ஆடி அம்மாவாசை என ...
ரம்ஜான், கிருஸ்துமஸ் என ...
உடம்பு கொழுப்பை குறைக்க
ஒருநாளாவது விரதமிரு ...
ஏகாதசி, சிவராத்திரி
கிருத்திகை ,சஷ்டி
என பட்டினிகிட ...
உடம்பில் பட்டினி...
கொடுக்குமே ஆற்றல்...
மாணிக்கவாசகரின் சொல்படி
ஊனினை உருக்கி
உள் ஒளி பெருக்க
உனக்கு நல்வழி
கிடைக்க விரதம்
என்ற பெயரில்
பலகாரம் தின்று ...
பல் ஆகாரம் ஆகி ..
விரதம் ...உனக்கே
விரோதம் ஆகிவிடாமல் ...
விரதமிரு ...
10 comments:
தொடங்கி...சொல்லி...முடித்த விதம் அருமை.கேக்கணுமே !
மௌன விரதம் கூட சிபாரிசு பண்ணுங்க பாஸ்..
மௌன விரதம் இருந்திருக்கிறேன்.. ஒரு நாள் முழுவதும் பேசாமல்.. மறுநாள் புத்தியே அலம்பி விட்ட மாதிரி பளிச் சென்று ஆகிவிடும்.. அருமையான பதிவு..
//விரதம்
என்ற பெயரில்
பலகாரம் தின்று ...//
சரியாக சொன்னீர்கள்
விரதமிருப்பதில் மைய நோக்கம் என்னவென்றால் உள்ளான மனுஷனான ஆத்மாவை பரமாத்வுடன் இணைத்துக் கொள்வதே ஆதார நோக்கமாம்; மற்றபடி அது பட்டினியாகவே இருக்கும்..!
அதாவது மரித்தபிறகு சாந்தியடைய வேண்டிய ஆத்மாவை வாழும் காலத்திலேயே சாந்திபெறச் செய்வது அதாவது இறைவனின் சமாதானம் அடையச் செய்வது;
இந்த விரத காலத்தில் சுயநலமில்லாமல் மற்றவருக்காக வேண்டுதல் செய்வதும் சிறப்பானதாகும்.
நல்ல இருக்கு தலைவரே ...
//பலகாரம் தின்று ...
பல் ஆகாரம் ஆகி ..
விரதம் ...உனக்கே
விரோதம் ஆகிவிடாமல் ...
விரதமிரு ...//
அருமையாய் சொன்னீங்க சரவணன்
//உனக்கே
விரோதம் ஆகிவிடாமல் ...
விரதமிரு ..
அருமையான முடிவு நண்பா...
நல்லா இருக்கு :)
கவிதை அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Post a Comment