Monday, February 8, 2010

கண்ணம்மா ...!

 மாட்டில் பசு ...
கூண்டுக் கிளி .
குயில், குருவி ..
கோழி , புறா ..
பறப்பது ...
நடப்பது, ஊர்வது ...
அப்பப்பா ...அம்மம்மா
அனைத்திலும் ....
நாடுவதெல்லாம் பெண்...

ஆனால் மனிதா ....
பெறக்கும் குழந்தையில்
என்ன பேதம் ...
அனைத்தையும் விற்க
கற்றுக் கொண்டதாலா..?
லாபத்தை மட்டும்
கணக்கிட்டு பார்பதாலா...?

சின்னஞ் சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே ..
என்று பாரதி வரிகள் ...
நிலைத்திட ...
நிறுத்திடுவோம் ...
பெண்சிசு வதையை ..
பதரே மலரே ...
மலரை மலரே ..!
பலரே சிலராய் 
சிலரே பலராய்
மலரை மலராய்
பூக்கச் செய்யும்
காலம் என்றும் வேண்டுமடி
கண்ணம்மா ..!

4 comments:

ஹேமா said...

//ஆனால் மனிதா ....
பெறக்கும் குழந்தையில்
என்ன பேதம் ...
அனைத்தையும் விற்க
கற்றுக் கொண்டதாலா..?
லாபத்தை மட்டும்
கணக்கிட்டு பார்பதாலா...?//

நீங்களே சொல்லிட்டீங்க சரவணன்.வாழணும் வலியே வரக்கூடாது இதுதான் மனிதனின் அடிப்படை மந்திரம்.

ஸ்ரீராம். said...

நாட்டையும், நதியையும் மொழியையும் கூட தாயாகப் பார்க்கும் மனிதன் பெண்குழந்தையை மட்டும்..

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை சரவணன்.

Anonymous said...

ஒரு பாரதி இல்ல ஆயிரம் பேர் வந்தாலும் நம்மட சனம் இப்பிடித்தான்

Post a Comment