மதமெல்லாம் ...
மன(மெல்லா)ம் மாற்றும்
விதமாய் இல்லை...!
மனமெல்லாம் மதமாய்
இருப்பதாலே...
இரத்தமும் சதையுமாய்
இருக்கவேண்டிய உறவுகள் ...
குருதி சிந்தி ...
சிவப்பு கம்பளம் விரித்து..
காட்டு மிராண்டிகளாய் ...
சமுகம் நடத்துகின்றன...!
உள்ளமும் புறமும் ..
சேர்ந்து இல்லாமல் ...
உள் ஒன்றும்...
புறம் ஒன்றும்
இருப்பதால் ....
வந்ததோ...
இந்த மதம்!
அதனால் நொந்ததோ ...
இந்த மனம்...!
மெய் ஒன்றென்று
உணர்ந்து ....
பொய் பல சொல்லி ..
பெருவாழ்வு நீக்கி ..
மரணம் நித்தம் தரும்..
போலிகளை ...
சுத்தமாய் தவிர்த்து ...
மதம் பேணு ...
மனம் பேணு ...
தெய்வம் ஒன்றென்று ...
4 comments:
மதம் ,அரசியல் இரண்டும் ஒன்றுதான்
நல்ல வரிகள்
அன்பிற்குரிய திரு சரவணன்,
கல்வி குறித்த தங்கள் வலைத் தளம் சிறந்தோங்க வாழ்த்துக்கள்.
நற்றிணை சார்ந்த என் பதிவு பற்றிய உங்கள் கருத்துரை என் மனம் குடியிருக்கும் மதுரையிலிருந்து - தங்களிடமிருந்து வந்ததற்கு மகிழ்கிறேன்.அதை வெளியிட்டிருக்கிறேன்.
தொடர்ந்து தங்கள் வலைப் பக்கம் வருகிறேன்.
நல்ல ஆக்க பூர்வமான சமூகசிந்தனைகளாக எழுதி வருகிறீர்கள் என்பதை அறிய முடிகிறது.
//சிவப்பு கம்பளம் விரித்து..
காட்டு மிராண்டிகளாய் ...
சமுகம் நடத்துகின்றன...!//
நல்ல வரிகள் கவிதை , நல்லா இருக்கு தலீவா !!
சரியா சொன்னீங்க சரவணன்.
Post a Comment