Sunday, February 7, 2010

பச்ச மண்ணு கேட்குதப்பா ...!

நம் குழந்தைக்கு
ஆறை சேறாய்
காட்டும் அவலம் ...
ஆற்று நீர் நாறுதப்பா...
ஆடு மாடு கூட ...
குளிக்க பயப்புடுதப்பா ...
இதவா குடிக்கிறோம் ...?
பச்ச மண்ணு கேட்குதப்பா ...!

மண்ணை அள்ளி அள்ளி...
மாளிகை ஆக்கி ஆக்கி....
நீர் ஓடாமல் ...
தயங்கி தேங்கி ...
குளமாய்,சேறாய் ...
சாக்கடையாய் நாறி...
நமக்கு நாமே ...
சாவை தேடிக்கொள்ளும் ...
அவலம் நீங்குமா?

அணைகள் அத்தனியும்
மனைகள் ஆகினாலும்
ஆச்சரியம் இல்லை .. 
மரணம் கூட ..
மன்னிக்க மறுக்கும்
எமகாதகா...

எமன் ..
தன் வேலை குறைக்க 
காலிமனைகளை ...
கம்மாயிலும் .....
பிளாட்டுக்களை...
பில்டரிடம் கொடுத்து ...
ஆறரை தோண்டி ...
ஆருயிரை பறிக்க ...
தன் வேலை குறைக்க
எமனாய் படைத்தானோ !

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இதவா குடிக்கிறோம் ...?
பச்ச மண்ணு கேட்குதப்பா ...!//

ஆஹா...,

Unknown said...

வரிகள் அனைத்துமே ரொம்ப நல்லா இருக்கு

Anonymous said...

இதுதான் அபிவிருத்தி எண்டு சொல்லுவாங

நாடோடி said...

//நமக்கு நாமே ...
சாவை தேடிக்கொள்ளும் ...
அவலம் நீங்குமா?//

அருமையான் வரிகள்...... நல்ல இருக்கு...அரசியல் சாக்கடையை முதலில் தூர் வார வேண்டும்

ஸ்ரீராம். said...

சமூக சிந்தனை.

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களின் சமுதாய அக்கறை பாராட்டப்பட வேண்டியது, பாராட்டுக்கள்.

Post a Comment