எந்த வேலைக்கும் புத்திசாலித்தனம் என்பது முக்கியமானது. ஆனால் ஆசிரியர் பணிக்கு புத்திசாலித்தனம் மட்டும் போதாது, சமயோசித புத்தி என்பது (presence of mind )மிகவும் அவசியம். இப்படி பட்ட பண்பு கொண்ட ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மட்டுமல்ல அந்த பள்ளிக்கும் நன்மை உண்டாகும்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் "என்பது பழமொழி மட்டுமா அல்ல , இது உண்மையும் கூட. சில பழக்கங்களை மாற்றவே முடியாது. இடது கை எழுத்து பழக்கம், படிக்கும் போது கால் ஆட்டிக்கொண்டே படிப்பது, கை விரல் நகம் கடித்துக் கொண்டே சிந்திப்பது, மூக்கை குடைந்து கொண்டே பேசுவது ....இப்படி கூறி கொண்டே போகலாம்.
பல பழக்க வழக்கங்கள் நம் சிறு வயதில் நம்மை அறியாமலே தொடர்ந்து செய்வதாலும் ,அதை யாரும் கண்டிக்காததாலும் உண்டானவையே. சில பழக்கங்கள் நாளடைவில் மறைந்து விடுகின்றன . ஏனெனில் ,அவை தவறு என மனதிற்கு உணர்த்தப் பட்டவையாகும் .
பிறர் பொருளை தன்னை அறியாமலே எடுத்துச்செல்லும் மாணவன், முதலில் தன் 'செயல் தவறு' என்று 'உணராத வரை'அதை செய்வான். ஆசிரியர் 'இது தவறு' என கண்டித்தவுடன் ....அதை அறிந்தே ,அதை திருட அல்லது யாரும் பார்க்காத போது எடுத்து செல்ல முயல்வான். ஆசிரியரின் தொடர்ந்த கவனிப்பால் ...மாணவனின் இந்த பழக்க வழக்கம் முற்றிலும் நிறுத்தப்படும்.
இவ்வாறு பல விசயங்களில் தொடக்ககல்வி ஆசிரியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.
இப்போது நான் கூற வரும் விஷயம் உங்களை ஆச்சிரியபடுத்தும். நானும் இதை கேட்டவுடன் உங்களை போல் அதிர்ச்சியும் ஆச்சிரியமும் அடைந்தேன்.
"மாற்று திறன்" படைத்தவருக்கான கல்வி கற்பிக்கும் முறை பற்றிய பயிற்சி வகுப்பில்
சிறப்பு ஆசிரியர் கூறிய விஷயம் இதோ ....
"ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் மதிய உணவு இடைவேளையில் ,மணி அடித்தவுடன் பள்ளியை விட்டு வேகமாக செல்வானாம் ...மற்ற மாணவர்கள் எல்லாம் பள்ளி வளாகத்தில் சாப்பிடும் போது ....அவன் மட்டும் சக மாணவர்களை விட்டு,.அதுவம் பள்ளி வளாகத்தை விட்டு ...மதிய உணவு சாப்பாட்டு கூடையுடன் ..வேகமாம ஓடிசெல்வதை பார்த்த ... தலைமை ஆசிரியருக்கு சந்தேககத்தை உண்டாக்கியது ... அவன் தினமும் செல்கிறானா ? எப்போதாவது செல்கிறானா ..? என தினமும் கவனித்து ...ஒருநாள் அவனை பின்தொடர்ந்து சென்றார் ..."
"முள்காட்டுக்குள் நுழைந்த சிறுவன் உணவு கூடையை கிழே வைத்து விட்டு ...வேகமாக டவுசரை கழட்டி விட்டு ...'காலை கடனை '...செய்ய தொடங்கினான்..."
"'ச்சீ ...இதற்க்கு தானா வெளியே ஓடிவந்தான் ...' என மனதில் தன்னை தானே திட்டிக்கொண்டு திரும்பலாம் என நினைகையில் தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ..."(உங்களுக்கும் தான்)
"டவுசரை மாட்டிய சிறுவன் ...உணவை திறந்தான் ...'காலை கடனுடன்'டிபன் உவை கொட்டி , சோற்றை அதனுடன் கூளப்பி ....ஆம் ..மலத்துடன் உணவை அள்ளி டிபன் பாக்சில் மீண்டும் கொட்டி ...மலத்துடன் உணவை ருசித்து திண்ண தொடங்கினான்..."
"கேட்க அருவெறுப்பா இருக்கிறாதா ? ஆச்சரியமாக இருக்கிறதா? தலைமை ஆசிரியர் என்ன செய்தார் ? "என நீங்கள் கேட்பது தெரிகிறது."சரி ..சரி ..அதை கூறும் முன் இந்த பழக்கம் இப்படி வந்தது என்று பார்ப்போம் ?"
"அம்மாணவனின் பெற்றோர்கள் இருவரும் குடும்பநலனுக்காக ...தினமும் அருகில் உள்ள பாட்டியிடம் பார்த்துக்க சொல்லி ...பாட்டி வீட்டு தொட்டியில் போட்டுவிட்டு ...சென்றுவிடுவார்கள். பாட்டி..சில நேரங்களில் பார்க்காமல் இருந்துவிடும் சமயங்களில் அம்மாணவன் தன்னை அறியாமலே மலத்தில் கையை வைத்து , அதை சுவைத்து உள்ளான்... தினமும் கதையாகி ...அதுவே பழக்கம் ஆகி விட்டது.பள்ளி செல்லும் வயது ஆனவுடன் .. நான்கு வயது முதல் பள்ளிக்கு செல்ல ...அனைவருக்கும் தெரியாமல் மூன்றாம் வகுப்பு வரை தொடர்ந்து உள்ளது ...தலைமை ஆசிரியரின் கூர்ந்த அறிவால் இதை கண்டு பிடிக்க முடிந்தது."
இன்று வேலைக்கு செல்லும் பெற்றோரே கவனமாக இருங்கள் ...உஷார்..."அது சரி ...தலைமைஆசிரியர் என்ன செய்தார்? "என நீங்கள் கேட்பது புரிகிறது.
"மறுநாள் தலைமை ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் அழைத்தார்...'டேய்..இனிமே நீங்க இவன் எங்கே சாப்பிடுகிறானோ ...அங்கேயே நீங்களும் சாப்பிடனும் ...என்ன புரிகிறதா ? இவனை பார்த்த நல்ல சாப்பிடுகிற..மாதிரி தெரியவில்லை ...உங்களோட இவனையும் சேர்த்து...நண்பனாக்கி கொள்ளுங்கள் ..."என கட்டளை இட்டார்.
மணி அடித்தவுடன் சக மாணவர்கள் அவனை பின்தொடர ..அவனால் வேறு இந்த செயலும் செய்ய முடிய வில்லை ...உணவை உணவாகவே உண்டான்.. இது தொடர் கதையாகிவிடவே அவன் அச்செயலை மறந்தான் ...நாளடைவில் அவனும் பிற மாணவர்களை போல் உணவு உட்கொண்டான். நான்காம் வகுப்பு வரும் போது பிறர் கவனிப்பு இல்லாமல் , அவனாகவே பள்ளி வளாகத்துக்குள் உணவு அருந்தினான்.தற்போது அவன் சாதாரண குழந்தைகளின் மன நிலைக்கு வந்து விட்டான்.
தலைமை ஆசிரியர் அவனின் அப்பழக்கத்தை அறிந்த போதும் , அவனை கண்டிக்காமலே , அவனின் இப்பழக்கத்தை தன் சமயோசித புத்தியால் வென்றுள்ளார் . அவரின் செயல் பாராட்ட தகுந்தது. பிற மாணவனிடமோ, சக ஆசிரியரிடமோ அவனின் இச்செயலை கூற வில்லையாம். இச்சம்பவம் நடந்து , அவன் திருந்தி , உயர்நிலை படிப்பு முடிந்த பின் தெரிவித்துள்ளார்.சக ஆசிரியர்கள் அப்போதுதான் உணர்ந்தார்களாம் "ஏன் இவர் பிற மாணவர்களை அவனுடன் சேர்ந்து சாப்பிட சொன்னார் ?" என்பதை.
இப்போதாவது புரிந்திருக்கும் ஆசிரியர் தொழில் மன்னிக்கவும் பணி புனிதமானது மட்டும் அல்ல , புதிரானதும் தான் என்பது !என்னும் பல புரியாத புதிர்கள் காத்திருக்கின்றன ...
8 comments:
படிப்பதற்கே சங்கடமாக இருந்தது விஷயம்.அது சரி வீட்டிலிருக்கும் நேரம் எப்படிச் சாப்பிட்டிருப்பான்.அவன் பெற்றோர்கள் கவனிக்கவில்லையா?
வீட்டிலிருக்கும் நேரத்தைவிட பள்ளியில் அதிக நேரம் அவர்கள் கண்பார்வையில் இருப்பதால்ஆசிரியர்களுக்கு எத்தகைய அரிய கடமைகள் இருக்கு என்பது புரிகிறது.
தலைமை ஆசிரியர் அவனின் அப்பழக்கத்தை அறிந்த போதும் , அவனை கண்டிக்காமலே , அவனின் இப்பழக்கத்தை தன் சமயோசித புத்தியால் வென்றுள்ளார் .
hats off to him
அதிர்ச்சியாக இருந்தது சரவணன், அந்த ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவர்.
அதிர்ச்சி..தலைமை ஆசிரியரின் செயல் மகிழ்ச்சி.
ஆசிரியருக்கு நன்றி சொல்லுங்கோ
நல்ல பதிவை படித்த திருப்தி.
ரேகா ராகவன்.
ஐயா!தங்களின் இந்தப்பதிவு மனதை ரொம்பவும் வாட்டிவிட்டது.ஒரு தாயாக இதை ஜீரணிக்க இயலவில்லை.தங்களின் இந்தப்பதிவும் விகடனின் குட்
பிளாகில் உள்ளது. நன்றி! தொடர்க தங்கள் பணி!
matha pitha guru theivam- vera enna solla
Post a Comment