Thursday, February 18, 2010

தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ......

தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ......   

  1. தேர்வு குறித்து பயம் வேண்டாம் .சாதாரண வகுப்புத் தேர்வு  மாதிரி பொது தேர்வை சந்திக்கவும். 
  2. நன்றாக உணவு அருந்தவும். உடம்பை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
  3. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் .மன குழப்பம் இன்றி படிக்கவும்.
  4. திருப்புதல் தேர்வு தாள்களை கொண்டு தவறுகள் இருப்பின் திருத்தி மீண்டும் அதே தேர்வை எழுதி ஆசிரியரிடம் திருத்தி வாங்க வேண்டும். மீண்டும் அத்தேர்வில் பிழைகளை , அடுத்த தேர்வில் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
  5. விடைத்தாளில் அனைத்து வினாக்களுக்கான விடைகளிலும் முக்கியமான தகவலுக்கு அடிகோட்டிட்டு காட்டவும்.
  6. இதுவரை படித்த பாடங்களை மீண்டும் நன்றாக படித்து எழுதி பார்க்கவும். புதிதாக புரியாத படங்களை படிப்பதை தவிர்க்கவும். 
  7. புதிதாக பாடம் படிக்க வேண்டி இருப்பின் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் ஆசிரியரிடம் கேட்டு படிக்கவும்.தேர்வு செய்து தரும் வினாக்களை மட்டும் படிக்கவும்.
  8. சக மாணவருடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். பயந்து மனதை கொல்வதை தவிர்க்கவும்.
  9. ஒரு மார்க் வினாக்களை தொடர்ந்து , வாய்ப்பாடு போல் சமயம் கிடைக்கும் பொது எல்லாம் கூறி பார்க்கவும். 
  10. ஆங்கிலத்தில் புதிய சொற்களை எழுதி பார்க்கவும், poem தினமும் எழுதி பார்க்கவும் , கணிதம் பார்முலா சொல்லியும், எழுதியும் பார்க்கவும். தமிழ் மனப்பாட செய்யுள் எழுதவும். 
  11. தேர்வில் முதலில் ஒருமார்க் தெரிந்த விடைகளை எழுதவும்,பின்பு இரண்டு மார்க் தெரிந்த வினாக்களுக்கு விடை, பெரிய மதிப்பெண் வினாக்களுக்கு நேரம் குறித்து நிதானமாக அடிகோடிட்டு எழுதவும்.தெரிந்த வினாக்கள்  அனைத்தும் எழுதி முடித்த பின், மீண்டும் தெரியாத வினாக்களை சிந்தித்து எழுதவும். 
  12. விடைகளை தெளிவாக பிழை இன்றி, அடிகோடிட்டு , தலைப்பிட்டு , வினா எண் மறவாமல் எழுதவும்.
  13. தன்னம்பிக்கை , விடா முயற்சி , தொடர்ந்த எழுத்து பயிற்சி, தவறுகளை உடனுக்குடன் திருத்தி சரிசெய்யும் இயல்பு மாணவனுக்கு நூறு சதவிகித வெற்றியுடன் நூறு மதிப்பெண்     பெற்று தரும்.

11 comments:

கமலேஷ் said...

மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு..தோழரே...

Jerry Eshananda said...

சரவணா உங்களை வலைச்சரத்தில் அறிம்முகப்படுத்தி உள்ளேன்.

பா.வேல்முருகன் said...

உங்கள் பதிவுகள் எல்லாம் தமிழை மையப்படுத்தி, மற்றும் சமூக அக்கறை உள்ள பதிவுகளாக இருக்கிறதே சரவணன். நிறைய பதிவுகள் நன்றாக உள்ளன.

மேலும் எனது தளத்திற்கு உங்களின் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

ஆர்வா said...

நல்ல உபயோகமான பதிவுகள். மாணவர்களுக்கு உதவிகரமாய் இருக்கும் விஷயங்கள். தொடர்ந்து
எழுதுங்கள்

தேவன் மாயம் said...

நல்ல கருத்துக்கள்!! தொடருங்க!

ஸ்ரீராம். said...

Good Tips

இளந்தென்றல் said...

பயனுள்ள பதிவு...நன்றி சரவணன்.

சைவகொத்துப்பரோட்டா said...

மீண்டும் சொல்கிறேன், உங்களிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

மதுரை சரவணன் said...

jeri isaanantha avarkalukku mikka nanri. ungal arimugam enakku athikia puththunarchchi koduththullathu. kamalesh,thevan maayam,sriraam , ilanthenral,kavithai kathalan, vels aakiyorukku nanri . thotarnthu karuththittu ookkapatuththum saiva koththu purotta vukku melum nanri.

ஹேமா said...

மாணவர்களுக்கு எளிமையான டிப்ஸ் குடுத்திருக்கீங்க.அருமை.

CS. Mohan Kumar said...

ரொம்ப உபயோகமானது. நன்றி

Post a Comment