வில்லை . கடைசியில் புஷ் வானம் ஆகிவிட்டது.டெலிபோன் புரளி அன்று அனைவரையும் வாட்டி எடுத்து விட்டது.
  
     அந்த மூன்று மணி நேரம் பட்ட மன உளைச்சலை யாரும் வர்ணிக்க முடியாது.பணத்தை அள்ளி கொட்டி இலவசமாக கல்வி தரும் நிர்வாகிகளுக்கு தான் எத்தனை மன வருத்தம் , மன உளைச்சல் . பெற்றோர்களுக்கு தன் எத்தனை பெரிய பட படப்பு ...பயம் ...சிரமம் ...

    அன்று மாலை பேபரில் பாம் ஷ்குவர்டு தேடுதலுடன் படம் வந்தது..நிர்வாகத்துக்கு தான் எத்தனை கெட்ட பெயர் .."புரளியே இவ்வளவு பாடு படுத்தினால்..."

   அன்று நிர்வாகிகள் சமயோஜித புத்தியுடன் செயல் பட்டதால் ...மாணவர்கள் நெரிசலில் சிக்கி காயம் படாமல் ...மாணவர்களும் , ஆசிரியர்களும் பத்திரமாக வெளியில் செல்ல முடிந்தது.அன்று செயல் பட்ட நிர்வாகிகள் அனைவரும்  பாராட்டப்பட வேண்டியவர்கள்.
 
   தயவுசெய்து ஆசிரியர் பணி எவ்வளவு கடினமானது...ஆபத்தானது...கவனமுடன் செய்யல் பட வேடியது என்பதை உணர்ந்து ..மணி அடிச்ச காசு என்று பேசுவதை நிறுத்துங்கள்.
 
வருங்கால தூண்களை உருவாக்கும் வழமையான அறப்பணி ஆகும்.இது அர்பணிப்புடன் செய்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். 

 

Thursday, February 25, 2010

8டாத அறிவு ..

                                      ௨.திருவிழான்னு  சொன்ன .....

   மேலூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருவர் பேசி கொண்டனர்.

"டேய் , ரவி ...எங்கடா போற..?"

"என்னடா சிவா இப்பிடி கேட்டுட்ட ....மதுரையில சித்திரை திருவிழா ...ஆத்துல அழகர் இறங்குகிறார் தெரியுமில்ல ...ஜனம் கூட்டம் அதிகமில்ல அதான் ஜவுளி விற்க  போறேன் "

"சரி ...சரி ..வித்துட்டு வா ...ஆனா ..வாங்கிகிட்டு வந்துவிடாத..."

"என்னடா பேசுற...கொஞ்சம் புரியுறமாதிரி பேசுடா..."

"திருவிழா நடக்கிற இடம் , திருமண மண்டபம், சந்தை கூடுகிற இடம்..எல்லாம் தண்ணி பார்த்து குடிக்கணும் ...அது மட்டுமல்ல ..குளம்,குட்டை,ஆறு ஆகிய இடங்களிலே...கை,கால் அலம்புகிறது, குளிக்கிறது ...இது போல செய்யல தவிர்த்திட வேண்டும்... முடிஞ்சா செய்யாம இருக்கிறது உத்தமம்..."

"தண்ணியில அப்படி என்னடா இருக்கு ...?"

"என்னடா அப்படி சொல்லிட்ட ...நீ குடிக்கிற தண்ணி....சாப்பிட்ட சாப்பாடு செரிக்க உதவுது.. உடல்ல ஓடுகிற இரத்தம் உற்பத்திக்கு தேவைபடுகிறது... அப்புறம்..இரத்தத்தில் கலக்காத யூரியா ...சக்கரை ,தேவையற்ற பொருட்களை சிறுநீர்  மூலம் வெளியேற்றுகிறது..."

"அதான் ஒரு நாளைக்கு எட்டு டம்பளர் தண்ணி குடிக்கனும்னு சொல்றாங்களா...அதுசரி திருவிழாவில்ல..  தண்ணி பார்த்து குடிக்கனும்னு சொன்னியே என்ன விபரம்னு தெளிவா சொல்லு "

"அதிக கூட்டமான இடங்கள்ள ..கலரா நோய்  கிருமிகள் பரவ வாய்ப்பு அதிகம்...கலரா நோய் ,ஈக்கள் உணவு ஒட்க்காறது மூலாமாகவும்...ஆத்து தண்ணியில கை, கால் கழுவுறது மூலமாகவும் ..பரவும்"

"காலராவா?"

"காலரா நோயானது 'விபிரியோ கலரா பேசில்லை' என்ற நூன்கிருமியினால் உருவாகிறது ....இந்த கலரா பாதிக்கப்பட்டவங்க வாந்தி ,மலம் மூலமா ...நோய் கிருமிகள் வெளியேறி ...தொடர்ந்து பரவும்..."

"என்ன செய்யும் ..?"

"சிறு குடல்ல ..பல இடங்களில் ..குடல் அழற்சி உண்டு பண்ணி...அதிகமான திரவ இழப்பை ஏற்படச் செய்கிறது...நோய் உள்ளவர்களுக்கு வாந்தி ,வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் ...அதனால தசை வலி ...உண்டாகும் சிறுநீர் கழிப்பது கஷ்டமாகும்..."

"அப்படியா...அதனால தான் ..திருவிழா காலத்தில சுகாதார வசதி அரசு கூடுதலாக ஏற்படுத்தி தருகிறது ...ஆங்காங்கே மலம் ,சிறுநீர் கழிக்க கழிப்பறை கட்டுறாங்கள் ..."

"அது மட்டுமில்ல ..குளோரின்னுடன் கலந்த சுத்தமான தண்ணீரை பயன் படுத்துவாங்க ..காலரா தடுப்பூசி போடுவாங்க ...அதனால நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தலாம் .."

"இவ்வளவு விபரம் தெரியுது ...இரண்டாயிரத்து பன்னிரெண்டில உலகம் அழியும்மா அழியாதா ...உலகம் எப்படி இருக்கும் ?"

"எதோ எனக்கு தெரிஞ்சத ..சொன்னேன்ப்பா...தெரியல ...அதை நீயே சொல்லு .."

"என்னடா இது கூடவா தெரியால ...எப்ப இருக்கிற மாதிரியே உருண்டையா இருக்கும் ..(மனதிற்குள் ..பெரிய எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசுறே..எப்படி மடக்கினேன் பாரு ..)"

"என்னடா..நீ இன்னும் கிரிக்கெட் விளையாடுற ...போல தெரியுதே.."

"எப்படிடா கரெக்டா சொல்ற .."

"அதான் 'ஓவரா' பேசுறியே ..."

"!!!!!"

Wednesday, February 24, 2010

தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறையிலாவது மதிப்பெண்ணை மையப்படுத்தும் கல்வி சூழல் மாறுமா?

  
    ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்  கட்டுரை கொடுத்து , அதனை எழுதிவர செய்தார். அவர் கொடுத்த தலைப்பு ..."கடலில் நீந்துவது எப்படி? உன் அனுபவத்தை பகிர்ந்து கொள்."

      கொடுக்கப்பட்டது என்னவோ வீட்டுப்பாடம் , இருந்தாலும் அவர் அதனுடன் ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்."இக்கட்டுரைக்கு நான் மதிப்பெண் தருவேன். அதில் அதிக  மதிப்பெண் பெற்று முதல்  இடம் பிடிக்கும் கட்டுரைக்கு உரிய மாணவன் தான் , மாவட்ட அளவில் நடைபெறும் கட்டுரை போட்டிக்கு அனுப்பப்படுவர்".  எப்படி ?
  
        மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுத ஆரம்பித்தனர்.  கட்டுரையும் சமர்பிக்கப்பட்டது. கட்டுரை எழுதிய மாணவர்களை நீச்சல் தெரிந்து அதை அனுபவித்து எழுதியவர்கள், நீச்சல் தெரிந்தவர்களிடம் நீச்சல் பற்றி கேட்டு எழுதியவர்கள், நீச்சல் பற்றி தெரியாமல் , தெரிந்தவரிடமும் கேட்காமல் , புத்தகத்தை பார்த்து காப்பி அடித்து எழுதி வந்தவர்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம்.

       யாருக்கு பரிசு கிடைத்து இருக்கும் என நினைக்கிறீர்கள்? நிச்சயம் அனுபவித்து உண்மையை உணர்ந்து எழுதியவர்களுக்கு கிடைக்க வில்லை . சரி , அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து பெற்ற அறிவை பயன்படுத்தியவர்களுக்காவது கிடைத்திருக்குமானால் அதுவும் இல்லை, அப்படியே மனணம் செய்து காப்பி அடித்த மாணவனுக்கு தான் முதல் பரிசு கிடைத்தது.
  
        அதேபோல் தான் ,மாவட்ட அளவில் நடை பெற்ற போட்டியிலும் மனணம் செய்து , புத்தகத்தை காப்பி அடித்தவனுக்கு தான் கிடைத்து.  எதோ கட்டுரை பற்றி பேசுகிறேன்... என்று நினைத்து விடாதீர்கள். அதில் உள்ள உண்மையை  நினைத்து பாருங்கள் ! நம் கல்வி முறையின் அவலம் புரியும் !

         செயல் படுத்த தெரியாதவர்களிடம் தான் இன்று நிர்வாக திறன் போய்கொண்டு இருக்கிறது . நாம் பிந்தி இருக்கிறோம் ,அனைத்திலும் ..., பட்டியலிட அவசியம் இல்லை. செயல் முறை அறிவு பெறாமல் , புத்தகத்தை மட்டுமே  கரைத்து குடித்து மனணம் செய்து, அப்படியே வாந்தி எடுத்து , அதற்கும் அருமையாய் மதிப்பெண் அளித்து, மதிப்பெண் அடிப்படையில்  அனுபவம் பெறாத கல்வி ...எல்லா இடத்திலும் அரியணை நடத்தி கொண்டுஇருக்கிறது.


          அனுபவம் பெற்று அதை சுவைபட எழுத தெரியாமல் , ஆனால் செயல் படுத்த சொன்னால் , அருமையாய் செயல் படுத்தி வெற்றி கனியை கொடுக்கும் பண்பு நலன் அல்லது செயல் படுத்தும் அறிவு பெற்றவர்கள் ... அடிமைகளாய் அத்த கூலிகளாய் ...கால் வயிற்று கஞ்சிக்கு ...காய்ந்து ,வாழ்வில்  காணாமலே  போய் விடுகிறார்கள்.

         வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள் அனுபவம் கூடி , அதுவே அவர்களுக்கு புதிய உத்திகளை கையாளச்  செய்து ,அனைத்து துறைகளிலும் புதுமை கண்டுபிடிப்புகளை உண்டாக்கி , சாதனை படைத்து தமிழகத்தை , ஏன் , இந்தியாவையே முதன்மை நிலைக்கு உருவாக்கிவிடுவார்கள். இந்த சமச்சீர் கல்வி முறையிலாவது செயல் முறை அடிப்படையில் மதிப்பிடல் கொண்ட கல்வி திட்டம் அமையுமா?
 
           "எது செயல் முறை சார்ந்த கல்வியாகும் ?" என கேட்பது புரிகிறது . நாம் பாடம் நடத்தி விட்டோம், அதை நாம் படித்து புரிகிறதோ , புரிய வில்லையோ ...மனணம் செய்து, விடை தாளில் கக்க(வாந்தி எடுக்க ) செய்கிறது தற்போதைய கல்விமுறை  .

          அதை தவிர்த்து , பாடம் நடத்திய பின் , மாணவர்களை குழுக்களாக பிரித்து , அதை பற்றி விவாதம் செய்ய சொல்லி , அப்பாடத்தில் உள்ள முக்கிய கருத்துக்களை மாணவர்களே அக்குழுவில் குறித்து , குறிப்பிட்ட நேரம் முடிந்த பின் , அவர்களை அப்பாடத்தில் உள்ள கருத்துக்களை குழுவுக்கு ஒருவர் வீதம் எடுத்து சொல்ல செய்யலாம் . பின்பு மறு நாள் , அப்பாட சம்பந்தாமான செயல் பாடுகளை செய்து வர செய்து , அதனை தனி தனியாக மாணவர்கள் மத்தியில் தனி நபராக(presentation ) செய்து காட்ட செய்யலாம்.   அதன் மூலம் அவனின் செயல் முறை அறிவு மேன்மை அடைந்து , அனுபவம் வாயிலாக கற்றல் நடைபெற்று  , தவறுகள் நீக்கி , பிழைகள் தவிர்த்து,முழுமையான கல்வி கிடைக்கும் .

          செயல் அறிவு  பெற்ற மாணவன் ....எடுபிடியாக இல்லாமல் , உண்மையான அதிகாரிகளாக இருப்பார்கள், அது புதுமையான கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும் . மாணவனின் முழுமையான திறன் வெளிப்பட்டு , போலியான மதிப்பெண் சார்ந்த கல்விமுறை முற்று பெற்று , உண்மையான அறிவாளிகள் அதிகாரிகளாக வர நேரிடும்.   

        மாணவனின் நுண் அறிவு வளர்க்கும் கல்விமுறை செயல்படுத்தி , மாணவனின் செயல் அடிப்படையில் மதிப்பெண் கொடுத்து , உண்மையான திறமைசாலிகளுக்கு  வாய்ப்பை கொடுத்து , எதிர்காலம் நல்ல வலுவுள்ளதாக மாற்றுவோம். 
  
     மதிப்பிடல் மாணவனின் மானப்பட சக்தியை சோதிப்பதாக அமையாமல் , அவன் புத்தகத்தில் பெற்ற அறிவை செயல் படுத்தும் விதமாக அமைந்து, அச்செயல் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும்.  அறிவை செயல் முறை படுத்தும் சந்ததியினரை உருவாக்கி, உண்மையான அறிவாளிகள் பணிகளில் அமர்த்தப்பட வேண்டும். முறையான மதிப்பிடல் நடந்து உண்மையான திறமைசாலிகளுக்கு வாய்ப்பு போய் சேரவேண்டும். 
      (கல்வி சார்ந்த மதிப்பிடல் தொடரும் ...கருத்து மாறுபாடு இருப்பின் பகிர்ந்து கொள்ளலாம்)

Tuesday, February 23, 2010

8டாத அறிவு ..

            
"போடா ..வெங்காயம் ...சிகிரெட் குடிக்காதேன்னா ...கேட்கிறியா ...?நீ உருப்பட மாட்டே..நூரையீரல் பாதிச்சு ...சாகப்போறே..."

அண்ணே...ஏன் திட்டுறீங்க ...அதுவும் வெங்காயம் ன்னு ....வேற திட்டுறீங்க ...வெங்காயம்ன்னா.. அவ்வளவு கேவலமா போச்சா.."

"ஆமாப்பா...சின்னபிள்ளை மாதிரி நீ கேட்கிற ..இவனும் வளர வளர ஒண்ணுமில்லாம போறான்.. எப்படி வெங்காயம் உரிக்க உரிக்க ஒண்ணும்மில்லையோ ...அப்படி.."

"அப்படி யாருண்ணே சொன்னா.."

"என்ன சொல்றே..?"

"ஒரு நாளைக்கு அரை அவுன்சு விதம் நான்கு நாளைக்கு வெங்காய சாற்றை கொடுத்தா..நூரையீரல் திடப்படும்....அது மட்டுமில்லை ..இருமல் , காப வாந்தி ,நாள் பட்ட சளி நீக்கும் ..தெரியுமா..."

"அப்படியா..?"

" வெங்காயத்தை தினமும் உணவில் சேர்ப்பது மூலம் உடல் உஷ்ணம் ,உஷ்ணபேதி ,தலைவலி ,கண் மங்கல் ,விடா தும்மல், முழங்கால் வீக்கம் குணமாவதுடன் திரும்பவும் வராது ...இனி வெங்காயம்ன்னு ..திட்டு வீங்க...?"

"இனிமே 'வெங்காயம்ன்னு ..' யாரையும் திட்ட மாட்டேன்..இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்க..?"

"வெங்காயச் செடியின் இலை, தாள்,பூ,கிழங்கு ,விதை...அனைத்தும் மருத்துவ பயனுடையன...பூவ பருப்போட சமைத்து சாப்பிட்டா..வயிற்று வலி , மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்..அப்புறம்...வெங்காய இலை தாகம் ,மூலச் சுடு, உடல் வெப்பம் தணிக்கும் ...."


"வேறு சிறப்பான விஷயம் எதுவும் உண்டா...?"

" வெங்காய விதை பொடியை சக்கரையுடன் சேர்த்து மூன்று வேளை சாப்பிட குண்ம நோய் தனிவதுடன்..ஆண்மை உண்டாகும்.."

"வெங்காயத்தை பச்சையா  திண்ணா இரத்தம் மிகுதியாகும்ன்னு ...கேள்விபட்டேன்..."

"ஆமாம் ..ஆமாம்..அதை விடு ...நான் வெங்காயத்தை  பத்தி பேசுறப்ப ..எதோ ..வெங்காயத்தை உரித்த மாதிரி ..கண்ணில இருந்து தண்ணியா வருது.."

"வெங்காயத்தோட விலையை நினச்சுட்டேன்..அதான் ..அழுகையா வருது..."

Monday, February 22, 2010

தொட்டில் பழக்கம் ....

    
     எந்த வேலைக்கும் புத்திசாலித்தனம் என்பது முக்கியமானது. ஆனால் ஆசிரியர் பணிக்கு புத்திசாலித்தனம் மட்டும் போதாது, சமயோசித புத்தி என்பது  (presence of  mind )மிகவும் அவசியம். இப்படி பட்ட  பண்பு கொண்ட ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மட்டுமல்ல அந்த பள்ளிக்கும் நன்மை உண்டாகும்.

     "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் "என்பது பழமொழி மட்டுமா அல்ல ,  இது உண்மையும் கூட.  சில பழக்கங்களை மாற்றவே  முடியாது. இடது கை எழுத்து பழக்கம், படிக்கும் போது கால் ஆட்டிக்கொண்டே படிப்பது, கை விரல் நகம் கடித்துக் கொண்டே சிந்திப்பது, மூக்கை குடைந்து கொண்டே பேசுவது ....இப்படி கூறி கொண்டே போகலாம்.

       பல பழக்க வழக்கங்கள் நம் சிறு வயதில் நம்மை அறியாமலே தொடர்ந்து செய்வதாலும் ,அதை யாரும் கண்டிக்காததாலும் உண்டானவையே. சில பழக்கங்கள் நாளடைவில் மறைந்து  விடுகின்றன . ஏனெனில் ,அவை தவறு என மனதிற்கு உணர்த்தப் பட்டவையாகும் .

       பிறர் பொருளை தன்னை அறியாமலே எடுத்துச்செல்லும் மாணவன், முதலில் தன் 'செயல் தவறு' என்று 'உணராத வரை'அதை செய்வான். ஆசிரியர் 'இது தவறு' என கண்டித்தவுடன் ....அதை அறிந்தே ,அதை திருட அல்லது யாரும் பார்க்காத போது எடுத்து செல்ல முயல்வான். ஆசிரியரின் தொடர்ந்த கவனிப்பால் ...மாணவனின் இந்த பழக்க வழக்கம் முற்றிலும் நிறுத்தப்படும்.

    இவ்வாறு பல விசயங்களில் தொடக்ககல்வி ஆசிரியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க  வேண்டி உள்ளது.

     இப்போது நான் கூற வரும் விஷயம் உங்களை ஆச்சிரியபடுத்தும். நானும் இதை கேட்டவுடன் உங்களை போல் அதிர்ச்சியும் ஆச்சிரியமும் அடைந்தேன்.

      "மாற்று திறன்" படைத்தவருக்கான கல்வி கற்பிக்கும் முறை பற்றிய பயிற்சி வகுப்பில்
 சிறப்பு ஆசிரியர் கூறிய விஷயம் இதோ ....

       "ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் மதிய உணவு இடைவேளையில் ,மணி அடித்தவுடன் பள்ளியை விட்டு வேகமாக செல்வானாம் ...மற்ற மாணவர்கள் எல்லாம் பள்ளி வளாகத்தில் சாப்பிடும் போது ....அவன் மட்டும் சக மாணவர்களை விட்டு,.அதுவம் பள்ளி வளாகத்தை விட்டு ...மதிய உணவு சாப்பாட்டு கூடையுடன் ..வேகமாம ஓடிசெல்வதை பார்த்த ... தலைமை ஆசிரியருக்கு சந்தேககத்தை உண்டாக்கியது ...  அவன் தினமும் செல்கிறானா ? எப்போதாவது செல்கிறானா ..?   என தினமும் கவனித்து ...ஒருநாள் அவனை பின்தொடர்ந்து சென்றார் ..."
  
       "முள்காட்டுக்குள் நுழைந்த சிறுவன் உணவு கூடையை கிழே வைத்து விட்டு ...வேகமாக டவுசரை கழட்டி விட்டு ...'காலை கடனை '...செய்ய தொடங்கினான்..."
"'ச்சீ   ...இதற்க்கு தானா   வெளியே ஓடிவந்தான் ...' என மனதில் தன்னை தானே திட்டிக்கொண்டு  திரும்பலாம் என நினைகையில்  தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ..."(உங்களுக்கும் தான்)
  
        "டவுசரை மாட்டிய சிறுவன் ...உணவை திறந்தான் ...'காலை கடனுடன்'டிபன் உவை கொட்டி , சோற்றை அதனுடன் கூளப்பி ....ஆம் ..மலத்துடன் உணவை அள்ளி டிபன் பாக்சில் மீண்டும்  கொட்டி ...மலத்துடன் உணவை ருசித்து திண்ண தொடங்கினான்..."

       "கேட்க அருவெறுப்பா இருக்கிறாதா ? ஆச்சரியமாக  இருக்கிறதா? தலைமை ஆசிரியர் என்ன செய்தார் ? "என நீங்கள் கேட்பது தெரிகிறது."சரி ..சரி ..அதை கூறும் முன் இந்த பழக்கம் இப்படி வந்தது என்று பார்ப்போம் ?"

         "அம்மாணவனின் பெற்றோர்கள் இருவரும் குடும்பநலனுக்காக ...தினமும் அருகில் உள்ள பாட்டியிடம் பார்த்துக்க சொல்லி ...பாட்டி வீட்டு தொட்டியில் போட்டுவிட்டு ...சென்றுவிடுவார்கள். பாட்டி..சில நேரங்களில் பார்க்காமல் இருந்துவிடும் சமயங்களில் அம்மாணவன் தன்னை அறியாமலே மலத்தில் கையை வைத்து , அதை சுவைத்து உள்ளான்... தினமும் கதையாகி ...அதுவே பழக்கம் ஆகி விட்டது.பள்ளி செல்லும்  வயது ஆனவுடன் .. நான்கு  வயது முதல் பள்ளிக்கு  செல்ல ...அனைவருக்கும் தெரியாமல் மூன்றாம் வகுப்பு வரை தொடர்ந்து உள்ளது ...தலைமை ஆசிரியரின் கூர்ந்த அறிவால் இதை கண்டு பிடிக்க முடிந்தது."

           இன்று வேலைக்கு செல்லும் பெற்றோரே கவனமாக இருங்கள் ...உஷார்..."அது சரி ...தலைமைஆசிரியர் என்ன செய்தார்? "என நீங்கள் கேட்பது புரிகிறது.
    
            "மறுநாள் தலைமை ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் அழைத்தார்...'டேய்..இனிமே நீங்க இவன் எங்கே சாப்பிடுகிறானோ ...அங்கேயே நீங்களும் சாப்பிடனும் ...என்ன புரிகிறதா ? இவனை பார்த்த நல்ல சாப்பிடுகிற..மாதிரி தெரியவில்லை ...உங்களோட இவனையும் சேர்த்து...நண்பனாக்கி கொள்ளுங்கள் ..."என கட்டளை இட்டார்.

      மணி அடித்தவுடன் சக மாணவர்கள் அவனை பின்தொடர ..அவனால்  வேறு இந்த செயலும் செய்ய முடிய வில்லை ...உணவை உணவாகவே உண்டான்.. இது தொடர் கதையாகிவிடவே அவன் அச்செயலை மறந்தான் ...நாளடைவில் அவனும் பிற மாணவர்களை போல் உணவு உட்கொண்டான். நான்காம் வகுப்பு வரும் போது பிறர் கவனிப்பு இல்லாமல் , அவனாகவே பள்ளி வளாகத்துக்குள் உணவு அருந்தினான்.தற்போது அவன் சாதாரண குழந்தைகளின் மன நிலைக்கு வந்து விட்டான்.


     தலைமை ஆசிரியர் அவனின்  அப்பழக்கத்தை அறிந்த  போதும் , அவனை  கண்டிக்காமலே , அவனின் இப்பழக்கத்தை தன் சமயோசித புத்தியால் வென்றுள்ளார் . அவரின் செயல் பாராட்ட தகுந்தது. பிற மாணவனிடமோ, சக ஆசிரியரிடமோ அவனின் இச்செயலை கூற வில்லையாம். இச்சம்பவம் நடந்து , அவன் திருந்தி , உயர்நிலை படிப்பு முடிந்த பின் தெரிவித்துள்ளார்.சக ஆசிரியர்கள் அப்போதுதான் உணர்ந்தார்களாம் "ஏன் இவர் பிற மாணவர்களை அவனுடன் சேர்ந்து சாப்பிட சொன்னார் ?"   என்பதை.


     இப்போதாவது புரிந்திருக்கும் ஆசிரியர் தொழில் மன்னிக்கவும் பணி புனிதமானது மட்டும் அல்ல , புதிரானதும் தான் என்பது !என்னும் பல புரியாத புதிர்கள் காத்திருக்கின்றன ...  

  
      


 

Sunday, February 21, 2010

தமிழ் மொழி அறிவை கதைகள் வாயிலாக கற்றுத் தருவது எப்படி?

தமிழில் கதைகளை கற்றுத்தருவது எப்படி?
தமிழ் மொழி அறிவை கதைகள் வாயிலாக கற்றுத் தருவது எப்படி?
 
    மாணவர்களுக்கு பிடித்த கதை புத்தகத்தை முதலில் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். இன்று தமிழக அரசு தொடக்க கல்வியில் "பூத்தக பூங்கொத்து" வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கி மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல் பட்டு வருகிறது.
    
       நல்ல தரமான புத்தகங்கள் , அருமையான அட்டை படத்துடன் , தரமான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழின் வளமும் மாறாமல் பல மொழிபெயர்ப்பு கதைகளும் உள்ளன. சில பட புத்தகங்கள் மிகவும் அருமையாக கொடுக்கப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் கற்று தருவது மிகவும் கஷ்டமானதாக ஆசிரியர்கள் உணருகிறார்கள்.பாடம் சாராத சுமையாக இருப்பதாலோ என்னவோ?

       குழந்தைகளின் வயதுக்கு , அறிவுக்கு தகுந்த வகையில் முதலில்தந்துள்ள புத்தகங்களை  பிரித்து கொள்ளவும். தனியாக கடையில் வாங்கி கற்று தர நினைக்கும் பெற்றோர்கள் , தம் குழந்தையின் அறிவிக்கு தகுந்த மாதிரி புத்தகங்களை தேர்ந்து எடுத்து , தமிழ் அறிவை வளர்க்கலாம். புத்தகங்களை மாணவர் எளிதில் எடுக்கும் வகையில் , துணி காயபோடும் கயிற்றில் , அழகாக  தொங்கப்போடவும். மாணவன் புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம் அதை பாடிக்க வேண்டும் என தோன்றும். அல்லது அதை பார்க்கும் போதெல்லாம் அவனாகவே கதை சொல்ல ஆரம்பித்து விடுவான்.

        ஒரு புத்தகத்தின் கதை சொல்லும் முன் ,அந்த புத்தகத்தின் அட்டையை காண்பித்து , அது சம்பந்தமாக அவன் என்ன நினைக்கிறான்  என்று மாணவனிடமே கேட்டு , அவனின் கற்பனை திறத்தை வளருங்கள்,குழந்தைகளின் கதைகள் பிரமிப்பை உண்டாக்கும்.(எனக்கு கிடைத்த கதைகளை உங்களுக்கு "குழந்தைகள் கதை "என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்)  .   சிலர் திரைப்படத்தின் கதையை சுவரொட்டிகளை வைத்தே சொல்லி விடுவார்கள். எனக்கு தெரிந்த ஒருவர் அப்படி கதை சொல்லி அசத்தி இருக்கார். பல குழந்தைகள் இவ்வாறு உண்டு, அவர்கள் பேசுவதை உன்னித்து பாருங்கள்,உணர்வீர்கள் .

        தற்போது , கதை மீது ஆர்வம் உண்டாகி இருக்கும். தாங்கள் எந்த புத்தகத்தை எடுத்து சொல்லி தர போகிறீர்களோ, அப்புத்தகத்தை தாங்கள் முன்னரே படித்து பார்த்து , அவரில் உள்ள கடின வார்த்தைகளை எடுத்து குறித்து வைத்து இருக்க வேண்டும். தற்போது , கடின வார்த்தைகளை நேரடியாக கூறாமல் , அவற்றிற்கு தகுந்த வாக்கியங்களை மாணவர் மத்தியில் கூறி , அறிமுக படுத்தவும் . தெரிந்த விசயத்துடன் தொடர்வு படுத்தி விளக்கவும்.

    கடின வார்த்தைகளை கற்று கொடுத்த பின் , அந்த கதையை கூறவும் ,மாணவன் தற்போது கதை அறிந்தவுடன் , புத்தகத்தை அவனுக்கு வாசிக்க கற்று கொடுக்கவும்.   
 வாசித்த பின் , கதை தொடர்பான கேள்விகளை கேட்கவும் . கதையில் வரும் கருத்தை வலியுறுத்தி , புதிய கதை சொல்ல செய்யவும். கதையின் தத்துவத்தை கூற சொல்லவும்.

     கடின சொல், கொண்டு புதிய கதை வுருவாக்க செய்யலாம். அல்லது கதைகளை வரும் சொற்களை சில கொடுத்து , அவற்றின் வாயிலாக கதை வுருவாக செய்யலாம். மாணவர்களை குழுவாக அமர செய்து கதை வடிக்க செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

முயன்று பாருங்கள். மாணவனின் கற்பனையுடன் தமிழ் வளர்வது புரியும். கற்றல் கற்பித்தல் தொடரும். 

Saturday, February 20, 2010

முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாணவர்கள் சந்திப்பு !

            முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாணவர்கள் சந்திப்பு !
1977 ல் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு , மிகவும் சுவாரசியாமாக இருந்தது.ஆண்டுகள் பலவாயினும் , நினைவுகள் பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி வந்து , நண்பர்களிடம் அதே முறையில் நலம் விசாரித்தது , பரவசம் ஊட்டியாது , பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அன்று கற்று தந்த ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.அனைவரும் தற்போது இருந்தது , இம்மாணவர்கள் செய்த புண்ணியம் என்று தான் நினைக்க வைக்கிறது என்றாலும் , அவர்களின் கடமை தவறாமை தான் இன்றும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு காரணம் .(இன்றைய ஆசிரிய சமுகம் கவனிக்க வேண்டியது )


 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஓய்வு நிலையில் , தம் மாணவர்களை நல்ல நிலையில் பார்க்கும்போது மிகவும் சந்தோசம் அடைந்தனர். அதிலும் தாம் மாணவர் போல் அமர்ந்து , தம் மாணவனின் பேச்சை கேட்பதில் மற்றட்ட  மகிழ்ச்சி என்பதை மேலே உள்ள  புகை படத்தில் பார்பவர்களுக்கு புரியும்.நினைவுகளை பகிர்வது எவ்வளவு மகிழ்ச்சி என்பதை தம் சக மாணவர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கும் போது தான் புரியும்.    


மேலே உள்ள படம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குரூப் போட்டோ .

    இச்சந்திப்பின் முக்கியம் என்வென்றால் இனி வரும் காலங்களில் இவர்கள் அனைவரும் வருடம் தோறும் ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தினங்களில் சந்திப்பது எனவும், அச் சந்திப்பின் போது சமுக தொண்டுக்கு உதவுவது என முடிவெடுத்துள்ளனர். நல்ல விஷயம் எங்கு நடந்தாலும் சமுக அக்கரையுடன் , அதை உரியவர்களுக்கு எடுத்து செல்வது நம் கடமை.
    நாமும் இதே போன்று சந்திப்பை ஏற்படுத்தி, நம் நினைவுகளுக்கு தீணி போடுவதுடன்   ,சமுதாய நோக்குடன் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும். ஏழைகளுக்கு முறையான வழிகளில் கல்வி கொடுக்க உதவுங்கள் ,அதுவே நம் நாட்டை வல்லரசு ஆக்கும் . இச் சந்திப்பிற்கு பெறும் முயற்சி செய்தவர்கள் திரு .மோகன் ராஜ் மற்றும்  திரு குண சேகரன் ஆவார்கள் என்பதை சுட்டி காட்ட கடமை பட்டுள்ளேன்.

   (பின் குறிப்பு : எனக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தம் உண்டு  என்று நினைத்து என் வயதை எடைபோட்டு விடாதீர்கள் . என்னை போன்று கல்வியில் அக்கறை உள்ள என் மூத்த சகோதரர் திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்காக உண்டாக்கியது. நானும் இது போன்று என் பள்ளியில் சந்திக்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறேன் நீங்களும் ....)

Friday, February 19, 2010

ஞாபக சக்தி அதிகரிக்கும் மாத்திரைகளை மாணவர்கள் பயன் படுத்தலாமா?



       தமிழகத்தில் மட்டும் தான் இப்படி மாணவர்களை பெற்றோர்கள் பாடாய் படுத்துகிறார்கள்! பாடபுத்தகத்தை அப்படியே கரைத்து குடித்து மண்டையில் ஏற்றி , விடைத்தாளில் அப்படியே கொட்டி , வாந்தி எடுத்து , மதிப்பெண் பெற்று மருத்துவம், இஞ்சினியர் போன்ற துறைகளில் சேர்க்க வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள்.
அதற்க்கு புதிய யுத்தி தற்சமயம் , வல்லாரை , மூளை வளர்க்கும் அல்லது சக்தி தரும் உணவு பொருட்கள், மாத்திரைகள் என நித்தம் மாணவர் மனம் புரியாமல் ,திணித்து "டேய் , போனமாசத்துக்கு இப்ப எப்படிடா  இருக்கு ... இம்ப்ரோவ்மென்ட் தெரிகிறதா ? இன்னும் ரெண்டு  மாத்திரை சேர்த்து சாப்பிடு டா அப்பாதான் உன் மர மண்டையில் நல்ல ஏறும் ..."

       பிடிக்கிறதோ இல்லையோ , உமட்டளாக இருக்கிறதோ இல்லையோ , காலத்தின் கட்டாயம் இன்று மாத்திரைகளை மாணவர்கள் உணவை போல் மூன்று வேளை உட்கொள்கின்றனர். பாவம் மாணவர்கள் .
 
    பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பு மிக்கதாக அமைய , மனம் தான் கரணம் , மாத்திரைகள் மதிப்பெண் பெற்று தாராது என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.
மாத்திரைகள் மாணவனுக்கு தேம்புட்டி முளை செல்களுக்கு சக்தி தருகின்றன.
  
   பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கு காரணம் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள், உறவினர்கள் அனைவரும் படி , படி என மன அழுத்தத்தை தருவதால் , மாணவன் சோர்ந்து , உடலும் சோர்ந்து மனதில் படிப்பு பதியாமல் , தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டால் , நம்மை திட்டுவார்களோ  என்ற பயத்தில் , தேர்வில்  பாதி வினாக்களுக்கு விடை தெரியாமல் முழித்து, மதிப்பெண் குறைந்து விடுகிறான்.

    உடலுக்கு நல்ல ஆகாரத்தை கொடுங்கள், மனதிற்க்கு நல்ல அன்பை தாருங்கள் ,
படிப்பில் பயம் அகற்றுங்கள் ,மதிப்பெண் மட்டும் முக்கியம் இல்லை மனமும் முக்கியம் என்று உணர்ந்து செயல் படுங்கள். வெற்றி நிச்சயம். மருத்துவ சீட்டு தானாக வரும்.

    மீண்டும் கூறி கொள்கிறேன் மாத்திரைகள் அவை எந்த மருத்துவத்தை சார்ந்ததாக இருக்கட்டும் ,உடம்பிற்க்கு சக்தி தந்து , மூளை செல்களை சோர்வடைய செய்யாமல் , அவற்றிற்கு தேவையான சக்தியை மட்டுமே தருகின்றன . இதனால் மாணவன் நினைவு ஆற்றல் உயர்ந்து , யோர்ந்த மதிப்பெண் பெறுவான் என்பதெல்லாம் சுத்த பொய்.

   முறையான பயிற்சி , கடினமான உழைப்பு (அதாவது அன்றையா பாடங்களை அன்றே   முடித்து விடல் , அவற்றை எழுதி பார்த்து , தாமே தேர்வெழுதி திருத்தி பார்த்து , வகுப்பு ஆசிரியரிடம் தேர்வு வைக்க செய்து , உடனே திருத்தி கொள்ளுதல் },அன்பான அரவணைப்பு , மகிழ்ச்சியான சூழ்நிலை , பெற்றோரின் பக்குவமான எதிர்பார்ப்பு , உடம்பை வருத்தி படிப்பதை தவிர்த்தல் , நல்ல  தூக்கம் , அளவான சக்தி மிக்க சைவ உணவு போன்றவை மாணவனை நன்றாக படிக்க செய்து , படிப்பை நினைவில் நிறுத்தி , மாநில முதல் மாணவனாக திகழ செய்யும்.

    ஆகவே பெற்றோர்கள் மாணவர்களுக்கு சக்தி மிக்க ஆகாரம் கொடுத்து , படிப்பு படிப்பு என பயமுறுத்தாமல் , நல்ல படிக்கும் அன்பான சூழலை கொடுத்து ,பயம் நீக்கி , பாசம் காட்டுங்கள் . அதுவே நீங்கள் எதிர்பார்க்கும் நிலைமையை பெற்றுத்தரும்.

     விருப்பம் இல்லாமல் மாணவனுக்கு ஞாபக சக்தி மாத்திரைகளை கொடுப்பதை தவிப்போம் , மாணவன் மனம் புரிந்தது , முறையான எழுத்து பயிற்சி கொடுத்து , ஆசிரியர்கள் மாணவனுக்கு கற்றலில் இனிமையும் , எளிமையும் தந்து நல்ல புரிதலை ஏற்படுத்தி தருவோம், தானாக தமிழக மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண் பெற்று , நல்ல மேல் படிப்பு படிப்பார்கள்.
 

Thursday, February 18, 2010

தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ......

தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ......   

  1. தேர்வு குறித்து பயம் வேண்டாம் .சாதாரண வகுப்புத் தேர்வு  மாதிரி பொது தேர்வை சந்திக்கவும். 
  2. நன்றாக உணவு அருந்தவும். உடம்பை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
  3. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் .மன குழப்பம் இன்றி படிக்கவும்.
  4. திருப்புதல் தேர்வு தாள்களை கொண்டு தவறுகள் இருப்பின் திருத்தி மீண்டும் அதே தேர்வை எழுதி ஆசிரியரிடம் திருத்தி வாங்க வேண்டும். மீண்டும் அத்தேர்வில் பிழைகளை , அடுத்த தேர்வில் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
  5. விடைத்தாளில் அனைத்து வினாக்களுக்கான விடைகளிலும் முக்கியமான தகவலுக்கு அடிகோட்டிட்டு காட்டவும்.
  6. இதுவரை படித்த பாடங்களை மீண்டும் நன்றாக படித்து எழுதி பார்க்கவும். புதிதாக புரியாத படங்களை படிப்பதை தவிர்க்கவும். 
  7. புதிதாக பாடம் படிக்க வேண்டி இருப்பின் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் ஆசிரியரிடம் கேட்டு படிக்கவும்.தேர்வு செய்து தரும் வினாக்களை மட்டும் படிக்கவும்.
  8. சக மாணவருடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். பயந்து மனதை கொல்வதை தவிர்க்கவும்.
  9. ஒரு மார்க் வினாக்களை தொடர்ந்து , வாய்ப்பாடு போல் சமயம் கிடைக்கும் பொது எல்லாம் கூறி பார்க்கவும். 
  10. ஆங்கிலத்தில் புதிய சொற்களை எழுதி பார்க்கவும், poem தினமும் எழுதி பார்க்கவும் , கணிதம் பார்முலா சொல்லியும், எழுதியும் பார்க்கவும். தமிழ் மனப்பாட செய்யுள் எழுதவும். 
  11. தேர்வில் முதலில் ஒருமார்க் தெரிந்த விடைகளை எழுதவும்,பின்பு இரண்டு மார்க் தெரிந்த வினாக்களுக்கு விடை, பெரிய மதிப்பெண் வினாக்களுக்கு நேரம் குறித்து நிதானமாக அடிகோடிட்டு எழுதவும்.தெரிந்த வினாக்கள்  அனைத்தும் எழுதி முடித்த பின், மீண்டும் தெரியாத வினாக்களை சிந்தித்து எழுதவும். 
  12. விடைகளை தெளிவாக பிழை இன்றி, அடிகோடிட்டு , தலைப்பிட்டு , வினா எண் மறவாமல் எழுதவும்.
  13. தன்னம்பிக்கை , விடா முயற்சி , தொடர்ந்த எழுத்து பயிற்சி, தவறுகளை உடனுக்குடன் திருத்தி சரிசெய்யும் இயல்பு மாணவனுக்கு நூறு சதவிகித வெற்றியுடன் நூறு மதிப்பெண்     பெற்று தரும்.

Wednesday, February 17, 2010

தமிழில் வேற்று மொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி ?

    தமிழில் வேற்று மொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி ?
மாணவர்களுக்கு எளிய முறையில் வேற்று மொழி சொற்களை கற்றுத்தருவது எப்படி?

      நான் நல்ல உத்தியோகத்தில் உள்ளேன்.
      இன்று மதியம் பருப்பு சாதம் உட்கொண்டேன்.
இவற்றில் வடமொழி சொற்கள் உள்ளன. வேற்று மொழி சொற்களை கண்டறிவதை அறியும் முன் அதன் அவசியத்தை விளக்க கடமை பட்டுள்ளேன்.  

       ஒரு மொழியினுள் வேற்று மொழி சொற்கள் புகுவது என்பது மக்கள் தேவை கருதி சொற்களை கடன் பெறுவதாலும், பெருமை கருதி அச்சொற்களை பயன் படுத்துவதாலும் வருகிறது.
       "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே " -தொல்காப்பியர் கூற்று படி ,ஒவ்வரு மொழியும் எழுத்து மற்றும் ஒலிப்பு முறை பொறுத்து சிறப்பு பண்புகளை பெற்றுள்ளன.
தமிழ் மொழி வேற்றின சொற்களை தொல்காப்பியர் காலத்திலேயே அதாவது கி.மு.முன்றாம் நூற்றாண்டு முதலே கவர்ந்து கொண்டது. இது சமுக ,அரசியல் மற்றும் கால மாற்றத்தின் விளைவால் கலந்ததாகும்.

       "இயற்சொல் திரிசொல் , திசைச்சொல் வட  சொல்லென்று
        அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே "
என எச்சவியலில் தொல்காப்பிய நூற்பா விளக்குகிறது.  தமிழில் பல்லவர் காலத்தில் பிராகிருதம் , களப்பிரர்  காலத்தில் கன்னடம், சோழர் காலத்தில் தெலுங்கு , இஸ்லாமியர் காலத்தில் உருது, ஐரோப்பியர் காலத்தில் பிரஞ்சு , போர்த்துக்கீசிய சொற்கள், ஆங்கில சொற்கள் கலந்தன.

      "பிற மொழி சொற்களை கண்டறிந்து நீக்கு " பகுதியை மாணவர்களுக்கு எப்படி கற்று தருவது?
         மாணவர்களுக்கு தமிழ் மொழியின் வரி வடிவத்தை தெளிவாக புரியும் படி கற்று தர வேண்டும். மற்றும் அவை ஒலிக்கும் முறை கொண்டும் வேற்று மொழி சொல்லை கண்டுபிடிக்கலாம்.


  1. மொழி முதல் எழுத்து 
  2. மொழி கடைசி எழுத்து
  3. ஒலிப்பு முறை 
அடிப்படையில் நாம் பிற மொழி சொற்களை பிரிக்க முடியும்.


       நான் நல்ல வேளையில் உள்ளேன்.
       இன்று மதியம் பருப்பு சோறு சாப்பிட்டேன்.
என்பது தான் தமிழ் சொற்கள்.

        இவ்வாறாக எப்படி வேற்று மொழி சொற்களை கண்டு பிடிக்க கற்று தந்த பின்
வேற்று மொழி சொற்களையும் , அதற்கு இணையான தமிழ் சொற்களையும் ஒரு சார்ட் காகிதத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எழுதி  எடுத்துக் கொண்டு , பின் பக்கம் இரும்பு  தகடு  அல்லது பிளேடு துண்டு வைத்து காகிதம் கொண்டு தெரியாமல் மூடவும். தூண்டில் ஒன்று செய்து அதன் முனையில் காந்தத்தை கட்டி தொங்க விடவும்.

        "மீன் பிடிக்கும் விளையாட்டு "தயார்.மாணவர்களை வட்டமாக அமர செய்யவும். வட்டத்தின் நடுவே மற்றும் ஒரு வட்டமிடவும் , வட்டத்தில் நாம் தயாராக வைத்துள்ள காதித மீன் வடிவில் உள்ள தமிழ் மற்றும் வேற்று மொழி சொற்களை , சொற்கள் தெரியும் வகையில் பரப்பி விடவும், பின்பு ஒவ்வொரு மாணவனாக அழைத்து பொருத்தமான வேற்று மொழி சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லையும் சேர்த்து மீன் பிடிக்க செய்வதன் மூலம் நாம் மாணவர்களுக்கு கற்றலை எளிமை படுத்தலாம்.

       ஒரு மொழி செழுமையானது என்பது அம்மொழியில் வேற்று மொழிச்சொல் அளவின்றி கலத்தல் தடுக்கப்பட வேண்டும். அதற்காக தேவை கருதி ஏற்று கொள்ளுதல் வேண்டும் . இல்லை என்றால் மறைந்த சுஜாதா அவர்கள் கூறுவது போல் "நாம் தமிழார்வத்தில் ,கலைச்சொல்லாக்கத்தில் தான் அவசரப்படுகிறோம் தவிர , கலைசொற்க்களுக்குத் தேவையை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டுவதில் பிந்தங்கியிருக்கிறோம்" என்பது உண்மையாய் போகி தொழில் முன்னேற்றம் பாதிக்கப்படும் .

       மொழியறிவை மேம்படுத்த மாணவர்களுக்கு , தமிழ் அகராதிகளை பயன்படுத்தும் பழக்கத்தையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

     "வார்த்தைகளுக்கு விதிமுறைகளையும் , இலக்கணத்தையும் அமைக்கும் முன் வார்த்தைகளுக்குத் தேவையை அமைக்க வேண்டும் " என்ற சுஜாதா வரிகளுடன் கட்டுரையை முடிக்கிறேன்.  
      

Tuesday, February 16, 2010

குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி?

முதாலாம் வகுப்பில் குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி?

குழந்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தை கற்று தருவது எப்படி?

      குழந்தைகளை வட்டமாக நிற்க செய்யவும். தற்போது செயல் வழி கற்றல் முறையில் மாணவர்களுக்கு சின்னங்கள் அறிமுக படுத்துவதற்க்கும் இம் முறை உதவும்.நாய் , சிங்கம் , ஆடு ,யானை , குரங்கு ,அணில்  (விலங்குகள் -தமிழுக்கு ) , கிளி , புறா, காகம் , குயில், வாத்து (பறவைகளுக்கு -கணிதம் )  , சைக்கிள், ஆட்டோ, கார், லாரி, பஸ் , விமானம் (வாகனம்-ஆங்கிலம் ) இவ்வாறாக குழுவில் எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும் என தீர்மானித்து அத்தனை கார்டுகளை தாயார் செய்த பின் ஆசிரியர் வகுப்புக்குள் செல்ல வேண்டும்.தங்கள் கைகளில் உள்ள கார்டை மாணவர்களுக்கு வரிசையாக மாறி மாறி வரும் படி கொடுக்கவும் .இப்போது தங்களுக்கு வந்த கார்டை யாருக்கும் காட்டாமல் கார்டில் உள்ள விலங்கு மாதிரி குரல் கொடுக்கவும். மாணவர்கள் குரலை அடிப்படையில் குழு சேர வேண்டும். உதாரணத்திற்கு , நாய் அட்டை வைத்துள்ள மாணவன் நாய் மாதிரி வோவ் , ஒவ், ...என குரல் குடுப்பான். இதன் மூலம்  நாய் குரைக்கும், சிங்கம் கர்ஜிக்கும் , புலி உறுமும், நரி ஊளையிடும் , குரங்கு கத்தும் என்ற குரல் ஒலியின் அர்த்தங்களை கற்று தரலாம். எளிதில் மாணவர்களை சின்னங்கள் கற்று கொள்ள செய்யலாம் .குழுவில் அனைவரும் சேர்ந்த உடன் எனக்கு நாய் பிடிக்கும் என கூற செய்யலாம். விலங்குகள் மீது அன்பு உண்டாக்கலாம்.

          மாணவர்களுக்கு சின்னம் அல்லது விலங்குகள் , பறவைகள் , வாகனங்கள், பூச்சிகள் பெயர்கள் சாரியாக தெரிகிறதா என பார்க்க இப்போது கூறும் செயல் பயன்படும். ஒரே மாதிரி இரு பட அட்டைகளை தாயார் செய்தது , அவற்றை நான்றாக குலுக்கி , வட்டமாக அமர்ந்துள்ள மாணவர்களில் ஒருவனை அழைத்து ஏடுக்க செய்து , பிறர் பார்க்காத வண்ணம் பார்த்து , இரண்ண்டு படமும் ஒன்றாக இருப்பின் , அனிவருக்கும் காட்டி , அதன் பெயரை சொல்ல வேண்டும் . சுற்றி உள்ள மாணவர்கள் அப்படத்திற்கு ஏற்ற விலங்கின் குரலை கொடுக்க வேண்டும். முயன்று பாருங்கள் விரைவில் பறவைகள், விலங்குகள், வாகனங்கள், பூச்சிகள் பெயர்களை பிழையின்றி சொல்லுவார்கள்.

             எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளவும் மாணவர்கள் சரியாக செய்யும் ஒவ்வரு முறையும் பாராட்டுங்கள். அருமை. சபாஷ், மகிழ்ச்சி நன்றாக சொன்னாய் ,தவறில்லை மீண்டும் முயற்ச்சிக்கலாம், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என கூறவும் .

            இந்த செயல் மூலம் மாணவனுக்கு பறவைகள் , விலங்குகள் இருப்பிடத்தை தெரிய செய்யலாம். விலங்குகள் மற்றும் அவற்றின் இருப்பிடம் குறித்த படங்களை எடுத்து கொள்ளவும். நான்கு படங்களையும் , அவரின் இருப்பிடம் படத்தையும் தரையில் அல்லது டேபிளில் வைக்கவும். ஒவ்வொரு மாணவனாக வந்து விலங்குகள் அவற்றின் இருப்பிடத்தை பொருத்தி வைக்க செய்யவும். இருப்பிட பெயர்களை சொல்ல செய்யவும். உதாரணத்திற்கு , சிங்கம் குகையில் வாழும். நாய் வீட்டில் வளரும். குதிரை லாடத்தில் இருக்கும்.மாட்டு தொழுவத்தில் இருக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று கொள்வர்.

      நிறங்களின் பெயர்களை சொல்லி தர எளிதான வழி உள்ளது. மாணவர்களுக்கு நிறம் இல்லாத வெள்ளை தாளில் நாய் , சிங்கம் வெளி புற கொடு ( அவுட் லைன் ) மட்டும் வரைந்த படத்தை கொடுத்து , ஒவ்வொருவரும் தனி தனியே கலர் செய்ய சொல்லவும்  இப்போது மாணவனிடம் தான் வைத்துள்ள படத்தை நிறத்தை சொல்லி , ஊதா நிற நாய், கருப்பு நிற நாய்... என கூரச்செய்யவும்.  வகுப்பறை கல கலப்பாக நேரம் போவது தெரியாமல் மாணவனும் இடை நிற்றல் இன்றி கற்று கொள்வான்.

         தொடர்ந்தது படித்து பெற்றோர்களும் வீட்டில் நம் குழந்தைகளுக்கு கற்று தரலாம்.
இதை படிக்கும் ஆசிரியர்களும் தங்கள் வகுப்பில் பயன் படுத்தி எனக்கு அதன் பயன் பாட்டை தெரிய படுத்தவும். பெற்றோர்களும் , கல்வியாளரும் கருத்திட்டு ஊக்கபடுத்தவும். கற்றல் உத்திகள் தொடரும்/.

Monday, February 15, 2010

தமிழில் மாணவர்களுக்கு கற்பனை திறனுடன் கூடிய நல்ல பேச்சு திறனை வளர்ப்பது எப்படி?

       தமிழில் மாணவர்களுக்கு கற்பனை திறனுடன் கூடிய நல்ல பேச்சு திறனை வளர்ப்பது எப்படி?

        தமிழில் சகஜமாக பேச கற்று கொடுப்பது எப்படி? தமிழ் மொழியில் பேசும் திறனை வளர்ப்பது  எப்படி ?

        தொடக்க கல்வியில் அல்லது நடு நிலை பள்ளி அளவில் உள்ள குழந்தைகளுக்கு , யா பிற இடங்களுக்கு சென்று தகவல் பறி மாறுவது தொடர்பான சூழலை ஏற்படுத்தி தருவதன் மூலம் , அவர்களிடம் உள்ள தமிழ் மொழி அறிவை நாம் வெளிபடுத்தலாம்.

 
        நம் மாணவர்களுக்கு கற்பனையில் அவனுக்கு பிடித்த தொழில் அல்லது ஏற்கனவே படித்த பாடம் சம்பந்தமான தொழில் சார்ந்த நபராக நினைத்து உரையாடக் கூடிய சூழலை   
உருவாக்க கூறவும்.  முடிந்த வரை உதவி செய்யவும் .மாணவர்களை குழுக்களாக பிரித்து ,குழுக்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்குள் உரையாடலை அமைத்திடும் வகையில் , சூழலை அவர்களாக தேர்ந்தெடுக்கவும்.உதாரணத்திற்கு , ஒரு குழுவில் உள்ள மாணவர்கள் இரயில் வண்டியில் ஒரு பெட்டியில் அமர்ந்து இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்குள் அறிமுகம் ஆகி , தங்கள் தொழில் சம்பந்தமான தகவல்களை பறி  மாறுவதாக ஏற்பாடு செய்யவும்.


          மற்றொரு குழு மாணவர்களை , இரயில் பெட்டியில் அறிமுகம் ஆகி , அவர்கள் ஊர் திருவிழாக்கள்,ஊர் பெருமை பற்றி பேச செய்யவும். உதாரணத்திற்கு ,
"ஐயா, தாங்கள் எந்த ஊருக்கு செல்கிறீர்கள் ? ". "நான் சென்னையில் இருந்து மதுரை செல்கிறான். தாங்கள் எந்த ஊர் தம்பி ?". "ஐயா , நான் மதுரை காரன் தான் , மதுரைக்கு என்ன விசயமாக செல்கிறீர்கள்?". " வயதான காலத்தில எங்க போவோம் கோவிலுக்கு தன் , இரயில் நிலையம் இறங்கியவுடன் ,மீனாக்ஷி கோவிலுக்கு எப்படி தம்பி போறது?"
"அய்யா போகிற வழியில தான் என் வீடு இருக்கு நான் உங்களை கூட்டி கிட்டு போறேன் , நடக்கிற தூரம் தான் ...." " தம்பி , மதுரையில் வேறு என்ன என்ன கோவில் தளங்கள் உள்ளன ?, எவ்வாறு செல்வது என எனக்கு உதவ முடியுமா ?" என பேச்சை தொடங்க உதவலாம் .

       இருவர் சேர்ந்து செய்யும் செய்யலாக நாம் அமைத்து மாணவர் கற்பனையுடன்,கூடி 
பேச்சு திறனை வளர்க்கலாம். இரண்டு நாற்காலிகளை இருவர் முதுகுக்கு பின்னால் அமர்வது போல் அமைத்து, இருவரும் முகம் பார்க்காமல் அமர்ந்த உடன், ஒருவனை , தான் அமைக்க இருக்கும் ஊராட்சி மன்றம் பற்றி தகவல்களை கொடுக்கச் செய்யும், பின் மற்றவனை அவ்வாறு கூறுவது சம்பந்தமாக வினாக்களை கேட்டு ,பதிலை பெற செய்யவும். "நான் தெருக்களை குப்பைகள் அற்று உள்ளதாக மாற்றுவேன்?". "எவ்வாறு குப்பைகள் இல்லாமல் தெருக்களை உருவாக்குவே?"." தெருக்கள் தோறும் தன் ஆர்வ தண்டர்களை ஏற்படுத்தி , அவ்வப்போது கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன், அவ்வாறு கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுவோர்க்கு,அறிவுரை கூறி ,குப்பைகள் கொட்டுவதை தடுப்பேன்". இவ்வாறாக நாம் மாணவர்களிடம் கலந்து பேசும் திறமையை வளர்க்கலாம். வெவ்வேறு விதமான சூழலை உருவாக்கலாம். இதில், ஜோடிகளை மாற்றிகொண்டே இருக்க வேண்டும்.

      
        "குற்றம் நடந்தது எப்படி?" என்ற விளையாட்டு  மூலம் மாணவர்களில் , புத்திசாலிதனத்துடன்,  சமயோசித அறிவு திறமையை வளர்க்கலாம். இரண்டு அல்லது நான்கு மாணவர்களை வெளியில் , அனுப்பிவிடுவது, பின்பு அவர்கள் தொடர்பில்லாமல் , வகுப்பில் உள்ள மாணவர்களை குழுவாக சுமார் நான்கு அல்லது ஆறு பேர் கொண்டதாக பிரித்து, ஒரு அசம்பாவிதம் அல்லது கொலை நடந்ததாக விவரிக்க செய்யவும், அதற்க்கு உரிய சூழலை மாணவர்களிடம் கூறி ,அதற்கு  வெளியில் உள்ள மாணவர்கள் தான் குற்றவாளி அவனை குழுவில் உள்ள யாரவது ஒருவர் குறுக்கு விசாரணை செய்து அவனை குற்றவாளி ஆக்க வேண்டும் என விளக்கம் அளிக்கவும் . இப்போது வெளியில் உள்ளல மாணவன் ஒருவராக அழைத்து குறுக்கு விசாரணை ஆரம்பிக்கலாம் . அந்த மாணவர்கள் புத்திசாலிதனமாக பதில் கூறி தப்பிக்க வேண்டும் . இதுதான் விளையாட்டு.       

இப்படி உங்கள் வகுப்புகளை நல்ல கல கலப்புள்ளதாக மாற்றி , வகுப்பில் மாணவர்களை குஷி படுத்தி வகுப்பறைகளை உயிரோட்டம் உள்ளதாக மாற்றவும். மாணவர் பேச்சு , சிந்திக்கும் திறன், பதில் கூறும் திறன், புத்திசாலி தனம் வெளிப்படும் விதமாக அமையட்டும்.

Sunday, February 14, 2010

கலாச்சார வன்முறை ....

    குழந்தைகள் வளர்ப்பு என்பது இன்று மிக முக்கியம் , காதல் என்ற பெயரில் கலாச்சார வன்முறை பெருகி வரும் இத்தருணத்தில் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம். அதற்காக நான் காதலுக்கு எதிரியல்ல . பாரதி சொன்னது போல் ஆதலினால் காதலிப்பீர்.

     தமிழன் வாழ்வில் அகமும் , புறமும் இணைந்தே இருப்பது. காதல் அன்று வெட்கம் அறிந்து வந்தது .ஆனால் இன்று அது சேலை அவுத்து விட்டு அம்மணமாக திரிக்கிறது
ஆம், அனைத்து ஹோட்டல்களிலும் காதலர் தின கொண்டாட்டம், என்ற பெயரில் குடி , கற்பு என்ன விலை என்ற நிலைமை வந்து விட்டது.  பயந்து , நயந்து வளர்ந்த காதல் , பகிரங்கமாக ஊரறிய மோகம் கூடி , அருவருக்க செய்கிறது .

     இதை பார்க்கும் குழந்தைகளும் காதல் என்பது ஆணும் . பெண்ணும் கலந்து கை கோர்த்து திரிவது என்று நினைத்து , ஆரம்ப கல்வி நிலையிலே , பால் கவர்ச்சியால் , தன் உடன் படிக்கும் மாணவனுக்கு அல்லது மாணவிக்கு  காதல் கடிதம் கொடுக்க தூண்டுகிறது. அதோடு நின்று விடாமல் , 'சார் , அவனுக்கு பத்து பிள்ளைகள் லவ் பண்ணுது சார் 'என்று சக மாணவன் பெருமை பேசுவது அபத்தமாக தெரிந்தாலும் இச் சமுகத்திற்கு காதல் , மற்றும் காதலர்கள் விட்டு சென்ற செய்தி எவ்வளவு மடத்தனமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

       நம் குழந்தைகளுக்கு அன்பு,கருணை,பரிவு, நட்பு, உண்மை, நன்மை, நல்வழி, மன்னித்தல் , அறவழி , எளிமை முதலியவற்றை நம் நடத்தையால் கற்றுத்தாருங்கள்,நிச்சயமாக அவர்கள் மனதில் பகை, வெறுப்பு , வஞ்சகம்,வன்முறை, தீமை,பொய்மை, என கெட்ட குணங்கள் அறவே நீங்கி நல்முறையில் வளர்வார்கள். 

        அன்றும் , இன்றும் ,என்றும் ரோல் மாடல் என்பது குழந்தைகளுக்கு பெற்றோர்களும் , உற்றோர்களும் தாம் பார்க்கும் அனைத்து உருவங்களிலும் இருந்து பெறுவதாக அமைந்து ,  குழந்தைகள் மனதில் பதிந்து அதையே நிஜ வாழ்க்கையில் கடைபிடித்து , பிரதிபலிப்பதாக வாழ்வு அமையும். அதனால் தான் விஜய், அஜித், ரஜினி, சிம்பு, கமல் என அனைவரயும் குழந்தைகள் ரோல்  மாடலாக பாவித்து இன்றும் வாழ்வதை பார்க்கிறோம்.

           ஆகவே, தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு முன்னாள் சண்டையிடுவது, ஆபாசமாக பேசுவது,தவறான எண்ணத்தில் கட்டிபிடிப்பது, முத்தமிடுவது ஆகியவற்றை தவிர்த்து, நல்ல சிந்தனை தூண்டும் விசயங்களை பேசுங்கள், நல்ல பழக்கங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள்.நல்ல திரை படங்களுக்கும் , நல்ல டிவி சீரியல்களும் (சாரி , எந்த சீரியலும் வேண்டாம்) பார்க்க அனுமதிங்கள்.  

              ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருந்தது , நல்ல விஷயங்களை மட்டும் பேசி, தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகளை எடுத்து கூறி , நல்வழிப்படுத்துங்கள்.

                அன்பான காதலர்களுக்கு , உங்களை பார்த்து இந்த சந்ததியினர் தவறான முன் உதாரணங்களை மேற்கொள்ளாமல் இருக்க , காதல் என்பதை புனிதமாக்கி ,அது யாரும் அறியாத தன்மையிலே, அன்பை மட்டும் பரிமாறுவதாக அமைந்து இருக்க தாழ்மையான வேண்டுகோள் வைத்து, காதல் தெரு கூத்தாகி விடாமல் பார்த்து கொள்ளுங்கள். காதலர் தினம் என்ற பெயரில் தெரு கூத்து அரங்கேறி வருவதை தடுத்து , காதல் புனிதம் காப்பீர். 

Saturday, February 13, 2010

காதலர் தின பரிசாகும் !

உன்னை பார்க்காத
ஒவ்வொரு  நொடி பொழுதும்
மரணிக்கிறேன்..!

உன் நினைவுகள் அற்ற
ஒவ்வொரு நொடி பொழுதும்
உயிரின்றி துடிக்கிறேன்....!

உன் சொல் கேளாத
செல்லும்
உயிரற்று உறங்கி கிடக்கிறது ...!

என் இதய துடிப்பு
நின்றுவிடுமோ என்று எண்ணி...
அலை பேசியும் ...
அலைந்து நெட் வொர்க் தேடி ..
ஒய்ந்து விட்டது ...

நீ வேறொரு இணைப்பில்
இருப்பதாக கூறினாலும்
பரவாயில்லை ....
தொடர்பு எல்லைக்கு அப்பால்
இருப்பதாக கூறுவதால் ....
என் மனம் பட படக்கிறது....!
துடி துடிக்கிறது ....
இது தான் காதல் வலியோ ...!
நாளையாவது தொடர்பில் வா
அதுவே எனக்கு
காதலர் தின பரிசாகும் !

Friday, February 12, 2010

இருப்பிடம்

உன் முகவரி கேட்டேன் ...
சிரித்தாய் ....
சரி உன் பிறப்பிடமாவது
சொல் என்றேன் ..
முழித்தாய் ...

நான் விழித்தேன் ...
அதே கேள்வியை
உன் தோழி
என்னிடம் கேட்டபோது...

உன் இதயத்தில் பிறந்து ...
ஆயிரம் மாயிரம் ......
கனவுகளுடன் ..
கை கூடி....
கரம் பிடித்து ...
பலாயிரம் ஆண்டுகள்
உன்னோடு வாழ ..
உன் பார்வை ஒன்றே
போதுமடி ..
என காத்திருக்கும்
என் இருப்பிடம்
உன் இருப்பிடம் தானடி ...
விலாசம் இல்லாமல் இருக்கும்
எனக்கு ....
உன் இதயக் கதவை
திறந்து ..
விலாசமிடு ...
பதினான்கு ராசியான எண்ணாம்
அதுவும் இந்த மாதத்தில்....
கத்திருக்கிறேன் ...
விலாசம் உள்ளவனாக மாற
கனவுகளுடன் ...!


..





 

"நல்ல பண்புகளை நம் குழந்தைகளிடம் எப்படி வளர்ப்பது?"

     "நல்ல பண்புகளை நம் குழந்தைகளிடம் எப்படி வளர்ப்பது?" என்பது  குறித்து ஆசிரியர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் நான் தரும் ஆலோசனைகள் , தயவு செய்து பின்பற்றி பாருங்கள் , நிச்சயம் நம் சந்ததியினர் நல்ல பண்பு உள்ளவர்களாக வளர்ந்து , உயர் பண்பு மிக்க சமுகம் அமைத்திடுவார்கள்.

      ஆசிரியர்களே , நம் வகுப்பு பாடவேளையிலோ , அல்லது தினம் காலை முதல் பாடவேளையிலோ , நம் மாணவர்களிடம் , நேற்று அவர்கள் செய்த நல்ல பண்புகளை கூறும்படி கேட்கவும் . சாதாரண உதவியாக இருக்கட்டும் , தன் நண்பனுக்கு பேனா , பென்சில் , தான் கொண்டுவந்த உணவு கொடுத்தாதாக இருக்கட்டும், வயதானவர்களுக்கு  சாலை கடக்க உதவி செய்ததாக இருக்கட்டும் , வகுப்பு குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போட்டதாக இருக்கட்டும் ...கூச்சப்பட்டாமல் கூறச் சொல்லவும்.
    
        அவ்வாறு கூறுவது மட்டும் போதாது , மாணவர்களிடம் தம் வகுப்பில் செய்த உதவிகளில் எந்த உதவி சிறந்தது என்று கேட்டு , அதில்  அதிகமாக எது சிறந்தது என்று மாணவனை முடிவெடுகக்கச் செய்து  , அதற்கான காரணங்களை மாணவனிடமே  கேட்டு , அந்த உதவி செய்த மாணவனை வகுப்பில் பாராட்டுங்கள். நித்தம் உதவி பெருகும் , நல்ல பண்பு தானாக வளரும் . நாம் தனியாக நல் ஒழுக்க வகுப்பு எடுக்க தேவை இல்லை.

          பள்ளி முழுவதும் இப்பண்பு வளர , தினம் காலை பிரார்த்தனை வேளையில் , அன்று   முந்தய தினம் , எது சிறந்த பண்பு என அனைத்து ஆசிரியர்களால் முடிவு செய்து , அப்பண்பை மட்டும் கூறி , மாணவன் , வகுப்பு , பிரிவு கூறாமல் பாராட்டவேண்டும். இவ்வாறாக பாராட்டுவதன் மூலம் , மாணவர்கள் தாமும் இது மாதிரி ஏதாவது உதவி அல்லது நல்ல பண்புநலம் வளர்த்து , தம் வகுப்பும் தானும் பாராட்டு பெறவேண்டும் என முயல்வார்கள். ஆசிரியர்களும் தம் வகுப்பும் நல்ல பெயரை  தலைமை ஆசிரியரிடம் பெற வேண்டும் என முனைப்புடன் நல்ல பண்புகள் கற்று தருவார்கள். கல்வியும் தானாக வளரும். சமூகமும் தானாக நற்பண்பு உள்ளதாக மாறிவிடும்.

           ஆசிரியர்களும் முனைப்புடன் செயல் பட , தலைமை ஆசிரியர்கள் அல்லது நிர்வாகம் , ஆசிரியர்களுக்கும் இம்மாதிரி வாழ்த்துக்கள், பாராட்டுகள் , பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.  ஆசிரியர்களிடம் காணப்படும் சிறந்த பண்பை , மாத கூட்டம் அல்லது  நிர்வாக கூட்டம் நடை பெறும் போது , பெயர் கூறாமல் , அப் பண்பை மட்டும் தெரிவித்து , பாராட்ட வேண்டும் . ஆசிரியர் அனைவரும் வியப்பாக இருக்கும். இப்படியும் உதவி செய்யலாமோ என தோன்றும். நிர்வாகத்துக்கும் தாம் கவனிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தது செயல் படுவார்கள். உதாரனத்திற்க்கு, ஆசிரியர் மதிய உணவை , மாணவன் தன் டிபன் பாக்ஸ் என நினைத்து( ஒரே மாதிரியாக இருக்கும் பட்ச்சத்தில் ) எடுத்து உணவருந்தி விடுகிறான், ஆசிரியர் அவன் உணவை திறந்து பார்கிறார் , வெறும் காய்ந்த இட்டலி , இருபினும் அதை உட்கொண்டு , அவனை அழைத்து , அடிக்காமல், திட்டாமல், சிரித்து கொண்டே , உன் சாப்பாட்ட நான் தெரியாம சாப்பிட்டேன், நல்ல இருந்துச்சு , நீ சாபிடாயா , டீச்சர் செய்த உணவு எப்படிடா இருக்கு ..என பரிவோடு அவன் கவனமின்மையை எடுத்து சொன்னால் , அது சிறந்த பண்பு. வீடு செல்லாத மாணவனின் பெற்றோர்களுக்கு முறையான தகவல் கொடுத்து , பள்ளி வேலை முடிந்தும் , உதவுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் , அது சிறந்த பண்பு. வெளியில் விற்பனை செய்யும் ஈ மொய்த்த பண்டத்தை , விற்க கூடாது என கண்டிப்பதுடன், மாணவர்களையும் வாங்க தடுத்தால் அது நற்பண்பு. எப்படி ஆசிரியர்கள் செய்யும் நல்ல பண்புகளை தலைமை ஆசிரியர் , பெயர் குறிபிடாமல் வகை படுத்தி , ஆண்டு இறுதியில் ஆசிரியர்களிடம் கொடுத்து சிறந்த பண்பு எது என்பதை தேர்வு செய்து . ஆண்டு விழாவில் அந்த ஆசிரியருக்கு பரிசு கொடுத்து கவுரவிக்கலாம்.
 
        பெற்றோரும் தங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளிடம், தினம் அவர்கள், செய்த நல்ல பண்பை அல்லது உதவியை கேட்டு, பரிசு கொடுத்து அல்லது வார்த்தை மாலைகளால் பாராட்டலாம்.

        முயன்று பாருங்கள் , பண்பு நலம் பெருக ! இது போன்று தங்களிடம் ஆலோசனைகள் இருந்தால் குறுந்தாள் கூறுங்கள் .

Thursday, February 11, 2010

குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை '



     'குழந்தையும் தெய்வமும் ஒன்று' , என்று ஆரம்பிக்கும் 'உயிர் எழுத்து , பத்திரிக்கையின் பிப்ரவரி இதழில் 'குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை ' கட்டுரை பாலியல் ரீதியாக  குழந்தைகளின் உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது .

      கட்டுரையின் முக்கியாம்சம் 120 =060 இளங்கர்கள்+060 இளம் பெண்கள் இடம்   வினாத்தாள்கள்  கொடுத்து ஆராயப்பட்டதில் 72 .5%  மாணவ மாணவியர் தங்களுடைய குழந்தைப் பிராயத்தில் ஏதாவது ஒரு முறையில், ஏதாவது ஒரு சூழலில் பாலியல்ரீதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்  .மொத்தம் 27% மாணவ மாணவியர் 05   வயதாகும் பொது , வயதானவர்களின் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர். 28 % இளஞ்ர்கள் 37 % இளம் பெண்கள் மிரட்டலின் மூலம் பாலியல் தொந்தருவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

      இன்று பாலியல் கல்வியை துவக்கக் கல்வியில் எதிர்பவர்களுக்கு இந்த திருச்சி சர்வே ஒரு சவுக்கடியை கொடுத்திருக்கும். குழந்தைகள் எப்போதும் பாலியல் சம்பந்தமான அறிவு பெற்றவர்களாக  இருக்க வேண்டும். பாலுறவு என்பது வெறும் குழந்தை பெறும் விசயமாக இருக்கிறது .ஆணும் பெண்ணும் மனம் ஒத்து உடலால் இணைவது என்பது  இன்று போலியாக நம் சமுகத்தால் ஒதுக்கப்படுகிறது.

      காதல் என்ற பெயரில் களவாணித்தனம்  அதிகம் ஆகியிருப்பதால் நம் குழந்தைகளும் உறுப்பு தொடல் என்பது சகஜமாகி வன்முறை நடப்பது அறியாமலே பாலியல் ரீதியாக ஈ எமாற்றப்படுகிறார்கள் . குறிப்பாக பெரியவர்கள் தங்கள் பாலியல் ஆசைகளை நல்ல புரிதலின்றி , அடக்கிவைத்த ஆசைகளை நிறைவேற்ற துடிப்பதால் பச்சை பிஞ்சு உடல் மற்றும்  மனம் புரியாமல் பாலியல் வக்கிரமம் அரங்கேறுகிறது.

       தயவு செய்து, இந்த சமச்சீர் கல்விமுறையிலாவது பாலியல் கல்வி தொடக்கக் கல்வியில் அரங்கேறட்டும். என்னை போன்று உள்ள கல்வி சிந்தனையாளர்கள் பாடத்திட்டம் தீட்டித்தர தயாராக உள்ளோம். ஆசிரியர்களிடமும் இனி பாலியல் தொந்தரவுகள் குறையும் . ஆசிரியர்களும் பயமின்றி கற்றுத்தரலாம்.


  1. மாணவர்களுக்கு பால் உறுப்பு குறித்து கற்றுத்தாருங்கள். அவை நீ மட்டும் தொட கூடியவை என்பதை விரிவாக எடுத்துக் கூறுங்கள் .     
  2. பால் உறுப்புகளை அடுத்தவர்களுக்கு காட்டக் கூடாது என்று கண்டிப்பாக கூறுங்கள். 
  3. பால் உறுப்புக்களில் எதாவது பிரச்சனை என்றால் உங்கள் தாயிடம் கூறுங்கள் என அறிவுறுத்துங்கள் .
  4. பால் உறுப்புக்கு என்று தனி முக்கியத்துவம் தராமல் மற்ற உறுப்புக்கள் போன்று பராமரிக்க சொல்லுங்கள். 
  5. காதல் என்ற பெயரில் யாராவது தொடர்பு கொண்டாள் துணிந்து பதில் சொல்லுங்கள் .ஆம் அல்லது இல்லை என்பதை கூட்ச்சப்படாமல் துணிந்து சொல்லுங்கள்.  அடுத்து உங்கள் பார்வை ஒன்றே அவனை தடுத்து விடும் அருகில்  நெருங்க .
  6. உங்களுக்கு நம் உறவினர் யாராவது தவறாக அணுகுவதாக தெரிந்தால் தைரியமாக தாயிடம் சொல்லுங்கள். அம்மாவிடம் சொல்லி விடுவேன் என பயமுறுத்துங்கள்.
  7. கூடுமான மட்டும் ஆண்கள் தொட்டு பேசுவதை பெண் குழந்தைகள் தவிர்த்து விட செய்ய சொல்லவும் . அதே போல் இவர்களும் தொட்டு பேசுதலை தவிர்க்க சொல்லவும்.
  8. பாலியல் சம்பந்தமான சந்தேகங்கள் கேட்டால் தவிர்ப்பதை தவிர்த்து , அதற்கான விளக்கம் அவன் வயதுக்கு ஏற்ற வகையில் சொல்லவும்.
  9. ஆண் , பெண் குழந்தைகள் என்ன தானி தனியாக பிரித்து ஒதிக்கி தள்ள வேண்டாம்/. இருவரையும் ஒன்றாக வைத்திருப்பதால் கஷ்டம், நஷ்டம் இல்லை . பாலியல் சம்பந்தமான வினாக்கள் இருவருக்கும் பொதுவாக ஆனால் பால் உணர்வுகளை தூண்டாமல் கலந்துரை செய்யவும்.
  10. பாலியல் பிறழ்வு மனநிலை எப்போதும் ஏற்படாதவாறு தாய் கண்காணிக்க வேண்டும்.   

Wednesday, February 10, 2010

காதலாய் தெரிவதெல்லாம் ...

ஒத்தையடி பாதையிலே ...
நித்தம் உன்னை தேடுதடி ...
கடையோரப் பார்வையிலே ...
கண்டபடி இழுக்குதடி ...

கண்ணாடி கூண்டு மீனாய் ...
உன்னிடம் அடைபட்டேனே..
பாவி மனசு நீ பார்க்காட்டி ...
தரையில் போட்ட மீனாய் துடிக்குதடி..

சூரியனாய் சுற்றி வந்த நானும் ..
உன்னை பார்த்த பின்பு ..
உன்னை தேடும்
சூரிய காந்தி ஆனேனே....

உந்தன் பார்வை பட்டதாலே ...
என் பார்வை மங்கியதடி...
பார்க்கிற அத்தனையிலும்
நீ தானடி தெரிகிற ....

உந்தன் சிரிப்பில் காதல் தெரிகிறது ...
இருப்பினும் மறைகிறது ...
என் பின்னே வரும் அண்ணனை பார்த்தா...?
உன் முன்னே செல்லும் தம்பியை பார்த்தா..?

பேசியும் பேசாமலும் ...
பார்த்தும் பார்க்காமலும் ...
பழகியும் பழகாமலும் ..
வருவதல்ல காதல் ...

பேசி பேசி ...
பார்த்து பார்த்து ..
பழகி பழகி ...
பாலாய் தேனாய் ...
ஆறாய் அருவியாய் ..
இரத்த நாளமெல்லாம் ...
ஓடி பாய்ந்து ..
இதயத்தில் கூடி ...
இன்பமாய் வருவது
காதல் ...

ஒத்தையடி பாதையிலே ..
உன்னை தேட மறுக்குது ...
இது காதல் அல்ல ...
என ஒதுக்குது ...
காதலாய் தெரிவதெல்லாம் ...
காதல் அல்ல என்பதாலே !

Tuesday, February 9, 2010

மனமெல்லாம் மதமாய்..

மனமெல்லாம் மதமாய்..
மதமெல்லாம் ...
மன(மெல்லா)ம் மாற்றும்
விதமாய் இல்லை...!

மனமெல்லாம் மதமாய்
இருப்பதாலே...
இரத்தமும் சதையுமாய்
 இருக்கவேண்டிய உறவுகள் ...
குருதி சிந்தி ...
சிவப்பு கம்பளம் விரித்து..
காட்டு மிராண்டிகளாய் ...
சமுகம் நடத்துகின்றன...!

உள்ளமும் புறமும் ..
சேர்ந்து இல்லாமல் ...
உள் ஒன்றும்...
புறம் ஒன்றும்
இருப்பதால் ....
வந்ததோ...
இந்த மதம்!
அதனால் நொந்ததோ ...
இந்த மனம்...!

மெய் ஒன்றென்று
உணர்ந்து ....
பொய் பல சொல்லி  ..
பெருவாழ்வு நீக்கி ..
மரணம் நித்தம் தரும்..
போலிகளை ...
சுத்தமாய்  தவிர்த்து ...
மதம் பேணு ...
மனம் பேணு ...
தெய்வம் ஒன்றென்று ...

Monday, February 8, 2010

கண்ணம்மா ...!

 மாட்டில் பசு ...
கூண்டுக் கிளி .
குயில், குருவி ..
கோழி , புறா ..
பறப்பது ...
நடப்பது, ஊர்வது ...
அப்பப்பா ...அம்மம்மா
அனைத்திலும் ....
நாடுவதெல்லாம் பெண்...

ஆனால் மனிதா ....
பெறக்கும் குழந்தையில்
என்ன பேதம் ...
அனைத்தையும் விற்க
கற்றுக் கொண்டதாலா..?
லாபத்தை மட்டும்
கணக்கிட்டு பார்பதாலா...?

சின்னஞ் சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே ..
என்று பாரதி வரிகள் ...
நிலைத்திட ...
நிறுத்திடுவோம் ...
பெண்சிசு வதையை ..
பதரே மலரே ...
மலரை மலரே ..!
பலரே சிலராய் 
சிலரே பலராய்
மலரை மலராய்
பூக்கச் செய்யும்
காலம் என்றும் வேண்டுமடி
கண்ணம்மா ..!

Sunday, February 7, 2010

பச்ச மண்ணு கேட்குதப்பா ...!

நம் குழந்தைக்கு
ஆறை சேறாய்
காட்டும் அவலம் ...
ஆற்று நீர் நாறுதப்பா...
ஆடு மாடு கூட ...
குளிக்க பயப்புடுதப்பா ...
இதவா குடிக்கிறோம் ...?
பச்ச மண்ணு கேட்குதப்பா ...!

மண்ணை அள்ளி அள்ளி...
மாளிகை ஆக்கி ஆக்கி....
நீர் ஓடாமல் ...
தயங்கி தேங்கி ...
குளமாய்,சேறாய் ...
சாக்கடையாய் நாறி...
நமக்கு நாமே ...
சாவை தேடிக்கொள்ளும் ...
அவலம் நீங்குமா?

அணைகள் அத்தனியும்
மனைகள் ஆகினாலும்
ஆச்சரியம் இல்லை .. 
மரணம் கூட ..
மன்னிக்க மறுக்கும்
எமகாதகா...

எமன் ..
தன் வேலை குறைக்க 
காலிமனைகளை ...
கம்மாயிலும் .....
பிளாட்டுக்களை...
பில்டரிடம் கொடுத்து ...
ஆறரை தோண்டி ...
ஆருயிரை பறிக்க ...
தன் வேலை குறைக்க
எமனாய் படைத்தானோ !

Saturday, February 6, 2010

அறத்தோடு நிற்றல்

வாள்ளுவன் வாக்குப்படி ...
உலகத்தோடு ஒட்ட ஒழுகி..
நானும் .....வயதுக்கு வந்து
'பெய் எனப் பெய்யும் '
கற்புக்கரசி பார்த்து
என்னை மறுத்தபோது
மடலேறி .....
தோழியர் உதவியுடன்
குறியிடம் .....
பேசி பேசி ...
கூட்டிய காதல் ....
அவள் சொந்தத்தில் ...
அம்பல் பேச ...
பின்பு குறியிடம் மாற்றி
காதல் மொழி பேச ...
அது அலர் ஆகி
அனைவரும் பேச ...
அவள் சுற்றமும் முற்றமும்  ...
வெறியாட்டு பூசை நடத்தி ...
என்னை மறுத்து ...மறைத்து
நொதுமலர் வரைவு ஏற்படுத்த ..
தோழியர் உதவியுடன் ...
உடன்போக்கு தூது விட்டாள் ...
மறுத்து மறைக்காமல் ..
மாமன் மாமியிடம் ...
எடுத்து சொல்லி ...
உடன் போக மறுத்ததால் ..
என் காதல் ....
அறத்தோடு நின்றது .

(தாய் தந்தையரை விட்டு பிரியாமல் தம் காதலை எடுத்து பேசி ....வெற்றி பெறும் காதலருக்கு காதலர் தினக் கவிதை )

Friday, February 5, 2010

ராக்கிங் என்ற பெயரில் .....

காடு மேடு விற்று
காசு பணம் கரைத்து
நிர்வாணமாகி  தந்தை
கல்லூரி அனுப்பினால் ...
கற்றுத்தர வேண்டிய கல்வி
சுனாமிக்கு பயந்து
கரை ஒதுங்கிய படகாய்
திருப்பி அனுப்பியது ...
ராக்கிங் என்ற பெயரில் !

காகம் கூட ...
கா... கா ....
என கரைந்து உண்ணும் ...
அதன் மனம் கரைந்து
அழைப்பதால் தான்
அதன் குரலை . ..
கரைகிறது என்றனரா... !

நீ என்ன நாயா ?
தூக்கி எறியும்
எச்சிலை திண்ணவரும்
தன் இனத்தை விரட்டும்
நாயா ...?
நன்றி கெட்ட நாயே
கல்வி ஒன்னும்
பணம்  தரும்
டெல்லெர் மிசின் அல்ல ..
பண்பு கற்றுத்தரும்
பணிவு  கொடுக்கும்
பண்பாடு போற்றும்
மனித நேயம் தந்து
அன்பு கூட்டும்
அகிலம் சேர்க்கும்

ஐயோ இது எங்கே ..
புரியபோகிறது ...?
தந்தையும் பொருள் இழந்து
நிர்வாணம் ...!
மகனும் கல்வி இழந்து
நிர்வாணம் ....?

 
 

Thursday, February 4, 2010

விரதமிரு ..

விரதமிரு ....
ஆடி அம்மாவாசை என ...
ரம்ஜான், கிருஸ்துமஸ் என ...
உடம்பு கொழுப்பை குறைக்க
ஒருநாளாவது விரதமிரு ...

ஏகாதசி, சிவராத்திரி
கிருத்திகை ,சஷ்டி
என பட்டினிகிட ...
உடம்பில் பட்டினி...
கொடுக்குமே  ஆற்றல்...

மாணிக்கவாசகரின் சொல்படி
ஊனினை உருக்கி
உள் ஒளி பெருக்க
உனக்கு நல்வழி
கிடைக்க விரதம்
என்ற பெயரில்
பலகாரம் தின்று ...
பல் ஆகாரம் ஆகி ..
விரதம் ...உனக்கே
விரோதம் ஆகிவிடாமல் ...
விரதமிரு ...

 

Wednesday, February 3, 2010

மரணம் கூட ......

கம்மாயும் ....
கரையா குப்பையால் ...
மேடாகிறது ...

தார் ரோடும் ...
தளைத்த வயலை
குழியாக்கி ...
மேடாகிறது ...

தளைக்கும் பிள்ளைக்கும்
சுடுகாடாய் ....
நகரம் நரகமாய்
மாறிவருவது தெரியாமல்
மேடேருகிறான் .....
மனிதன் ...!

மரணம் கூட
மறுத்து விடும்
மனிதனுடன் வாழ ...!

மாறிவிடு ....
மாற்றிவிடு ...
மாக்கா குப்பையால்
நிறைந்து இருக்கும்
மனதை !
 
மறித்துக்கொண்டு இருக்கும்
இயற்கையை
இயற்கையாய் விட்டுவிடு !

முரண்பாடு

வாழ்வினிக்கும் ....
வசதி கூடும் ...
வறுமை நீங்கும் ...
வயது குறையும் ...
வாலிபம் திரும்பும் ...
வாயினிக்கும் உன்
வார்த்தை கேட்டாலே..
ஆம் ! மழலை சொல்
அத்தனையும் பெற்றுத்தரும்.!

 -------------------------------------------------

பிரதமர்,முதலமைச்சர்
விமான ஓட்டி,விண்வெளி வீராங்கனை
ஆட்டோ, கார், பஸ் ,லாரி 
அத்தனையும் ஓட்ட முடியும்...
போலிஸ் , போலிஸ் கமிஷனர்..
என எதையும் நிர்வகிப்பாய் ...
நித்தம் மனதில் வலுவூட்டி ...
உரம் போட்டு ..
மனதில் திமிர் சேர்த்து ....
காலை பிரார்த்தனையில்
அத்தனையும் முடியும் ...
நீ ஆளப்பிறந்த்தவள் ..
என சொல்லி சொல்லி ...
ஒவ்வரு பெண்ணாய் ...
கொடி  ஏற்றுகிறோம் 
ஏற்றிய கொடிபறக்க மறுக்கிறது ....
காம்பவுண்டுக்குள் அடை பட்டதாலோ...!!!
-----------------------------------------------------------

முரண்பாடு
-------------------------------

தலை தெறிக்க ஓடி
தாவி ஏறினேன் ..
தலையை பிடித்து தள்ளினான்
நடத்துனர் ...
இது மகளீர் மட்டும் என்று!
---------------------------------------------

 

Tuesday, February 2, 2010

பிரிவின் வலி

கதவை சாத்தினாலும்
ஜன்னல் ஓரம் ...
எட்டி பார்கிறது
உன் நினைவுகள் ...
மறக்க வழி இல்லை ...
ஆனால் வலி உண்டு!

சின்னத்திரையில் ....
எண்ணத்தை செலுத்தினாலும் ...
வண்ணமாய் வந்து மறைகிறது ..
மங்கலாய் போன நினைவுகள் ...
உரு பெருகி ....
உருண்டையாய் வந்து
தொண்டையை அடைக்கிறது !?..

மணல் மூடிய பாலைவனமாய்
மனம் இருந்தாலும்..
கானல் நீராய் வந்து வந்து ...
தூசிப்புயலாய் ....
நாசியில் ஏறி ...
மண்டையை குடைந்து ....
உயிரை குடிக்கிறாய்

பிரிவின் மீது
பரிவுக்  காட்டி....
பாசம் கூட்டி ...
நேசக்கரம் தாராயோ ...?
உனக்கும் வலிக்கவில்லையா?
என்னை  நீ நினைக்கவில்லையா?
இதுவும் நட்பின் ஒ௦ரு வகையோ ...!

பரிசு வழங்க வேண்டும்

    ஆனந்த விகடன் 03 .02 .2010 இதழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய  "நீங்கள் அன்பளித்தது எப்போது? "  படித்தேன். அதில் சிறுகதை ஆசிரியரான கு.அழகிரிசாமியின் 'அன்பளிப்பு' கதை ,மற்றும்  ஹாலிவுட் திரைப்படம் 'ரேடியோ ' மூலம் பரிசின் முக்கியத்துவத்தை பற்றி கூறியிருந்தார். அனைவரும் படிக்கவேண்டிய அற்புதமான படைப்பு. அவரின் கருத்தை வலியுறுத்தி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்  என் அன்பான வேண்டுகோள்.
         நான் படிக்கும் காலத்தில் அதாவது நல்லது செய்தால் ஆசிரியர்களும் , தலைமை ஆசிரியர்களும் பரிசளித்து ஊக்குவித்த கதைகள் ஏராளம். அன்று , இன்று போல் கை நிறைய காசு வாங்கவில்லை ஆசிரியர்கள், இருந்த போதும் தன் மாணவன் சந்தோசத்தையும் , நல்ல பழக்கவழக்கத்தையும் தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காக தன் வருமானத்தில் சிறுபகுதியை செலவிட்டனர். 

         இன்று கை நிறைய காசு வாங்குகிறார்கள் , ஆசிரியர் தொழில் (மன்னிக்கவும் பொதுஜனங்கள் சொல்லுவது ) மிகவும் பாதுகாப்பானது , காலை ஒன்பது மணிக்கு சென்று , மாலை நான்கு பத்துக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடலாம் . சொகுசான வாழ்க்கை இன்று ஆசிரியர் பணியை தொழிலாக மாற்றிவிட்டனர். ஆகவே தான் இன்று பரிசு என்பது பிறந்த நாள் , திருமண நாள், பண்டிகை என குறிப்பிட்டுக் கொடுக்கும் ஒரு நினைவு பொருளாகிவிட்டது.

        மாணவர்களுக்கு கனவாகி போனது பரிசும் . ஆகவே தான் அரசும் பொது மேடைகளில் புத்தகங்களை பரிசாக தரவும் என நினைவுபடுத்தியுள்ளது. கனவுகளாகிப் போன பரிசு, மாணவன் வாழ்வில் ஊக்கத்தையும், உற்சாகத்தையும்   சேர்த்து கனவாக்கி போனது.

        பிறந்த நாள் என வரும் மாணவனிடம் பேனா கொடுத்துப்பாருங்கள் அவனின் மகிழ்ச்சியும் , "சார் நான் நல்ல படிச்சு உங்ககிட்ட பரிசு வாங்குவேன் சார் ..."என்ற பதிலும் . ஆண்டு விழாவில் முதல் மதிப்பெண்  பெற்ற மாணவனின் மகிழ்ச்சியும் , இரண்டாவது பரிசு பெரும் மாணவனின் சபதமும் , பார்த்து பரவசம் அடையும் பெற்றோர்களும் ... எவ்வளவு ஆனந்தம் .  பரிசு பட்ட கஷ்டத்தை எல்லாம் பறக்கச் செய்யும் .
      
        பெற்றோர்களே  உங்கள் பையன் செய்யும் நல்ல காரியங்களுக்கு எல்லாம் சின்ன சின்ன பரிசு அளியுங்கள் . பரிசு  என்பது வெறும் பொருள் மட்டுமல்ல , அருகில் உள்ள பார்க் , நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து செல்லுதல்  போன்ற இட மாற்றங்களும், சிறிய விருப்பங்களும்  மிகப்பெரிய மன மாற்றத்தை மாணவனிடம் அழைத்து செல்லும் .

          ஆசிரியர் அனைவரையும் குறை கூற வில்லை.எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. எனக்கு தெரிந்து என்னுடன் பணியாற்றும் ஆசிரியை தன் மாணவர்களுக்கு தகுந்த சமயத்தில் அவனுக்கு வேண்டியதை பரிசாக தருவதை பார்த்திருக்கிறேன். தன் வருமானத்தில் கால் வாசி மாணவர்களுக்காக செலவிடுகிறார். தன் கணவனுக்கு தெரிந்து அநாதை குழந்தைகளுக்கு படிப்பு செலவு ஏற்று , தாய் போல் கண்டிப்புடன்    
வளர்த்து வருகிறார். கண்ணுக்கு தெரியாத அறப்பணி செய்யும் ஆசிரியர்கள் எத்தனையோ?
  
     சக ஆசிரியர்களின் ஏளனம் மிகவும் கொடுமை. "அவ , உலகத்தை தலைகீழ மத்திட போற ...வந்தோமா சம்பளம் வாங்கினோமா போனோமா ...இல்லாம ..."
"நாமக்கென்ன செய்ய தெரியாத ... என்னோமோ இவ்வ செயிராலாம் ..."
"நாம செய்யலாம்... பா ... ஆனா இவ செய்யுறதா பார்த்து தான் நாம உதவுகிறோம்முநு நினைப்பு வந்திடும் ..செய்ய தெரியாமலா ..."
இவை எல்லாம் ஆசிரிய பணியை  தொழிலாக செய்பவர்களின் இயலா மொழி . ஆனால் உதவும் ஆசிரியர் எதை  பற்றியும் கவலை படாமல் தன் அற பணியினை தவறாமல் செய்து , மாணவர் முன்னேற்றம் ஒன்றே குறிகோளாக செயல் படுவார்.

           நான் கல்லூரி பயின்ற பொழுது கூட பரிசு வழங்கும் ஆசிரியர்கள் அதிகம் . பரிசு என்பது கொடுப்பதன் மூலம் பிறரின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக கருதுவதாகும். மாணவர் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் மாணவனுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பரிசு வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்தி , நல்ல பண்பை ஊக்குவிப்போம், வளர்ப்போம். மதிப்பெண் அதிகம் வாங்கினால் தான் பரிசு வழங்க வேண்டும் என்பது அல்ல. நல்ல பண்பு வளர்பதற்கும் , மனதை பக்குவபடுத்தி , அன்பை பெருக்குவதற்க்கும் ஆகும்.

   பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவ்வப்போது பரிசுகளை தந்து , அன்பை பெருக்கி , பண்பை கூட்டி , நற்பண்பை நிலை நிறுத்தி , அவர்களின் எதிர்காலத்தின் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்த உழைப்போம்.

    உங்கள் நினைவில் நின்ற ஆசிரியர்களை பற்றி கருத்திட்டு ஆசிரிய சமுகம் , இன்னும் முனைப்பாக உழைத்திட உற்ச்சாக படுத்துவோம்.கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

Monday, February 1, 2010

மாணவர் உலகம்

கனவுகாண் ....
ஆசிரியார் சொன்னதாலோ ...
என்னவோ .....
இரவில் அவர் கை
பிரம்பு வந்து வந்து ....
தூக்கம்  கலைகிறது.

நாய் குரைக்கும் சத்தமும் ...
துணையாய் வர ....
மதிப்பெண் பட்டியல்
தானாக மனதில் தோன்ற ....
மதிப்பாய் ....
அன்னை பார்வைக்கு
புத்தகம் தூக்க...
ஒரு மணிக்குமா படிப்பு ...
தூங்குப்பா..
என அப்பா குரல் கொடுக்க ....
கூர்க்கா விசில் ஊத ....
விளையாட்டாய் போன தூக்கம்...
விளையாட்டை நினைவு படுத்த ..
புட்பால் கிரவுண்டுக்கு
காலை  செல்ல வேண்டும் ....
என்ற நினைவுடன்....
அனைவர் நினைவும் ....
கனவாய் .....!!!
கனவுகாணுங்கள் பெற்றோர்களே ....
உங்கள் பிள்ளைகளின் ஆசைகளும் ...
தெரிந்து !!!!
விதைத்திடுங்கள் கனவை ஆசிரியர்களே....
மாணவர் மனம் தெரிந்து!!!
 

"ஒருவனுக்குஒருத்தி" ....இது நம்ம கலாச்சாரமா ?

    "ஒருவனுக்குஒருத்தி" ....இது நம்ம கலாச்சாரமா ? 

மதுரை பிளாக்கர் சந்திப்பில் நடந்த சுவையான அனுபவம் . டாக்டர் ஷாலினியின் சுவையான கருத்து ....

       மாகாபாரத கதையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கருத்து பரிமாற்றத்தின் சாரம்.

ஆதி முதல் மனிதன் பல தார மணம் முடிக்க காரணம் . மனிதன் இயற்க்கை இடர்பாடுகள் , மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பற்ற, மனித சந்ததியை அதிக படுத்த வேண்டியதால், பல பெண்களுடன் திருமணம் செய்துகொண்டான். பலம் பொருத்தியவனுக்கு மனைவியாவதை விரும்பினர்.  அரசன் பின்பு எதிரி நாட்டு  அரசனுடன் சண்டை போடவும் , தன்னை காப்பாற்றவும் ஆட்கள் தேவை பட்டதால் , அந்தபுரத்தை நிறைத்தான், சந்ததியை பெருக்கினான். மேலும் தன் இரத்தமாக இருந்தால் நமக்காக சண்டை போடுவான் என்பதாலும் பல பெண்களை மணந்தான்.

      குந்தி தேவி ஏன்  சூரிய பகவனிடம்     மட்டும் நான்கு குழந்தைகளையும் பெறவில்லை.?   சூரியன், எமதர்மன், இந்திரன்....என பலசாலிகளை தேர்தெடுத்தக்காரணம்  என்ன?
வீரிய விந்துக்களை பெறுவதனால் , அந்த பண்பை தன் சந்ததி பெரும் என்பதால் மட்டுமே.

இப்படி தர்மன், அர்ஜுனன் , கிருஷ்ணன் என அனைவரும் பல தார மணம் புரிந்ததன் காரணம் தன் இனத்தையும் , தன்னையும் காப்பாற்ற , தன் இரத்தம்  என்றால் தமக்காக சண்டை போடுவார்கள் என்பது மட்டுமே.
      
     இதில் இராவணன் மிகவும் சிறப்பானவன். தான் எந்த ஊருக்கு செல்லுகிறானோ அந்த ஊரில் உள்ள சிறப்பான பெண்களை தன் அந்தபுரத்தில் நிரப்பிவிடுவான்.

      இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மனி மக்களை பல தார மணம் புரிய சொன்னான். என்னெனில் தன் ஜெர்மன் நாட்டுக்கு சண்டை போட தன் இரத்தமாக இருந்தால் , உலகை நாம் ஆளலாம் மேலும் போரில் நிறைய ஆள் இழப்பு ஏற்பட்டாலும் அதை ஈடு செய்ய ஆட்கள் தேவை என்பதால் பல பெண்களை மானம் புரிய கட்டளை இட்டான்.
       
        ரோமன் காத்தோலிக்க சபை வந்தபின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு கடை பிடிக்கப்பட்டது. நம்மவர் மதம் மாறி கொள்கைகளை பின் பற்றிய போது , நாமும் நம் கொள்கையாக கடைபிடிக்க ஆரம்பித்தோம்.


       மதம் மாற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இன்று பெண்கள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஆடவனை நம்பி , அண்டி பிழைப்பு நடத்த வேண்டியது இல்லாமல் போனதாலும், ஆண்கள் ஒதுக்கப்பட்டதால், ஒருவனுக்கு ஒருத்தி நிலைத்து நிற்கிறது. முன்பு பெண்கள் ஆண்களையே நம்பி இருந்ததால் , உணவுக்கும்,இருப்பிடத்திற்கும் இருந்ததால் பல தார மணம் சாத்திய பட்டது.
          எது எப்படியோ இன்று பெண்கள் முன்னேறி உள்ளனர் என்பது சந்தோசமான விஷயம். மனைவியை நம்பி காலம் தள்ளும் கணவர்கள் பலர் உள்ளனர். சக்கரம் சுலன்றுவிடாமல் ......என பலர் கூறுவது  என்காதில் விழுகிறது. என்ன தருமி சார் ஒருமாதிரி என்னை பாக்குறீங்க ...நானும் உங்கள மாதிரிதான் வீட்டுக்கு அடங்கிய பிள்ளை .......