Wednesday, February 17, 2010

தமிழில் வேற்று மொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி ?

    தமிழில் வேற்று மொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி ?
மாணவர்களுக்கு எளிய முறையில் வேற்று மொழி சொற்களை கற்றுத்தருவது எப்படி?

      நான் நல்ல உத்தியோகத்தில் உள்ளேன்.
      இன்று மதியம் பருப்பு சாதம் உட்கொண்டேன்.
இவற்றில் வடமொழி சொற்கள் உள்ளன. வேற்று மொழி சொற்களை கண்டறிவதை அறியும் முன் அதன் அவசியத்தை விளக்க கடமை பட்டுள்ளேன்.  

       ஒரு மொழியினுள் வேற்று மொழி சொற்கள் புகுவது என்பது மக்கள் தேவை கருதி சொற்களை கடன் பெறுவதாலும், பெருமை கருதி அச்சொற்களை பயன் படுத்துவதாலும் வருகிறது.
       "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே " -தொல்காப்பியர் கூற்று படி ,ஒவ்வரு மொழியும் எழுத்து மற்றும் ஒலிப்பு முறை பொறுத்து சிறப்பு பண்புகளை பெற்றுள்ளன.
தமிழ் மொழி வேற்றின சொற்களை தொல்காப்பியர் காலத்திலேயே அதாவது கி.மு.முன்றாம் நூற்றாண்டு முதலே கவர்ந்து கொண்டது. இது சமுக ,அரசியல் மற்றும் கால மாற்றத்தின் விளைவால் கலந்ததாகும்.

       "இயற்சொல் திரிசொல் , திசைச்சொல் வட  சொல்லென்று
        அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே "
என எச்சவியலில் தொல்காப்பிய நூற்பா விளக்குகிறது.  தமிழில் பல்லவர் காலத்தில் பிராகிருதம் , களப்பிரர்  காலத்தில் கன்னடம், சோழர் காலத்தில் தெலுங்கு , இஸ்லாமியர் காலத்தில் உருது, ஐரோப்பியர் காலத்தில் பிரஞ்சு , போர்த்துக்கீசிய சொற்கள், ஆங்கில சொற்கள் கலந்தன.

      "பிற மொழி சொற்களை கண்டறிந்து நீக்கு " பகுதியை மாணவர்களுக்கு எப்படி கற்று தருவது?
         மாணவர்களுக்கு தமிழ் மொழியின் வரி வடிவத்தை தெளிவாக புரியும் படி கற்று தர வேண்டும். மற்றும் அவை ஒலிக்கும் முறை கொண்டும் வேற்று மொழி சொல்லை கண்டுபிடிக்கலாம்.


  1. மொழி முதல் எழுத்து 
  2. மொழி கடைசி எழுத்து
  3. ஒலிப்பு முறை 
அடிப்படையில் நாம் பிற மொழி சொற்களை பிரிக்க முடியும்.


       நான் நல்ல வேளையில் உள்ளேன்.
       இன்று மதியம் பருப்பு சோறு சாப்பிட்டேன்.
என்பது தான் தமிழ் சொற்கள்.

        இவ்வாறாக எப்படி வேற்று மொழி சொற்களை கண்டு பிடிக்க கற்று தந்த பின்
வேற்று மொழி சொற்களையும் , அதற்கு இணையான தமிழ் சொற்களையும் ஒரு சார்ட் காகிதத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எழுதி  எடுத்துக் கொண்டு , பின் பக்கம் இரும்பு  தகடு  அல்லது பிளேடு துண்டு வைத்து காகிதம் கொண்டு தெரியாமல் மூடவும். தூண்டில் ஒன்று செய்து அதன் முனையில் காந்தத்தை கட்டி தொங்க விடவும்.

        "மீன் பிடிக்கும் விளையாட்டு "தயார்.மாணவர்களை வட்டமாக அமர செய்யவும். வட்டத்தின் நடுவே மற்றும் ஒரு வட்டமிடவும் , வட்டத்தில் நாம் தயாராக வைத்துள்ள காதித மீன் வடிவில் உள்ள தமிழ் மற்றும் வேற்று மொழி சொற்களை , சொற்கள் தெரியும் வகையில் பரப்பி விடவும், பின்பு ஒவ்வொரு மாணவனாக அழைத்து பொருத்தமான வேற்று மொழி சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லையும் சேர்த்து மீன் பிடிக்க செய்வதன் மூலம் நாம் மாணவர்களுக்கு கற்றலை எளிமை படுத்தலாம்.

       ஒரு மொழி செழுமையானது என்பது அம்மொழியில் வேற்று மொழிச்சொல் அளவின்றி கலத்தல் தடுக்கப்பட வேண்டும். அதற்காக தேவை கருதி ஏற்று கொள்ளுதல் வேண்டும் . இல்லை என்றால் மறைந்த சுஜாதா அவர்கள் கூறுவது போல் "நாம் தமிழார்வத்தில் ,கலைச்சொல்லாக்கத்தில் தான் அவசரப்படுகிறோம் தவிர , கலைசொற்க்களுக்குத் தேவையை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டுவதில் பிந்தங்கியிருக்கிறோம்" என்பது உண்மையாய் போகி தொழில் முன்னேற்றம் பாதிக்கப்படும் .

       மொழியறிவை மேம்படுத்த மாணவர்களுக்கு , தமிழ் அகராதிகளை பயன்படுத்தும் பழக்கத்தையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

     "வார்த்தைகளுக்கு விதிமுறைகளையும் , இலக்கணத்தையும் அமைக்கும் முன் வார்த்தைகளுக்குத் தேவையை அமைக்க வேண்டும் " என்ற சுஜாதா வரிகளுடன் கட்டுரையை முடிக்கிறேன்.  
      

9 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல கட்டுரை.

//வேற்று மொழி சொற்களை கண்டறிவதை அறியும் முன் அதன் அவசியத்தை விளக்க கடமை பட்டுள்ளேன். //

அவசியத்தை- தேவையை
பெயர் சொல்லோடு வேற்றுமை உருபுகள் எளிதில் பொருந்திவிடும், வினைச் சொற்களுடன் எளிதில் பொருந்தாது, அதனால் தான் ஆங்கில வினைச் சொற்களுடன் 'பண்ணி' சேர்த்து பேசுகிறார்கள்

கட் பண்ணினான், ப்ளக் பண்ணு, த்ரோ பண்ணு.......இப்படியாக. பெயர் சொற்கள் அவ்வளவாக மொழியைக் கெடுக்காது, புற மொழிகளின் வினைச் சொற்கள் புகும் போது மொழியை கெடுத்துவிடும், வினைச் சொற்கள் பிற மொழிச் சொற்களாயின் அவை தனித்தே தெரியும்.



//ஒரு சார்ட் காகிதத்தில் // அட்டவணை

//தயாராக // அணியம்

/அகராதிகளை // அகரமுதலி

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயா!
தாங்கள் தலைமை ஆசிரியர் என்பதை அறிந்தும்,தங்களின் பொறுப்பான கட்டுரைகளை படித்ததும் மிக்க மகிழ்ச்சி.ஒரு மாணவனுக்கு பள்ளியும்,பாடமும் பிடிப்பதற்கு முந்தி முதல் காரணம் ஆசிரியர்கள்.பொறுப்பற்றவர்களால் குழந்தைகளின் வாழ்க்கை தவறான வழியில் பயணிப்பது ,நடத்தைக்கூறுகளில் தாழ்வு ஆகியன வந்துவிடுகிறது.நன்றி!

சைவகொத்துப்பரோட்டா said...

வளர்க உங்கள் தமிழ்ப்பணி சரவணன்.

மதி சூடி said...

நான் நல்ல வேளையில் உள்ளேன்.
இது சரி தானா!
நான் நல்ல வேலையில் உள்ளேன்.
இது தானே சரியாகும்!

மதுரை சரவணன் said...

mathi sooti avarkale eluththu pilai,sari seithu vidukeren.saiva koththu purotta , kovi. kannan, santhi lekshmanan akiyorukku mikka nanri. kovi . kannan avarkal sootti kaattiya vilakkam arumai. anaivarukkum nanri.

Prabu M said...

தங்கள் வலைப்பதிவின் அறிமுகம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி...

"கல்விக்கான சிறப்பு வலை" .. என்னுடைய‌ சல்யூட் சார்!!

வார்த்தைகளுக்கான தேவை??... ஆமாம் இதுவரை யோசித்ததே இல்லை!!
அருமையான இடுகை.. தங்களைத் தொடர்ந்து படிக்கிறேன்....

Prabu M said...

Kindly include "Follow" option sir...

மதுரை சரவணன் said...

pirabu sir pl help how to include "follow" . it is lost in my blog . i used my help menu but not found. so tell how to include "follow"

Kandumany Veluppillai Rudra said...

நன்றாக இருக்கிறது,தொடருங்கள்!

Post a Comment