Tuesday, February 2, 2010

பிரிவின் வலி

கதவை சாத்தினாலும்
ஜன்னல் ஓரம் ...
எட்டி பார்கிறது
உன் நினைவுகள் ...
மறக்க வழி இல்லை ...
ஆனால் வலி உண்டு!

சின்னத்திரையில் ....
எண்ணத்தை செலுத்தினாலும் ...
வண்ணமாய் வந்து மறைகிறது ..
மங்கலாய் போன நினைவுகள் ...
உரு பெருகி ....
உருண்டையாய் வந்து
தொண்டையை அடைக்கிறது !?..

மணல் மூடிய பாலைவனமாய்
மனம் இருந்தாலும்..
கானல் நீராய் வந்து வந்து ...
தூசிப்புயலாய் ....
நாசியில் ஏறி ...
மண்டையை குடைந்து ....
உயிரை குடிக்கிறாய்

பிரிவின் மீது
பரிவுக்  காட்டி....
பாசம் கூட்டி ...
நேசக்கரம் தாராயோ ...?
உனக்கும் வலிக்கவில்லையா?
என்னை  நீ நினைக்கவில்லையா?
இதுவும் நட்பின் ஒ௦ரு வகையோ ...!

3 comments:

Thenammai Lakshmanan said...

//மறக்க வழி இல்லை ...
ஆனால் வலி உண்டு//

உரு பெருகி ....
உருண்டையாய் வந்து
தொண்டையை அடைக்கிறது

தூசிப்புயலாய் ....
நாசியில் ஏறி ...
மண்டையை குடைந்து ....
உயிரை குடிக்கிறாய்//

ungkalukkm vaarththaikal vasap padikirathu saravanan

vaazththukkal !!!

ஸ்ரீராம். said...

தேனம்மை மேடம் கருத்தை வழி மொழிகிறேன்.

அழகு..அழகு சரவணன்.. அருமை.

Anonymous said...

உரு பெருகி வரும் வார்த்தைகள்
நல்லவரி

Post a Comment