Sunday, January 31, 2010

மதுரை பிளாக்கர் சந்திப்பில் ......

இன்று கருப்பாக பிறந்ததனால் குறைபட்டுக்கொள்ளும் குழந்தைகளுக்கு டாக்டர் ஷாலினியின் பதில்கள் மனதை மாற்றும்  மருந்தாக உதவும் .
  
      மதுரை பிளாக்கர் சந்திப்பில் என்னை கவர்ந்த பதில்.

      இன்று குழந்தைகள் மிகவும் சிவப்பாக இருந்தால் மட்டுமே பள்ளிகளில் பாட்டு , நடனம், பேச்சு போன்ற நிகழ்வுகளுக்கு அணுமதிக்கப்படுகிறார்கள். பொதுவான உண்மை, ஆசிரியர்கள் உணரவேண்டிய கசப்பான மருந்து, இனி இதை படித்து திருந்துங்கள் .

        நம்மை பல ஆண்டுகளாக ஆண்டவர்கள் நிறம் வெளுப்பாக , அதாவது சிவப்பாக இருந்துவந்துள்ளது. ஆரியர்கள் முதல் பிரஞ்சு , போர்த்துகீசியர்கள் ,ஆங்கிலேயர்கள் வரை நம்மை ஆண்டவர்கள்  சிவப்ப்பு , ஆகவே அது ஆளும் வர்க்கத்தை சார்ந்த நிறமாக இருப்பதால், இந்தியர்கள் அனைவரும் சிவப்பாக குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று விரும்ப , அதே தொடர்ந்து சிவப்புதான் சிறந்த நிறம் என்று ஆகி விட்டது. அதுவும் நம் குழந்தைகளுக்கு மனதில் பட்டு தாழ்வு மனபான்மையை ஏற்படுத்திவிட்டது.


      அனால் இன்று அமெரிக்காவின் சூப்பர் பவர் ஆளுநர் ஓபாம என்ற கறுப்பர் வந்தவுடன் என்று பார்பி பொம்மை நிறம் கருப்பாக மாறிவிட்டது , ஓபாமா வின் உடை உலக பேஷன் ஆக மாறி வருகிறது. அன்று அனைவராலும் விரும்பப்பட்ட சிவப்பு நிறம் இன்று கருப்பு நிறமாக மாறியுள்ளது .
       ஆகவே மாணவ செல்வங்களே டாக்டர் கூறுவது போல நிறம் என்று  பார்த்தல் கருப்புதான் நிறமாக கொள்ளவேண்டும் .சிவப்பு என்பது நிற குறைபாடு . ஸ்டார் அந்தஸ்து நிறத்தில் இருந்து வருவது கிடையாது அது நம் செயலில் இருந்து வருவது . பரீட்சை நெருங்குவதால் படிப்பில் கவனம் செலுத்தி , நல்ல மதிப்பெண் பெற்று , தாழ்வு மனப்பான்மை போக்கி , பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் நல்ல பெயர் எடுத்து தரவும்.

மதுரையில் பிளாக்கர்

  மதுரையில் இன்று அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற பிளாக்கர் கூட்டத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை   உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் .

    தருமி பிளாக்கர் என் அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் சாம் ஜார்ஜ் என்பதில் மகிழ்ச்சி . என்னை பார்த்தபின் அவருக்கு அதைவிட சந்தோசம். எனக்கு  வசை பாட ஆள் கிடைத்து விட்டதாக  கூறினார். ஐயா , நீங்கள் திட்டி , திட்டி தீட்டிய வைரம் இது, இன்னும் தீட்டுங்கள், மிக்க மகிழ்ச்சி.தாயின் அரவணைப்பை உணருகின்றேன். என் கல்லூரி ஆசிரியர் சைலஸ் அவர்களை பார்த்து பழைய நிகழ்வுகளை பகிர்ந்ததில் , வயது குறைந்த ஒரு உணர்வு.
       டாக்டர் ஷாலினி மிகவும் அருமையாக குழந்தைகளின் வளர்ப்பை எடுத்துக் கூறினார்  . செக்ஸ் சம்பந்தமான அனைத்து விசயங்களும் பேசப்பட்டன. ஆண் , பெண் சேர்ந்து இருந்ததால் என்னவோ  நிறைய அவரே பேசவேண்டியது ஆகி விட்டது. சுமார் முன்றரை மணி நேரம் உரையாற்றினார். அவருக்கு பிளாக்கர் சார்பாக மீண்டும் நன்றி.
         
         நம் குழந்தைகளுக்கு நம் உடம்பின் உறுப்புகள் கற்றுத்தரும் போது , நம் பாலியல் குறிகளையும் சேர்த்து கற்றுத்தரவும். அது மட்டுமல்லாது , இவ்வுறுப்புக்கள் பிரைவேட் ஆகும் , இதை நீ பிறருக்கு காட்டக் கூடாது. உன் தாய் மட்டுமே அதை தொட உரிமை  உண்டு.
தந்தை கூட தொடஅனுமதி இல்லை. இவ் உடல் கூறு சம்பந்தமாக சந்தேகங்கள் வந்தால் ,
அம்மாவிடம் கேட்கவேண்டும். டாக்டர் கூட தனியாக எந்த பெண்ணையும் சோதனை செய்யமுடியாது, உடன் தாயோ ,செவிலியரோ இறுக்க வேண்டும்.

                   குழந்தைகள் அதிகமாக உறுப்புகள் சம்பந்தமாக பேசினாலோ , அம்மா அந்த அங்கிள் வீட்டுக்கு போக மாட்டேன் என்று கூறினாலோ, அது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக தான் இருக்கும், ஆரம்பத்திலேயே அதை சரிசெய்து விடுங்கள் , இல்லையெனில் அது மன பிரச்னைக்கு கொண்டுசெல்லும் என நிறைய உதாரணங்களுடன் விளக்கினார்.
                    
                   ஆண் , பெண் எந்த குழந்தையாக இருக்கட்டும் செக்ஸ் விசயங்களை, தாய் மட்டும் குழந்தைகளுடன் பேசி அதை சரிசெய்து விடலாம்.  தந்தைக்கு கூட உரிமை இல்லை. பிறருடன் பழகும் போது , தொடாமல் பழகச் சொல்லித்தரவும். அவ்வாறு தொட்டுபேசினால், உடனே அவர்களை திட்டிவிடவும் , முடிந்தால் அடிக்கவும் . என்ன திமிர் பிடித்தவள் என்று கூறினாலும் பரவாயில்லை என அருமையாக விளக்கினார்.
    
                ஞாயரை பயனுள்ளதாக செலவழித்த பெருமை மதுரை பிளாக்கர் நண்பர்களுக்கு சாரும்.          

Saturday, January 30, 2010

படிப்பது ....கடினமாக தெரிவது ஏன்?

படிப்பது என்பது மிகவும் கடினமாக தெரிவது ஏன்?

   ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை ஒரு மதிப்பெண் நோக்கில் வழங்குவதால் , மாணவர்கள் கல்வியின் மீது கொண்டுள்ள ஆர்வம் குறைவதற்கு காரணமாக அமைகிறது.

     முன்பெல்லாம் ஆசிரியர்கள் ஒரு பாடம் கற்றுத்தரும் போது நீதிக் கதைகள் , சுதந்திர போராட்ட வீரர்கள் கதைகள், தமிழ் நாடு அரசியல் தலைவர்கள் பற்றிய செய்திகளை கலந்து , சுவைபட கற்றுத்தருவார்கள்.
    
      ஆனால் இன்று மதிப்பெண் மட்டுமே குறியாக இருக்கும்போது , பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் புரிந்ததோ இல்லையோ , மார்க்கார்டில் மதிப்பெண் மட்டுமே பார்ப்பதால் போதுமென்று , சுவையான உணவாக தரவேண்டிய கல்வியை , கசப்பான செரிக்காத உணவாக திணிக்கிறார்கள்.

      மாணவர்களும்  போட்டியான உலகில் புரிந்தும் , புரியாமலும் அவசர அவசரமாக பயின்று , தேர்வில் வாந்தி எடுத்து விடுகிறார்கள். தேர்வு முடிந்து ஏதாவது சந்தேகம் , அவனை விட இளையவர்கள் கேட்டால் , சொல்ல தெரிவது இல்லை.

       மாணவர்களுக்கு கல்வி ஆயுள் முழுவதும் பயன் தருவதாக அமைய வேண்டும் . மாணவர்களின் அனைத்து திறன்களும் வெளிபடுத்துவதாக கல்வி கற்றுத்தர வேண்டும்.
         மாணவர்கள் புத்தக அறிவு மட்டும் பெற்று இவ்வுலகிற்கு நன்மை செய்து விட முடியாது. மேலும் மாணவன் தன் முழு திறன்களை பெறுவதனால் மட்டுமே, தன் பெற்ற கல்வி அறிவை பயன் படுத்த முடியும். உடல் திறன் வளர்க்க விளையாட வேண்டும். தன் தனித்திறமை வெளிப்பட கலை, பண்பாடு , இலக்கியம் ஆகியவற்றின் மீது ஆர்வம் ஏற்படுத்தி , மாணவனை பங்கு கொள்ள செய்ய வேண்டும்.

          மாணவன் பிற துறைகள் மீது ஆர்வம் ஏற்படுத்துவதன் மூலம் சமுகாத்தின் மீது அக்கறை கொள்ளச்செய்ய முடியும். சமுக அக்கறை கொண்ட கல்விமுறையே , மாணவ நலனுக்கு நல்லதாகும்.  சமுக அக்கறை ஏற்படுத்தும் கல்வியே சிறந்ததாகும்.
   
          ஆகவே, தயவு செய்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமுகத்தின் மீத அக்கறை கொண்டு, மாணவனுக்கு சமுக அக்கறை ஏற்படுத்தும் கல்வியை கொடுக்க உதவ வேண்டும். கல்வி முறையில் மாற்றங்கள் உண்டாக அனைவரும் பாடுபட வேண்டும். வாந்திஎடுக்கும் கல்வி போக்கி, சமுக அவலங்களுக்கு மருந்திடும் கல்வி ஏற்பட்டுத்த வேண்டும்.

Thursday, January 28, 2010

தன்னம்பிக்கை

கீழே விழுந்த குழந்தை
மீண்டும் மீண்டும்
எழுந்து நடந்தது ...

எழுந்தது குழந்தை
மட்டுமல்ல....
நானும் தான்!
--------------------------------------------

பள்ளி சென்று திரும்பிய
குழந்தை வெட்டியது
ஆசிரியர் சொன்னதாக....

வேண்டா அழுக்குகளை
நீக்க ...
நகத்தை வெட்டியது .

சுத்தமானது என்
மன அழுக்கும் !
---------------------------------------
ஆண்டவன் நேரில் வந்து
உண்மை சொல்ல
முடியாததனால் .....

என் குழந்தை வடிவில்
வந்தான் !
.

ஒரு தினமாக மாறிவிடாமல்

      காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று இறந்தார் என்று கூறி  தியாகிகள் தினம் அன்றுதான் என காந்தியின் இறப்பை நம் குழந்தைகளுக்கு ஒ௦ரு தினமாக கொண்டாடாமல், அதன் உண்மையை உணர்த்தும் விதமாக நம் குழந்தைகளுக்கு காந்தி அகிம்சை முறையில் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த கதையை அற்புதமாக  கூறவேண்டும்.

       மங்கள் பாண்டே 1857 தூக்கிலிடப்பட்டு, 1857 நம் சிப்பாய்களின் மதஉணர்வை புண்படுத்தியதால், முதல் சுதந்திர போராட்டமாக , சிப்பாய் கலகம் உருவெடுத்ததில் இருந்து , காந்தியின் நுழைவு கூறி , சத்தியாகிரகம் பலன் எடுத்துரைத்து, 1947  லில் நாம்  சுதந்திரம்   பெற்றது வரை தொகுத்துக் கூறுங்கள் . நம் சுதந்திரத்தின் அருமை நம் குழந்தைகள் உணர்ந்து நம் நாட்டிற்கு நன்மை செய்வர், நல்ல பொறுப்புள்ள குடிமக்களாக உருவாவார்கள்.

         என் குழந்தையை சமீபத்தில் மதுரை காந்தி மீசியத்திற்க்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவள் தன் தாயிடம் பல விசயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டாள் அவள் தற்போது ukg படித்து வருகிறாள் . . .   ஏற்கனவே பள்ளியில் அழைத்து சென்றதால் , அப்பா இங்க இந்த ரூம்ல காந்தி தாத்தா சுட்டு சாகிறப்ப இரத்தம் பட்ட டிரஸ் இருக்கு என்று மழலையில் கூறினால். அங்கு நிறைய அயல் நாட்டினர் வந்திருந்தார்கள் , அவர்கள் காந்தி என்று கூறும்போதேல்லாம் என் குழந்தை மிகவும் மகிழ்ச்சி அடைவது எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

             அதை விட வீட்டிற்க்கு வந்து  இரவு (அவள் எங்களுக்கு தினம் கதை கூறி உறங்கிவிடுவாள் )கதை கூறியது இன்றும் என் நினைவில் நிற்கிறது. இதோ ...

          "நானு , அனுசியா , சௌந்தர்யா, கார்த்தி ஸ்கூல் விட்டு விளையட்டிகிட்டு இருந்தோமா ", "..... அப்போ அனுஷியா வாங்க நாம கடைக்கு போயி வாங்கி சாப்பிடுவோம்னு .... சொன்னா. கார்த்தி காசு இருக்கான்னு கேட்டான். இருக்கு இருக்கு வா போவோம்  ன்னு குத்திகிட்டு போனா... "
        "நாங்க எல்லாரும் கடைக்கு போனோம் ... லட்டு சௌந்தர்யா கேட்டா..அனுசியா எல்லாருக்கும் லட்டு எடுத்துக் கொடுத்தா.... எல்லாரும் நிறையா லட்டு சாப்பிட்டோம் .... கடைகாரர் திரும்புறதுக்குள்ள...வா எல்லாரும்   ஓடிடுவோம்ம் ன்னு சொல்லி ஓடினா .... நாங்க என்ன செஞ்சோம்னா ...."

"சொல்லு" இது என் மனைவியின் குரல் ..

"அப்புறம் கடிகார அண்ணே பிடிச்சு திருடிட்டு போறியா நீ ....எங்கள பிடிச்சு ...."

"பிடிச்சு உதச்சாரு ..." மீண்டும் என் மனைவி .

"இல்லை ,இல்லை சாமி கண்ணு குத்திடும் ...அப்படிதானே பயமுறுத்தினார் ..."
இது நான் .

" இல்லப்பா.. இது காந்தி படத்து முன்னால வச்சு செஞ்ச லட்டு , பொய் சொல்ல கூடாது... காந்தி கொட்ச்சுகிருவார்னு...சொன்னார் "

 "அப்படியா" ...இருவரும் சிரிப்பு கலந்த ஆச்சரியத்துடன் .

"அனுஷியா வீட்டில போயி காசு எடுத்து கொடுத்தா...தெரியும்மா ...அது னால நாம பொய் பேசக் கூடாது , திருடக்கூடாது   புரியுதா ... காந்திக்கு இதெல்லாம் பிடிக்காது ..."


அன்று காந்தி வரலாறு என் குழந்தையின் சிந்தனையில் பதித்த பதிவுகள் ஏற்படுத்திய மாற்றம் எல்லாருக்கும் ஏற்பட நாம் நம் தேசத்தலைவர்கள் வரலாற்றை எடுத்துக் கூறுவோம்.

   காந்தி இறப்பு ஒரு தினமாக மாறிவிடாமல் , தினம் தினம் நம் குழந்தைகள் வாழ்வில் நல்ல எண்ணத்தை  ஏற்படுத்தும் தினமாக உருவாக்குவோம்.

Wednesday, January 27, 2010

குழந்தைகள் வளர்ப்பு

       இன்று குழந்தைகள் வளர்ப்பு மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.
   நாம் குழந்தைகளுக்கு எதிர் மறையான சிந்தனைகளை நம்மை அறியாமலே கற்றுத்தருகிறோம்.
உதாரணத்திற்கு திருடாதே, பொய் பேசாதே , தள்ளாதே ,கிள்ளாதே,டிவி பார்க்காதே....
இவ்வாறு பல எதிர்மறை சிந்தனைகளை நாம் நம் குழந்தைகளுக்கு விதைக்கிறோம்.
             
                நம் மனித மேம்பாட்டுத் துறை அமைச்சர் சமீபத்தில் கூறியதை நினைவு படுத்தக் கடமைப்பட்டுள்ளேன் . ஒரு இலட்சம் குழந்தைகள் இடைநிற்றல் நிலையில் உள்ளனர்.

             அதாவது பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதற்கான காரணக்களை நாம் நம் கல்வி முறை சரியில்லை என்று குறை கூறும் முன்னர்
61  வது குடியரசு கொண்டாடும் இவ்வேளையில் நம் அடிப்படை உரிமைகளை தெரிந்து இருப்பது போன்று , நம் அடிப்படை கடமைகளை அவசியம் பின்பற்றவேண்டும்.

           2002 ஆம் ஆண்டு ,86 வது சட்டத்திருத்தத்தின் படி 6 வயது முதல் 14 வயது வரை நம் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கவேண்டும். நாம் நம் வீட்டுக்கு அருகே பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை முறை பள்ளிக்கு அனுப்ப சொல்லி எடுத்துக் கூறியுள்ளோம். இக் குடியரசு தினத்திலாவது முயற்சி செய்து பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்போம் .
         
          "ஒரு பொது நல அரசு , ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க வகுக்கும் திட்டங்கள் அனைத்துகே வளர்ச்சித் திட்டங்கள் தான். கல்வி கூட நேரடியாகப் பார்த்தால் வளர்ச்சிப்பணியில் வராது. ஆனால் , மனிதனின் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் , அதுவும் வளர்ச்சத்திட்டமே!....இலவச டிவி த்திட்டமும் ...மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் திட்டம்.. ''தமிழக  உயர் கல்வி துறை அமைச்சர் பதில் .(27 .1.2010 ஆனந்த விகடன் )

    அதே இதழில் நம் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் "இன்று கல்வித்துறை பணம் கறக்கும் இயந்திரமாகவோ ,பணம் விழுங்கும் திமிங்கலமாகவோ மாறியிருக்கிறது."
     

        இது தான் நம் கல்வி நிலைமை ,இது இப்படி இருக்கட்டும் இக்குடியரசில் நாம் சபதம் எடுப்போம். நம் குழந்தைகளை கல்வி கற்க   முயற்சி மேற்கொள்வோம். இடை நிற்றல் தவிர்த்து அனைத்துக் குழந்தைகளும் பள்ளி செல்ல நம் குறைகளை தவிர்ப்போம்,
            நம் குழந்தைகளுக்கு நேர்மறைச் சிந்தனைகளை வளர்ப்போம். உண்மை பேசு , நம் பொருளை பத்திரப் படுத்துவோம், படித்தபின் டிவி பார்ப்போம், விளையாட்டும் போது கவனமாக இருப்போம் என்பது போன்ற நேர்மறைச் சொற்களை நம் குழந்தைகளுக்கு விதைத்து தன்னம்பிக்கையை வளர்ப்போம். இச் சிந்தனைகள் நம் குழந்தைகளை தானகேவே பள்ளிக்கு அழைத்துச் செல்லும்.
   

Saturday, January 23, 2010

காதல்

காதல் என்பது உணர்வு
மனம் உரு மாறி
உணர்வை உயிராக்கி
உறவாக்கும் உணர்ச்சி
என்றுதான் நினைத்தேன்

உன் தங்கை என் கை
தொட்டப்போதுதான் 
உணர்ந்தேன் .....
காதல்.... 
மனசு சம்பந்தப்பட்டதல்ல,
உடம்பும் சம்பந்தப்பட்டது .

உன் பார்வையின் உக்கிரம்
என் தோல்  கருக்கியபோது
வெடுக்கென என் கை தட்டி
உன் தங்கையை கூட்டிச்
சென்றபோது உணர்ந்தேன்

காதல் ...
மனசு மட்டும் அல்ல
உடம்பும் சம்பந்தப்பட்டது.

Friday, January 22, 2010

என் கல்லூரி

என் கல்லூரி

மொட்டான என்னை
மணம் வீசும்  மலராக்கியது!

தட்டுத்தடுமாறி தள்ளாடிய
எனக்கு தன்னம்பிக்கை தந்தது!

வாழ்க்கையின் வசந்தத்தை
எனக்கு தேடித்தந்தது!

என்றும் துணையாக
தோல்வியிலும்,வெற்றியிலும்
தோள்கொடுக்கும் தோழனை  தந்தது!

பெண்ணின் பெருமை உணர்த்தி
மதுரை மண்ணின் மகிமை  உணர்த்தியது    !


வாழ்வை உருவாக்கித்தந்த உனக்கு...
என் வாழ்வு என்றும் கடமைப்பட்டது.

Thursday, January 21, 2010

உயிரோட்டமுள்ள சொல்

சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
யானை பிளிரும்
நாய் குரைக்கும்
நரி ஊளையிடும்
காகம் கரையும்
குழந்தை மழலை பேசும்
என ஒலிகளை
பகுத்து பார்த்து 
உயிரோட்டமுள்ள
சொல்லை தந்த
மனிதா ....
உயிர் எடுக்கும்
சாதி,மதம்
என்ற சொல்லை
மனித குருதி சிந்தி
ஓலமிடுவான் ...
என முன்பே அறிந்து
பகுத்துப் படைத்தாயா ...?

இதுவா பகுத்தறிவு ...?
பெரியார் சொல் படி
பகுத்தறிவு பெற்று
சிறந்து வாழ் !
 

Wednesday, January 20, 2010

பகுத்தறிவு

பால் நிலவு
பசும் புல்
பால் மாடு
பச்சை குழந்தை
பசியுற்ற புலி
பாயும் சிறுத்தை
தாவும் குரங்கு
நண்பகல் நடுநிசி
நண்பன் பகைவன்
நல்லது கெட்டது
என பகுத்துப் 
பார்க்கும்  மானிடா ....
சமுகத்தில் மட்டும்
எந்த  நலனுக்கும்  இன்றி
சாதி மத வேறுபடுத்தி
பகுத்தறிவு மறந்ததேன்?
தாவும் குரங்காக
மனம் இருப்பதாலா?

இன்று புதிதாய்
சீரியலில் சீல்
பிடித்த  மனமானதாலா 
பகுத்தறிவு மறந்தாய்? 
சிக்கித் தவிக்குது
சிறுசும் பெருசும்
சிரழியும் சமுகம்
நல்ல குடும்பம்
சரிவது புரியாம?

Tuesday, January 19, 2010

யார் கேட்பா ?

எனக்கு அந்த டாக்டர ரெம்ப பிடிக்கும்
தண்ணி நிறைய குடிக்கச் சொல்லிருக்கரே
இத புரியாம திட்டுறா எம்பொண்டாட்டி
நான் எவ்வள ஸ்டடியா கடைபிடிக்கிறேன்

                    மரம்

எனக்கு பேய் பிடித்தது என
வெட்டிவிட்டார்கள் மனித பேய்கள்
சுற்றுச் சுழல் மாசுப் பேய் பிடித்து
வீழ்த்துவது புரியாமல் ....   


காட்டு மேட்டுல
கம்மாக் கரையில
காணாமே காணாம்
மழைக்கும் வெயிலுக்கும்
சின்ன வயசில
ஒதுங்குன மரத்தக்
காணாமே காணாம்

பாவி மக்க
மரத்த வெட்டி
வயல  போக்கி
மனையாக்கி ...
மண்ணா போனாங்க
மாரியாத்தா,காளியாத்தா
கோவிலுமுள்ள காணாம்போச்சு
கடவுளே இவங்கள
யார் கேட்பா ?    

Saturday, January 16, 2010

மனதை அறி!

"மனம் போன  போக்கெல்லாம் போக வேண்டாம்" -உலக நாதன்.

"உன்னையே நீ அறிவாய்"-சாக்ரடீஸ்.

"மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்"-திருமூலர்.


        மனம் மனதை அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
 
        ஒவ்வொரு பொருட்களும் அணுக்களால் ஆனவை. அவை நடுவில் நியூட்ரான் ,புரோட்டான் நேர் மின் சுமைக் கொண்டு தன்னை சுற்றி எலக்ட்ரான் என்ற எதிர் மின் அணுக்களால் பிணைக்கப்பட்டுள்ளன. நேர், எதிர் சுமைத் துகள்கள் சமம் பெற்று நிலைத்தன்மை பெற்றுள்ளன .  
 
      இந்த அறிவியல் உண்மையிலிருந்து மனதை விளக்குவோம். இவ்வாறு மனம் நிலைப்புத் தன்மை  கொண்ட அணு நிலையில் இருந்தால் , கெட்டுப்போகும்.  எந்த  ஒரு பொருளும் அப்படியே இருந்தால் கெட்டுபோகும் , அதேபோலத்தான் மனதும். 
      
       நேர், எதிர் மின் சுமைகள் சமமில்லை எனில் அவை தேவையான துகளைபெற முயன்று இயக்க முயற்சி கொள்கிறது.  இந்த மனநிலை தான் நமக்குத் தேவை . மனம் இயங்க வேண்டும்.  நல்ல விசயங்களை நிலையாய் கொண்டு, எதிர் விஷயமான தீய பழக்கம் நீங்க மனம் இவ்வுலக்கில் நல்லது , கெட்டதுகளில் நீந்தி நல்ல போன்ற விசயங்களை தேடிபிடித்து நிலைப்பு அத்தன்மை பெற வேண்டும்.
                           
          நம் கல்வி முறை மாணவனுக்கு நல்லது , கெட்டது உணர்த்தும் விதமாக , வானின் சுயத்தை  உணர்ந்து செயல் படும் தன்மை உடையதாக அமைந்து, அவனின் மனதை இயங்கச் செய்து , தன்னிலை உணரச் செய்தால் , நம் நாடு வளர்ச்சி  அடைந்து , நம் சமுகம் தீவிரவாதம் தவிர்த்து , அமைதியாக திகழும். ஒவ்வொரு வீடும் சொர்க்கமாக திகழும் . 
 
 
           நம் கல்வி முறை மதிப்பெண்  அடிப்படையில் அமைந்து, இன்று நன்னெறி ,நீதி போதனை, விளையாட்டு போன்ற அடிப்படை விசயங்களை மறந்து போய் உள்ளது. அவை  மீண்டும் நடை முறை பட்டுத்தப்பட்டு, மாணவர்களை நெறிபடுத்த வேண்டும்.   கனவுகளுடன் மாணவர்களை போன்று எழுதும் என் எழுத்து, பெறோர்களை போய் சேர்ந்து நினைவாக்கதா ?   
           
        ஆசிரியர்களே மதிப்பெண் தேவை தான் ஆனாலும் தன்னை அறியா மாணவனால் அறிவு பெருகி பயன் என்ன ?
      
          வள்ளலார் போன்று கனவுகளுடன்....
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே- ஒரு
 தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே "  . 

கல்வி

கல்வி ஆயுசுக்கும்
துணை !
வேண்டியது கொடுத்து
வேண்டாதது நீக்கி
அள்ளித் தரும் புகழ் !

என்றும் செய்யும்
இளமையில் கல்வி
எளிமையில் புதுமை
புதுமையில் இளமை!
இளமை  முதுமையிலும்
முதுமையில் வளமை!

வாழ்வில் கல்வி
காலத்துக்கும்....
பொருள் தந்து
அறம் பெருக்கி
புகழ் சேர்த்து
பிறப்பை முழுதாக்கி
மோட்சம் தந்து
ஏழு பிறப்பிலும் தொடர்ந்து...
துன்பம் போக்கி
இன்பம் வரும்
வாழ்வு தருமே!
   

Thursday, January 14, 2010

புத்தகம்

புத்தகம் புதுமை
செய்யும்!
புரட்டுவது பக்கத்தை
அல்ல மனத்தை !

பத்திரபடுத்து புத்தகத்தை
பத்துமாதம் சுமந்து
பெற்ற உன்னை
பத்திரமாத்து தங்கமாக்கும்!

புத்தகம் திறககும்
போதெல்லாம்...
திறக்கும் உன்
மனக் கதவு!

கடலெனக் கிடக்கும்
கிடைக்கும் புத்தகத்தை
கிடக்கும் மிடமெல்லாம்
இடைவிடாது படி
பிடித்த நேரமெல்லாம்
படி உன்
நேரம் சரியாகும்!


பரப்பிக் கிடக்கும்
புத்தகம்
விரிக்கும் அறிவை!
உறங்கி கிடக்கும்
உயர்வை உசிப்பிவிடும்!

புத்தகம் ஆக்கும்
புத்தனாய் உன்னை!
ஏற்றம் கொடுக்கும்
மனச்
சீற்றம் குறைக்கும்!
மற்றம் தந்து
மனிதனாக்கும்!

மனிதனை
மாமனிதனாக்கும்!
மறுக்காமல் மறக்காமல்
தேடித் தேடி
பிடி படி !
புத்தகம் புத்துயிர்
தரும் தவறாமல்
படி !

Wednesday, January 13, 2010

மாணவர்களுக்கு தண்டனை

குழந்தைகள் தினத்தை
கொண்டாடுங்கள் !
வருடம் தோறும்
தினத்தை  அல்லவா
கொண்டாடுகிறீர்கள்!
குழந்தைகள் மனதை அல்ல!
என்ற கவிகோ அப்துல்ரஹ்மான் வரிகளின் முக்கியத்தை உணரும்  தருணம் வந்துவிட்டது!

                சமீபத்தில் கல்லூரி மாணவன் தன்தாயை கொன்ற   செய்தி கேட்டு பதறாதவர்கள் யாரும் இல்ல.  ஏன் மாணவர்கள் மனம் மாறிவருகிறது? தவறான கருத்துக்கள் முளைத்து மூளை மழுங்கி தவறான முடிவுகளுக்கு அடிமை ஆகிறார்கள்?            


         குழந்தைகள் அறிவுபூர்வகமாக சிந்திக்கக்கூடியவர்கள். நாம் சிந்திக்காதா  விஷயங்களை வெளிப்படுத்துபவர்கள். மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தனிமையாக இனிமையை ரசிப்பவர்கள். நாம் நம் கனவுகளை  அவர்கள் மீது திணிப்பதனால் அவர்களின் இயற்கையான புத்திசாலிதனத்தை இழந்து , தன் தனித்தன்மையை இழந்து தவிக்கிறார்கள்.

             நம்முடைய வளர்ப்பு      அவர்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் பாதிப்பதாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
                                                                                                                                                                        மனணம் செய்யும்   தன்மையில்லா ,சுதந்திரமான சுவையான கல்விமுறையை நாம் தரவேண்டும்.

                                                                                                                                             இயற்கையோடு இணைந்த கல்வியை நாம் தர முயற்சிக்க வேண்டும். அதே போல நாம் பள்ளிக் கூடங்களையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தற்போது பள்ளிகள் அரசு விரும்பும் படியான மாணவர்களைத்தான் நம் ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள்.

                    இன்று மாணவர்களுக்கு தண்டனை தருவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க பயப்படுகிறார்கள் ,கண்டிக்கப் பயப்படுகிறார்கள். அரசு மாணவர்களுக்கு தண்டனை தரக்கூடாது என்று விளம்பர படுத்திய உடன் மாணவர்கள் அச்சட்டத்தை வைத்து ,ஆசிரியர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளனர். பெற்றோர்களும் ஒரே குழந்தை என்பதால் அதற்கு துணை  போகிறார்கள்.  இத்தவறை அரசும் உணர்ந்து ஆசிரியர்களுக்கு மாணவர்களை பக்குவபடுத்த  தண்டிக்கலாம் என்று கூற முன்வரவேண்டும்.

         சமிபத்தில் மதுரையை சேர்ந்த பள்ளி ஆசிரியர்  தொடுக்கப்பட்ட வழக்கில் ,மாணவரின் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளது.   ஆசிரியர்களுக்கும் இப் பக்குவம் வர வேண்டும். குழந்தைகளை அவர்களின் சுதந்தர உணர்வு  பாதிக்காமல் ,மாணவன் தன்னையே உணர்ந்து செயல்படும் விதமாக கல்வி கற்றுத்தர வேண்டும்.
                                                                                                                                                         புத்தகம் வாசிக்க கற்றுத்தர வேண்டும் ,பாடபுத்தகம் தவிர்த்து நிறைய வாசித்து பயன் பெறச் செய்ய வேண்டும்.  
                             இன்று   செயல்வழிக்கற்றல் முறையில் 'புத்தக பூங்கொத்து 'மூலமாக மாணவர்களுக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்க கொடுத்துள்ளார்கள், ஆசிரியர்கள் முறையாக அவற்றை பயன்படுத்தி மாணவர்கள் எதிகாலம் சிறக்க உதவ வேண்டும் . சமச்சீர் கல்வியில் இதை அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் அமுல்படுத்த வேண்டும்.

              பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும என்பதற்காக அவர்களுக்கு தனி டியுசன் , தனி அறை, என தன்னிடம் இருந்து தனிமை படுத்தி , தனித்து நிற்பதால் , அன்பு தவிர்க்கப்படுவதாக தவறாக உணர்ந்து , மன நோயாளியாகி ,முடிவில் மன நோயாளியாகி  தவறான செயலில் இறங்கி தாயையே கொல்லும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் .

                 குழந்தையின் இயல்பு பாதிக்காமல், அன்புடன் அரவணைத்து , திணிக்காத இனிக்கும் கல்வியினை தந்து , அவனின் தன் நிலை உணர்ந்து செயல் பட நாம் உதவ வேண்டும்.       

பொங்கலோ பொங்கல்!

கனவுகள் நினைவுகள்
ஆக்கி
அறிவு  பெருக்கி
ஆகட்டும் பொங்கல்!


சுவற்றில் வண்ணமிட்டு
வரும் பொங்கலே
மனித எண்ணங்களை
வண்ணமாக்கி  வா ! வா!


பழையன போக்கி
புதியன புகுத்தும்
போகியே ....
பொசுக்கி போ!
மனித அழுக்குகளை!
கொளுத்திவிட்டு போ
மதம் பிடித்த மனித
போக்கை!

மண்ணை வளப்படுத்த
விண்ணை விடியலாய்
மழையை நினைத்து
உழைப்பை உரமாக்கி
விளைந்த நெல்லை
உனக்கிட்டு மகிழும்      
மனித வாழ்வில் ....
வசதி கூ ட்டி
வதந்தி போக்கி
வன்முறை நீக்கி
மூடனமபிககை முடக்கி
முதியவர்  உறவைபேணி
முடிந்தவரை இயற்க்கை காத்து
இவர்கள் வாழ்வை காத்து
குறைகள் நீக்கி
நிறைகள் தந்து
நிறைவாய் பொங்கு
பொங்கலோ பொங்கல்!
  

கொடுத்த வாக்குறுதி


" தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு  கொடுத்த வாக்குறுதியில், மரம் வளர்க்கும் திட்டம் ஒன்று .அதனை தொடர்ந்து  இவ்விழா நடைபெறுகிறது. மதுரை நகரை பசுமை மிகுந்த நகராக மாற்றவேண்டும் என்பது தான் எனது லெட்சியம்.  மதுரை நகரில் 18 இடங்களில்  இலவச நவீன கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இது போன்ற மக்கள் சேவைகளையே  செய்ய விரும்புகிறேன். "    இது மதுரை நகரை பசுமையாக்க வந்த நாயகர் உரை. வான் மலைக்கு உதவும் நாயகரின் வாக்கு.
        மதுரை தெப்பக்குளம் பகுதியில் மத்திய இரசாயன உர அமைச்சர் மு.க. அழகிரி அவரகள் மரக் கன்றுகள் நடும்  திட்டத்தை தொடக்கி வைத்த போது ஆற்றிய உரை. மதுரையில் சுமார் 18 இடங்களில் மரக்கன்றுகளை தன் துணைவியுடன் நட்டார். பள்ளிக்குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் தரப்பட்டன.
        "சார் , மரக்கன்று நட்டா மட்டும் போதாது , அதை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் காதுகளில் படும்படி சொல்லுவது புரிகிறது . "
         "ஹலோ ,...நாங்க மதுரைகாரங்க ...சொன்ன சொல் தவறமாட்டோம். இன்றும் மதுரை சிட்டி கோர்ட்அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு அண்ணே சொன்னமாதிரி தினமும் மாலை போடுகிறார் ... தெரியும்மில்லை... மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் ... ஊத்துவோம்."
       
"மதுரைய சிங்கப்பூரா மாத்தி காட்றோம்...ன்னு சொல்லிற எம்.பி. அல்ல " அண்ணே வார்த்தை . ஆம் சொல்லுறதை செய்வோம் ... செய்றதையும் சொல்லிகட்டுவோம்"

      மதுரையில் அலங்க்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கப்போவுது வாங்க. உங்க ஊருக்கும் மரக்கன்று வாங்கிட்டு  போங்க .    

Tuesday, January 12, 2010

"பிறந்தவனல்ல .... உதித்தவன் ."

மதுரை பற்றி செய்தி சொல்லி நிறைய நாள் ஆகி விட்டது.
          " சார் மதுரை வாங்க ... பொங்கலுக்கு கூப்பிடல்ல .... வரும் ஜனவரி 30௦ வாங்க .!"                            "என்ன அண்ணே விசேசம் ..." என இழுக்காதிங்க . "எல்லாம் ' அண்ணே விசேசம் தான்' " .
          " ஜனவரி ௦ 30௦  காந்தி இறந்தநாள் , தியாகிகள் தினம் ....  கரெக்டா அண்ணே "
          " விளக்கெண்ணை ..... யோவ் ... புரியல அதன் சொன்னேன்ல்ல .... எங்க அண்ணே விசேசம்..ன்னு "
          "   ஆ..அ புரிந்தது ...".
          " யோவ் அ.. ஆ ... ன்னே சொல்லு " .
          " அவரும் தியாகம் செய்துதானே வந்தாரு "
          " 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து ... "
         " யோவ் மரியாத ... அப்புறம் மதுரை வர மாட்ட .."
          " மதுரைக்காரரே .... அவசர படாதிக ... 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து சில்லறை மாற்றினால் சி திரி வரிசைக்கு பேருந்துல ... புது நோட்ட .... கேட்கிறாங்க .... அத பத்தி சொல்லுறதுக்குள்ள ... அவசரப்படுறேங்களே ...இப்ப சொல்லுங்க ..."
             " நீயும் தெக்கதிபயலுக ... மாதிரி வெவரமா தான் இருக்க ... "
             " அப்ப திருவிழா தான்னு சொல்லு ... இலவச வேட்டி சேலை ... தையல் மிஷின் .. சைக்கிள் , முன்று சக்கர வண்டி , கலிபர் என ... மதுர கார பயலுக நீங்க பயன் அடைய போறிங்க ..."
              " ஆமா.... ஆமாம் ... இந்த வருடம் அண்ணன் பிறந்த நாளில் இந்த சலுகைகளுடன் ... ஐ.நா . செய்ய முடியாத ஒன்றை செய்ய போறோம் ..."
             " அப்படி என்ன புதுமை .... "
           " அண்ணன் பிறந்தநாளில் புவி சூட்டை குறைக்கும் விதமாக மதுரையில் எழு லெட்சம் மரக்கன்றுகள் கழக கண்மணிகள் நடப்போறோம் ... உங்களுக்கு தேவைன்னா ... வந்து மரக்கன்று வாங்கிகங்க ..." "சரி அண்ணே பிறந்த நாளில் புது வசன விளம்பரம் எது ?...?"
   "பிறந்தவனல்ல .... உதித்தவன் ." 
  "சரி ... அவசியம் வந்துவிடுகிறேன் "
  " மதுரை பற்றி புது தகவலுடன் அடுத்த வாரம் வருகிறேன் ."  

Monday, January 11, 2010

சந்தேகம்!

என்
தேகம் சுடுகிறது
உன்
சந்தேகப் பார்வையால் !

தேகம் இணைந்ததால் 
பிறந்ததோ ...
சந்தேகம்!

உயிரோடு உறவாடி
என் உயிரானவளே !
உணர்வுகளோடு உரசி
உயிர் எடுப்பவளே..
எப்போது பிடித்தது
இந்த தோசம்
போனது சந்தோசம்
இருவருக்கும் !உணர்வுகளை உசுப்பி
உரிமைகளை உதறி
உயிர்களை உறிஞ்சும்
ஊதாரி பேயே
போய்விடு ! மாண்டிடு !
உன்னை கொல்ல
ஒரு சுனாமி வராதா!

எத்தனை குடும்பங்கள்
எதுவுமில்லா பிரச்னைக்கு
எத்தனை இரவுகள்
பகலாய் பாழாய்
போனச் சண்டையில் !
பால் இருந்தும்
பாழம் இருந்தும்
பட்டினியில் ...
சத்தில்லா சச்சரவுகள்
சாவுக்கு வழிவகுத்தன !
வாழ்விழந்த பிஞ்சுகள்
எத்தனை எத்தனையோ!
சந்தேகம் வலுத்ததால்
தன் தேகத்தேயே
எரித்து மாண்டவர்கள்
எத்தனை எத்தனையோ!

இக் கொடுமை
இனி வேண்டாம் !
இனிக்கட்டும் வாழ்வு !
இந்த பொங்கல்
மனச் சங்கடத்தை
மாய்த்து
அனைத்துக் குடும்பத்திலும்
சந்தோசத்தை விதைத்து
சந்தேகத்தை புதைகட்டும் !

    ( சந்தேகத்தால் தன் மனைவியை இழந்த என் நண்பனுக்காக)

Saturday, January 9, 2010

என் நேசிப்பு

உந்தன் நடை
சுண்டி இழுக்கிறது !
உன்னை பின்பற்ற
துடிக்கிறது !
எத்தனிபேர் தொடர்தாலும்
என்னை போல் உன்னை
ரசித்தவனும் மில்லை
நேசிப்பவனும் எவனுமில்லை !

கட்டிலில் உன்னை
புரட்டி புரட்டி
ரசிக்கச் செய்தாய் !
உந்தன் கவர்ச்சியில்
விடிந்தது கூட
தெரியவில்லை !

அந்த எலவ
எத்தனை தடவதான்
படிப்பீங்க !
விடிந்து போச்சு
தூக்கி போட்டு தூங்குங்க
என் மனைவி
குரல் கேட்டு
உன்னை என் நெஞ்சோடு
வைத்து உறங்கினேன்!


நீங்களும் வாசித்து
பாருங்கள் !
என் நேசிப்பு
புரியும் !
காதலியின் முத்தத்தை
காட்டிலும் இனிக்கும் !   
மனைவியின் மந்திரத்தை
மட்டுபடுத்தி
மதி மயக்கும் மாது
இந்த வாசிப்பு!
 

சமச்சீர் கல்வி

"சமச்சீர்  கல்வி தமிழ் வழிக்கல்விக்கு எதிரானது " என்று சட்டசபையில் அ .தி. மு.க வெளி நடப்பு செய்திருப்பது, சமச்சீர் கல்விக்கு எதிரானது அல்ல.அதில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்து உலகத் தமிழ் மாநாட்டு நடக்கும் இவ்வேளையில் , தெளிவான கருத்துக்களுடன் சமச்சீர்க் கல்வி கொண்டுவர வேண்டும்.
            தாய் மொழியில் தான் பாடங்கள் நடத்த வேண்டும் . 2005 தேசிய கல்வி கொள்கை தாய் மொழி வழியாக சுற்றுபுறம் சார்ந்த அறிவு பெறுவது முலம் அறிவியல் அறிவை வளர்க்க முடியும் என வலியுறுத்துகிறது.
            மாணவன் தாய் மொழியில் மூலமாக கல்வி கற்பதன் வாயிலாக  தெளிவான சிந்தனை பெற்று , தன் அறிவை வளப்படுத்த முடியும்.  அதற்காக ஆங்கிலம் வேண்டாம் என்று அர்த்தமல்ல . ஆங்கிலம் ஒரு உலக தொடர்பு மொழியாக இருப்பதால் , அவசியம் தேவை. இத்தொடர்பிர்க்காக , தமிழை ஒரு மொழிப் பாடமாக மட்டுமே படிப்பது , அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆங்கில பள்ளிகளாக மாற்ற வழிவகுத்திடும்.
நாளடைவில் அரசு பள்ளிகளும் ஆங்கில மொழி வழிக் கல்வியை தொடங்கினால் தான் அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு வேலை என்ற நிலை வந்துவிடும்.
              தயவு செய்து அரசு ஒரு தெளிவான கொள்கை கொண்டு சமச்சீர் கல்வி முறையினை அமுல்படுத்த வேண்டும் என்ற வாதத்தை நினைவில் கொண்டு செயல் பட   தமிழக மக்கள் என்றும் ஆதரவு தருவார்கள் .
             சமச்சீர் கல்வி முறை இம்மாதிரியான இடர்பாடுகளை தவிர்த்து , முழுமையாக நிறைவேற்றி , ஏழை எளியவர்களின் கனவை நினைவாக்க வேண்டும்.  

கல்விகல்வி  உன்
நிழல் போல்
தொடரும் கடவுள்!

கல்வி உன்
அருகிலுள்ள நண்பன்
நல்லது கெட்டது
எடுத்து சொல்லும் !

மிருகமான மனத்தை
மிருதுவாக்கி  உன்
இதயக்கதவை திறக்கும் !
கல்வி உன்னை
உன்னதமாக்கி உயர்த்தும் !

காடு மேடு அலைந்து 
ஆடு மாடு மேய்ப்பது 
மறுத்து , தடுத்து 
ஓடி வா! ஓடி வா !
கல்வி  கற்க 
பள்ளிக் கதவை 
திறந்து வா!திறந்து வா !
திறக்கும் உன் 
வாழ்க்கை கதவு!

Friday, January 8, 2010

ஜனநாயகம்

இந்த வாரம் குமுதத்தில் 'சொல்லு, லொள்ளு, ஜொள்ளு ' பகுதியில் "தேர்தல் கமிசன் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது "
என்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா.

"75 சதவீதம் அட்டெண்டன்ஸ் இருந்தால்  எங்களை தேர்வு எழத அனுமதிக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வராமல் எம். பி.க்கள் மட்டம் போடுகின்றனர். இதை  தடுக்க என்ன வழி? " 
 
    இன்று மாணவர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். இன்றைய கல்வி   முறை  மாணவர்களுக்கு சிந்திக்கும் திறனை வளர்த்துள்ளன. அரசியல் தலைவர்கள் இதை உணர்ந்து செயல்படும் நேரம் வெகு தொலைவில் இல்லை.
இடை தேர்தல் போல் பணம் கொடுத்து பதவி வாங்கும் உறுப்பினர்கள் எப்படி மன்றத்திற்கு  செல்வார்கள்.
           ஜனங்கள் பணம் வாங்கியதால்,  ஜனநாயகம் செத்துவிடவில்லை. நீங்கள் அறுவடை செய்யவில்லை , விதைத்துள்ளீர்கள் ,ஜனநாயகத்தின் உண்மை, மரமாய் முளைக்கும் , வரமாய் இருந்து ,மாய்க்கும் .
            18 வயதில் ஒட்டு போட்டும் உரிமை இருந்தாலும், இன்று நான்காம்
 வகுப்பில் ஊராட்சி மன்றம் ,மாநகராட்சி போன்ற பாடங்கள் இருப்பினும் , மாணவர்கள் முன்று,நான்காம் வகுப்பில் ஓட்டு போடுவது நமது கடமை, கடமையை செய்ய யாருடனும் சேர்ந்து பணம் கொடுக்கவோ ,வாங்கவோ கூடாது என அறிவுறுத்தும் விதமாக பாடம் அமைய வேண்டும். சமச்சீர் கல்வி இதை நினைவில் நிறுத்தினால்
தேர்தல் நேரத்தில் குடும்பத்தில் பணம் கொடுத்தாலும் அது தவறு என இளம் தளிர் நமக்கு பாடம் கற்றுத்தரும். 
                கல்லூரியில்  கேட்கும் இம்மாதிரியான வினாக்கள் , வீட்டில் கேட்கப்பட்டு   ஜனநாயகம் மலர்ந்து , நல்ல ஆட்சி மலரும்.               

Thursday, January 7, 2010

பொங்கல்

பொங்கிவரும் பொங்கல்
பொருகச் செய்யும்
வாழ்க்கை வசதியை !
இனிக்கச் செய்யும் 
வாழ்வை !

வாசலில் இடும் வாழை 
வளப்படுத்தும் வாழ்வை !
பொங்கல் சட்டியில்
சுற்றி இருக்கும்  மஞ்சள்
வாழ்வில் உண்டாக்கும்
மங்களம் !

உழவன் வாழ்வில்
ஒளி உண்டாக்கும் 
ஒளி தந்த கடவுள்
சூரியனுக்கு நன்றி
கூறும் நாள்!

பொங்கல் பொசுக்கட்டும்
பெருகி வரும் சூட்டை!
உலக சூட்டை உணர்த்தி
மக்களை விழிப்புறச்
செய்யட்டும்!

வீதி எங்கும் விரிந்து 
பசுங் கூட்டு வாயுவின் 
வன்மை விளக்கி 
உண்மை உணர்த்தி 
பொங்கட்டும் பொங்கல்!

இயற்க்கை காத்து
இனிமை நிலைக்க
வாழ்வில்
இனிப்பு கூட்டி
இனிப்பாய் பொங்கட்டும் !

Wednesday, January 6, 2010

என் கவிதை

நான் நினைப்ப தெல்லாம்
கவிதை ஆவதில்லை !
நான் வடித்த கவிதை
நம்பும்படி இல்லை!
நான் நினைத்த மாதிரி
அமைவ   தில்லை!

சமுகத்தின் சல்லிவேர்களை
சாடாமல் போனாலும்
ஆணிவேர்களை ஆட்டாமல்
விட்ட   தில்லை!

என் கவிதை ஆசிட் 
பட்டு பட்டு 
பட்டுப் போன மரங்கள் 
பல பல !

சமுக அவலங்களை சாடி
கத்தி இன்றி
இரத்தமின்றி சுத்தமாய்
அறுவை சிகிச்சை செய்வன
என் கவிதைகள்!

சாகியம் போசும் சமுகத்தில் 
கால் நீக்கி
சதி செய்யும் உலகில்
கால் ஊன்றி
சாதி சாதி சாதியென  
சாதனை படைக்கும் 
சாகா வரம் பெற்றவை  
என் கவிதைகள்!

சிந்தினை தூண்டி விட்டு 
சின்ன இதயத்தில் 
மனிதநேயம் வளர்க்கும் 
மகா கவிதைகள் 
இறைமை தன்மை பெற்று 
இன்றும் இயங்கிகொண்டிருப்பவை!

Tuesday, January 5, 2010

செல்

செல் போனால்
சொல் போச்சு!
நவீன இயந்திரம்
செய்யும்  மந்திரம்!

தொலைந்தது என்னவோ
செல் தான்
சொல்லும் அல்லவா
தொலைந்தது!

மூளை சயனமாய்
சிந்திக்க முடியாமல்
சிறகு ஓடிந்துபோனதே!

செல் ஒவ்வொரு
மனிதனின்
உயிர் செல்லிலும்
பொதிந்து
உயிரோட்டம் ஆனதால்
சொல்லும் போயிற்று
செல்லோடு!

செல்லை மறப்போம்
சொல்லை நினைத்து!

செல் தேவை
செய்தி கொடுக்க!
விருந்தாக அல்ல
மருந்தாக அல்லவா!

செல் டு செல்
ஒரே ஜொள்!

கால் டு கால்
இலவசம்!
கைவசம் இருந்த
காசு போய்
கலங்கிய மூளையை
கால் ஊன்ற
என்ன செய்வாய்?        

  

Monday, January 4, 2010

பூஜ்ஜியம்

பூஜ்ஜியத்திற்கும் மதிப்புண்டு
ஆம் ! நான்
உன்னோடு சேர்ந்தபோது!

நான் உன்னையே
வட்டமிட்ட போது
தெரிந்து கொண்டேன்
பூஜ்ஜியம் முக்கியமென்று!

உன் இனிமையில்
சுற்றும்போது அறியவில்லை
தனிமையில் தந்தை 
கொடுத்த பணம் 
பூஜ்ஜியமானதும் புரிந்தது 
காந்தி சிரிப்புகருகிலுள்ள
புஜ்ஜியம் முக்கியமென்று!

கவுண் டவுன்
புஜ்ஜியமானதும் ராக்கெட்
பறந்தது !
என் காதல் 
ராக்கெட் பறந்த
பின் கவுண் டவுன் 
ஆரம்பமானது
புஜ்ஜியமானதும் தான்
என்னையே உணர்ந்தேன்!


வட்டத்துக்குள் பூஜ்ஜியமாய்
என்னை சுருக்கி
கணக்காய்  வாழ்ந்தேன்
வாழ்க்கை வலியின்றி
வசதிமிக்கதாய்
வண்ணமாகியது!
வாழ்வை  புஜ்ஜியமாக்கி
புதுமை படுத்திக்கொள்!
புஜ்ஜியத்தின் அருமை
உணர்வாய் !        

Sunday, January 3, 2010

புவிவெப்பமாதல் தடுப்போம் !

புதுசு புதுசா
பார்கிறாங்க  பஞ்சாங்கம் !

பதவி உயருமா
பணம்  வருமா
அத வாங்குவோமா
இத வாங்குவோமா
பார்கிறாங்க பஞ்சாங்கம் !

புவி வெப்பம் உயருது!
பயம் வருது !

அத வாங்கி
இத வாங்கி
வசதி பெருக்றேனு
கார்பன் , மீதேன் 
ஓசோன் வாயு
அதிகமாக்கி .....
பூமிய சூடாக்கிடாதிங்க!

இனி ஒரு விதி செய்வோம்
புவி சூட்டை கூட்டி
சதி செய்யும் சாதனத்தை
சரி செய்யுவோம்!

வசதி சுருக்கி 
வாழ்வோம் வளமுடன் !

புவி சூடானால்
பனி உருகும்
வெள்ளம் பெருகும்
கடல் மட்டம் உயரும்
காணும் மிடமெல்லாம்
கடல் கடல் !
குடிக்க தண்ணீர்
இன்றி தவிப்போம்!
கடல் வாழ்
உயிரினம் அழியும் !  

நோய் பரவும்
மனிதன் மரிவான் !
வன உயிரினம்
அழியும் !

அழியும் முன்னே 
விழித்திடு !
விடியலை விதைத்திடு!

முடிந்தவரை 
வசதி சுருக்கி 
புவி சூடாக்கும் 
வாயு நீக்கி 
வாழ்வை வளமாக்குவோம்
நம் 
சந்ததிக்கு உள்ளதாக்குவோம்! 

மதுரையிலிருந்து வேலூர் பயணம்

       மதுரையிலிருந்து வேலூர் பயணம் மிகவும் சுவையான அனுபவம்.  1857 ல் முதல் சுதந்திர போர் நடை பெற்ற அதே ஊர் தான் . ஆமாங்க , சிப்பாய் கலகம் நடை பெற்ற ஊர்தான்க!
        வாஜ்பாய்க்கு நன்றி ! தங்க நாற்கரச்  சாலை மிகவும் சொகுசான பஸ் பயணத்திற்கு உதவியது. அரசு பஸ் தான் , இருந்தாலும் ௯ட்டம் அதிகம் இல்லை. தனியார் பஸ் ௯ட்டம் அதிகம் ஏனோ!
           அருகில் இருந்த விழுப்புரம் செல்லும் நபர், "சார், தனியார் பஸ்சில் லக்கேஜ் , கொரியர் வருமானம் அதிகம், மீதி பச்சண்ஜர் லாபம் தான் . அதை வைத்து நன்றாக சர்வீஸ் செய்கிறார்கள் ". அப்படியா !
             சி. எம் . சி. மறுவாழ்வு மையம் சென்றேன் . என் தங்கை வீடுக்காரர் முதுகு தண்டுவட பிரச்சனைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு சென்று பர்ர்த்தபோது தான் தெரிந்தது அதை  விட மிகவும் மோசமானவர்கள் இருக்கிறார்கள் ! ஆம் ,அவரால் எழுந்து நடக்க முடியாது . இடுப்புக்கு கீழ் இயக்கம் கிடையாது.ஆனால் அதை விட   தலை முதல் கால் வரை இயக்ககம் இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் .
              தயவு செய்து தலை பின்புறம் , முதுகு பகுதி , கழுத்தும் முதுகும் சேரும்பகுதியில்    அடிபட்டால் உடனே மருத்துவரை பார்க்கவும் . மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! பின்பு நடக்க முடியாமல் போய்விடும்.
              பங்காளதேஷ், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் இருந்து இதே பிரச்சனைக்காக நிறைய போர் இருக்கிறார்கள்.   விழுப்புரம் சேர்ந்த மருத்துவ கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் கார் மரத்தில் மோதி , தண்டுவடம் அடிபட்டதில் இன்று, பேச முடியாமல் , நடக்க முடியாமல் , குழந்தை போல் உள்ளான் .
           வேலூரில் கால் இடறி கிழே விழுந்த ரயில்வே அதிகாரி மிகவும் நடக்க  முடியாமல் பட்டுத்த பட்டுக்கை ஆக உள்ளார். தண்டுவடத்தில் சிறுவயதில் அடிபட்டதாம்.
          பாத் ரூமில் இருந்து கீழே விழுந்த இருபத்து ஆறு வயது , இரு குழந்தைகளின் தகப்பன் , இன்று பேச  மட்டும் முடியும் ,படுத்த படுக்கை , உதவிக்கு தாயும், மாமனாரும் .
         பைக்கில் இருந்து கீழே விழுந்த தற்போதே திருமணம் ஆனா பாங்களதேஷ் நபர் , இன்று செயல் இழந்து , சாப்பிட மனைவி ஊட்டும் நிலை, பேச முடியாத நிலை, சொல்வதை உணரமுடியாத நிலை.
           தயவு செய்து வண்டியில் செல்லும் போது கவனமாக செல்லவும் , தலை கவசம் அணிந்து செல்லவும் . வேகமாக செல்வதை விட விவேகமாக செல்லவும். எத்தருணத்திலும் தலை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளவும் . அப்படி அடிபட்டால் உடனே மருத்துவரை நாடவும் .
           வட நாட்டவர் குழந்தைகள் தனிமையில் படுக்கையில் விட்டு செல்லும் போது , நம்மவர் அவர்களை தம் உடன் பிறப்புக்கள் போல் பாவித்து அவர்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது , இன்னும் மனிதாபிமானம் செத்து விட வில்லை என்பதை காட்டுகிறது.
           கனத்த இதயத்துடன் திரும்பு கிறேன். இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்௯டாது . வாழம் வாழ்க்கை நம் கையில் , அதை கவனமுடன் வாழ கற்றுக்கொள்வோம்! உடம்பை வளர்த்து , உயிரை காக்க , விரைந்து செல்வதை தவிர்ப்போம், தலை கவசமுடனே வண்டில் செல்வோம்!