Thursday, February 25, 2010

8டாத அறிவு ..

                                      ௨.திருவிழான்னு  சொன்ன .....

   மேலூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருவர் பேசி கொண்டனர்.

"டேய் , ரவி ...எங்கடா போற..?"

"என்னடா சிவா இப்பிடி கேட்டுட்ட ....மதுரையில சித்திரை திருவிழா ...ஆத்துல அழகர் இறங்குகிறார் தெரியுமில்ல ...ஜனம் கூட்டம் அதிகமில்ல அதான் ஜவுளி விற்க  போறேன் "

"சரி ...சரி ..வித்துட்டு வா ...ஆனா ..வாங்கிகிட்டு வந்துவிடாத..."

"என்னடா பேசுற...கொஞ்சம் புரியுறமாதிரி பேசுடா..."

"திருவிழா நடக்கிற இடம் , திருமண மண்டபம், சந்தை கூடுகிற இடம்..எல்லாம் தண்ணி பார்த்து குடிக்கணும் ...அது மட்டுமல்ல ..குளம்,குட்டை,ஆறு ஆகிய இடங்களிலே...கை,கால் அலம்புகிறது, குளிக்கிறது ...இது போல செய்யல தவிர்த்திட வேண்டும்... முடிஞ்சா செய்யாம இருக்கிறது உத்தமம்..."

"தண்ணியில அப்படி என்னடா இருக்கு ...?"

"என்னடா அப்படி சொல்லிட்ட ...நீ குடிக்கிற தண்ணி....சாப்பிட்ட சாப்பாடு செரிக்க உதவுது.. உடல்ல ஓடுகிற இரத்தம் உற்பத்திக்கு தேவைபடுகிறது... அப்புறம்..இரத்தத்தில் கலக்காத யூரியா ...சக்கரை ,தேவையற்ற பொருட்களை சிறுநீர்  மூலம் வெளியேற்றுகிறது..."

"அதான் ஒரு நாளைக்கு எட்டு டம்பளர் தண்ணி குடிக்கனும்னு சொல்றாங்களா...அதுசரி திருவிழாவில்ல..  தண்ணி பார்த்து குடிக்கனும்னு சொன்னியே என்ன விபரம்னு தெளிவா சொல்லு "

"அதிக கூட்டமான இடங்கள்ள ..கலரா நோய்  கிருமிகள் பரவ வாய்ப்பு அதிகம்...கலரா நோய் ,ஈக்கள் உணவு ஒட்க்காறது மூலாமாகவும்...ஆத்து தண்ணியில கை, கால் கழுவுறது மூலமாகவும் ..பரவும்"

"காலராவா?"

"காலரா நோயானது 'விபிரியோ கலரா பேசில்லை' என்ற நூன்கிருமியினால் உருவாகிறது ....இந்த கலரா பாதிக்கப்பட்டவங்க வாந்தி ,மலம் மூலமா ...நோய் கிருமிகள் வெளியேறி ...தொடர்ந்து பரவும்..."

"என்ன செய்யும் ..?"

"சிறு குடல்ல ..பல இடங்களில் ..குடல் அழற்சி உண்டு பண்ணி...அதிகமான திரவ இழப்பை ஏற்படச் செய்கிறது...நோய் உள்ளவர்களுக்கு வாந்தி ,வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் ...அதனால தசை வலி ...உண்டாகும் சிறுநீர் கழிப்பது கஷ்டமாகும்..."

"அப்படியா...அதனால தான் ..திருவிழா காலத்தில சுகாதார வசதி அரசு கூடுதலாக ஏற்படுத்தி தருகிறது ...ஆங்காங்கே மலம் ,சிறுநீர் கழிக்க கழிப்பறை கட்டுறாங்கள் ..."

"அது மட்டுமில்ல ..குளோரின்னுடன் கலந்த சுத்தமான தண்ணீரை பயன் படுத்துவாங்க ..காலரா தடுப்பூசி போடுவாங்க ...அதனால நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தலாம் .."

"இவ்வளவு விபரம் தெரியுது ...இரண்டாயிரத்து பன்னிரெண்டில உலகம் அழியும்மா அழியாதா ...உலகம் எப்படி இருக்கும் ?"

"எதோ எனக்கு தெரிஞ்சத ..சொன்னேன்ப்பா...தெரியல ...அதை நீயே சொல்லு .."

"என்னடா இது கூடவா தெரியால ...எப்ப இருக்கிற மாதிரியே உருண்டையா இருக்கும் ..(மனதிற்குள் ..பெரிய எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசுறே..எப்படி மடக்கினேன் பாரு ..)"

"என்னடா..நீ இன்னும் கிரிக்கெட் விளையாடுற ...போல தெரியுதே.."

"எப்படிடா கரெக்டா சொல்ற .."

"அதான் 'ஓவரா' பேசுறியே ..."

"!!!!!"

8 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பயனான தகவல்களை நகைச்சுவை முலாம் பூசி கொடுத்த பாணி அழகு.

ர‌கு said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள், ஆனா ஏன் த‌லைப்பு எட்டாவ‌து அறிவு? என் அறிவுக்கு எட்ட‌ல‌:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

குளோரின்னுடன் கலந்த சுத்தமான தண்ணீரை //

இது சரியான வாக்கியமா நண்பரே.?? ::))

-----

அருமை, தமிழில் அழகாக எழுதும் நீங்கள் பல(ருக்கு) பின்னூட்டங்கள் ஏன் ஆங்கிலத்தில்..??
-----
தொடருங்கள்..:)

தமிழன் வீதி said...

சமுதாய நலன் கருதிய பதிவு.
தோழன் மபா

வி.பாலகுமார் said...

நல்ல தகவல்கள், வாழ்த்துக்கள் !

nidurali said...

Thank you very much for your kind comment after seeing my site about the article வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!.

Here I find many useful articles and if you give allow me I can republish in my site with your site name.
With regards.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

பயனான தகவல்களை நகைச்சுவை முலாம் பூசி கொடுத்த பாணி அழகு. கலக்கி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !

Madurai Saravanan said...

nidurali,சைவகொத்துபுரோட்டா,ரகு,பனித்துளி சங்கர்,வி.பாலகுமாரன்,ஷ்ங்கர்,தமிழன் வீதி மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. நிடுரலி நீங்கள் என் முகவரியை பயன்படுத்தி மறு பதிப்பு வெளியிடலாம். ஷ்ங்கர் சார் , குளோரின் கலந்த தண்ணீர் என படிக்கவும்.I WILL CORRECT ,THANK U FOR GIVE SUGGESTION.

Post a Comment