நித்தம் உன்னை தேடுதடி ...
கடையோரப் பார்வையிலே ...
கண்டபடி இழுக்குதடி ...
கண்ணாடி கூண்டு மீனாய் ...
உன்னிடம் அடைபட்டேனே..
பாவி மனசு நீ பார்க்காட்டி ...
தரையில் போட்ட மீனாய் துடிக்குதடி..
சூரியனாய் சுற்றி வந்த நானும் ..
உன்னை பார்த்த பின்பு ..
உன்னை தேடும்
சூரிய காந்தி ஆனேனே....
உந்தன் பார்வை பட்டதாலே ...
என் பார்வை மங்கியதடி...
பார்க்கிற அத்தனையிலும்
நீ தானடி தெரிகிற ....
உந்தன் சிரிப்பில் காதல் தெரிகிறது ...
இருப்பினும் மறைகிறது ...
என் பின்னே வரும் அண்ணனை பார்த்தா...?
உன் முன்னே செல்லும் தம்பியை பார்த்தா..?
பேசியும் பேசாமலும் ...
பார்த்தும் பார்க்காமலும் ...
பழகியும் பழகாமலும் ..
வருவதல்ல காதல் ...
பேசி பேசி ...
பார்த்து பார்த்து ..
பழகி பழகி ...
பாலாய் தேனாய் ...
ஆறாய் அருவியாய் ..
இரத்த நாளமெல்லாம் ...
ஓடி பாய்ந்து ..
இதயத்தில் கூடி ...
இன்பமாய் வருவது
காதல் ...
ஒத்தையடி பாதையிலே ..
உன்னை தேட மறுக்குது ...
இது காதல் அல்ல ...
என ஒதுக்குது ...
காதலாய் தெரிவதெல்லாம் ...
காதல் அல்ல என்பதாலே !
2 comments:
//பேசி பேசி ...
பார்த்து பார்த்து ..
பழகி பழகி ...
பாலாய் தேனாய் ...
ஆறாய் அருவியாய் ..
இரத்த நாளமெல்லாம் ...
ஓடி பாய்ந்து ..
இதயத்தில் கூடி ...
இன்பமாய் வருவது
காதல் ...//
அழகு, சரவணன்.
பதுங்கி பாய்வதும்
ஒதுங்கி போவதும்
மறைந்து (நின்று)
பார்ப்பதும்-கூட
காதலாக இருக்கலாம்.
-தோழன் மபா
www.kavithaiveethi.blogspot.com
Post a Comment