மதுரை பிளாக்கர் சந்திப்பில் நடந்த சுவையான அனுபவம் . டாக்டர் ஷாலினியின் சுவையான கருத்து ....
மாகாபாரத கதையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கருத்து பரிமாற்றத்தின் சாரம்.
ஆதி முதல் மனிதன் பல தார மணம் முடிக்க காரணம் . மனிதன் இயற்க்கை இடர்பாடுகள் , மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பற்ற, மனித சந்ததியை அதிக படுத்த வேண்டியதால், பல பெண்களுடன் திருமணம் செய்துகொண்டான். பலம் பொருத்தியவனுக்கு மனைவியாவதை விரும்பினர். அரசன் பின்பு எதிரி நாட்டு அரசனுடன் சண்டை போடவும் , தன்னை காப்பாற்றவும் ஆட்கள் தேவை பட்டதால் , அந்தபுரத்தை நிறைத்தான், சந்ததியை பெருக்கினான். மேலும் தன் இரத்தமாக இருந்தால் நமக்காக சண்டை போடுவான் என்பதாலும் பல பெண்களை மணந்தான்.
குந்தி தேவி ஏன் சூரிய பகவனிடம் மட்டும் நான்கு குழந்தைகளையும் பெறவில்லை.? சூரியன், எமதர்மன், இந்திரன்....என பலசாலிகளை தேர்தெடுத்தக்காரணம் என்ன?
வீரிய விந்துக்களை பெறுவதனால் , அந்த பண்பை தன் சந்ததி பெரும் என்பதால் மட்டுமே.
இப்படி தர்மன், அர்ஜுனன் , கிருஷ்ணன் என அனைவரும் பல தார மணம் புரிந்ததன் காரணம் தன் இனத்தையும் , தன்னையும் காப்பாற்ற , தன் இரத்தம் என்றால் தமக்காக சண்டை போடுவார்கள் என்பது மட்டுமே.
இதில் இராவணன் மிகவும் சிறப்பானவன். தான் எந்த ஊருக்கு செல்லுகிறானோ அந்த ஊரில் உள்ள சிறப்பான பெண்களை தன் அந்தபுரத்தில் நிரப்பிவிடுவான்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மனி மக்களை பல தார மணம் புரிய சொன்னான். என்னெனில் தன் ஜெர்மன் நாட்டுக்கு சண்டை போட தன் இரத்தமாக இருந்தால் , உலகை நாம் ஆளலாம் மேலும் போரில் நிறைய ஆள் இழப்பு ஏற்பட்டாலும் அதை ஈடு செய்ய ஆட்கள் தேவை என்பதால் பல பெண்களை மானம் புரிய கட்டளை இட்டான்.
ரோமன் காத்தோலிக்க சபை வந்தபின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு கடை பிடிக்கப்பட்டது. நம்மவர் மதம் மாறி கொள்கைகளை பின் பற்றிய போது , நாமும் நம் கொள்கையாக கடைபிடிக்க ஆரம்பித்தோம்.
மதம் மாற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இன்று பெண்கள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஆடவனை நம்பி , அண்டி பிழைப்பு நடத்த வேண்டியது இல்லாமல் போனதாலும், ஆண்கள் ஒதுக்கப்பட்டதால், ஒருவனுக்கு ஒருத்தி நிலைத்து நிற்கிறது. முன்பு பெண்கள் ஆண்களையே நம்பி இருந்ததால் , உணவுக்கும்,இருப்பிடத்திற்கும் இருந்ததால் பல தார மணம் சாத்திய பட்டது.
எது எப்படியோ இன்று பெண்கள் முன்னேறி உள்ளனர் என்பது சந்தோசமான விஷயம். மனைவியை நம்பி காலம் தள்ளும் கணவர்கள் பலர் உள்ளனர். சக்கரம் சுலன்றுவிடாமல் ......என பலர் கூறுவது என்காதில் விழுகிறது. என்ன தருமி சார் ஒருமாதிரி என்னை பாக்குறீங்க ...நானும் உங்கள மாதிரிதான் வீட்டுக்கு அடங்கிய பிள்ளை .......
2 comments:
oruvanuku oruthikuradhu kalacharam kitayadhu adhu panpaadu ok.
untill,polygamy was banned legally,it was in practice.our grand grand father generation,uesd to had such practice.
Post a Comment