Sunday, August 28, 2011

நானே பாரதி...!

கனவென்னக் கனவோ
எனத்தான் நினைத்தேன்
கண் விழிக்காத வரை…
கண் மூடி தூங்க முடியாமல்
எத்தனைப் பேர்
எனவே
கண் மூடி காண்கின்றேன்…
காணி நிலம் வேண்டி
வில்லங்கம் இல்லாமல்
அதுவும்
நில அபகரிப்பு இல்லாமல்….
முண்டாசு கட்டிய பாரதியாய்
முறுக்கு மீசையுடன்
அன்னஹசாரேயுடன்
கை கோர்த்து
ஊழலுக்கு எதிராக பாடிடவே
நானே பாரதியாய் மாறிடவே
கனவென்ன கனவோ
நகரா ரேசன் அரிசி வேண்டி
”அ” இல்லாத
நியாய விலை கடைகளில் …
உயர உயரப் பறக்கும்
பட்டத்தினை தரை யிரக்கவே
முடியாமல்…
பட்டாம் பூச்சியாய் மாறி
பறந்து பார்க்கிறேன்
விலைவாசி என்று எழுதிய பட்டத்தினை…
இறக்கையின் வண்ணத்தை
விலைவாசியில் கொட்டிடவே
பட்டம் தானாக இறங்கியது….
டேங்க நிரப்பி வை
பெட்ரோல் விலை
ஏறப் போகுதாம் …
என கூவியே
விழிக்க செய்தாள்
அம்மா…!
Friday, August 26, 2011

கல்வியின் உண்மை நிலைதூரிகைகள்
நிரப்பிக் கொண்டிருந்தன
முடிக்கப்படாத ஓவியத்தின்
அறியப்படாத உருவங்களை
பொருந்தாத வண்ணங்களால்….!

அடிப்படை நிறங்கள்
வலுக்கட்டாயமாக
நிறமாற்றம் செய்யப்பட்டன
எரிச்சலுட்டும் வண்ணக் கலவை
பொருந்தாமல் …
ஓவியத்தின் தன்மையை
மெல்ல மெல்ல
அழித்துக் கொண்டிருந்தது…

திறக்கப்பட்ட
பள்ளியின் கதவுகள்
இன்னும் கருமையாகவே…

கோடுகள் நிரம்பிய
ஓவியங்கள்
இன்னும் பழைய தூரிகைகளால்
தீண்டப்படுவதால்…
வாழ்வின் பக்கங்கள்
இன்னும் கருமையாய் …!

Thursday, August 25, 2011

கெளதமருடைய சீடர்கள் சிந்தனை எப்போதும் பெளத்த சங்கத்தைப் பற்றியவை

எந்த ஆசிரியனும்
பள்ளி முடிந்த பின்பும்
நேரடியாக வீட்டுக்குச் செல்வதில்லை….
ஆசிரியர் பணி என்பது
பள்ளியுடன் முடிவதில்லை
கற்பித்தலுடன் மட்டுமே முடிவதில்லை
வகுப்பறையுடன் முடிவதில்லை
நம்பித்தான் ஆகவேண்டும்
அன்று மாலை
மாணவர்களை வீடு தேடி
அவர்களின் நடவடிக்கையை அறிய
ஆவலுடன் சென்றேன்….
எல்லா மாணவர்களின் வீடுகளும் அப்படித் தான் இருந்தன..
அழைப்பு மணிக்கு செவி கொடுக்க மறுக்கும் கதவுகள்
திறந்த வீட்டில் நாய் நுழைந்த மாதிரி தான்
ஆனால்
பூனைப் போல பதுங்கிச் சென்றேன்
அனைத்து வீடுகளிலும்
மனிதர்களின் மூளை கபாலப் பெட்டியில் அல்லாமல்
டி.வி பெட்டிக்குள் புதைக்கப்பட்டு இருந்தன
என் வருகையை பதிவு செய்ய
எப்படி முயன்றும் தோற்றுப் போனேன்
விளம்பர இடைவேளையிலும்
குரங்குகளாய் மாறி
தாவி தாவிச் சென்றனர்
நாடகங்களாலும் , சினிமாவாலும்
கைது செய்யப்பட்ட மனங்கள்
வீடுகள் சிறைச்சாலைகளாக மாறியிருந்தன..
என்னுடைய வருகை அவர்களை பாதித்திருக்கவில்லை..
சற்று புன்னகையுடன் என்னையும்
சவப்பெட்டிக்குள் புதைக்கப் பார்த்தார்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்ட அத் தருணத்தை
கடவுள் எனக்களித்த வரமாக கொண்டு உரையாடினேன்..
உலர்ந்த சருகுகளைப் போல் என்னிடம் இருந்து பிரிந்து செல்லவே முயன்றனர்
குறைகளில் இருந்து நிறைகளை காண முற்படுகின்றேன்..
பிறர்குறைகளை காண்பது எளிது என்பதால்
என்னை தீயிலிட்டு பொசுக்க முயல்கிறேன்..
தர்ப்பை புல்லை தவறாக இழுத்தவனைப் போல்
காயமுற்று நிற்கிறேன்…
மருந்து தேடி…
நல்லூக்கம் மூலம் நல்வாழ்வு தந்திடவே…
எந்த ஆசிரியனும் பள்ளி முடிந்து வீடு சென்ற பின்பும்
வீட்டில் இருப்பதில்லை…
கெளதமருடைய சீடர்கள் சிந்தனை
எப்போதும் பெளத்த சங்கத்தைப் பற்றியவை
ஆம்
எந்த ஆசிரியனும் எப்போதும் தன் மாணவனைப் பற்றியே
சிந்திக்கிறான்…
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்
எந்த அஸ்தமனமும் விடியலை தடுத்து விடுவதில்லை
பாசுரங்கள் போல தன் மாணவன்  அர்த்தமுள்ளவனாக மாறவே
உற்சாகத்துடன் ஒவ்வொரு நாளும் பணியினை தொடர்கிறான்…!

Wednesday, August 24, 2011

உங்களுக்கான ஸ்கூட்டியில் பயணம் செய்ய தாயாராகுங்கள்….!ஸ்கூட்டி தேவதைகளுக்கான வாகனம்
தேவதைகளை மட்டுமே ஓட்டிச் செல்ல
அனுமதிக்கிறது…!
ஸ்கூட்டியை பின்தொடராத ஆண்களை
பார்த்திருக்கிறீர்களா..?
ஆம்  என்றால்
அது பூமியாக இருப்பதற்கான
சாத்தியக்கூறுகள் குறைவு..!
இல்லையென்ரால் அவர்
வண்டி ஓட்டத் தெரியாத பாதாசாரியாக இருக்கலாம்!
இருப்பினும் அவனும்
வேகத்தடைகளில் குதித்து
செல்லும் ஸ்கூட்டியின்
மார்போடு ஓட்டி பயணித்து இருப்பான்..!
எந்த ஸ்கூட்டியும்
யாரையும் பின்தொடரச் சொல்வதில்லை..
சாலைகளில் தேவதைகளின்
அனுமதியில்லாமலே
பின்னால் அமர்ந்து செல்வதைப் பலமுறை பார்க்கிறேன்
இதை தேவதைகள் உணர்வதில்லை
இதோ
பாருங்கள் என்னை முந்தி செல்பவனை…
தேவதையின் அனுமதியின்றி
பின்னால் அமர்ந்து
அவளின் அகன்ற முதுகுப்பகுதியை
முகர்ந்து முத்தமிட்டுக் கொண்டு
செல்கிறான்….
அதோ
அவனுக்கும் பின்னால்
ஸ்கூட்டியின் கண்ணாடி வழியாக
அவளின் உதடுகளை கிழித்துக் கொண்டிருப்பவனை
பாருங்கள்…
இதற்காக தேவதைகள் வருத்தப்படுவதாக
நான் அறியவில்லை
ஸ்கூட்டியை பின் தொடருபவன்
எவனும் சாலை விபத்துக்குள்ளாவதில்லை
ஏனென்றால்
எந்த ஸ்கூட்டியும் கனரக வாகனங்களை
முந்திக் கொண்டு செல்வதில்லை…!
தேவதைகளைப் புறக்கணித்து செல்லும்
வாகனங்கள் மட்டுமே
விபத்துக்குள்ளாவதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன…!
ஸ்கூட்டியால் மட்டுமே
ஒரு ஆணின்
மனபாரங்களை எல்லாம்
லேசாக்கி…
வாதையை மறந்து
நிதானத்தை உருவாக்க முடியும்
என மனநல மருத்துவர்கள்
ஆராய்ச்சி செய்வதாக செய்தி…!
மன்னிக்கவும்
எனக்கான ஸ்கூட்டியை
பார்த்துவிட்டேன்…!
நீங்கள் விபத்துக்குள்ளாகும் முன்
உங்களுக்கான ஸ்கூட்டியில்
பயணம் செய்ய தாயாராகுங்கள்….! 

Tuesday, August 23, 2011

கவிதை வரவில்லை பொறுத்துக்கொள்ளுங்கள்ஞாயிறு வந்த பின் எழும் நாள்
எச்சில் ஒழுக
தலையனையைக் கட்டிப் பிடித்து
உலகமே மறந்து உறங்கும் நாள்
குட்மார்னிங் சார்…
அந்த வகுப்பு டீச்சர் வரலை…!
பஸ் ரிப்பேர்..?!
சார் அடிக்கிறார்…!
என புகார்களுக்கு இடமளிக்காத
ஞாயிறு
என்னை சுற்றி புத்தகங்கள் வட்டமிட்டு
என்னை விழிக்கச் செய்கின்றன
எழும்ப மறுக்கிறேன்…
மாணவர்களை பார்க்காத
கற்பித்தல் பணி நடக்காத
இந்தநாளும் ஒரு நாளா
இன்றைக்கு
நான் ஏமாற்றப் பட்ட நாள்
மன்னிக்கவும்
கவிதை வரவில்லை
பொறுத்துக் கொள்ளுங்கள்.  

Monday, August 22, 2011

தொழில் அல்ல… பணி

   சென்ற வாரம் மதியம் உணவு இடைவேளைக்கான மணி ஒலித்தது. அனைத்து மாணவர்களும் மணி ஒலித்ததும் , ஆசிரியர்களுடன் வரிசையாக சத்துணவு உண்பதற்கு சென்றனர். சில நிமிடங்களில் ஒன்றாம் வகுப்பு அ பிரிவு ஆசிரியர் பதறி அடித்து ஓடி வருகிறார். “சார், சத்துணவு சாப்பிடுகிற இடத்தில ஒரு பையன் இரத்த வாந்தி எடுக்கிறான்”.
“பதற வேண்டாம் …” என்ற என்னை பார்த்து , “சார், குடம் குடமா இரத்த வாந்தி அவசரம் , சீக்கிரம் வாங்க சார்” என சொல்லிக் கொண்டே மாடியிலிருந்து இறங்கிவிட்டார். ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்தி முடித்து நோட்டு திருத்திக் கொண்டிருந்த எனக்கு அப்போது தான் ஒரு வித பதட்டம் பற்றிக் கொண்டது. உடனே, சத்துணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் மாணவர்களை சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பித்து, சத்துணவு பறிமாறும் அறைக்கு சென்றேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாயில் இரத்தம் ஒழுக நின்று கொண்டிருந்தான். அவனை சுற்றி மாணவர்கள் கூட்டம் மற்றும் இரு ஆசிரியர்கள் நின்று கொண்டு இருந்தனர். கூட்டமாக நின்று இருந்த மாணவர்களை அகற்றி விட்டு , அவனருகில் சென்று பார்தேன். அவனின் வெளிரிய தோல் , மஞ்சள் நிறமாக மாறி , அவன் ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டான். நிதானமாக ஒண்ணுமில்லை… ”என்ன சாப்பிட்ட? சத்துணவா? “ இன்னும் சாப்பிடவேயில்லை… சாப்பிட வரும் போது தான் இப்படி இரத்த இரத்தமா வாந்தி எடுத்து இருக்கான்.”என்றார் அவன் வகுப்பு ஆசிரியர். ”காலையில் என்ன சாப்பிட்ட ?’’
“இட்டலி”
”சாம்பாரா? பழைய கோழிக் குழப்பு ஊத்தியா சாப்பிட்ட?”
”சாம்பாரு”.
“சார், அவனின் அண்ணன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான் ” என்றார்
ஒன்றாம் வகுப்பு ஆ பிரிவு ஆசிரியர்.
”டேய், அஜித், உடனே யுவ ராஜை அழைத்து வா ..”
அவனின்  அண்ணன் வந்தான். அவன் வருவதற்குள் சத்துணவை வெளியில் வைத்து பறிமாற சொல்லி டீச்சர்களை அனுப்பி வைத்தேன். அந்த இரத்த வாந்தியை பார்த்த ஆசிரியை ஒருவர் அந்த இட்த்திலேயே வாந்தி எடுத்தார். ஒரு ஆசிரியைக்கு தலைசுற்று வந்து சரிந்தார். கெட்டிக் கெட்டியாக பீட்ருட்டை அரைத்து ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி சிவப்பில் தண்ணியாகவும், திரள் திரளாகவும் இருந்தது. மாணவனை வாய் அலம்ப சொன்னேன். காற்று படும் இடத்தில் நிறுத்தினேன். அவன் வகுப்பு ஆசிரியரை அழைத்தேன். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்திரவிட்டேன். செல் போனை கையில் எடுத்துக் கொள்ளுங்கள் . அவனின் அண்ணனிடம் விசாரித்த போது இதுமாதிரி அடிக்கடி வாந்தி எடுப்பான். அப்புறம் சரியாக போயிடும் என்றான். மாணவனின் வீடு என் பள்ளியிலிருந்து இருபதுகிலோமீட்டர் இருக்கும்… சக்கிமங்கலம் ஆகும்.
அவர்கள் அழைத்து சென்ற மருத்துவமனையில் பையன் பிழைக்க மாட்டன். இதை யாரும் வெளியில் உள்ள டாக்டர்கள் பார்க்க மாட்டார்கள் .உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றனர். ஆசிரியர்கள் அவனின் பெற்றோரிடம் விட்டு விடலாம் , எதற்கு இந்த ரிஸ்க் என்றனர். நான் பையனை உடனே ஆட்டோ பிடித்து பெரிய ஆஸ்பத்திரி (இராஜாஜி மருத்துவமனை)க்கு அழைத்து செல்ல உத்தரவிட்டேன்.
இதற்கிடையில் மாணவனின் பெற்றோர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள் . அவர்கள் காலையில் ஏழுமணிக்கு சென்றால், இரவு எட்டு மணிக்கு தான் வருவார்கள் என விபரம் கிடைத்தது. வீட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. சரி அவர்கள் வேலை செய்யும் இடம் தெரியுமென்று விசாரித்தால், அவர்கள் தினக் கூலிகள் . எந்த இடத்தில் வேலையென்பது தெரியாது என அறிய வந்தேன். மாணவனின் அருகில் உள்ள பெற்றோருக்கு போன் செய்து, அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ள எதாவது போன் இருக்கிறதா? என விசாரித்தேன். அவர்கள் தெரியாது என்றனர். பின்பு , மாணவனின் நிலையை எடுத்து சொல்லி எப்படியாவது எனக்கு போன் செய்ய சொல்லவும், தயவு செய்து அவனின் வீட்டுக்கு அருகில் உள்ள நபர்களை பிடித்து விசாரித்து தகவல் தரும் படி கெஞ்சி கேட்டுக் கொண்டேன். அதற்கு இடையில் அரசு மருத்துவமனையில் மாணவன் அவசர வார்டில் கொண்டு சென்றவுடன் மீண்டும் இரத்த வாந்தி எடுத்திருக்கான், மருத்துவமனை செவிலியர்கள் , டாக்டர்கள் மாணவன் பள்ளியிலிருந்து வருகிறான் என்றவுடன் பெற்றோர்கள் இருந்தால் தான் அனுமதிப்போம் என்கின்றனர். உயிருக்கு ஆபத்து இருக்குதாம்.. சொல்ல முடியாது என்கின்றனர் என எனக்கு போன் செய்தனர். நான் பயப்பட வேண்டாம் , முதலில் சேர்க்கை படிவத்தில் கையொப்பம் இட்டு சேர்க்கவும். எது நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். என்னை நம்பி உடனே கையொப்பம் இடவும். நான் நேரில் சென்றாவது அவர்களின் பெற்றோர்களை அழைத்து வருகின்றேன். அதுவரை நீங்கள் மாணவனுடன் இருங்கள் என கட்டளை பிறப்பித்து , மீண்டும் அவர்களின் அருகில் உள்ள வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். அவர்கள் ”சார் என் மகள் தான் என் செல் போனில் அவர்களின் நம்பரை குறித்தது , எந்த பேருல குறிச்சுதுன்னு தெரியல…” ”ஒரு உயிர காப்பத்துரதுக்கு உதவுறீங்க…. தயவு செய்து எங்க வேலை பார்க்கிறாங்க என சொல்லுங்க … நானே நேரில் சென்று பார்க்கிறேன் என்றேன். சார் பத்து நிமிடம் கழித்து போன் பண்ணுங்க , நான் உடனே வாங்கி தருகிறேன் என்றனர். அதற்குள் மருத்துவமனையில் இருந்து போன்… “சார், பிளட் கேன்சர் இருந்தாலும் இப்படி வாமிட் வருமாம், இல்லைன்னா.. அல்சர் முத்தி போனாலும் இப்படி வருமாம்…அதுனால கட்டாயம் பெற்றோர் வேணுமாம்.. எங்களுக்கு எதுவும் பிரச்சனை வராதுல்லா… அவுங்க பயமுறுத்துராங்க… “என அழத் தொடங்கினார். “ஒண்ணும் ஆகாது.. தைரியமாக இருங்க… அவுங்க பெற்றோரை அழைத்து வருகின்றேன்… மாணவனுக்கு உடனடியாக முதலுதவி செய்ய சொல்லுங்க…” என்றேன்.
மீண்டும் மாணவனின் எதிர் வீட்டுக்கு போன் செய்தேன். ”சார்… அவுங்க கூட வேலை செய்யுறவுங்க.. போன் நம்பர் எழுதிக்கீங்க…” என்று தந்தார்கள்.   போன் செய்து நிலமையை சொல்லி உடனே மருத்துவமனைக்கு செல்ல சொன்னேன். ஆசிரியர்களின் செல் நம்பரையும் தந்தேன். அங்கு சென்று ஆசிரியரை போன் செய்ய சொன்னேன். ஆசிரியர்களுக்கும் முத்துவின் செல் நம்பரை கொடுத்து பேச சொன்னேன்.
மருத்துவ மனையில் இருந்து போன் வந்தது. ”சார் , முத்துவோட அம்மா, ”டீச்சர் எதுவும் அடிச்சாங்களா… வகுத்துல எத்துனாங்களா…? என கேட்கிறாங்க சார்… இதுக்கு முன்னால இந்த மாதிரி வந்த்தில்லைன்னு பொய் சொல்லுறாங்க சார்… “
“சரி , ஆத்திரத்தில அப்படி தான் பேசுவாங்க.. நாமயில்ல மருத்துவ மனையில சேர்த்து இருக்கோம்.. எல்லாரும் அப்படி தான்…முத்து எப்படி இருக்கான்..? “
”குழந்தைகள் வார்டுல.. குளூக்கோஸ் ஏறுது சார்”
”காலையில என்னை வந்து அவுங்க அப்பாவை பார்க்க சொல்லுங்க.. செலவுக்கு பணம் கொடுத்திட்டு வாங்க …நான் தர்றேன்…” என்றேன்.
பள்ளிக்கு வந்தவுடன் உடன் சென்ற மூத்த ஆசிரியர் டாக்டர் என்ன வியாதியின்னே தெரியல்லை… உடனே வீட்டில போய் டெட்டால் உற்றி கை கழுவி , குளித்துவிட்டு வேறு வேலை பார்க்க சொன்னார் சார்… நாங்க கிளம்புகிறோம் என்றாரே பார்க்கலாம். வேறு என்ன செய்ய அனுப்பி வைத்தேன்.  
காலையில் அவரின் தந்தை மூன்றாம் வகுப்பு மாணவனை பள்ளியில் விட்டு சென்றுள்ளார். நான் வருவதற்கு முன்பே சென்று விட்டார். மூன்றாம் வகுப்பு ஆசிரியரிடம் “சாருக்கு நன்றி சொல்லுங்க… சார் மட்டும் சொல்லி சேர்க்கலைன்னா.. என் பிள்ளைய பார்த்திருக்க மாட்டேன்.. டாக்டர் சொன்னார்… தக்க சமயத்தில கொண்டு வந்திருக்காங்க… இன்னும் டிரிப் ஏறுதுன்னு சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு சென்றாறாம்.
ஆசிரியரிடம் என்ன வியாதின்னு கேட்டீங்களா..? என்று விசாரித்தேன். அதான கேட்கலை என்ற ரீதியில் பதில் அளித்தார். மறு நாள் வந்தவரிடம் விசாரித்த போது .. கல்லீரலில் பிரச்சனையாம். கல்லீரல் அடிபட்டு இருக்குன்னு டாக்டர் சொல்றார். நாலு நாள் முன்னாடி சைக்களில் விழுந்தான்… கால்ல மட்டும் தான் அடின்னு .. கட்டு போட்டு விட்டோம்.. நல்லா கேட்டுட்டேன்.. சைக்கிள் வந்தவுடன் ஓடி வந்தானாம். கால்ல மட்டும் தான் ஏத்துச்சுன்னு சொல்லுகிறான். என்றார்.
சாதரணமாக  விழுந்தாலும் உடனே மருத்துவமனையில் காட்டி சரி செய்தால் நல்லது என்று அப்போது தோன்றியது. அற்பணிப்பு இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு வரக் கூடாது என்பது மட்டுமே என் வேண்டுகோள் என்பதை விட என் அனுபவம். தயவு செய்து ஆசிரியராக விரும்பும் எவரும் அற்பணிப்பு இருந்தால் மட்டும் பணிக்கு வாருங்கள் .இல்லையேல் தொழில் என்றால் வேறு வேலையை தேர்ந்தேடுங்கள்.

Saturday, August 20, 2011

சமச்சீர் கல்வி - பாஸ்மார்க்

   கறுப்பு வெள்ளை புத்தகங்களில் இருந்து விடுப்பட்டு  கலர் புத்தகங்களை பெற்றுள்ள குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் அதனை  பெற்றாலும் , பழைய முறைகளில் மனப்பாடம் செய்து பழகிய அவர்களுக்கு ,புதிய சமச்சீர் கல்வி முறை பாட்த்திட்டங்களுக்கு வரும் போது செயல் வழியில் பயில்வதில் சில சிக்கல்களை கொண்டுள்ளனர். அதனை நான் மூன்றாம் வகுப்பு , மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் பார்க்க முடிந்தது. இதனை வெற்றிகரமாக கொண்டு செல்வதில் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது
மூன்றாம் வகுப்பு ஆசிரியர் மதிப்பீடு குறித்த பயிற்சிக்கு சென்றதால், அவ்வகுப்புக்கு செல்ல நேரிட்டது. குழந்தைகளிடம் சமூகவியல் பாடம் நடத்த கேட்டுக் கொண்டனர். புத்தகத்தை சில நிமிடங்கள் பார்த்து விட்டு, அவர்களிடம் வீட்டில் உங்களுக்கு பிடித்த செயல் எது? என கேட்டேன். ஒருவராக சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். . முதலில் எழுந்த மாணவன் , ”சார் , எனக்கு படிக்க பிடிக்கும் ”என்றான். அதனைத் தொடர்ந்து அனைவரும் ”சார், எனக்கு  வீட்டுக்கு சென்று எனக்கு படிக்கப் பிடிக்கும்” என்று மனப்பாட முறையில் கற்றதன் விளைவா ? இல்லை அவர்கள் படித்து வந்த ஆசிரியர்களின் கற்றல் முறையின் விளைவா ? என தெரியவில்லை. நான் அவர்களுக்கு பதில் அளித்தேன். எனக்கு வீட்டில் டி.வி. பார்ப்பது பிடிக்கும். மாதவி, நாதஸ்வரம் என தொடங்கியவுடன்.. ஒரு மாணவி எழுந்து ,”சார், எனக்கும் வீட்டில சாய்ங்காலம் போனதும் டி.வி. பார்க்க பிடிக்கும் “ என்றாள். இப்போது மீண்டும் கேட்டேன். “சார், சாய்ங்காலம் போய் வீட்டில சாப்பிட பிடிக்கும் “ என்றான் அடுத்த மாணவன். வெரி குட்.. இப்படி தான் உங்களுக்கு வீட்டில் பிடித்த விசயத்தை சொல்ல வேண்டும். அடுத்த எழுப்பிய மாணவன், ”சார், எனக்கு இட்டிலி சாப்பிட பிடிக்கும் ” என்றான். நான் மீண்டும் எடுத்துக் கொடுத்தேன். “எனக்கு என் பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்க பிடிக்கும் “ . எனக்கு என் அம்மாவுடன் சமையல் வேலை செய்ய பிடிக்கும் என்றாள் அடுத்து சொன்ன மாணவி . எனக்கு எங்க அம்மாவோட பேச பிடிக்கும் என்ற மாணவனிடம் ”ஏன் , அப்பாவுடன் பேச பிடிக்காதா?” என்றேன். அதற்கு அவன் எங்க அப்பா  குடிச்சுட்டு வந்து எங்க அம்மாவ அடிப்பாரு அதனால பிடிக்காது என்றான். நீ குடிக்காதீங்கப்பான்னு சொல்லு . எங்க சார் சொல்லியிருக்காரு குடிச்சா சீக்கரம் செத்து போவங்கன்னு , அதனால எனக்காக குடிக்காதீங்கப்பான்னு , கொஞ்சி சொல்லு உங்கப்பா குடிக்க மாட்டார்ன்னு சொல்லி அடுத்தவனுக்கு வாய்ப்பு கொடுக்கும் முன் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சார் எனக்கும் எங்க அப்பாவ பிடிக்காது , அவரு குடிச்சுட்டு கலாட்டா பண்ணுவாரு? என்றனர்.
அடுத்ததாக வீட்டிற்கு வெளியில் உங்களுக்கு என்ன பிடிக்கும்… அதற்கும் மாணவர்கள் தெருவிளக்கில் உட்கார்ந்து படிக்க பிடிக்கும் என்றனர். ஏன் பாடம் என்றால் படிப்பு மட்டும் தான் பேசப்பட வேண்டுமா? இவர்களை மாற்ற முடியாதா? இனியாவது திருந்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டு , எனக்கு வீட்டுக்கு வெளியில் வந்து விட்டால், மிதிவண்டி ஓட்டப் பிடிக்கும் என்றேன். அதனை தொடர்ந்து வரிசையாக மிதிவண்டியை சொன்னார்கள். மீண்டும் அவர்களை குறுகிய வட்ட்த்தில் இருந்து உண்மை நிலைக்கு கொண்டு வர பாடு பட வேண்டியிருந்தது. நான் படிக்கிற காலத்தில் என் நண்பன் ரமேசுடன் ஓடி பிடித்து விளையாட பிடிக்கும் என சொன்னவுடன் , எனக்கு கண்ணாமூச்சு விளையாட பிடிக்கும், பம்பரம் விளையாட பிடிக்கும், ராட்டினம் சுற்ற பிடிக்கும் , அம்மாவுடன் கோவிலுக்கு செல்ல பிடிக்கும். அப்பாவுடன் சாப்பிங் போக பிடிக்கும் என சொல்ல தொடங்கினர்.

   ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடம் வாழ்த்து பகுதியில் ஆயுத்தப் படுத்த , நீங்கள் சாமி எப்போது கும்பிடுவீர்கள்? சாமியிடம் என்ன வேண்டிக் கொள்வீர்கள்? என கேட்டேன்.( கவிமணியின் திருவடித் தொழுகின்றேன் பாடல்.) அப்போது மாணவர்கள் காலையில் சாமி கும்பிடுவோம் என்றனர். சிலர் பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்றனர். பலர் சாமி எனக்கு படிப்பு கொடு என்றனர். பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்க அப்பா குடிக்க கூடாது , எங்க அம்மாவோட சண்டை போடக் கூடாது என்றனர்.

கல்வி நடைமுறை வாழ்வோடு தொடர்பு படுத்தப்படும் போது தான் அவனின் குடும்ப சூழல் , நம் அரசியல் சூழலின் அவலங்கள் வெளிவருகின்றன. வீதியெங்கும் டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து விட்டு, குடும்ப தலைவர்களை யெல்லாம் குடிமகன்களாக்கி விட்டு, அவர்களின் மகன்களை பாஸ்மார்க் வாங்க செய்ய முடியும்?  கல்வி முறையில் மாற்றம் செய்தால் மட்டும் அவலம் மாறிவிடுமா? மாணவனின் மனநிலை வாதத்தில் பிணைந்து இருக்கும் போது எப்படி ஆனந்த மனநிலையில் கல்வி பயில முடியும்?  
அரசு கல்வியில் மாற்றம் விரும்பும் போது அதற்கு ஏற்றாற்போல சமூக முறைகளிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும். சாராயக் கடைகள் சந்தோசமான குடும்பத்தை சாவுக் காடுகளாக மாற்றி வருகின்றன. மாணவன் தன் தந்தையின் நிலைக் கண்டு வருந்தி, சமூகத்தில் பாதிக்கப்பட்ட மனநிலையில் உழல்வதால், நிச்சயம் அவன் ஒரு மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டு, அவனும் சமூகத்தில் குற்றவாளியாக வளர வாய்ப்பு உள்ளது.
”சார், அவன் அப்பாவை ரோட்டில இருந்து , அவன் தான் சார் தூக்கி வந்தான்.”
”சார், நேத்து ரோட்டில வேட்டி , சட்டை கழண்டது கூடத் தெரியாமல் அவுங்க அப்பா படுத்து கிடந்தார் .. அவன் தான் சார் வீட்டில இருந்து டிரஸ் எடுத்து கொடுத்தான்”
”சார், எங்க அப்பா குடிச்சா , எங்க அம்மாவ போட்டு அடிச்சுருவாரு… நேத்து நைட்டு புள்ள யாரும் தூங்கல..அதனால வீட்டுப்பாடம் எழுதல…”
போன்ற வார்த்தைகள் பிஞ்சுகளின் மனதில் வருவதால்… தயவு செய்து அரசு நம் மாணவர்களின் நல்ல மனநலம் கருதி டாஸ்மார்க்குகளை நிறுத்தினால் நல்லது. 

Friday, August 19, 2011

வலசை

   வலசை என்பது பொதுவாக பறவைகள் இடம் பெயர்தலைக் குறிக்கிறது. பறவைகள் மட்டுமா இடம் பெயருகின்றன? என எண்ணத் தோன்றிய போது , மனிதர்களின் நினைத்த நிமிடத்திற்கு தன் எண்ண ஓட்டங்களில் வலசை போகும் குணங்களை எண்ணி வியப்படைந்தேன்.
    பறவைகள் வலசை போதல் உறைப்பனியினைத் தவிர்ப்பதற்காக என்ற தவறான கருத்து மாறி, நீண்ட ஆராய்ச்சிக்கு பின்னர் , பறவைகள் தன் வாழ்வாதரமான உணவினைத் தேடித் தான் செல்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேப்போல மனிதர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்பதனை விட , தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே தன் எண்ண ஓட்டங்களில் இருந்து மாறுபட்டு வலசை சென்று தன்னை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறான். இதில் வயது, தொழில், பால் பாகுபாடு , தெரிந்தவன், தெரியாதவன் , நெருங்கிப் பழகியவன்  பழகாதவன், உடன் பிறந்தவன், பிறக்காதவன், உறவினன், உறவினன் அல்லாதவன் என்ற போதமில்லாமல், நொடியில் இடம்பெயர்ந்து பேசுவதை காணும் போது இந்த குணம் பறவைகளில் இருந்து வந்திருக்குமோ? அல்லது பறவைகளை பார்த்து விமானம் படைத்தான் என்பது போல பார்த்து உருவாகி இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
     உலகிலேயே அதிக தூரம் பறந்து வலசை செல்லும் பறவை ஆர்டிக் கடல் ஆலா என படித்த ஞாபகம். மேலும் அப்பறவை கடற்கரை ஓரமாகவே பறந்து  சுமார் 12,000 மைல்களை கடக்க வல்லவை என்பதை நினைக்கும் போது வியக்க வைக்கிறது. இருப்பினும் ஒரே நொடியில் உற்ற நண்பனையும் கவுத்த வலசை செல்லும் நண்பனை என்ன சொல்வது?
இப்படி தான் என் நண்பனிடம் (இலக்கிய திமிங்கலம்) உங்களுக்கு எதாவது உதவி செய்திருக்கலாம் ? ஏன் தலைவா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா? ( அவர் என் அம்மா வீட்டிற்கு அருகில் புத்தகம் பைண்டிங் செய்திருப்பதால், நானே அவரை அழைத்து பேசியதாலும், எதார்த்தமாக போர்டர் வேலையாவது , இராமனுக்கு அணில் போல உதவி யிருக்கலாமே என்ற எண்ணத்தில் வினவ). மனிதன் வலசை செல்வதில் கடல் ஆலாவை விட உயர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் ,”தல, ஒண்ணு சொன்னா கோபிக்க மாட்டீங்கள, நீங்க ஒரு சாதாரண பிளாக்கர், இது இலக்கியம் …. நீங்க பிரண்சிப்பையும் , இலக்கியத்தையும் போட்டுக் குழப்பிக் கிறீங்க … ”என நான் சொல்ல வந்ததற்கும் மாறுபட்டு இடம் பெயர்ந்து , தன்னை ஒரு பெரிய திமிங்கலம் என்று காட்டிக் கொண்டாரே பார்க்கலாம். அப்போது எனக்கு பறவைகளின் இடம் பெயர்தல் தான் நினைவுக்கு வந்தது. 
   ஏன் இந்த மனிதர்கள் நண்பன் என்ற தொனியில் சக மனதை புண்படுத்துகிறார்கள்? அல்லது என் நண்பன் ஸ்ரீ சொல்வது போல வளர்ந்துவரும் கலைஞனுக்கு இது போல  முட்டுக்கட்டைகள் பல தோன்றும் ,மேலும் நீங்கள் எளிதில் அனைவருடனும் உங்கள் நிலையிலிருந்து இறங்கி பழகுவதாலும் , நிதானமில்லாமல் நினைத்ததை எழுதுவதாலும்  ஏற்படும் இன்னல்கள் இவைகள், எனவே இவற்றை சட்டையில் ஓட்டிய பூச்சியை தட்டி விடுவது போல தட்டி விட்டு செல்லுங்கள் “ என்பார். என்னால் முடியவில்லை.  நண்பர்களுக்குள் என்ன ஈகோ. ஸ்ரீயை போல இடித்தும் , அதே சமயம் குறைகளை சுட்டிக் காட்டியும் , அதனை களைவதற்கு ஆலோசனைகளை வழங்கவும் பலரால் இயலவில்லை ஏன்?
   
   நம் வழக்கு மொழியில் கல் பொறுக்கி என அழைக்கப்படும் கோல்டன் ப்ளோவர் என்ற பறவை தான் உலகிலேயே அதிக மைல்கள் (சுமார் 4,800 கிலோ மீட்டர்கள்) ஓரே மூச்சில் நிற்காமல் பறந்து செல்பவை. இதற்கு கல் பொறுக்கி என்ற பெயர் எப்படி  வந்தது ? என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பறவை கடற்கரையில் உள்ள சிறு கற்களை தள்ளி அதற்கு அடியில் வாழும் புழுக்களை பிடித்து உண்பதால் தான். மனிதர்களில் பல சமயம் நாமும் பலரை தள்ளி , அவர்களின் நிழலில் வாழும் நபர்களை பார்க்கும் போது கல் பொறுக்கியின் நினைவு வந்து போவதில் தவறு எதுவும் இல்லை. பொதுவாக இந்த கல் பொறுக்கிகளை நாம் நவம்பர் , டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் காணலாம்.
  பறவைகளின் வலசை பற்றிய  தகவல் அறிவதற்கு அவற்றின் கால்களில் காப்பிடப்படுகின்றன. நைலான் காப்பு கட்டிய காலம் மாறி, இன்று பறவைகளின் உடல்களில் மிக நுண்ணிய மின் அலை பரப்பியை பொருத்தி , அதிலிருந்து எழும் அலைகளை செயற்கை கோள் வழியாக மின் அலை வாங்கிகளில் பெற்று பறவைகளீன் வலசை பற்றிய  தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன . மனிதர்களுக்கும் இம்மாதிரியான காப்பு இருப்பின் நாமும் பாதுகாப்பாக இருக்கலாம். பறவைகளின் மின் அலை பற்றி பேசும் போது ஜெமோவின் அறிவியல் புனைக்கதையான வலசை நினைவில் வருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.மனிதன் எப்படி இயற்கையை மாற்ற நினைத்தாலும் , இயற்கை தன் வசதிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதை பொட்டில் அறைந்தது போல சொல்லி யிருப்பார்.  

   வலசையை பற்றி எத்தனையோ தகவல்களை கொடுத்திருந்தாலும் , என் நண்பன் கார்த்திகைப் பாண்டியன் கொண்டு வந்துள்ள புதிய காலாண்டிதழை சொல்லாமல் கட்டுரையை முடித்தால், நண்பன் என்ற நிலையில் இருந்து நான் வலசை சென்றவனாகி விடுவேன். முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு இலக்கிய இதழாக சிறப்பாக கொண்டு வந்துள்ளார். அவரின் அயராத இலக்கிய தாகத்திற்கு விருந்து . அவர் இதழ் ஆசிரியராக தன்னை அறிமுகப் படுத்தாமல் தன்னை முதல் வாசகனாக அறிமுகப் படுத்தி இருப்பதனாலே சிறப்பாக இருக்கும் என தைரியமாக வாங்கலாம். அவரின் இந்த முயற்சி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு வரபிரசாதம் ஆகும். ச. முருகபூபதி, அசதா, ஜ்யோவ்ராம் சுந்தர், ஜெ. சாந்தாராம் போன்ற மூத்த இலக்கிய எழுத்தாளர்களின் மொழிப் பெயர்ப்புகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ யின் சாத்தானுடன் உரையாடல் கவிதை என்னை உங்களுடன் வலசை போகச் செய்திருக்கிறது . ”உன் நண்பனின் ஆலோசனை வேண்டுமா? நீயும் உன் அதிகப்பிரசிங்கித்தனமான எழுத்தையும் உடனே நிறுத்தி விடு “ என சாத்தான் எனக்கு கட்டளை இடுவதாகவே படுவதால், என் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
வலசை காலாண்டு இதழ்  -விலை:100/- இதழ் வேண்டுபவர்கள் தொடர்புக்கு கார்த்திகைப் பாண்டியன்- 98421 71138.  

Tuesday, August 9, 2011

ஒளிரும் இந்தியா1.        10 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் இந்தியா எந்த நாட்டையும்           
    அடிமைப்படுத்தியதே இல்லை.
2.          5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹரப்பா நாகரீகம் இந்தியாவில் தான்  
    தோன்றியது .
3.           கி.மு. 700 ம் ஆண்டில் உலகின் முதல் பல்கலைக்கழகம் இந்தியாவின் 
     தட்சசீலத்தில் தான் அமைந்தது.
4.             சதுரங்க விளையாட்டு , அல்ஜீப்ரா, யோகா போன்றவை பிறந்தது நம் 
     இந்தியாவில் தான்.
5.             பிரிட்டிஷ் வருகைக்கு முன்பு வரை உலகின் செல்வந்த நாடுகளில்   
     ஒன்றாக நம் இந்தியா இருந்தது.
6.             டிராக்டர் உற்பத்தியில் நம் இந்தியா உலகில் 2வது இடம் வகிக்கிறது.
7.     தனியாக  செயற்கைக் கோள் ஏவும் திறன் படைத்த ஆறு நாடுகளில் நம்    
    இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
8.            சூப்பர் கம்ப்யூட்டர்களை சொந்தமாக உருவாக்கியுள்ள மூன்று நாடுகளில் 
     நம் இந்தியாவும் ஒன்று.
9.          உலகில் அதிகம் மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் நம் இந்தியா 4-வது 
     இடம் வகிக்கிறது.
10.   அதிக நீளமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நாடுகளில்  நம் இந்தியா    
     2வது இடம் வகிக்கிறது.
11.      நிலக்கரி உற்பத்தியில் நம் இந்தியா உலகில் 7 வது இடம் வகிக்கிறது.

 என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்ஒழுங்காய் பாடுபடு நம் நாட்டில் உயரும் நம் மதிப்பு அயல்நாட்டில் !