உலகத்தோடு ஒட்ட ஒழுகி..
நானும் .....வயதுக்கு வந்து
'பெய் எனப் பெய்யும் '
கற்புக்கரசி பார்த்து
என்னை மறுத்தபோது
மடலேறி .....
தோழியர் உதவியுடன்
குறியிடம் .....
பேசி பேசி ...
கூட்டிய காதல் ....
அவள் சொந்தத்தில் ...
அம்பல் பேச ...
பின்பு குறியிடம் மாற்றி
காதல் மொழி பேச ...
அது அலர் ஆகி
அனைவரும் பேச ...
அவள் சுற்றமும் முற்றமும் ...
வெறியாட்டு பூசை நடத்தி ...
என்னை மறுத்து ...மறைத்து
நொதுமலர் வரைவு ஏற்படுத்த ..
தோழியர் உதவியுடன் ...
உடன்போக்கு தூது விட்டாள் ...
மறுத்து மறைக்காமல் ..
மாமன் மாமியிடம் ...
எடுத்து சொல்லி ...
உடன் போக மறுத்ததால் ..
என் காதல் ....
அறத்தோடு நின்றது .
(தாய் தந்தையரை விட்டு பிரியாமல் தம் காதலை எடுத்து பேசி ....வெற்றி பெறும் காதலருக்கு காதலர் தினக் கவிதை )
2 comments:
காதலுக்கு மரியாதையை நல்லாவே கொடுத்திருக்கீங்க!!
மிகவும் அருமை
Post a Comment