Friday, April 30, 2010

பயம் அறியான்...

       ”எனக்கு தெரியும் ...பக்கத்து பிளாட்டுள வீடு கட்டுறாங்கள ...அங்கிருந்து தான் வந்திருப்பான்...”

”“அது சரி ...எப்படி இவ்வளவு கரெக்டா சொல்லுற....?”

“போன வாரம் , வீடுகட்ட ...செங்கல் இறக்கினப்ப இதே மாதிரி ஒருவன் ஏறி குதித்து .....டான்சு ஆடினத ...பார்த்தேன்...”

“அப்பவே சொல்லிருந்தா....இப்ப இந்த மாதிரி நடந்து இருக்குமா...?”

“அப்ப அவன் ஆடின ஆட்டத்தை படம் புடித்து வைத்திருக்கிறேன்...பாருங்க..”

“ஆ..உன்னா வீடியோ கமிராவை கையில எடுத்துடுவானய்யா...”

“இருந்தாலும் இன்னைக்கு அதுவும் ஒரு ஆதாரம் இல்லையா....”

“இங்க பாருய்யா....இவன் படம் எடுக்கிறத பார்த்து எப்படி வேலியை பிய்த்துக்கொண்டு ஓடுகிறான் பாரு...”

“இவ்வளவு பயந்து ஓடுகிற அவனை அப்பவே மாண்டையில இரண்டு தட்டு தட்டியிருந்தா ...இன்னைக்கு இப்படி நடந்து இருக்குமா...?”


“யோவ் ...வீடியோவில பாரு ....அவன் வேறு இன்னைக்கு வந்தவன் வேறு...”


“அன்னைக்கு ஒரு தட்டு தட்டி இருந்தா....இன்னைக்கு இப்படி வீட்டில வந்து பொம்பளைப்பிள்ளைகளை இப்படி பயமுருத்தி இருக்க முடியுமா...?”


“நல்ல வேளை அந்த பொம்பளைப் பிள்ளை ...தெளிவா இருந்ததால ...கத்திகிட்டு ...உள்ளே போய் கதவை சாத்திகிடுச்சு...நம்ம வீட்டு பொம்பளைகலெல்லாம் ....இந்நேரம் ...கதி என்ன ஆகி இருக்குமோ...”


“வாத்தியாரு பிள்ளைகளை நல்லாதான் ...வளர்த்திருக்கிறார்...”


“அந்த மானிசன் ...போன வாரம் ...இவனை காம்பவுண்டுக்கு வெளியே ...பார்த்திருக்காரு...”


“அப்பவே...ஒரு சாத்து ....சாத்தி ...இருந்தா இன்னைக்கு இந்தநிலைமை வந்திருக்குமா...விவரம் இல்லாத பிள்ளைகளானால் என்னாவாயிருக்கும்...”


“பொட்டப் பிள்ளை சமாச்சாரம் இல்லையா...அப்பவே...ஒரு போடு போட்டிருக்கணும்...”


“நம்ம வீடியோ அப்ப பார்த்திருக்காரு ....ஆனா நம்ம வாத்தியாரு தான்...சார் பாவம் ...பார்த்து அடிக்காதிங்க வழி தெரியாம வந்திருப்பான்...என்று சொல்லி ...விட சொல்லிருக்காரு..”


“எம்பா எது எதில பாவம் பார்க்கிறது...அன்னைக்கே...ஒரு போடு போட்டிருந்தா ...இன்னைக்கு அப்படி கூப்பாடு போட தேவை யில்லையே...”


“அத விடுங்க...பொட்டபுள்ளைக்கு எதாவது ஒண்ணு ஆயிருந்தா...என்ன செய்யிறது...ஒத்த போட்ட...அதுவும் அழகு பொத்த பிள்ளை...இனிமேலாவது சுதானமா...இருப்பா ...எதுவும்னா என்னைக் கூப்பிடு...”என நான்கு வீடு தள்ளிய காமாயி பாட்டி வாயை திறக்க..


“ஆத்தா...இருட்டு நேரம் பார்த்து சுதானம் உன்னை யாரு வர சொன்னது....”


“சாரிடா..பெரிய மனுசா...”என முனங்கிய படி சென்றது.


   அன்று தெருவெல்லாம் இரவு முழுவதும் இதை பற்றியே ஒரே பேச்சு.விடிந்தும் கூட துக்கம் விசாரிக்க வந்தம் இருந்தனர். 


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


   ”என்ன கல்யாணம்...நைட் தூக்கம் இல்லையா...?கண் இரண்டும் சிவந்து காணப் படுகிறதே...”


“இல்லை சார்...அது வந்து ...”


“நீ ஒண்ணும் சொல்ல வேணாம்...பொண்டாட்டி நேற்று தான் ....வந்திருப்பா...தெரியாதா...”


“சார் ...பணி மாறுதலில் அவள் போன மாதமே ...வந்திட்டா...”


”யோவ்...பார்த்தியா...இன்னும் சின்ன வயசுன்னு நினைப்பு...உன் பொண்டாட்டி வந்தது தெரியும் ...அவ அம்மாவுக்கு சீரியஸ் என்று சொன்னீயே ...அதான்...பொண்டாட்டியோட ...ஆஸ்பத்திரிக்கு  சென்றாயான்னு கேட்க வந்தா...”


”சரி அது இருக்கட்டும் ...இன்னைக்கு டி.யி.ஓ. ஆபிஸ்க்கு போய் சம்பளபில்லை வைத்திவிட்டு வா...”


“கொடுங்க சார்....போறேன்...”
கோடை வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் கொடுமை கூட நேற்றைய சம்பவத்திற்கு கொஞ்சம் இதமாக த்தான் தெரிந்தது....மனதிற்குள்ளே..


“யாரு செய்த புண்ணியமே...என் மவள் தப்பித்தாள்...கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்..”


இப்படியாக ஒரே புலம்பலாக ஓடியது...மாலையும் வந்தது.


“டேய்...கல்யாணம் ...நேத்து இரவு ...ஒரு பத்து தடவையாவது போன் செய்திருப்பேன்...ஏன் என்னை தொடர்பு கொள்ள வில்லை...? என்னமும் பிரச்சனையா....?”என்றான் கல்லூரி தோழன் .
“அது எல்லாம் ஒண்ணும் இல்லைடா...மணியாச்சு நாளைக்கு வா...விரிவா போசலாம்..”
என்று சொல்லும் போதே செல்போன் சிணுங்கியது.


“ஹாலே...பாப்பாவா...இந்தா...வந்திட்டேன்...ஆபிஸ்சில இருந்து கிளம்பிட்டேன்...”


“அப்பா...பயமா இருக்குப்பா...அம்மாவும் இன்னும் வரல...சீக்கிரம் வந்திடுப்பா...”


“அதான் தாத்தா...இருக்காருல்ல....அண்ணணுடன் சேர்ந்து படி...நான் ஒரு அரை மணி நேரத்தில விந்திடுகிறேன்...”


“என்னடா...பிரச்சனை ...ஏன் எப்பவும் இல்லாம...உன் பிள்ளை உன்னை தேடுது...”


“இல்லை செந்தில்....வீட்டில எல்லாரும் பயந்து சாகிறாங்க....நேத்து நடந்த விசயத்தை கோள்வி பட்டா...நீயே..பயந்திடுவ...இல்லை நீ வீட்டை விட்டு காலி பண்ணி வந்திடுவே...”


”சரி சொல்லு ...”என கூறிக் கொண்டே....கல்யாணத்தின் லப் டாப்பை எப்பவும் போல் திறந்தான்.


“பக்கத்து பிளாட்டில...வீடு கட்டுறாங்க....”


“மீண்டும் ...இடத்தை அளந்து தொந்தரவா...இல்லை போலீஸ் ஸ்டேசன் வரை இழுத்துட்டானா...”


“ஏன்டா...வாயில இருந்து நல்ல வார்த்தையே வராதா...?”


“அப்புறம் பக்கத்து பிளாட்டில ...அப்படி என்ன பிரச்சனை....புதுமாதிரி எதுவுமா...அரசியல் வாதியேட பிளாட்ட வாங்கி வீடு கட்டாதன்னு எத்தனை தடவை சொன்னேன்...”


“தங்கமான மனுசன என்டா ..திட்டுர..அவரு சொன்ன மாதிரி இன்னைக்கு பிளாட் விலை ஆறூ மடங்கு ஏறிடுச்சு ...”


“பொடி போடாம....விவரம் சொல்லு....இது என்னடா...புது விடியோ....”


“அந்த வீடியோவ பாரு....அப்புறம் நான் பயப்படுறதுக்கு காரணம் புரியும்...”


“யாரு அந்த பொழுது போகாத வீடியோ கிராப்பர் எடுத்ததா....”


“எப்படி வேலியை கிழித்து கொண்டு வெளியே போறான்....”


“என்னடா...மரியாதை ..என்னாச்சு....”


அது இருக்கட்டும் ...இது என்ன இந்த வீடியோல எல்லாரும் கத்துகிறீங்க....”


செல் மீண்டும் சிணுங்கியது...


“அப்பா .. பயமா இருக்குப்பா...திரும்பவும் எதாவது ஆயிடுமேன்னு ...அம்மா வந்திட்டா..அவ தான் போன் போட சொன்னா...அவளுக்கும் பயமா..இருக்காம்...”


“ம்ம் இந்தா...கிளம்பிட்டேன்...”


“யாருடா...இந்த பொரிசு....”


“அவரு மட்டும் இல்லாட்டின்னா...நான் தினம் தினம் பயந்து சாகணும் ...அவனை பிடித்து இருக்க முடியாது ...”


“என்னடா...இதுக்கு போய் ...”
“அவரு தான் சொன்னாரு ...அந்த கம்பு பார்த்தியா....பக்கத்து தெருவில இருக்கார்...சத்தம் கேட்டு ஓடி வந்தாரு...அந்த காம்பால உடம்புல ஒரு அடி ....அப்படியே....கம்ப வைச்சு ...திமிராம பிடித்துகிட்டாரு...நான் கொலை வெறியில இருந்தேன்...அதுவும் பொம்பளபிள்ளைக்கு ஓண்ணு கிடக்க ஓண்ணு ஆயிடுந்தா என்னாவாகியிருக்கிறதுன்னு...ஒரே போடு....”


“மண்டையில ஒரே அடி ..உயிர் நாடி அந்து விழுந்து இருக்கும்....அப்புறம் நம்ம பக்கத்து வீட்டு காரர் ...ரேட்டில வருகிறவன் போகிறவன் எல்லாம் ஒரே போடு ...”


“இதை நம்ம வீடியோ...கிராப்பர் படம் வேறு எடுத்துள்ளார்.”


“இது என்னநெட்டில டவுண் லேடு பண்ணி வச்சுருக்க....”


“இதுவா....கண்ணாடி விரியான் பாம்பு ...மிகவும் விஷ்ம்...வாய்ந்தது...இந்தியாவிலும் ஆசியாவிலும் காணப்படும் சமவெளி பரப்புகளில் குட்டை செடி புதர்காடுகளில் வாழும். இதன் தலை முக்கோண வ்டிவில் பெரிதாக காணப்படும். இதன் தலையை வைத்து விசதன்னையை அறியலாம்...மேலும் ..இதன் உடம்பில் உள்ள கட்டங்கள் பிரவுன் மற்றும் மஞ்சள் நிறத்துடன் காண்ப்படும்....இதன் கட்ட நெருக்கத்தினை வைத்து விசத்தன்மையை கூற முடியும்....”


“அதன் வால் பகுதி பார்த்தியா...ஒரே சீரா ஒடுங்காமல் ...திடீரென்று ஒடுங்கியுள்ளது, இப்படி ஆல் திடீரென்று ஒடுங்கினால் விசத்தன்மை அதிகம் உடையது என அறியலாம்....”


“நீயும் பாம்பு பத்தி தெரிந்து வைத்திருக்கீயே..... ”


“அது சரி பாம்பு பத்தி தெரிந்த்து வைத்த நீ ...உன் குடும்பம் ஏன் இந்த பயம் பயப்படுது...”
“உனக்கு என்னத் தெரியும் ...என் பொண்ணு ..என் தங்கச்சி பொண்ணு மாடியில படிச்சு முடிச்சு ...கீழே இறங்கி வந்துச்சு ...பார்த்தா...படியில இவன்...ஒரே கத்துல மாடி ஏறி ஒடிபோச்சு ..தெரியாம மிதிச்சு இருந்தா இரண்டு போரையும் பார்த்திருக்க முடியாது...”


“உன் நல்ல மனசுக்கு அப்படி யெல்லாம் நடக்காதுடா...”


“கத்தின கத்தில என் போர்டிகோவுக்கு வந்திடுச்சு...அப்புறம் நான் கம்பு எடுக்க...பக்கத்தில அனைவரும் எடுக்க....எப்படி விரட்டுச்சு தெரியுமா...யாரும் பக்கத்தில போக முடியாது ....தவ்வி தவ்வி சீறுச்சு ...கடைசியில ஒரு செடி மறைவில படுத்து துரத்துகிற எங்கள கொத்த காத்து கிடந்தது...அந்த பொரியவர் ...கம்ப வைச்சு ...உடம்பில ஒரு அடி அப்புறம் ஒரு அமுக்கு அமுக்கினாறு பாரு...அப்படியே...தலையை தூக்கிச்சு ...என் கம்பை வைத்து ஒரு போடு...சுருண்டு விழுந்துச்சு....அப்புறம் ஆளு ஆளுக்கு ...ஒரு அடி ...”


“செத்த பாம்ப யாரு தான் அடிக்க மாட்டாங்க...அது என்ன பாம்புன்னு சொல்லாம...அவன் அவன் ந்னு பிணாத்தின...”


“அந்த பொரியவரும் ...கடைசி வீட்டு கிழவியும் தான் ஆறு மணிக்கு மேல ...பாம்புன்னு சொல்லக்கூடாது....அது காதில கேட்டு படை யெடுத்திடும்...அதுனால ...அவன் இவன்னு சொல்ல சொன்னாங்க ..நேற்று இரவிலிருந்து அனைவரும் அவன் வந்தான்,இவன் அடிப்பட்டான் என்று தான் சொல்லுறாங்க ...உன்னை மாதிரி புதிசா கேட்கிறாவனுக்கு...எது போலவே...சந்தேகமா...தெரியும்...”


“சரி ...அவன் வந்தாலும் வந்திட போறான்...போ...செத்த பாம்பையும் வீடியோ எடுத்த அவருக்கு ஒரு விருது கொடுக்கணும்...”


செல் சிணுங்கியது ..”அப்பா...அவன் வந்திட்டா...என்ன செய்யிறது....”
“அடே...சாமி போதுங்கடா...உங்க மரியாதை ....ஆள விடுங்க...”Thursday, April 29, 2010

மழை

மழை 

கார் மேக கூந்தலை
பின் தொடர்ந்த
அவனுக்கு ...
இடியுடன் கூடிய மழை ...?
செருப்படி ...
கண்களில் கண்ணீர்...!
--------------------------------
_காதல் ___
உறவினர் கூடி ...
உயிர் பிரிப்பது ..!
திருமணம் __
உறவினர் கூடி
உயிர் கூட்டி
உயிர் பெறச் செய்வது !

____________________________
கல்வி
சட்டப்படி இலவசம்
தரம் பெற
காசு தர வேண்டும்..!
`````````````````````````````````````````````
ஆறு கேள்விகளுக்கு பதில் ....!

 ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் இரண்டாயிரத்து இரண்டிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆசிரியர்களை தேர்வு செய்தனர். தற்சமயம் , வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்கின்றோம். அவர்களின் சான்றிதழ் மட்டும் சரிபார்க்கப் படுகின்றன. சான்றிதழின் கல்வி தகுதியின் அடிப்படையில் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு, அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு பெற்றிருந்தால் போதுமானது.

      நீங்கள் கேட்பது புரிகிறது . அவர்களின் கற்பித்தல் அறிவு திறன் சோதிக்கப்படுவதில்லையா...?பொது அறிவு திறன் சோதிக்கப் படுவதில்லையா  ...?  பாவம் ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வானவர்கள் மட்டும் , நன்கு படித்து, தகுதி மேம்படுத்தியவர்கள் ஆகவே தான் அவர்கள் மட்டும் திறமையின் அடிப்படியில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படியில்  தேர்வாக முடிந்தது.

      அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் , மாநில முதல் மதிப்பெண்ணை தரும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் திறமை பெற்ற ஆசிரியர்கள் ஆவர். அவர்களால் மட்டுமே மாணவர்களை மாநில முதல் மதிப்பெண் பெறச்செய்ய முடியும் திறமை உள்ளது என்று நம்பும் நிர்வாகத்தின் மதிப்பு பெற்ற ஆசிரியர்கள்.அவர்களை அரசு பணிக்கு  செல்லாமல் பணம் கொட்டி கொடுத்து  தங்களிடமே தக்க வைக்க ரெடியாக இருந்த நிர்வாகம். இருப்பினும், பல ஆசிரியர்கள் , மெட்ரிக் பணியை விட்டு அரசு பணிக்கு வந்தனர்.

        என்னுடைய கேள்வியெல்லாம்
1.  இப்படி திறமையும் தகுதியும் படைத்த ஆசிரியர்களால் ஏன் நம் அரசு பள்ளி மாணவர்களை மாநில தரத்தில் பயிற்றுவிக்க முடிய வில்லை.?

2. ஏன் இதுவரை அதாவது கடந்த நான்கு வருடம் பணியாற்றி இருக்கும் இவர்களால் , இது மாதிரி மாநில மதிப்பெண் கொடுக்க இயலவில்லை  என்பது குறித்து கல்வி அதிகாரிகள் சிந்திப்பார்களா..?

3.அதுவும் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே மாறுதல் பெற்றும் அவர்களால் தங்கள் திறமையை வெளிபடுத்தாதற்கு காரணம் என்ன..?அவர்களுக்கு என்ன இடர்பாடு உள்ளது இது பற்றி கல்வி அதிகாரிகள் ஏன் இதுவரை சிந்திக்கவில்லை.?

4. அவர்கள் திறமை குன்றிவிட்டதா  ...? இல்லை அவை முறையாக பயன் படுத்தப்படவில்லையா...?இதை ஆசிரியர்கள் தான் கூற  வேண்டும்.

5.நம் அரசு பள்ளி மாணவர்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதா....? அதனை சரிசெய்ய அவர்களுக்கு தெரிய வில்லையா..?

6.வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா...?

தயவு செய்து இதற்கான காரணங்களை கல்வி அதிகாரிகள் சிந்திக்கவும்.
 
பிளாகர்களே...என் அருமை வாசக நண்பர்களே தயவு செய்து உங்களால் இந்த ஆறு கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரிந்தால் கருத்திடவும்.

    என் சக நண்பர் கல்யாணம்  சொல்லும் போது...."மாணவர்கள் தான் மாநில மதிப்பெண் எடுக்க தம் சூழ்நிலையை மாற்ற வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு படிக்கும் சுழல் மெட்ரிக் பள்ளிகளில் அதிகம். எனவே , ஆசிரியர்கள் தங்கள் திறமையை கொண்டு எளிதில் அனைவரையும் அதாதவது நூறு  சதவீதம் தேர்ச்சி பெற செய்வது எளிது. மேலும் ஏதாவது ஒரு மாணவனை மாநில முதல் மதிப்பெண் பெறச்செய்வதும்  எளிது " என்றார்.
 அவரிடம் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடிய வில்லை .

"ஏன் நம் பள்ளி  மாணவர் மனநிலையை மாநில முதல் மதிப்பெண் பெறக் கூடியதாக அல்லது போட்டி மனப்பான்மை உடையாதாக மாற்ற முடியவில்லை. ஏன் இந்த ஆசிரியர்கள் தம் திறமையை அவர்களிடம் கொண்டு செலுத்த இயலவில்லை....? அல்லது இவர்கள் தேங்கி விட்டார்களா...? " என்றேன்.அதற்கு  அவர்
    "அரசு அதிகாரிகளின் மெத்தன போக்காக இருக்கலாம்....?அல்லது ஆசிரியர்கள் தேங்கி விட்டமாதிரி காட்டிக் கொண்டு இருக்கலாம்...அரசு அதிகாரிகள் முறையாக அவர்களை வேலை வாங்கினால் அரசு பள்ளிகள் என்றும் மாநில முதல் மதிப்பெண் பெறும்" என்றார்.

Wednesday, April 28, 2010

கிராமம் முன்னேற வழி ....?

       இந்தியா விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். நம் நாட்டின்  பொருளாதார வளர்ச்சி , விவசாயத்தை சார்ந்தே உள்ளது. இவை யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால், நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து , இன்று வரை விவசாயத்தில் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் ? இன்று நம் பொருளாதாரம் நிச்சயமாக விவசாயத்தை சார்ந்து உள்ளதா? என்பதை போன்ற கோள்விகளுக்கு பதில் அளிக்கும் முன் கீழ் கண்ட கவிதையை படிக்கவும்.

 
        நெல் போட்டேன்
         லாபம் இல்லை...
       சோளம் போட்டேன்
          எதுவும் கிடைக்கவில்லை...
       பருத்தி போட்டேன்
         அதுவும் விலங்கவில்லை...
     பிளாட் போட்டேன்
        ஆஹா ..ஓஹோ...
     என பணம் கொட்டியது....!

      விவசாயம் இப்படி இருக்கும் போது ,  நாம் எதற்கு எதற்கோ புதிது புதிதாக பாடத்திட்டங்களை ஆரம்பக் கல்வியில்   ஏற்படுத்துகிறோம். சாலைவிதிகள் சம்பந்தாமாக இன்று மூன்றாம் வகுப்பிலிருந்து கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், விவசாயம் சார்ந்த படிப்பை நாம் என்றாவது சிந்தித்துள்ளோமா! அதற்காக நாம் முயற்சிகளாவது எடுத்துள்ளோமா?

      எனக்கு விவரம் தெரிந்து , தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மட்டும் தான் விவசாயக் கல்லூரி உள்ளது. வேறு எந்த கல்லூரியும் உள்ளதாகத் தெரியவில்லை. வேறு எந்த பல்கலைக்கல்லூரியிலும் விவசாயம் சார்ந்த படிப்பு இருப்பதாக தெரியவில்லை. தொலைதொடர் கல்வியிலும் விவசாயம் சார்ந்த படிப்பு இருப்பதாகத் தெரிவதில்லை.ஆனால் நாம் விவசாயம் சார்ந்த நாடு.

     நகர ஈட்டுப்படி இன்று நகரங்களுக்கு வழங்கப் படுவது போல் , கிராம ஈட்டுப் படி வழ்ங்க ஏற்பாடு செய்யலாமே..?
    அன்று வெள்ளைக்காரன் தன் நகர வாழ்வை வசதிமிக்கதாக மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்தது தான் , நகர ஈட்டுப்படி . நாம் ஏன் கிராமங்களை வளப்படுத்த கிராமங்களுக்கு ஈட்டுப் படி கொடுக்கலாமே...!
     இன்று ஆசிரியர்கள் கூட கிராமங்களுக்கு சென்று வேலை பார்க்க மறுக்கின்றனர். நகர ஈட்டுப்படி அவர்களை ஈர்க்கிறது. கிராம ஈட்டுப்படி கொடுத்தால், நகரத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் இருந்தாலும் , கிராமங்களுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு ஏற்படலாம். அதனால் கிராமங்கள் விழிப்புணர்வு ஏற்படும். விவசாயம் சார்ந்த துறை முன்னேற , அரசு கவனம் செலுத்த வாய்ப்பு உண்டு.

      கிராமங்களில் தான் குழந்தைகள் அதிகம் . அதேபோல் , பள்ளிச் செல்லாக் குழந்தைகள் சதவீதமும் அதிகம். அதுசரி , பள்ளிக்கு செல்லவில்லை, விவசாயம் சார்ந்த தொழிலையாவது மேற்கொள்கின்றனர் என்றால் இல்லை.அதுவும் நகரம் சார்ந்த தொழிலையே நம்பி பிழைக்கின்றனர்.

   ஆகவே,நாம் தொடக்கக் கல்வி நிலையிலே விவசாயம் சார்ந்த படிப்பை மாணவர்களுக்கு தருவதன் மூலம் நம் முதுகொழும்பை நிமிர்த்தலாம்.

  விவசாயம் நமக்கு கை கூடாதது ஏன்...? கடல் சார்ந்த ஜப்பான் கூட , மொட்டைமாடியில் விவசாயம் செய்து புரட்சி ஏற்படுத்தி உள்ளது. நம்மால் ஏன் இயலவில்லை...கருத்திடவும்.

Monday, April 26, 2010

நம் குடும்பம் எப்போது...?

அவன் குடும்பம் ...
ஒரு எட்டு முன்னேறியது.....
அவன் குழந்தை பள்ளிக்கு சென்றது....!


அவன் குடும்பம்
பெரிய மனம் படைத்ததாக மாறியது....
அம்மா! என்றவனுக்கு
அவன் குழந்தை பசி போக்கியது ....!

அவன் குடும்பம்
பாக்கியம் படைத்ததானது...
கிராமத்து மருத்துவராகி
அவன் குழந்தை சேவை செய்தது ...!.

நம் குடும்பம் எப்போது...?

தமிழில் வார்த்தைகளின் பொருளை நினைவில் வைப்பது எப்படி?

       மாணவர்கள் ஒர் வார்த்தையின் பொருளை நன்கு மனப்பாடம் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து , வாக்கியங்கள் அமைக்க எளிதாக முடியும். வாக்கியங்களின் அமைப்பு , மாணவனின் மொழி வளம் வளமையடைய உதவும்.

         மாணவர்களை மூன்று குழுவாகப் பிரிக்கவும். ஒரு குழுவில் குறைந்தது , ஐந்து அல்லது ஆறு நபர்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு குழுவிற்கும் குறைந்தது எட்டு அல்லது பத்து வார்த்தைகளைக் கொடுக்கவும் . அனைத்து குழுவிலும் அதே வார்த்தைகள் கொடுக்கவும்.

      முதல் குழுவினரை அவ்வார்த்தைகளின் அருஞ்சொற்பொருள் கண்டுபிடித்து , அந்த அருஞ்சொற்பொருளைக் கொண்டு வாக்கியங்கள் அமைக்க சொல்லவும். உ.ம்: மாதா=அம்மா, தாய், அன்னை.

      இரண்டாவது குழுவினரை அவ்வார்த்தைகளின் எதிர்சொல் கண்டுபிடித்து , அந்த எதிர்சொல் கொண்டு , வாக்கியங்கள் அமைக்க சொல்லவும். உ.ம்.: எதிரி x நண்பன், தோழன்,

மூன்றாவது குழுவினரை அருஞ்சொற்பொருள் , எதிர்சொல் தவிர்த்து, அதன் ஆண் பால் அல்லது பொண் பால் ,அல்லது செய்யுளின் வேறு பயன்பாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாக்கியங்கள் அமைக்கச் செய்யலாம்.உ.ம். அம்மா விற்கு தந்தை, பிதா

   பின்பு அனைத்து குழுவினரையும் ஒன்றாக அமரச்செய்து , ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவனை அமைத்து , அக்குழுத்தலைவனை தங்கள் எழுதிவைத்துள்ள வாக்கியங்களை வாசிக்கச் செய்வதன் மூலம் அனைவருக்கும் ஒரு சொல்லின் பொருளினை நன்கு மனப்பாடம் செய்வதுடன் , அதன் பயன்பாட்டையும் அறியச்செய்யலாம். முயன்று பாருங்கள்.


குறிப்பு: ஆசிரியர்கள் குழுவினை தொடர்ந்து கவனித்து , அனைத்து மாணவரின் பங்கேற்பு உள்ளதா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரின் பங்களிப்பு இருக்கும் வண்ணம் குழுவில் அனைத்து மாணவர்களும் தனித்தனியாக வாக்கியம் அமைக்க ஆசிரியர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

Sunday, April 25, 2010

எரிபொருள் நெருக்கடி

    சமீபத்தில் என் சக ஊழியரின் கணவருடன் பேச நேர்ந்தது. அவர் ஈ.பி யில் இஞ்ஞினியராக வேலைப் பார்க்கிறார். அவருடன் தற்சமயம் ஏற்படும் பவர் கட் பற்றி பேசினேன்.அப்போது அவர் நம்மிடம் உள்ள வளங்கள் போதுமானதாக இல்லை. மழை பெய்தால் மட்டும் மின்சார பற்றாக் குறையை தீர்க்க முடியும். அதுவும் ஆறு,ஏரி, குளம், கம்மாய் என அனைத்தும் நிரம்பி வழிய வேண்டும் என்றார்.

  தற்சமயம் விசயத்திற்கு வருவோம் . நம்மிடம் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் மற்றும்
 புதுப்பிக்கப்பட முடியாத வளங்கள் என இரண்டு வளங்கள் உள்ளன. புதுப்பிக்கக் கூடிய வளங்களான மரம் , மழை போன்றவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் , மேலும் , அவற்றை நாம் சேமிக்க வேண்டும். மரங்கள் வளரும் வேகத்தைவிட , வேகமாக மரங்கள் வெட்டுவதை நாம் நிறுத்த வேண்டும். அதேபோல் , நீர் நிலைகளை மாசுப்படுத்துவதை தடுக்க வேண்டும்.

  
    எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற வளங்கள் ஒருமுறை பயன் படுத்தினால், மீண்டும் பயன்படுத்த முடியாது. நிலக்கரி படிமங்கள் இன்னும் முந்நூறு ஆண்டுகள் வரை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இவை விரைவில் தீர்ந்து போகும்.

   அதுசரி வளங்களை நாம் எவ்வாறு பாதுகாப்பது. ...?

மரங்கள் அதிகம் வளர்ப்போம். மழை வளம் பெருக்குவோம். மழை தொடர்ந்து பொழிந்தாலே, காற்று நன்றாக வீசும் . மேலும் , நாம் மழை மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். நீர் நிலைகளை அசுத்த நீர்களால் மாசுபடுத்தும் போது , அங்குள்ள உயிரினங்கள் மடிந்துவிடும். நீர் மாசடைந்து , பயனற்றுப்போகும். நெகிழி
மண்ணில் புதைவதை தடுக்கவும்.

      அதுமட்டுமல்ல நாம் வீட்டை விட்டு வெளிவரும் போது அனைத்து விளக்கும் அணைக்கப்பட்டுள்ளதா எனப்பார்க்கலாம். முடிந்தால் மெயினை அணைத்துவிட்டு வெளியேறலாம். நாம் பாத்திரம் கழுவும் போது , தண்ணீர் குழாயை திறந்து அதிக நீர் வெளியெறுவதை குறைக்கலாம். குளிக்கும் போது, பல் துலக்கும் போது தண்ணீர் அதிகமாக வெளியேறுவதை தடுத்து நீரை சேமிக்கலாம்.   தெருவிளக்குகள் அதிகாலை வெளிச்சம் வந்தபின் எரிவதை தவிர்க்கலாம். மாலைவேளையில் வெளிச்சம் இருக்கும் போதே தெருவிளக்குகளை எரிவதை தடுக்கலாம். விழாக்களில் அதிகமான விளக்குகள் எரிவதை குறைக்கலாம். கோயில் திருவிழாக்களில் மின்சாரம் அதிகம் செலவாவதை தடுக்கலாம். நாம் உள்ள அறையில் மட்டும் விளக்குகள் எரியும் படி பார்த்துக்கொள்ளலாம். பொருள்களை மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தி (காகிதம், மர சாமான்கள்) மரம் வெட்டப்படுவதை தவிர்க்கலாம்.

  இவ்வாறு செய்தாலே நாம் தொடர்ந்து மின்சாரம் பெறலாம்.

Saturday, April 24, 2010

பொருட்காட்சியில் என் மனைவி....

     நேற்று என் மனைவி மதுரை சித்திரைப் பொருட்காட்சிக்கு சென்றார். என் தங்கை, என் தம்பியின் மனைவி,மற்றும் அனைவரின் குழந்தைகளை அழைத்துச் சென்றார்.அனைவரும் சந்தோசமாக பொருட்காட்சியை கண்டு ரசித்தனர். சிறுவர்கள் விரும்பிய ராட்டினம் ,டோரா டோரா, சிப், போட் அனைத்திலும் எற்றிவிட்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து விட்டு. குழந்தைகள் விரும்பிய விளையாட்டுப் பொருள்கள் மற்றும் திண்பண்டங்கள் வாங்க கடைகளுக்கு சென்றார்.

     அனைத்துக் கடைகளிலும் நெகிழி வேண்டாம் என்று கூறிஇருக்கிறார். அனைத்துக் கடைகளிலும் ”ஏன்..? வாங்கினா தப்பா...? என்ன பெரிசா...தப்பா ஆயிடும்...?” என்று கேள்விகளால் கேலி செய்துள்ளனர்.அனைவருக்கும் பொறுமையாக பதில் கூறியுள்ளார்.
பலர் ..”இவள் ஒருவளால் ஊரே திருந்திவிடுகிற மாதிரி போசுகிறாள் “ என காது பட கூறியுள்ளனர்.
          அனைவருக்கும் அவர் சொன்னக் கதை இதோ...”சமீபத்தில் ஒரு ஆசிரியர் கிராமத்திற்கு மாணவர்களுடன் கேம்ப் சென்றுள்ளார். அப்பகுதி முழுவதும் நெகிழிகளால் மண் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு,நெகிழியின் பாதிப்பை வீடு வீடாக சென்று கூறியுள்ளார். ஆனால் , அனைவரும் நெகிழியை சாதாரண உப்பு வாங்கி வரக்கூட பயன் படுத்தி உள்ளனர். எப்படியாவது கிராமத்தை சுத்தப் படுத்த நினைத்தார். அனைவரும் கேலி செய்துள்ளனர். பின்பு ஒரு முடிவெடுத்து , அப் பகுதியில் உள்ள கடைகளில் எல்லாம் , துணிப்பை ஒன்றைக் கொடுத்து இனி இதில் பொருட்களைக் கொடுங்கள் , பாலித்தீன் பை கொடுக்காதீர்கள். பொருட்களை காகித பையில், அல்லது காகிதத்தில் மடித்துக் கொடுங்கள் என்று அன்புக் கட்டளைக் கொடுத்தார்.  அனைவரும் அப்படியே துணிப்பையில் கொடுத்தார்கள். அனைவரும் துணிப்பையில் கொண்டு சென்றாலும் ,மீண்டும் துணிப்பையை கடைகளில் கொண்டு கொடுக்க வில்லை. ஆகவே, அந்த வீடுகளில் சென்று மீண்டும் துணிப்பை எடுத்து கடைகளில் கொடுத்து , அந்த கிராமமே நெகிழி இல்லாமல் இருக்கிறது...”


   ஒருவர் முயற்சியால் கிராமம் திருந்தியது போல் , நாம் அனைவரும் முயற்சி செய்தால் ...நகரம் திருந்தும் , பின்பு உலகமே..நெகிழி அற்று தூய்மையாக மாறும். கேலி செய்வதை விட்டு ...நம்மை திருத்த முயற்சி செய்யுங்கள் ...அனைவரும் திருந்துவர்.

நெகிழியின் கெடுதிகள் பற்றி என் மனைவி விளக்கியவை ....

1. பிளாஸ்டிக் மண்ணில் மக்குவதில்லை.

2. மழை நீரை மண்ணிற்குள் செல்ல விடுவதில்லை.

3. மரம்,செடி, கொடிகளை அழிக்கிறது.

4. உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் தேங்கும் நீர் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உருவாக்குகிறது.

5. ஆற்றின் நீரோட்டம் தடுக்கிறது.

6. நீர்வாழ் உயிரினங்களின் உணவோடு பிளாஸ்டிக் கலந்து , உயிரிழப்பு ஏற்படுகிறது.

7. பிளாஸ்டிக் எரிப்பதால் ஏற்படும் விஷ வாயு காற்றில் கலந்து, மனிதனுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறாக நீர், நிலம், காற்று என அனைத்தையும் பாதிக்கும் பிளாஸ்டிக்கை நாம் முயற்சி செய்து , அதன் பயன்பாட்டை குறைத்து , அவற்றை ஒழிக்க வேண்டும்.

யார் கோலி செய்தாலும் , நாம் நம் கொள்கையை விட்டு விடாமல் , அதனை தொடர்ந்து செயல் படுத்தினால், நிச்சயம் வெற்றிப் பெறலாம்.

பிளாஸ்டிக் தவிர்ப்போம். உலகை காப்போம்.

Monday, April 19, 2010

கோடைவிடுமுறையை பயனுள்ளதாக கழிப்பது எப்படி?

    மாணவ மணிகளே! கோடை விடுமுறை விடப்போகிறது, இனி கவனமாக இருக்கவும். தங்கள் இதுவரை படித்தப் பாடங்களை நினைவில் வைத்து ,தேர்வில் மிக அருமையாக செயல் பட்டு , அடுத்தவருடம் சமச்சீர் கல்வி முறையை எதிர்நோக்கி மகிழ்ச்சியாக உள்ள உங்கள் , கோடை விடுமுறை பயனுள்ளதாக இதோ சில டிப்ஸ்....

1. நீங்கள் கொளுத்தும் வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும்.

2. நீரை சுடவைத்து ,குளிர்ந்த பின் ,அதிகமாக பருகவும். சுத்தமான நீராக இருந்தால் , மட்டுமே வெளியில் தண்ணீர் அருந்தவும். நீரினால் , கோடையில் அதிகம் நோய் பரவ வாய்ப்புண்டு.

3. மாங்காய் , புளியங்காய் போன்ற புளிப்பான திண்பண்டங்களை அதிகம் உண்டால்,உடம்பு உஷ்னாமாகி ,அஜிரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கு உண்டாகலாம்.

4. காலைவேளையில் நடனம், ஓவியம் வரைதல், மண்பானை ஓவியம் ,டைப் கற்றல் போன்ற கட்டிடத்திற்க்குள் இருக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

5. அதிகாலை அல்லது மாலையில் உடற்பயிற்சி கற்றுக்கொள்ளலாம். கிரிக்கெட் , புட்பால் போன்ற விளையாட்டுக்களை உச்சி வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும்.

6. வீட்டிற்க்குள்ளேயே விளையாட கடிதம் எழுதுதல், போனா நண்பர்கள் தொடர்பு எற்படுத்துதல், தாயம் , பன்னாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடலாம். வார்த்தை விளையாட்டு , பாடல் விளையாட்டு, வார இதழ்களில் வந்துள்ள படங்களை வெட்டி புதிய மார்டன் படங்களை செய்யலாம்.

7. பள்ளி பாடிப்பு என்பது நமக்கு வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் தரக்கூடியது. நாம் நம் புத்தகத்தில் படித்த இடங்களை தாய் , தந்தையுடன் சென்று பார்வையிட்டு அங்கு காணக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் , அங்குள்ள மக்களின் காலாச்சாரம் , பண்பாடு, மொழி, இனம் ஆகியவற்றை அறிந்துக் கொள்ளவும். மேற்கண்ட தகவல்களை செல்லும் இடங்களில் சேகரித்து கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றவும்.

8. வீட்டில் கணிணி இருந்தால் , புதிய மொழியினைக் கற்றுக்கொள்ளலாம். மேலும் புதியவர்கள் பெயிண்ட் பிரஷ் , வோர்ட் கற்றுக்கொள்ளலாம். கணிணி இயக்கத்தெரிந்தவர்கள் கோரல் ட்ரா, அனிமேசன் கற்றுக்கொள்ளலாம்.

9. புத்தகங்கள் படிப்பதன் மூலம் நம் அறிவை விருத்தி செய்யலாம். மேலும் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க , தாங்கள் சென்றுள்ள ஊரிலுள்ள நூலகத்திற்க்கு சென்று புத்தகங்களைப் படித்து கோடையைப் பயனுள்ளதாக மாற்றலாம்.

10௦. தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து , அருகில் உள்ள நர்சரிக்கு சென்று மரக்கன்றுகளை வாங்கி நடலாம். பாலித்தீன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் பகுதியை குப்பையில்லாப் பகுதியாக்க நண்பர்களுடன் முயற்சியில் இறங்கலாம். பெரியவர்களிடம் தேவையான உதவி நாடலாம் .

Sunday, April 18, 2010

8டாத அறிவு ..

”என்னப்பா மிகவும் சந்தோசமாக இருக்க....எதுவும் விசேசமா....?”

“ஆமாம் சார்....இன்னைக்கு முதன் முதலா இந்த கம்பெனியில சேலரி வாங்கி இருக்கேன்”

“ரெம்ப சந்தோசம் ...இந்த சேலரி என்கிற வார்த்தை உப்பிலிருந்து உருவானது...தெரியுமா?”

“உப்புக்கும் சேலரிக்கும் என்ன சார் சம்பந்தம்....?”

“ரோமானியர் காலத்தில் பணியாளர்களுக்கும் ,இராணுவ வீரர்களுக்கும் உப்புக்காக salarium என்று அழைக்கப்பட்ட ஊதியப்படி வழங்கப்பட்டது. அதிலிருந்து ...சேலரி என்ற வார்த்தை உருவாக்கப் பட்டது. “

“உப்பு பத்தி சொல்லுகிறதனால உங்களுக்கு கடல் சார்ந்த ஊராகத்தான் இருக்கும்...”

“சரி...தான் ...இராமேஸ்வரம் ...என் ஊர்..”

“என்ன சார்...சும்மா இராமேஸ்வரம் அப்படின்னு சொன்னா...”

“அது ஒரு தீவு ...பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ...இராமநாதசுவாமிகள் கோவில் தான் தீவின் கிழக்கு பகுதியில் உள்ளது...இக்கோவிலில் ஆயிரத்து இருநூறு தூண்கள் உள்ளன ....”

“அப்புறம் சார்...இலங்கை செல்ல இராமனால் கட்டப்பட்ட ஆதம் பாலம் பத்தி சொல்லல...”

“சொல்லுகிறேன்....உலகிலேயே...நீண்ட பிரகாரம் உடைய கோவில் கட்டிடம் இது தான்..இக் கோவிலில் 22 புனித நீர்க்கிணறுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வெறு சுவைகளை உடையவை...”

“நானும் அங்கு ....குளித்திருக்கிறேன்...சார்...”

“நீ கேட்டீயே...ஆதம் பாலம்..அது பாக் நீரிணையில் ...முப்பது கிமீ நீளமுள்ள ..மணல் திட்டாகும் ...இது ராமன் சீதையை மீட்க கட்டியது எனவும் நம்பப்படுகிறது...தனுஷ்கோடி ...”

“சார்..இராமனின் வில்லின் பெயர் சரிதானே...”

“ஆமாம்...1964 வங்கக்கடலில் உருவான புயலில் ...இராமேஷ்வரத்தின் ....கிழக்கு முனையில் உள்ள தனுஷ்கோடியின் ...கோதண்ட சுவாமிக் கோயிலைத் தவிர அனைத்து பகுதியும் புயலில் அழிந்தன...”

”சார்..நிறைய விவரங்கள்...சொல்லுறீங்க...திருப்புல்லாணி...பத்தி...”

“அங்கு தான்...இராமன் ...இராவணனை எதிர்க்க வில்லும் அம்பும் இறைவனிடம் பெற்றத் தலம் ...அங்கு தர்ப்பை புற்கள் நிறைந்த இடம் என்பதால் திருபுல்லாணி என்றும் கூறப்பட்டது..”

“சார்...தகவலுக்கு ரெம்ப நன்றி ....இராமேஸ்வரம் சுற்றிப்பார்த்த ஒரு அனுபவம் உங்கள் பேச்சில்

Saturday, April 17, 2010

எட்டாத அறிவு

”என்னப்பா...இது கையில.....”

“என் இதயம் சார்....”

“ஓ!காதல் கடிதமா...?”

“ஆமாம் சார்...என் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து ....இதுல வச்சிக்கிறேன்...”

“தம்பி ...நீ நினைத்தாலும் இதயத்தை எக்ஸ்ரே...எடுக்க முடியாது...”

“அப்படியா...!அதாவது என் இதயம் எவ்வளவு பெரிசு என்பதை அவளுக்கு புரிய வைக்க்க...எழுதி இருக்கேன்..”

“ஆமாம் ...உன் இதயம் பெரிசு தான் ...”

“எப்படி சார்...என் கடிதத்தைப் படிக்காமலே...நீங்க...!”

“அது இல்லத்தம்பி...ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் பதினைந்து சதவீதம் சிறியது....அதத்தான் சொன்னேன்..”

“சார்...என் காதல் உங்களுக்கு சிரிப்பா இருக்கு ...என் இதயத் துடிப்பே ...அவள் தான்..பாருங்க அவள பத்தி நினைத்தா இதயம் எவ்வளவு வேகமா துடிக்குது”

“தம்பி..சுண்டெலியின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு இருநூறு முறை துடிக்குது...அதுக்காக அதுக்கு காதல் அதிகம் அப்படின்னு சொல்ல முடியுமா..?யானை ஒரு நிமிடத்திற்கு ஐந்து முறை துடிக்குது...இதயம் வேகமா துடிக்காததனால அதற்க்கு காதல் வாராதா...?”

“சார்...இப்ப என்னத்தான் சொல்ல வரீங்க...என்ன சொன்னாலும் என் காதல் உண்மையானது...”

“அது சரி யானை காது போல உன் காதல் இருக்கட்டும்..”

“அது என்ன சார் ...என் காதலுக்கும் யானையின் காதுக்கும் முடிச்சுப் போடுறீங்க..”

“அதாவது யானை தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு காதை அசைப்பதை நிறுத்தி விட்டால் , அது இறந்து விடும் அது போல உன் காதல் தொடர்ந்து முப்பது நாட்கள் தொடர்பு இல்லாமல் போனால் இறந்து விடும்....இப்போது உள்ளது போல் ...என்றும் அவள் நினைவாய் இரு ...நிச்சயம் வெற்றி பெறும்....”

“!!!”

வறுமையும் வளமை தரும்

    இன்று நாம் வறுமையின் பிடியில் நம் நிஜத்தை இழந்து, நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.தாழ்வதனால், நம் நம்பிக்கையை இழந்து விடுகிறோம். நம்பிக்கை வாழ்வின் உயர்வுக்கான டானிக் ஆகும். வறுமை என்றும் வளமைக்கு எதிரியாக இருந்தாலும், அந்த வறுமை போக்க நம் உழைப்பின் வழியில் வெறிக் கொண்டு பிழைத்தால், வளமை நம் வசப்படும்.
     இன்று வளமையின் வசந்தத்தில் வாழ்பவர்கள் அனைவரும் ,இளமையில் வறுமையின் பிடியில் இருந்தவர்கள்.தம் வெறிக் கொண்ட உழைப்பால் ,வளமையை தம் வசப்படுத்தியவர்கள்.ஆகவே, நாமும் வெறிக் கொண்டு உழைத்து , நெறிக் கொண்டு பிழைத்து ,வாழ்வில் வறுமைப் போக்கி , வளமை பெருக்கி வசதியாக வாழ்வேம்.

    இதோ , வறுமையை வளமாக்கியவர்கள் பட்டியல்.

1.  ஏழை விறகு வெட்டியின் மகனான ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.

2. ஆங்கில அகராதியின் ஆசிரியரான “டாக்டர்.சாமுவேல் ஜான்சன்” ஒரு ஏழை புத்தக வியாபாரியின் மகன்.

3. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் , ஸ்டாலின் தான் சோவியத் நாட்டிற்கு வழிக்காட்டி ஆவார்.

4. படகுத் தொழிலாளியின் மகன் தான் பார் போற்றும் “தாமஸ் ஆல்வா எடிசன்”

5. ஒரு மெழுகு வர்த்தி வியாபாரியின் மகன் தான் உலகம் போற்றும் ஒப்பற்ற விஞ்ஞானி “பெஞ்சமின் பிராங்கிளின்”

6. ஷேக்ஸ் பியரின் தந்தையார் ஒரு குதிரை லாயத்தின் மேற்பார்வையாளராக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்தவர் என்றாலும் இறைவா புகழ் பெற்றவை அவர் எழுத்துக்கள்.

7. கண் இல்லாமல் இன்று நாம் பல படிப்புக்கள் படிக்கிறோம் .தனது மூன்றாவது வயதில் க்ண் இழந்த “லூயிஸ் பிரெய்லி” தான் கைவிரல் தடவிப் பார்த்து படிக்கும் குருடர்களின் கண்ணைத் திறந்தவர் ஆவார். கண் இழந்த லூயிஸ் பிரெய்லி தான் பிரெய்லி முறை கண்டுபிடித்தவர்.

8. ”தி ஸ்டேரி ஆப் மை லைப்” என்ற புகழ் பெற்ற நூலை தன் 22 ம் வயதிலேயே எழுதிய ’ஹெலன் கெல்லர் ’ என்ற எழைப் பெண்மணிக்கு பார்வையும் இல்லை. காதும் கேட்காது.

”வாழ நினைத்தால் வாழலாம் , வழியா இல்லை பூமியில்...”
ஆகவே , உழைப்பை நம்பு, வெறி கொண்டு உழைத்தால், நெறிக் கொண்டு , வளமையாக வாழலாம்.

“போதிக்கும் போது புரியாத கல்வி
பாதிக்கும் போது புரிகிறது”
என்ற ஆட்டோ வசனம் நினைவிற்கு வருகிறது. ஆகவே,நாமும் இது போன்று புலம்பாமல் இருக்க , இளமையில் நன்றாக படித்து, அதில் நன்றாக நம் உழைப்பைக் காட்டி , நம் வாழ்வை வளமாக ஆக்குவோம்.

Friday, April 16, 2010

அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 5

"வாங்க! மாதவன் ....இது உங்க தங்கச்சி பொண்ணா...?""ஆமா...நான் சொன்னது ..இந்த பொண்ணை பற்றித்தான் ..டாக்டர் ..."
" வாம்மா ....உட்கார்...உன் பெயர் மது ...நீ திரு பள்ளியின் துரு  ,துரு ...பொண்ணு ..."
"ஆமாம்... அங்கிள் ..." " எனக்கு கோபம் நிறைய வருமா .... " " சரி ..இங்க வா ....இந்த இருக்கையில் உட்கார்..."இருக்கையில் அமர்ந்தாள் .  " கண்ணை அசைக்காத ...இந்த டார்ச் லைட்டை மட்டும் பாரு. விழியை இந்த பக்கம் திருப்பி பாரு.... சரி ...வா உட்கார்..."
" ஜெனரல் ஹெல்த் நல்ல தான் இருக்கு ...." " அது டாக்டர் ....கோபம் வந்த மட்டும் தான் ...அவ இதை பார்த்தாலும் அந்த பொருள் உடைந்து போகுது ..."
"உனக்கு கோபம் எப்ப எல்லாம் வரும் ...." " டாக்டர் ...அநியாயத்தை பார்க்கும் போது மட்டும் ,என்னை அறியாமல் கோபம் வருது ....முன்னால எல்லாம் சண்டை போடுவேன்..."
"சரி ..இப்பவும் சண்டை போடா வேண்டியது தானே...ஏன் போடா மட்டிங்கிற ..."
" இல்லை டாக்டர்...அப்பா  தினம் என்னை திட்டுகிறார்...அதுனால ...நான் இப்ப எல்லாம் ..ஒன்ணு.., இரண்டு எண்ண ஆரம்பித்து விடுகிறேன்..."
"ரெம்ப நல்ல விஷயம் தானே...அப்புறம் ஏன் ..?"
"இல்லை டாக்டர் ...நான் கோபத்தை அடக்கினாலும்   ... என் பார்வை எதாவது ஒரு பொருளின்  மீது பட்டு பொருள் உடைந்து போகிறது... "
"உனக்கு அப்படி என்ன கோபம் ...அதுவும் நீ பொருளை பார்த்தால் உடையும் என்று சொல்லுவதை என்னை நாம்ப முடிய வில்லை...."
"டாக்டர்...நான் சொல்லுவது நிஜம் ....நம்புங்க ...அதுனால தான் ...எங்க மாதவன் மாமா என்னை அழைத்து வந்திருக்காங்க ...."
"டாக்டர் ...மது பொய் சொல்ல மாட்டா...நான் பள்ளியில் விசாரித்து ...அதற்கு பின் தான் இன்று ...உங்க கிட்ட அப்பாயின்மெண்டு ..வாங்கிட்டு வந்திருக்கேன்..."
"அது சரி தான் ...ஆனா ...இவ பொய் சொல்லுகிற மாதிரி எனக்கு தெரியுது ....இப்படி எல்லாரும் கோபப்பட்டு  எதையாவது பார்த்தா ...உடையுமுன்னா ...உலகம் அழிஞ்சுடும்...புரியுதா...இவ பொய் சொல்லுறா...எங்க  என்மேலே கோபப் பட சொலுங்க ..."
"என்ன டாக்டர்...நீங்களும் சின்ன பிள்ளைகிட்டா ...கோபப் படுகிற மாதிரி பேசுறிங்க ..."
" சார்...என்ன சார் நீங்களும் ஏதோ கோபம் அடிக்கடி வருதுன்னு சொன்னா ....பரவாயில்லை...அத விட்டுகிட்டு...கோபம் வரும்போது பார்க்குமா ...அப்புறம் ஏதாவது ...உடையுமா...எங்க என் கையில் உள்ள ...தெர்மா மீட்டரை பார்க்க சொலுங்க ...சரியான பொய் கோழி ....சின்ன பொண்ணு பேச்சை கேட்டு வந்துட்டீங்க ...."
"டாக்டர் ....நீங்க கோபம் வர மாதிரி பேசுறீங்க ....ப்ளீஸ் ..டாக்டர் ..என்னை ..புரிஞ்சுக்கங்க ...நீங்களும் எங்க ...மிஸ் மாதிரி ... நல்ல ஆராயமா ...என்னை கேவலமா ..பேசி கோப படுத்துறீங்க...."
" என்ன ....டீச்சர் பத்தி தாப்பா பேசுற.....அவுங்க சரியா தான் தண்டனை கொடுத்திருக்காங்க ....உன்மேல தான் தப்பு எல்லாம் இருக்கு ..."
(மது....மனதுக்குள் ...ஒன்ணு , இரண்டு , மூன்று  எண்ணியவாறு ...டாக்டரின் தெர்மா மீட்டரை ...பார்த்தாள்...டாக்டரும் அவள் முறைப்பதை பார்த்து மேலும் அவர் அவரின் மாமா மாதவனிடம் கோபப்படுமாறு பேசினார்.)
சிறிது நேரம் சென்ற பின்....
"சாரி மாது ...நன் உன்னை செக் செய்யாதான் கோபமூட்டினேன் ...நீயும் கோபப் பட்டு ....என் தெர்மா மீட்டரை முறைத்தாய் ...ஆனால் ,பார் ...தெர்மா மீட்டரை உன் கோபம் ஒண்ணும் செய்ய வில்லை..."
"சார்....சில நேரங்கள பார்வை குவிப்பு மூலமா ...ஒருத்தர் மனசை கட்டு படுத்தி ....ஒரு பொருளை ...நாம் சில சமயங்களில் உடைக்கலாம்....அதுவே...எப்போதும் நடக்காது....அதுனால இது எதார்த்தமா..நடந்திருக்கலாம்..பயப்படாதீங்க ....சில மருந்துக்கள் தருகிறேன் ...அத சாப்பிட சொல்லுங்க....'
"தேங்க்ஸ் டாக்டர்..நான் பயந்துட்டேன்...உங்களை மறக்க மாட்டேன்..சரி வருகிறேன் "
அவர்களை அனுப்பி விட்டு தெர்மா மீட்டரை கையில் எடுத்தார்...உடைந்து வந்தது...!
                                                                                           ஆச்சரியம் தொடரும் .

Wednesday, April 14, 2010

8டாத அறிவு ..

"என்னடா ரமேஷ்...பாட்டி வீட்டுக்கு அடிகடி போகிற...?"

"அத ஏன்டா கேக்கிற....எம்டன் மகன் மாதிரி ஆச்சுடா ...என் பொழப்பு ...?"

"அது என்னடா...எம்டன் மகன் ....?"

"நீயே விவரமான ஆளு உனக்காத் தெரியாது...?அதாண்ட என் தாத்தா சாக பொழைக்க கிடக்கிறார் ...பொழுதுக்கும் என்னை கூப்பிட்டு பால் ஊத்த சொல்லுறாங்க  ..."

"அட அது ஏன் தெர்யுமா...? "

"ஏதோ அவரு ஆத்மா சாந்தி அடையானுமா....?"

"அட மடையா....அது இல்ல ...நம்மளை போன்ற பெரியவர்கள்  செய்ய முடியாத ஒன்றை குழந்தைகள் செய்யும் அது தெரிந்தா...நீ இத செய்யமாட்ட....?"

"அது என்னடா...செய்ய முடியாத ஒன்ணு ...."

"மூச்சு  விட்டுக் கொண்டே விழுங்குவது தான் ...என்ன புரிஞ்சுதா ...நீ எதுக்கு பால் ஊத்திரன்னு ..."

"அண்ணே ..புரியலா ....?"

"அங்க பாரு நீ ஊத்தின பாலில உசிரு போய் ...சங்கு ஊதுகிற சத்தம் காதை  பிளக்குது..."
"என்னடா...சொல்லுற .. டாக்டர் ...மூச்சு ...போக இரண்டு நாள் ஆகும்னு சொன்னாரே..."

"அதைதான் ...இன்று ஒரே நாளில நாலஞ்சு தடவை பால் ஊத்துறேன்னு ...சொல்லி ..மூச்சு விட்டுட்டாரே  ... பால் விழுங்கும் போது மூச்சும் சேர்ந்து விட முடியாதானால ...போய் சேர்ந்து விட்டார்....எல்லாரும் சேர்ந்து  கொண்ணுடீங்க..."

"நிஜமாவா....எங்க தாதாவுக்கு வயசு எழுபது....வயசு ஆயிடுச்சுள்ள ....அதன் போய் சேர்ந்திட்டாரு..."

"அப்ப அவரு பூமியை இரண்டரை முறை சுற்றி வந்துள்ளார்...."

"டேய் புரியும் படி சொல்லுடா..."

"அதாவது ...எழுபது வயதான மனிதன் தன் வாழ் நாளில் எழுபதாயிரம் மைல்கள் நடந்திருப்பான். இது பூமியை இரண்டரை முறை சுற்றி வந்ததற்கு சமம்"

(ஐய்யோ .. என்ன பெத்த மாகராசா...போயிட்டீங்களே...)

"பாரு ,உன் அம்மா ...அழுதுட்டே..போறாங்க ...என்னை நம்பு ...உன் பால் தான் மூச்சு போக வச்சுது ...போய் செய்ய வேண்டிய மீதி காரியத்தை செய் ...."

"!!!!!"  

சித்திரையே வா! வா!

தமிழன் வாழ்வை
சிறப்பிக்க வரும்
சித்திரையே...வா !வா!
சுட்டு வரும் சித்திரையே  
மனிதன் சுயநலத்தை
சுட்டு பொசுக்கி செல் !
மனித மனதில்
சத்தியம்,பொறுமை
கருணை ,தானம்
தைரியம் என
உரமிட்டு செல் !
அக்கினி கரங்களால்
அகங்காரம் , ஆணவம்
போன்றவற்றை  பொசுக்கி செல் !
அன்பெனும் பண்பை
விழாக்களில் உணர்த்திவிட்டு செல் !

Tuesday, April 13, 2010

படிப்பு

அம்மா...!
என் ஒடி வந்த குழந்தை ...
பாசத்துடன் தாய்
அணைத்துக் கொண்டாள்
ஒட்டியது குழந்தை மட்டும் அல்ல..
காலை முதல் அம்மாவை
நினைத்து விம்மிய மனசும்..!
எப்போதும் போல்
புகை கக்கிச் சென்றது...
பள்ளிப் பேருந்து..!

அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 4

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தன் கடமைகளை கடவுள் இட்ட கட்டளைப்படி செய்து முடிக்கிறான் என்று கடவுளை பற்றி நம்பிக்கை உடையவர்கள் மத்தியில், மாதவன் வித்தியாசமானவர். மதுவின் மாமா தான் மாதவன் . மாதவன் , சாதிக்கப் பிறந்தவன் மனிதன் என்று கூறுவதுடன் ,நாம் நம் மூச்சுக் காற்றை உள் இழுத்து , வெளி விடுவதற்காக பிறக்க வில்லை , நம் உள் உணர்வுகளை புரிந்து கொண்டு, அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் , இயற்க்கைக்கு பாதகம் செய்யாமல் , உலக முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது மாதவன் கொள்கை.

   இளம் வயதில் மாணவர்கள் , தியானம், யோகா கற்றுக்   கொள்ள  வேண்டும். மாணவர்கள் கோபம் , எரிச்சல் ஆகியவற்றை போக்க வேண்டும் . பிறரை பகைமை பாராட்டக் கூடாது . இளம் வயதில், மாணவர்கள் சிரித்த முகத்துடன் பள்ளிக்கு சென்று , ஆன்மிக சிந்தனையுடன் , அறிவியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்பன மாதவனின் கனவுகளில் ஒன்று.

  "என்ன மது குட்டி ,பலத்த யோசனை, இன்று பள்ளி விடுமுறை....எங்கு செல்லலாம் என்று யோசனையா....."

"இல்ல மாமா ...நான் எப்ப பார்த்தாலும் கோபப் படுகிறேன்...அது மட்டும் அல்ல   ..."

"கோபம் ஒரு விஷயம் இல்லை...எதுக்கு கோபம் வருது சொல்லு...."

"அது  வந்து மாமா ,நியாயமே இல்லாத விசயத்துக்கு எல்லாம் நான் டீச்சரிடம் வை வாங்குகிறேன்..அந்த  ராம சாமி, மாரி முத்து செய்கிற அட்டகாசம் தாங்க முடியலை..."

"அந்த பசங்களிடம் சேராதீங்க ....பிரச்சனைன்னு  தெரிந்தா நாம் தான் ஒதுங்கிடனும் , அதுமட்டுமில்லை பிரச்சனைக்கு உரியவர்களை அணுகி நம் பாதிப்பை விளக்க வேண்டும் ...அதுனால நம்ம முட்டாள்ன்னு கூட நினைக்கலாம் , அதுக்காக பயந்து , அடுத்தவர் கேலி செய்வாங்கன்னு நினைத்து பிரச்சனையை .எதிர்கொள்ளாமல் தள்ளி போடக்க கூடாது "

"மாமா , பிரச்னையை காண்டு ஒதுன்குன்னு சொல்றீங்க , அப்புறம் எதிர்கொள்ன்னு குழப்புறீங்க "

"அது நாம பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது . அதாவது பிரச்சனைகளை நாம் உருவாக்காமல் ஒதுக்கிடனும், நம்மால்  பிரச்சனைகள் வாரக்க் கூடாது புரிந்தாதா..அதற்காக நமக்கு வந்த பிரச்சனைகளை , அப்படியே விட்டு நாம் பகையை வளர்க்கக் கூடாது  .என்ன புரிஞ்சுதா....."

"மாமா ...அதுவல்ல பிரச்சனை...அப்பா  கோபத்தை  அடக்க ஒன்ணு  , இரண்டு , மூன்று  எண்ணச்  சொன்னார்கள் ..அப்படி கோபம் வரும் போது எண்ணி கொண்டே அந்த பயனை முறைத்தேன்...."

"பார்த்தியா ...மனசு இப்ப வேதனை படுத்து....கஷ்டப் படுது....அதுக்கு தான் கோபம் மட்டும் பாடாம இருந்தா பத்தாது, அவன் செய்த தப்ப மறந்து ...மனம் விட்டு பேசு....உன் எல்லாப் பிரச்சனையும் போயிடும்..."எனக் கூறிக் கொண்டே...."அண்ணே....மதுவும் நானும் ராஜாஜி பார்க்குக்கு போய்ட்டு வருகிறோம் "என தன் காரை நோக்கி நகர்ந்தான்.

"மாமா ...பிரச்சினை என்னான்னு முழுசா கேட்க மாட்டிங்களா..." "மது ....வா...போய்கிட்டே...பேசுவோம்...."

இருவரும் காரில் ராஜாஜி பார்க் நோக்கி காரில் பயணம் செய்ய...வெயில் என்றும் இல்லாதது போல் இன்று மிகவும் சூடாக இல்லை. தன்னை மேகத்துக்குள் மறைத்துக் கொண்டது. ஒருவேளை மது தன்னையும் கோபமாக பர்ர்த்து விடுவாளோ, அதனால் அதன் கதிர் கரங்கள் உடைந்து விடுமோ என்று பயந்து ஓடி ஒளிந்திருக்குமோ!
  
கார் அண்ணா நகர் தாண்டி , புதிதாக போட்ட சாலையில் அரவிந்த் கண் மருத்துவ  மனை வழியாக  ,  மெதுவாக சென்றாது. அண்ணா பேருந்து ...டிபி நோயாளி மாதிரி மெலிந்து,ஒடுங்கி ,புதிய அரசு மருத்துவ மனை விரிவாக்கத்துக்கு கொடுக்கப் பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் இருந்தது. விறுவிறுப்பாக காணப்படும் கலெக்டர் ஆபீஸ் இன்று  வெறிச்சோடி  கிடந்தது. ராஜாஜி பார் எதிர் புறம் லயன்ஸ் கிளப், உள்ளே வண்டி நிறுத்தி வைக்கப்பட்டதிலிருந்து மாதவன் ஒரு லைன் என்பது புரிகிறது.

   காரை விட்டு பார்க்கிற்கு செல்ல நினைக்கையில் , மதுவின் காலடியில் ஒரு சார்ட் பேப்பர் , சுருட்டிய நிலையில் தட்டுப்பட ,அதை கையில் எடுத்தாள். ஓவியத்துடன் காரை விட்டு இறங்கினாள்.  காரின்கதவை  அடைத்து விட்டு திரும்பிய மாதவன், மதுவின் கைகளின் ஓவியத்தை பார்த்தான்.ஓவியத்தை பார்த்த மது வாயடைத்து போனாள்.
"  என்ன ஆச்சரியமா பார்க்கிற...போன வாரம் ...எங்க கிளப்பில் நடந்த ஓவிய போட்டியில் உங்க பள்ளி  மாணவன் வரைந்த ஓவியம். என்னால  நம்ப   முடியல அதுனால ...உன்னிடம் இந்த ஓவியத்தை பற்றி காட்டி ..அசர வைக்கணும் ன்னு நினைத்தேன் அதுக்குள்ளே நீயே இதை எடுத்து பார்த்திட்ட...."

"!!!!!"
"ஏய் ,என்ன மது ஒண்ணும் பேசாம...நிற்கிற....வா...டிக்கெட் எடுத்து பார்க் உள்ளே போயிட்டே...பேசுவோம்..."
எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் ஓவியத்தை  வைத்த கண் முடாமல் பார்த்துக் கொண்டே நகர்ந்தால்.

"எனக்கு ஒண்ணும் புரியல...அதுல நீ ஒரு பையனை பார்க்கிற ...அவன் சாப்பிடுகிற  மாதிரி தெரியுது ...ஆனா அவன் ஸ்பூன் வளைந்து கொண்டு இருப்பது போல வரைந்து உள்ளான் , அருகில் உள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் பார்கின்றனர்......எப்படி உன் உருவம் அவனுக்கு தெரியும் நீ பள்ளியில் சேர்ந்து  இரண்டு மாதம்  தான் ஆகிறது  ..!"

"மாமா ...படத்துல்ல  உள்ளது அப்படியே நடந்தது...அதை பத்தி தான் சொல்ல வந்தேன்....நான் கோபத்தை குறைத்து அவனை முறைத்தேன்...அவனின் பேனா ஒடிந்தது....லஞ்சில் , அவன் சாப்பிடும் போது அவன் கை ஸ்பூன் பார்த்தேன், அது வளைய ஆரம்பித்தது...."

"அப்படியா...அவனை நாளை பார்க்கணும்...அது சரி நாம் நாளை மாலை நல்ல மன நல டாக்டரிடம் உன்னை செக் செய்கிறேன்....இப்ப போய் விளையாடு...."

மது குழந்தையாக , குழந்தை மனநிலையில் பிற குழந்தைபோல் ஆனந்தமாக   விளையாடுகிறாள்.

                                                               நாளை என்ன நடக்கும்....?

Sunday, April 11, 2010

அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 3

"அப்பா ! நான் போயிட்டு வரேன்..." என்ற மதுவின் கைகளில் புது லஞ்ச் பாக்ஸ் .
"சமத்தா ...யாரையும் அடிக்காம ....டீச்சர் சொல்லித்தராத படிக்கணும்..."
"அப்பா ...எப்ப பார்த்தாலும் நானே அடிக்கிறேன்னு ...நீயும் டீச்சர் மாதிரி பேசுற...தப்பு செய்கிறவன டீச்சர் தண்டிகாதனால ...எனக்கு கோபம் வந்து நானே அடிச்சுபிடுறேன்.."
"பார்த்தாயா செல்லம் மீண்டும் கோபம் வருகிறது...லஞ்ச் பாக்ஸ் வாங்கி கொடுத்து அப்பா என்ன சொன்னேன்...?சமத்தா கோபப் படாம ...டீச்சர் அடிக்களைனாலும் உன் நியாத்தை எடுத்து சொல்லு ....கோபம் வந்தா புது வாட்டர் கேன் தண்ணீரை மடக் மடக் குன்னு குடிச்சுடு ....கோபம் தன்னால போயிடும்...."
"இப்படி குடிச்சா...தண்ணீர் தான் தீர்ந்து போகும்...."
"தண்ணீர் தீர்ந்து போனா ....ஒன்ணு ,இரண்டுன்னு ...எண்ணு...கோபம் தன்னால குறைந்து போகும்"
"சரி ...டாட் ....போயிட்டு வாங்க..."என புதிய பென்ஸ் காரில் அமர்ந்து இருந்த தந்தைக்கு டாட்ட காட்டினால்.

"என்ன மது....புது லஞ்ச் பாக்ஸ் கொண்டு வந்திருக்க..சாப்பாடு பத்தலையா.."என்ற ராமசாமி .
"டேய் , எனக்கு கோபம் வந்துச்சு ....அடிச்சு புடுவேன்..தினம் என் லஞ்ச்ச சாப்பிட்டு ...நக்கலா பண்ணுறே...."
"என்னமோ...வித விதமா சமைச்சு வந்து ..நீயா கொடுக்கிற மாதிரியில்ல போசிகிற....டீச்சருக்கு தெரியாம திருடி தின்னுறது...எவ்வளவு ரிஸ்க் தெரியுமா...?" என்று மாரிமுத்துவும் சேர்ந்து கொண்டு மதுவை கோபமுட்டினர்  .
"ஒன்ணு ,இரண்டு..." என எண்ணிக் கொண்டே...வகுப்பறையில் லஞ்ச் பாக்ஸ் வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

ஆசிரியர் தருணா ...வகுப்பிற்குள் நுழைந்தார். அமைதியானவர். தவறுகளை கேட்பதே...கிடையாது.வகுப்பில் சேட்டை யார் செய்தாலும் அவர்களை கம்பை எடுத்து பிளந்து கட்டிவிடுவார். எந்த விசாரணையும் கிடையாது. மது நிறையா தடவை ....அடிவாங்கி இருக்கிறாள் . ராமசாமி அவளின் லஞ்ச் பாக்ஸ் திருடி ...டிபனை ...திறந்து வைத்து விடுவர்....போர்டில் எழுதிபோட்டு திரும்பும் தருணா...மது உன் லஞ்ச் திறந்து கிடக்கு ...பாடம் நடத்தும் போது திண்ணாக் கூடாது தெரியுமில்ல ..கையை நீட்டு ...." என பின்னி எடுத்து விடுவார். மதிய லஞ்ச் பிரேக்கில் ....மது அவர்களை தன் இடக் கையால் அறைந்து ....மீண்டும் அடி பெற்று தலைமை ஆசிரியர் அறை வரை செல்வாள்.

கணக்கு பாடம் நடந்தது.....வழக்கம் போல் ராம சாமி ..டிபனை திறந்து....பணியாரத்தை சாப்பிட ஆரம்பித்தான் . மது பார்த்து விட்டாள். டீச்சர் பார்த்தால் தான் அடி வாங்க வேண்டும். கோபப் பட்டாள் தந்தை தன்னை தண்டிப்பார். டீச்சர் பார்க்கும் முன் அவளே சென்று லஞ்ச்சை முடி விட்டாள்.இருப்பினும் ஆசிரியர் தருணா...பார்வையில் பட்டு விட்டார்..."எத்தனை தடவ...டீச்சர் நான் பாடம் நடத்தும் போது ....லஞ்ச்  பாக்ஸ் ...திறக்க மாட்டேன்னு...பொய் சொல்லி இருப்ப...பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் கதையா ..இன்னைக்கு நீ லஞ்ச் பாக்ஸ் திறக்கிறதுக்கு முன்னால மாட்டிகிட்ட....நீட்டு கையை "
" மிஸ் ....இல்லை மிஸ் நான் முடிவைக்க தான் போனேன் நீங்க தப்ப புரிஞ்ச கிட்டீங்க ...விசாரிச்சு கிட்டு ...அடிங்க மிஸ்...ராம சாமி தான் மிஸ் என் பணியாரத்தை ..திருடி சாப்பிட்டான்...இப்ப என்னடானா...நான் அடிவாங்க வேண்டிகிடக்கு ...அவன் வாயை ஊதா சொல்லுங்க மிஸ்....பணியாற வாடை அடிக்கும்...."
" நான் கண்ணாலே பார்த்தப்பவே .... நீ ஒத்துக்க மாட்டேன்கிற ...இதுல அவனை வேற ...நான் ஊதி பார்க்கனுமா...! நீட்டு கையை...."
(அடியை தாங்கி கொள்கிறாள்...அழுது கொண்டு ...பாடத்தை கவனிக்கிறாள். கோபம் வருகிறது...)
மனதில் ஒன்ணு , இரண்டு , மூன்று ...என எண்ணிக் கொண்டே ...ராம சாமியின் பேனாவை பார்க்கிறாள்.
அருகில் இருந்த மாரி முத்து ...."மிஸ் இந்த கணக்கு சரியா..." எனக் கூறிக் கொண்டே ...மிஸ் சை நோக்கி ஓட..கால் தடுமாறி ராம சாமியின் மீது விழுந்து விடுகிறான்.
"மிஸ் ...என் பேனாவை உடைத்து விட்டான் மிஸ்...."
"சரி விடுடா தெரியாம விழுந்துட்டான்....""மிஸ் நான் அவன் கால் தடுக்கி தான் மிஸ் விழுந்தேன் அவன் பேனா மேல வில்லை மிஸ்... ஓட்ட பேனாவை காட்டி உங்கள எமாத்துகிறான் ...மிஸ்...." "மிஸ்....அவன் கலையில தான் புது பேனா...வாங்கினான் மிஸ் நான் பார்த்தேன்...."என்றால் விமலா. " சரி...விடு ...உனக்கு பேனா தானே வேணும்....இந்தா ...எழுத்து..." என தன்னிடம் உள்ள பேனாவை கொடுத்தாள்ஆசிரியை தருணா.
மதியம் உணவு இடை வேளை....அனைவரும் உணவருந்தினர். மதுவுக்கு மட்டும் கோபம் இன்னும் தனிய வில்லை. எந்த தவறும் செய்யாமல் தண்டனை பெற்று தந்தா ராமசாமி மீது இன்னும் கோபமாகவே இருந்தாள். "மது....பாவம் நீ....தேவையில்லாம வாரத்தில இரண்டு மூன்று முறை அடி வாங்க விட்டுறாங்க ...ராம சாமியை நம்ம குரு சார் கிட்ட சொல்லி கொடுப்போம் "...என ஆறுதல் சொன்னாள் அமலா . "முஞ்சியை பாரு ...திருட்டு பைய ...எப்படி சிரிச்சுகிட்டே...சாப்பிடுகிறான்...இதுல ஸ்பூன் வேறு..." என விமலா உசுப்பேற்றி விட்டாள்.
கண்ணில் கோபமுடன் ...மனதில் ஒன்ணு..இரண்டு.. மூன்று என எண்ணிக் கொண்டே ...ஸ்பூன்..மீது பார்வை செலுத்தினாள்.
"டேய்...என்னாடா ...ஸ்பூன் வளையுது ....டேய் ...பயமா இருக்குடா...." என்றான்ராம சாமி.
"டேய்...அப்பவே...சொன்னேன்..நான் பேனாவை ஓடைக்கலன்னு....நீ நம்பள...இப்ப ஸ்பூன் வளைகிறது...." மாரி முத்து.
மது .....ஸ்பூன் மீது பார்வையை அகற்ற ...ஸ்பூன் வளைவது...நின்றது.
                                                                                                 .... அற்புதம் தொடரும்.

Saturday, April 10, 2010

அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 2

   "டேய் அருண் , நீ வரஞ்சுருகிற மாதிரி ஒண்ணும் ஆகாது ..." என ரேவதி ஆறுதல் படுத்தினார். 
"பயமா இருக்கு டீச்சர் ..."என தேம்பி அழத்தொடங்கினான்.
"டீச்சர் சொன்னா கரெக்டா இருக்குமில்ல ...நீ எனக்கு இரண்டாம் வகுப்பில ...கல்வி அதிகாரி பாராட்டுகிற மாதிரி வரைந்து கொடுத்த ....அது நீ பள்ளியில் படிக்குமுன் நடந்த சம்பவம் ...ஆனா...அந்த கல்வி அதிகாரியின் முகம் மட்டும் கன கட்சிதமா வரைந்து இருந்தே...அது தான் என்னை ஆச்சரிய படுத்தியது...அது மாதிரி இது நடந்து முடிந்த விசயமா ஏன் இருக்க கூடாது? மனச போட்டு குழப்பாத ...நல்லதாவே நினைக்க கற்றுகொள் ! "

அதற்குள் ஆசிரியர் குரு வந்தார். " என்னவாச்சு ...யாரும் அடிச்சுட்டாங்களா ? " என கெட்ட குருவின் கண்கள் ரேவதியின் கையில் வைத்து இருந்த ஓவியத்தை பார்த்து ..தொடர் கேள்விகளை நிறுத்தி விட்டது.
" டீச்சர் ..அவன் அருமையாய் படம் வரைவான் ...அதுமாதிரி இதுவும் ஒரு படம்.. அதனால இவனை என்னிடம் அனுப்புங்க அவனை சரிபடுத்திகிறேன்.."
" குரு சார் ...இவன் படம் வரைவதில் பிரச்சனை இல்லை ...ஆனா இந்த படம் நிஜமாகி விடக்கூடாது என்று ...."
"உங்களுக்கும் ..இவன் படம் வரைந்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பது தெரியுமா ...?"
" அப்படின்னா ..இவன் உங்களுக்கும் படம் வரைந்து கொடுத்திருக்கிறான் அப்படி தானே..?""ஆமாம் ...ஒருமுறை நான் குற்றாலத்தில் என் மனைவியின் தம்பியுடன்  குளிப்பது போல் வரைந்து கொடுத்தான்..அடுத்த வாரமே ...நாங்கள் இருவரும் சென்றோம்.."என்றார் குரு.
"சார்...எனக்கு இது வரை இரண்டு படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறான் இரண்டும் நடந்து முடிந்தவை தான் ....தமிழக முதல்வரிடம் பரிசு வாங்குவது போன்று படம் ... அது என் கல்லூரியில் தமிழ் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு மாநில பரிசு வாங்கிய போது நடந்த நிகழ்வு...."என ரேவதி சொல்ல ," டீச்சர் ...ஒரே குழப்பமாக இருக்கிறது " என்றான் அருண்.
"எனக்கு அப்துல் காலாம் கை குலுக்குவது போன்ற படம் வரைந்து கொடுத்தான்....மறு வாரம் என் பிளாக் படித்து ...என்னை பாராட்டி எனக்கு ஈ.மெயிலில் கடிதம் அனுப்பினார்....அப்ப நடக்க போகிற நிகழ்வாகத்தான் இருக்கும் என அருண் பயப்படுகிறான் "
"டேய் அருண் ...குரு சார் ...சொல்லும்படியாக நடக்காது ....நீ நடந்து முடிந்த சம்பவமாகவும் வரைந்து கொடுத்துள்ளாய் ஆகவே மனச போட்டு குழப்பாம ...படிக்கிற வேலையை மட்டும் பாரு ...நல்லதே நடக்கும்..."
"ஆமாண்டா ...டீச்சர் சொல்லுகிற மாதிரி நடந்து முடிந்த சம்பவமாக இருக்க கூடாது ...நீ வரைந்தது ....நீண்ட நாளுக்கு முன் நடந்ததா இருக்கும்னு நினச்சு படிக்க போ..."
அதற்குள் அருண் தங்கை புஷ்பா அவன் வரைந்த படத்தை பார்த்து விட...
"அண்ணே...அப்பா ...அப்பா..." என அழத்தொடங்கினாள்.
                                                    ----------------

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அருணை புஷ்பா அவன் தாயிடம் காட்டி கொடுத்தாள்.
அருண் வரைந்த படத்தை பார்த்த அவனின் தாய் கதறி அழத்தொடங்கினாள் . அதை பார்த்த அவனின் தந்தை " ஏய் என்ன எவனும் சரக்கை கொண்டு ஓடிபோயி காசு கொடுக்கலையா ..."
"அட பாவி மனுசா...நடக்கப் போகிறது தெரியாம இப்படி நக்கல் பேச்சு பேசுகிறாயே.."
" அடி போடி என்ன குடி முழ்கி போச்சு ....விவரமா சொல்லு ..."
"உன் மவன் படிக்க சொன்ன ....வரைந்து வந்திருக்கிறான் பாரு...நீ படம் வரைய கூடாது  ன்னு படிச்சு படிச்சு சொல்லியும் ...வரைந்து வந்திருக்கிறான் பாரு...."
படத்தை வாங்கி பார்த்தவுடன் ஆச்சரியப் பட்டார்.
"ஏய்..இதுக்கு போய் என் அழுகிற ..."
" ஆமாய்யா ...உனக்கென்ன நான்தான் பயப்படனும்..."
" ச்சீ கழுதை ...அழுகிறதா நிறுத்து ...இது ஏற்கனவே ...நடந்து முடிஞ்சது...உன்னை கல்யாணம் கட்டிகிறத்துக்கு முன்னாடி நடந்தது."
"என்னய்யா சொல்லுகிற ...விவரமா சொல்லு ..."
"இவன் வரைந்திருக்கிற மணிமேகலை பெண்கள் பள்ளி அருகில் ...கல்யாணத்துக்கு முன்னாடி சவாரி அடிக்கிறதுக்கு முன்னால ஒரு லாரி காரன் இடுச்சுட்டு போயிட்டான் ..அருகில் இருந்த பட்டியக்கல்லில் தலை அடித்து ...தலை நிறைய ரத்தம் ...எல்லாரும் நான் செத்துபோயிட்டேன் அப்படின்னு நினச்சு தூக்க வரல ..."
"அப்புறம்..."
" உன் மவன் வரைந்திருக்கிற படத்தில என் ரிக்சா அருகில் இருக்கிறாரே பெரியவர் அவர் தான் என்னை தூக்கி காப்பாத்தினவர் ...அவர் இப்ப உயிருடன் இல்லை.அவர் உயிருடன் இருக்கும் வரைக்கும் அவரை நான் நித்தம் பார்த்து வணங்கிட்டு வருவேன். அவரு மட்டும் என்னை சரியான நேரத்துல காப்பாத்த வில்லை என்றால் என்னை உயிருடன் பார்த்திருக்கிற முடியாது..."
"இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு...இனிமே நீ படம் வரையாதப்பா...."
"அடி போடி ...முட்டாக் கழுதை ...அவன் வரையிறத தடுக்காத..நான் பயப்படுகிறது ...அதுக்கு அல்ல இவன் பெரியவனாகி ..ஏதாவது அரசியல் தலைவர் சாகிறதா வரைந்து ....அதுனால இவனுக்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது ... அப்படின்னு தான் பயப்படுகிறேன் .."
"அதுவும் சரி தான்....எது எப்படியோ...நல்லது நடந்தா....போதும் ..இப்ப தான் எனக்கு உசிரு வந்தது...."          

Friday, April 9, 2010

அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும்

          அருணை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது! திரு பள்ளியில் அருண் ஒரு திறமையான மாணவன். மிகவும் புத்திசாலி. நண்பர்கள் வட்டம் மிக குறைவு. அருணை பற்றி சொல்லும் முன் அவன் படிக்கும் பள்ளி பற்றி சொல்லி ஆக வேண்டும். இந்த கதைக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

        "திரு உயர் துவக்கப் பள்ளி , மதுரையில் மிகவும் பிரசித்தம் பெற்ற பள்ளி. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் அருகில் நின்று கேட்டாலே சொல்லி விடுவர். என்ன ஆச்சரியம் என்று கேட்டு விடாதீர்கள். பள்ளி கல்வி ஆய்வாளர் அலுவலகம் அருகில் இருப்பதால் , எந்த பள்ளியை பற்றி விசாரித்தாலும் உடனே அங்கு அனுப்பிவிடுவர். பின்பு என்ன ? எந்த பள்ளியின் முகவரியும் தெரிந்து விடுமே..!" என்று காலாய்க்கும் ஆசிரியர் குரு பிரசாத் அந்த பள்ளியில் தான் வேலை பார்கிறார்.

       திரு பள்ளி காமராஜர் சாலையில் உள்ளது. திரு பள்ளி மதுரையின் ஒருசில நல்ல பள்ளிகளில் ஒன்று .ஆனால் இலவச கல்வியை தரமாக தருவதால்,கூலி தொழிலாளி முதல் முதலாளி வரை மாணவர் சேர்க்கைக்கு அலை மோதுவர். இந்த கோடை விடுமுறைக்கு முன்னரே மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாக சொல்லுகிறார்கள்.திறமை , படிக்கும் ஆர்வத்தின் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்ப்பர். இருப்பினும் சேட்டை செய்யும் மாணவர்கள் அதிகம் இருக்க தானே செய்வார்கள். மதுரையில் அறுபது ஆசிரியர்கள் வேலை பார்க்கும் ஒரே உயர் துவக்கப் பள்ளி.

       சேட்டை என்றதும் அருண் ஞாபகம் வந்து விட்டது. அருணை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொன்னீர்களே...? ஆம் ! தலைமை ஆசிரியர் ஆனந்திடம் , எட்டாம் வகுப்பு மாணவன் ..." சார்,நம்ம  அருண் ...கிரவுண்டுல  உட்கார்ந்து அழுதுக் கொண்டு இருக்கிறான் ...சார் ..ஏன் டான்னு ?கேட்டா சொல்ல மாட்டுகிறான் சார்...."
"அப்படியா...உடனே குரு சார ...கூப்பிடு ..." என்று கிரவுண்டு நோக்கி செல்கிறார். மீண்டும் மாணவன் வழி மறித்து "சார்...குரு சார கிரவுண்டுக்கு வர சொல்லவா சார்.?"    " ஆமாம் ...வரச்சொல் " என விரைந்தார்.

      அருண் ஒரு சாதாரண ரிக்ஸா தொழிலாளி மகன் . ஒரு தங்கை , அவளும் இதே பள்ளியில் இரண்டாவது படிக்கிறாள். இருவருக்கும் மூன்று வயது வித்யாசம் மட்டுமே.அவனின் தாய் மகளீர் சுய உதவிக்குழுவின் உதவியுடன் ஊறுகாய் விற்பனை செய்கிறார். ஊறுகாய் வாங்க வரும் அனைவரும் "அக்கா! அருண் இருந்தா கூப்பிடுங்கள், நாளைக்கு அறிவியல் நோட்டில படம் வரைந்து  காட்டணும்,நோட்டை கொடுத்துட்டு போறேன் ..வரைந்து வைக்க சொல்லுறேங்களா...." "சரி சரி...நோட்டை அவுங்க அப்பன் கண்ணுக்கு தெரியாம .வச்சுட்டு போங்க ..." "ஏன் அவுங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ?" அப்படின்னு நீங்க கேட்கிறது புரிகிறது.

      "வாங்க அருணுக்கு எனாச்சுன்னு பார்ப்போம் ...?" விரைந்தார் அருணுக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர் ரேவதி. ரேவதி அன்பானவர் , அவரிடம் படித்து வெளி வரும் அனைவரும் தனி திறமையை ஒன்றாம் வகுப்பிலேயே வெளிபடுத்தி விடுவர், அதில் செழுமை அடையும் வரை பயிற்சி தாருவார். அவன் பள்ளி விட்டு செல்லும் வரை தொடர்ந்து ஊக்கம் தந்து , நிதி உதவிகளையும் செய்வார். தமிழ்நாட்டின் சிறந்த ஆசிரியர்களுள் ஒருவராவர். அருனின் ஓவிய திறமை வெளிப்பட , இன்று வரை ஜொலிக்க அவர் ஒருவரே காரணம்.

       "என்னாக்கா ...அருணோட திறமை அவுங்க அப்பாவுக்கு தெரியாத...ஏன் திட்டுவார்..." "அருண் நல்ல பையன் தான் ஆனா ....அவன் திறமைக்குள்   ஒரு சிக்கல் இருக்குதே ..?" " என்னக்கா விவரமா  சொல்லுங்க ....அடுத்தவங்க பாராட்டும் விதமா படம் வரையும் திறமை யாருக்கும் அமையாது....அதுவும் இந்த சின்ன வயசுல இப்படி ஒரு திறமை இருக்கிறது அனைவரும் சந்தோசப் படுகிற ஒன்னு.."
"அம்மாடியோவ் ...உன் திருவாயை மூடு....அவன் வரை வதில் அவருக்கு பெருமை தான் ...ஆனா அவனுக்கு அதையும் தாண்டி ஒரு திறமை இருக்கு ...அதுக்கு தான் பயப்புடுராங்க ..."
"திறமையை கண்டு யாராவது பயப்படுவங்களா....? புரியாத புதிராவே...இருக்கு...!"
"யாருகிட்டையும்  சொல்லிடாதடி...அருண் தனிமையில் ஏதாவது ஓவியம் அவனை அறியாமலே...சில சமயங்களில் வரைகிறான்...."
"ஏன் அந்த ஓவியங்களில் என்ன தவறு எதாவது இருக்கா...தப்பா ஏதாவது வரைந்து விடுகிறானா...?"
" போடி கிறுக்கட்சி...அப்படியெல்லாம் நீ நினைக்கிறமாதிரி தப்பா வரைய மாட்டான்... அவன் கரெக்ட்டா  தான் ...வரைவான் .... அது தான் பிரச்சனை..."
"அக்கா ...சொல்ல வராத ...பீடிகை போடாம ...நேர சொல்லுக்கா..."
" ஒரு தடவை ...ஊறுகாய் வாங்க  வர பொண்ணு படம் போட்டு ...ஒரு பையன் தர தரன்னு இழுத்துட்டு போற மாதிரி வரைந்து இருந்தான்...."
" அப்புறம்...." " அந்த பொண்ணு ....அடுத்த இரண்டு நாளில் ....அதே உருவம் கொண்ட ...பையனுடன் ஓடி போய் கல்யாணம் பண்ணிகிடுச்சு..."
"என்னக்கா இதுல இருக்கு ...அந்த பையனோட பேசினத பார்த்திருப்பான்.....அத வரைந்து இருப்பான் ...இதுக்கு போய் ..."
" அந்த பொண்ணு ஓடி போச்சா...அப்புறம் ஒருநாள் ...ஏன் துரத்து மாமா படம் வரைந்து ...லாரிக்கு அடியில் ரத்தம் ஒழுக செத்து கிடப்பது போல்  வரைந்து  இருந்தான் ...அதே மாதிரி ...அவர் லாரி ஏற்றி இறந்தார்..."
" என்னக்கா ...பயமா இருக்கு .....அப்புறம்..."
" என் மாமியார் ....கை எலும்பு முறிந்து கட்டு போட்டது போல ...வரைந்தான்...மாமியார் ..மறு நாளே ...பாத்ரூமில் வழுக்கி கை உடைத்து கொண்டார்...."
"அக்கா ...நீங்க சொல்லுறத பார்த்தா ....பயமாவும் இருக்கு ...நடக்கிறதா முன் கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதாகவும் தெரியுது..."
"ஒரு பக்கம் ...சந்தோசமா இருந்தாலும் ...யாருகிட்டயாவது ...எதையாவது வரைந்து கொடுத்து அவனுக்கு அதுனால பிரச்சனை வந்து விடக்கூடாது..."
"அக்கா ...அது இருக்கட்டும் நான் வரைய கொடுத்த நோட்ட கொடுங்க ..."

    "டேய் ...அருண் டீச்சர் ...கிளாசுக்கு ...வாடா...ஏன்  அழுகிற ...? அப்படி என்னடா ..நடந்துச்சு....சொல்லு ...யாரவது ..அடிச்சாங்களா ?  ...." என ரேவதி கேட்க ..
"டீச்சரை கட்டி பிடித்து அழுக துவங்கினான்  .அவன் கையில் வைத்து இருந்த ஓவியத்தை பார்த்த ரேவதிக்கு பகிர் என்றது.

                                                                                         ......தொடரும்

Thursday, April 8, 2010

கல்வி தரம் குறைய ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம்.

    மாணவர்களின் கல்வி தரம் , அதாவது திறன் அடைவு குறைந்து கொண்டே போகிறது வருத்தமான செயல் ஆகும். தொடர்ந்து கல்வியாளர்களும், பத்திரிக்கைகளும் குரல் எழுப்பினாலும் இன்றுவரை அது ஆசிரியர்களை சென்று அடைந்ததா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வரும். இன்று கல்வி தரம் குறைய ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம்.
  
     சமீபத்தில் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பணிபுரியும் என் நண்பரை சந்தித்தேன் . அவர் சொன்ன ஒருவிசயம் எனக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. இன்று அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் சிலட் ,நெட் தேர்வு அல்லது பி.ஹிட்ச் .டி . படித்தவருக்கு மட்டுமே வலை என்றவுடன் பல பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளது . ஏன்? இந்த தொய்வு.? அறிவாளிகள் இல்லையா? அல்லது விரிவுரையாளர் வேலையை பலரும் விரும்ப வில்லையா? ஒன்று மட்டும் புலனாகிறது கல்வியில் எங்கோ தரம் குறைவது இந்த தொய்வுக்கு காரணமாக இருக்கலாம்.
  
       மீண்டும் விசயத்திற்கு வருவோம், கல்வி தரம் குறைவதற்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்பதை வலியுறுத்த கடமை  பட்டுள்ளேன். இந்த குறையை போக்க ஆசிரியர்கள் தங்களை நாளுக்கு நாள் தரம் உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டை வைக்கும் முன் ,இதற்கான காரணங்களை சொல்ல கடமை பட்டுள்ளேன்.

     அன்று எனக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களிடம் பாடம் சாராத நல்ல புத்தகங்கள் அதிகம் ,குறைந்தது ஒருநாளுக்கு ஒரு புத்தகமாவது கொண்டு வருவார்கள். பாடம் சாரா நிறைய விசயங்களை பேசுவார்கள். ஆனால் அது பாடம் நடத்தும் போது சம்பந்த படுத்தி பேசி நிறைய விசயங்கள் தருவார்கள் . மாணவர்களாகிய நாங்களும் அன்று ஆசிரியர் போல் நாமும் நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் அல்லது அது போல நாம் படிக்க வேண்டும் என்பதற்காகவே நூலகங்கள் செல்லுவோம். அன்று குறைந்தது ஆசிரியர்கள் கையில் குமுதம் , ஆனந்தவிகடன் , கல்கி, சாவி போன்ற வார இதழ்களாவது இருக்கும்.
கதை படித்தாவது நல்ல கதைகளை சொல்லுவார்கள்   . அதுவும் அவர்கள் அபிநயத்துடன் சொல்லும் போது , நமக்கே கதை எழுத வேண்டும் போல் இருக்கும். மாணவர்களில் பலர் , அவரை போல் தானே கதை தயாரித்து , சொல்லுவதை பார்த்திருக்கிறேன் .ஏன் நானே பத்தாம் வகுப்பு படிக்கும் போது கதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி உள்ளேன்.                     ( தொடர்ந்து கதை எழுதி பிரசுரிக்காமல் இருந்த போதும் , ஆனந்த விகடன் ,தங்கள் கதை புரசுரிக்க பரிசிலிக்க பட்டது. இருப்பினும் தங்கள் எழுத்து ஆர்வத்தை  பாராட்டுகிறோம் ,  தொடர்ந்து எழுதவும் என்பது இன்று வரை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமாக உள்ளது. )

        இன்று ஆசிரியர்களிடம் வார இதழ்கள் பார்ப்பது அரிதாகவே உள்ளது. இன்னும் செய்தித்தாள் பார்க்காத ஆசிரியர்கள் உள்ளார்கள். முடிந்தால் உண்மையான சர்வே எடுத்து தர தாயாராக உள்ளேன். நான் ஒரு கூட்டதில் ஆசிரியர்கள் மத்தியில் பேசும் போது , நூற்று இருபது நபர்களில் தொண்ணூறு ஆசிரியர்கள் வார இதழ் வாங்கி படிக்க கூட நேரம் இல்லை என்று சொன்னது தான் ஆச்சரியம். சின்னத்  திரை மோகம் ஆசிரியர்களையும் விட்டு விடவில்லை. சாதாரண கதை சொல்லும் தகுதியைக்  கூட வளர்த்துக் கொள்ள  வார இதழ் படிக்காத ஆசிரியர்கள் , மாணவனுக்கு புது விசயங்கள் கூற , புத்தகம் எப்படி படிப்பார்கள்?

     மாணவர்கள் கல்வி தரம் உயர ஆசிரியர்கள் தம்  தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். எத்தனை கல்வி நிறுவனங்களில் , மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்துகிறார்கள். ஆசிரியர்களே பயன்படுத்தாதப் போது எப்படி மாணவர்களை சொல்ல முடியும். பின்பு எப்படி அவன் சிலட், நெட் எழுத முடியும்.  ஆசிரியர்கள் தரம் உயர ,தினம் தன்னை தானே  புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.நிறைய அறிவு சார்ந்த விசயங்களை படிக்க வேண்டும்.

       இன்று புத்தக பூங்கொத்து மூலமாக மாணவர்களுக்கு புத்தகங்கள் அரசு தந்தாலும் , அது முறையாக பயன்பட வேண்டும்.ஆசிரியர்கள் முதலில் புத்தகங்களை மாணவர்களுக்கு தாரும் முன் , அவர்கள் அதை படிக்க வேண்டும். மாணவன் சிந்தை தூண்டும் விதமாக ,ஆசிரியர்கள் பேச்சு , செயல் , தொடர் பணி இருக்க வேண்டும்.
  
         கல்வி தரம் உயர , அவசியம் ஆசிரியர்கள் தங்களை அப் டேட்  செய்து கொள்ள வேண்டும் . ஆசிரியர்கள் அப் டேட் ஆகாத வரை நாம் கல்வி தரத்தை உயர்த்த முடியாது.

Wednesday, April 7, 2010

இன்பமும் துன்பமும்.....

     மனிதன் வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது இயற்க்கை. தோல்வியை எண்ணி  நாம் சோம்பி போய் வாழ்வையே இழந்ததாகவும் , வெற்றி பெற்றதற்காக வாழ்வில் சாதித்து விட்டதாகவோ எண்ணக்   கூடாது.  கடல் என்றாலே உப்பு அதிகம் தான் . அதை  விட உப்பு அதிகமான கடலான அட்லாண்டிக் என்றால் எப்படி ? கடல் என்றாலே ஆழம் அதிகம் தான் . அதுவும் உலகிலே ஆழம் அதிகமான பசுபிக் கடலாக இருந்தால் எப்படி?  ஆம் !கடல் ஆழம், அதிகம் உப்பு என பயன் படுத்த வில்லையா...? கப்பலை கடலில் செலுத்த வில்லைய ?கடல் வழியில் சென்று அமெரிக்க மற்றும் இந்தியாவை காண்டுபிடிக்க வில்லையா?

      வாழ்வு துன்பக் கடலாய் இருந்தாலும் ,என்றும் இன்பமான  நதி பயணமாகவே இருந்து விடாது . அதற்காக கடல் பயணம் ஆபத்தானது என்று கவலை அடைந்து அப்படியே நதி பயனாமாய் மாறி , தேங்கி விடக் கூடாது. கடலில் பயணம் செய்தால் தான் நாம் நாடு கடந்து , பல இன மொழி கலாச்சரங்களை கற்று , நாம் நம் தகுதியை மேம்படுத்தி கொள்ள முடியும். கவலை மறந்து வாழ்வில்  நீந்த கற்று கொண்டால் வாழ்வு உயரும் . அறிவியல்  ரீதியாக கடலிலுள்ள  உப்புத் தண்ணீரின் ஒப்பு அடர்த்தி அளவு நதியினுடையதை விட அதிகம். கப்பலின் எடையைச் சமன் செய்யக் குறைந்த கன அளவு தண்ணீர் போதுமானது . அதனால் நதியிலிருந்து கடலுக்குச் செல்லும் கப்பல் உயரும். அது போல இன்பமான நம் வாழ்வில் துன்பங்கள் கடல் போல் பெருகி வந்தாலும் , அவை நம்மை உயர்த்தும் . துன்பத்தை கண்டு பயந்து ஒதுங்கி நின்று விடக் கூடாது.

      அரபிக்  கடலில் லட்சதீவுகள் உள்ளன. அது போல் தான் துன்பங்கள் பெருகி கடலாய் வந்து நம்மை பாடு படுத்தும் போது நம் லட்சியங்கள் கூர்மை ஆக்கப்படும். இதியாவின் மிக நீளமான அணைக்கட்டான ஹீரா குட் , அணைப் போல  மிக நீண்ட  காலமாய் கவலையை தேக்கி வைத்தல் , நம் இதயம் பலவீனப் படும். நாம் அதை நினைத்தே நம் வாழ்வை கோட்டை விட்டு விடுவோம்.ஆகவே , நம் கவலைகளை மறந்து , அடுத்த வேலைகளை கவனிப்போம் .

      கவலைகளை உதறித் தள்ளுங்கள்.இதயத்துக்குள் அடக்கி வைக்காதீர்கள். பின்பு, அவை 1919 ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் , நம் இதய அறைகளை அடைத்து கொண்டு நம்மை நாமே படுகொலை செய்வது போல் அமைந்து விடும். ஆகவே ,நம் வாழ்வு கவலைகளால்  புல் இனமான மூங்கில் போல் துளையிடப்பட்டலும், கவலை படாதீர்கள் ,அவை வாழ்வில் இனிய இசை தருவது போல் நம் வாழ்வும் இன்னிசையாய் அமையும்.

      வாழ்வில் தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள் . அது நம்மை தாழ்த்தி விடும்.தாழ்வு மனப்பான்மை என்ற தனிப் பண்பை பற்றி சுயமாக முதன் முதலில் சிந்தித்தவர் ஆல் பிரெட் ஆட்லெர் என்ற வியன்னா உளவியலாளர் ஆவார். மாகபலி புரத்தில் பாறைக் கோவில்களைக் கட்டியதால் பல்லவ அரசர்கள் போற்றப் படுகிறார்கள். அதுபோல் நம் மனதை கல்லாக்கி,பாறை ஆக்கி , தாழ்வு மனப்பான்மை அறவே அகற்றி,வாழ்ந்தால் நாமும் வாழ்வில் முன்னேறலாம்.

(என்னிடம் என் மனைவி நான்கு ஐந்து போது அறிவு வினாக்கள் கொடுத்து இதை வைத்து இடுகை போடமுடியுமா என்ற சவாலில் எழுதியது. ஒரு வரி சினிமாவுக்கு திரை கதை அமைப்பதை போன்று. ரசித்தால் கருத்திடவும். நீங்களும் இப்படி போது அறிவு விஷயம் தந்து ஒரு பதிவு போடச் சொன்னாள் , தயாராக இருக்கிறேன். )

Tuesday, April 6, 2010

, கட்டாயக் கல்வி

     இன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாயக்கல்வி வரவேற்க வேண்டியது. அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று அடைய வேண்டும் என்பதில் எந்த கருத்து மாற்றமும் கிடையாது. மாணவர்களுக்கு கல்வி சென்றடையும் விதத்தில் , கல்வி தரம் அடிப்படையில் மாறுபாடுகளை இந்த கட்டாயக் கல்வி மாற்றுமா!
    
       நேற்றுவரை அனைவருக்கும் கல்வி என்பது சட்ட முன் வரைவாக தான் இருந்தது . இன்று சட்டமாக்கப்பட்டது. அதற்கும் தற்போதைக்கும் உள்ள  வித்தியாசம் என்ன ? பள்ளி செல்லாக் குழந்தைகளை இந்த சட்டம் ஆக்கப்படும் முன் வரை , ஒரு தொழிலாளர் நல ஆய்வாளர் மட்டுமே , கண்டுபிடித்து, அவர்களை வேலைக்கு அனுப்பியவர்களை தண்டிக்க முடியும்,வேலைக்கு வைத்திருப்பவர்களையும் தண்டிக்க முடியும்.

      ஆனால் இன்று அனைவரும் வேலைக்கும் செல்லும் குழந்தைகளை கண்டுபிடித்து , இதுவரை எந்த வகுப்பில் கல்வியை விட்டு சென்றாலும், வயதுக்கு தகுந்த வகுப்பில் எந்த பள்ளியிலும் சேர்க்கலாம். இதில் நன்கொடை பெற்று நடத்தும் தனியார் பள்ளிகள் மாணவன் சேர்க்கையில் இருபத்து ஐந்து சதவீதம் கொடுத்து ஆக வேண்டும். ஆம்  அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி .குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தவறும் பெற்றோர்கள் மீது போலீசில் புகார் செய்து , வேலைக்கு அனுப்பும் பெற்றோரை சட்டப்படி தண்டிக்கலாம்.

      இன்று பள்ளிசெல்லக் குழந்தைகள் இந்தியா அளவில் ஏறக்குறைய ஒரு  கோடிக்கு நிகராக   இருப்பதாக கணக்கெடுப்பு சொல்லுகிறது.    இச்சட்டத்தை நடைமுறை படுத்த ஏறக்குறைய ஒன்னரைக்கோடி தேவைபடுகிறது. மத்திய மற்றும்  மாநில அரசுகள் இந்நிதியை 55 :45  என்ற விகிதத்தில் செலவினங்களை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளது. ஆறு முதல் பதினான்கு வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி கட்டாய உரிமையாக்கப்பட்டாலும் சில விசயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.

      இன்று நல்ல முறையில் தேர்வெழுதி , நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களை எடுத்துக்க் கொள்வோம், ஏறக்குறைய எழுபது சதவீதம் மேல் கட்டணக் கல்வி முறையில் படித்தவர்கள் தான். ஒன்று மெட்ரிக்  பள்ளியில் படித்தவர், அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். அரசு கல்வி கொடுப்பதில் கட்டாயப் படுத்தினாலும் , அதன் தரம் அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று தமிழக அரசு அனைவருக்கும் ஒரே மாதிரி புத்தகம் கொண்டுவந்து சமச்சீர் கல்வி கொண்டுவந்தாலும் , இலவசத்துக்கும் , கட்டணக் கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசம்  மாறுபட வேண்டும்.

      காசை அள்ளி கொட்டி படிக்க வைப்பது , கல்வி அறிவு மட்டும் பெற வேண்டும் என்பதால் அல்ல , நல்ல அரசு அல்லது அதிகம் வருமானம் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து அவன் எதிர்காலம் சிறக்க வேண்டும் மற்றும் குடும்பத்தை காக்க வேண்டும் என்பதால் தான் .காசை அள்ளிக் கொட்டியவன் திரும்ப காசை பெறவேண்டும் என்பது தானே நியாயம் என்ற விதத்தில் அவனை  அறியாமலே , தவறு என்று உணராமலே , அவன் குடும்பத்தார் சம்மதத்துடன் லஞ்சம் என்று  அறியாமலே பணம் பெற முயல்வதும்,பெற்று வருவதும்  தான் இன்று நடை முறை விதியாக உள்ளது. சிலர் தைரியமாக கை நீட்டி வாங்கி மாட்டிக் கொள்வதும் உண்டு. தயவு செய்து யாரேனும் (லஞ்சம் பிளாக்கர் ) தற்போது லஞ்சப் பட்டியலில் மாட்டியவர் பட்டியலில் அவர்கள்  படித்த விபரம் அல்லது அவர்கள் மகன் அல்லது மகள் படிக்கும் பிள்ளைகளின் விபரங்களை வெளியிட்டால் நான் கூறும் விபரம் உண்மை என்பது தெரிய வரும்.


         ஆகவே கல்வி இலவசமாக தருவதுடன்,அது அனைவருக்கும் தரமானதாக போய் சேர வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதல் அடிக்கல் தான் சமச்சீர் கல்வி என்றாலும் , படிக்கும் விசயங்கள் மட்டும் ஒன்றாக  இருந்தால் போதாது. ஆசிரியர்கள் அனைவரும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி தர வழி செய்ய வேண்டும் . காலக் கெடுவுக்குள் பாடம் நடத்த வேண்டும் என்பதால் மட்டும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி சென்று அடைய முடியாது. ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வருவதால் மட்டும் கல்வி தரம் அதிகரித்து வராது. ஆசிரியர்கள் தம் கடமையை உணர்ந்து பணியினை செய்ய அரசு கடுமையான விதி முறைகளை கொடுக்க வேண்டும். தொடர்ந்து கல்வி தரம் ஆராயப்பட வேண்டும் , மதிப்பெண் அடிப்படையிலான வரைமுறைகள்  மாறி ,    திறன்கள் மாணவனுக்கு  புரியும் விதத்தில் கற்பித்து  , அவற்றை அவன் மனதில் நிறுத்தி திறனை நடைமுறை படுத்தும் விதமாக மதிப்பிடல் மாற வேண்டும்.  

        தற்போதைய நவீன கணினி யுகத்தில் அனைத்து ஆசிரியர்களும் மாணவனுக்கு இணையான அறிவு பெற அரசு பயிற்சி அளித்தாலும், கணினியை பயன்படுத்த தெரியாத பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் அதிகம் என்பது பயிற்சி பெற்றவர்களை சோதித்தாலே தெரிய வரும். இதை சொல்லு வதில் எந்த தயக்கமும் இல்லை . பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதை தினம் நடைமுறை படுத்துவதில்லை , அதனால் நாளடைவில் அதன் பயன்பாட்டை மறந்து விடுகின்றனர்.   பின்பு நினைவு படுத்தி ஆம் என தம் தவறை சரி செய்வதும் உண்டு. ஆசிரியர்களுக்கு ப்ராஜெக்ட் கொடுக்கப் பட்டு அது , முறையாக திருத்தப்பட்டு நடைமுறை படுத்தப் பட வேண்டும். தரம் இல்லாத ஆசிரியர்கள் தகுதி மேம்படுத்த பயிற்சி அளித்து, மீண்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் , அதே ஊதியத்துடன் மீண்டும் பணியமர்த்தப் பட வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் ஊதியம் கொடுத்தவுடன் பிடித்தம் செய்யப்பட வேண்டும். பேருந்து ஓட்டுனர் , விபத்து ஏற்படுத்தினால், அவர் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு , பயிற்சி அளிக்கப்பட்டு ,மீண்டும் பணிக்கு திரும்புவது போன்று , ஆசிரியர்கள் தரம் குறைவான கல்வி தருவதாக கண்டரியப்பட்டாலோ    , அல்லது மாணவர்கள் மதிப்பீடு செய்யும் போது தரம் குறைவதாக அறிய வந்தாலோ ,அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தொடர்ந்து பயிற்சி செல்லும் ஆசிரியர்கள் ஊதியம் கட் செய்யப் படவேண்டும். மாற்றுப் பணி தரப்பட வேண்டும். அங்கும் தரம் முறிந்தால் பணி நீக்கம் ஒன்றுதான் முடிவானது.

     அதே போன்று தரம் குறையும் தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் மூடப்பட வேண்டும் . தரம் நிர்ணயிக்கும் அளவு கோளை கல்வி சிந்தனையாளர்கள் முடிவு செய்ய வேண்டும். அண்மை  கல்வி விரைவில் அமுல் படுத்தப் படவேண்டும். அப்போது தான் மாணவர்கள் அனைவரும் அருகிலே பள்ளிக்கு செல்வர் , அந்த அந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் படிக்கின்றனரா என்ற விபரத்தை கணக்கிட முடியும், பள்ளி செல்லாக் குழந்தைகள் விபரமும் அரசுக்கு கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உதவ முடியும். ஒவ்வரு பள்ளிக்கும் ஒரு ஏரியாவை கொடுத்து , அந்த ஏரியா மாணவர்கள் அனைவரும் அந்தப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என சட்டம் கொண்டுவந்தால் , பள்ளி செல்லாக் குழந்தைகள் விபரம் துல்லியமாக கிடைக்கும்  , கட்டாயக்  கல்வி சட்டமாக்கப்பட்டது நிறைவேறும்.

       எது எப்படியோ  இன்று குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி சட்டம் நிறைவேற்றப்பட்டதே , நம் முன்னேற்றத்திற்கு ஒரு அடித்தளம் ஆகும். கனவு நினைவாகும் வரை கல்வி பணி மற்றும் கல்வி சிந்தனை ஓயாது. ஒன்றுபடுவோம் கல்வி சிந்தனை வெளிப்படுத்துவோம் , வளமான பாரதம் அமைத்திட உதவுவோம். நம் தேசம் நம் கையில்.

Friday, April 2, 2010

பிறக்கும் போதே ...

   ஆக்சிஜன் வாழ்வில் முக்கியமானது. இன்று உலக வெப்பமாதலால் , கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகமாகி நமக்கு பல உபாதைகள் தருவதை பல கட்டுரைகளில் படித்திருப்போம்.  ஆனால் பிறப்பின் போது ஆக்சிஜன் குறைவால் என்ன நிகழும் என்பதை நாம் பார்ப்போம். பிறப்பின் போதே குழந்தைகளை காப்போம்.

     மன வளர்ச்சி  குன்றிய குழந்தைகள் பிறப்பு சதவீதம் , குறை பிரசவத்தால் அதிகரிக்கிறது.   அது மட்டும் அல்ல ,பிரசவத்தின் போது ஏற்படும்  காயங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் உலகில் நூற்றுக்கு பதினைந்து நபர்கள் ஆவார்கள். குறைபிரசவத்தை, நாம் நவீன கருவிகள் கொண்டு பிரச்சனைகளை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தவிர்க்கலாம்  .

     பிரசவத்தின் போது கருப்பை சுருங்கி விரிவதில் பிரச்சனை இருந்தால் , குழந்தை பிறப்பில் பிரச்சனை உருவாகும், அதனால் குழந்தை வெளிவரும் வாயை அகலப்படுத்தப் பயன்படும் ஆயுதம் , குழந்தையின் தலையில் காயம் ஏற்படச் செய்வதால், மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. அதே போல் , குழந்தையின் கழுத்தை, நச்சுக் கொடி சுற்றி இறுக்கும் போது ,குழந்தை சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, ஆக்சிஜன் அளவு குறைவதால், குழந்தையின் மூளை பாதிக்கப்படுகிறது.

      நம் முன்னோர்கள் , குழந்தை பிறந்தவுடன் அதன் கால்களை தலைகிழாக  பிடித்து தூக்கி சிறுது நேரம் வைத்திருப்பார்,  அதனால் குழந்தையின் மூளைக்கு ஆக்சிஜன் சென்று குழந்தை அழத் தொடங்கும் .
  
      கருவில் குழந்தை வளரும்போது , தாய் கவலை படக் கூடாது .மேலும் கோபப்படக் கூடாது .அவ்வாறு கோபப்படும் போது அட்ரினலின் ஹார்மோன் அதிகம் சுரந்து , குழந்தையின் இயக்கம் தடை பட்டு , மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தையின்  நுண்ணறிவு  குறைவு ஏற்பட வாய்ப்பு  உண்டு.

       குழந்தைகளை இன்று அடிக்க கூடாது என்று கூறுவது  ஏனெனில்,நாம் அடிக்கும் போது தெரியாமல் தலையிலோ, முதுகு தண்டுவடப் பகுதியிலோ படுவதால், மூளையின் செரிப்ரேம் என்ற பகுதி பாதிக்கப்பட்டு குழந்தையின்  மன நலம் பாதிக்கப்படலாம்.

      ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுன்ட் சோனோ கிராபி ,ஆம்னியோ செண்டாசிஸ் போன்ற சோதனைகள் மூலம் குழந்தைகள் மனவளர்ச்சி நிலையை கண்டறிந்து, கருசிதைவு செய்து மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதை தவிர்க்கலாம்.

     இக்குழந்தைகளை சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். மதுரையில் ஹெலன் ஹெல்லர் சர்வீஸ் சொசைட்டி பார் தி பிளைண்டு  ,விழியகம் ,விஸ்வநாத புறம், மதுரை 625014 .மற்றும் எம்.எஸ்.செல்ல முத்து ட்ரஸ்ட் ஆண்டு ரிசர்ஸ்  பவுண்டேசன் ,611 ,கே,கே. நகர் ,மதுரை-20.ஆகியவை சிறப்பு பள்ளிகளாக இருக்கின்றனர். விரகனூர் அருகில் ஆர் . சி . பள்ளி ஒன்றும் இயங்குகிறது .

  என் மனைவி இன்று மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு இடுக்கி வைத்து எடுக்கும் போது, தவறி கண்ணில் பட்டு அக் குழைந்தைக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக சொன்னாள் . அதனால் ஏற்பட்ட பதிப்பு இந்த பதிவு ஆகும்.

   வயிற்றில் குழந்தை சுமக்கும் தாய் மார்களே ,நல்ல சத்தான உணவு அருந்துங்கள். அதிர்ச்சியான சம்பவங்கள் , கோபங்களை தவிர்பீர்.மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு மற்றும் மருந்து சாப்பிடுங்கள் . உடல் உபாதைகள் எதுவும் இருப்பின் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ளுங்கள். குழந்தை பிறந்த முதல் முன்றாவது மதத்தில் இருந்து முத்தடுப்பு ஊசி போடுங்கள்.

 குழந்தையை எப்போதும் நல்ல மனநிலையில் , நல்ல குடும்ப சூழலில் ஆரோக்கியமாக வளர்க்கவும். இல்லையெனில் குழந்தை வழிமாறி பாதை மாறுபட்டு , மன நலம் குன்றிய குழந்தையை விட மோசமான நிலைமையில் காண நேரிடும். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் நல்லக் குழந்தைகளே , நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே.

 ஆகவே பிறக்கும் போதே நல்ல குழந்தையாக பிறக்க நாம் பாடுபடுவோம்.