Wednesday, March 31, 2010

கவிஞன்

நீ என்னை கவிஞன் ஆக்கியவள்
உன் பார்வை ...
குண்டுகளாய் பாய்ந்து ..
என்னை ....
உன் இதய அறைக்குள்
சுட்டு வீழ்த்துகின்றன....!
சுடப்பட்டாலும் ....
ஒவ்வொரு நிமிடமும்...
புதிதாய் பிறக்கின்றேன்...!
நானும்....
உன் நெஞ்சு குழியில்
மலர்ந்ததால்....
உன் நெற்றி பொட்டில்
துளைத்த குண்டுபோல் ...
திலகமிட துடிக்கிறேன்...
காலம் காலமாய்
அழியாமல் இருக்கவேண்டுமென்று...!
கண்ணாடி குவளை மீன்கள் போல் ...
உன் இதயக் கூட்டுக்குள்
என்னை அழகு பார்பவளே...!
கண்ணாடி உடைந்தால்
மீன் அல்லவா துடிக்க வேண்டும்...
நீ அல்லவா துடிக்கிறாய்...!
உன் காலடி கொலுசொலி ...
திறக்க வைத்தது ...
என் வீட்டு ஜன்னலை மட்டுமல்ல...
இதயக் கதவையும் அல்லவா...!
என் பேனா மை ...
கவிதையாய் ....
காகிதத்தில் கரைத்தாலும்  ...
கரைந்தது உன் இதயம் அல்லவா...!
கவிஞன் ஆனதால் ....
என் வாழ்வும் ...
சோகமாய் ஆனதோ ...
மாமனை கரம் பிடித்து
எமனை எனக்கு துணையாக்கி ....
சென்றாயே ...
முல்லை தீவில் சுடப்பட்டவனாய் ....
சொத்து சுகம்
சொந்தம் பந்தம்
என அனைத்தையும் இழந்து
அநாதையாகி  சாகிறேனே ...!
நீ   ...
பார்வையில்  சுடும்போதே....
ஓடி ஒளிந்திருக்க வேண்டும் ....!

Tuesday, March 30, 2010

தூரத்து நிலவு ..!

உச்சி வெயில்
மண்டையை பிளந்தது...
நாடி நரம்பு எல்லாம் தளர்ந்தது ....
நா வறண்டது...
சாலையோரம் மரம் தேடி ..
சாய இடம் தேடி
அலைந்தது....
சர் ..சர்..என பறக்கும் கார்கள் ...
விர்.. விர் என பறக்கும் பைக்குகள்....
அனல் மட்டும் கக்கின....
எட்டும் தொலைவில் எதுவும் தெரியவில்லை ..
நெடும் சாலை என்பதாலோ...
தண்ணீர் லாரியும் பறந்தது...
தண்ணீர் இன்றி....
வெட்க்கைக்கு  கண்ணீரும் வர மறுக்கிறது...
தள்ளாடி நடந்த கால்கள் ...
கண்தொலைவில் கடை கண்டு
விரைந்தது.....
தண்ணீர் குடம் காலி..
அய்யா தண்ணீர் தாங்க
தாகம் உயிரை எடுக்கிறது ...
காசு தாப்பா ...
ஒரு லிட்டரா...இரண்டா....
என்றபோது
பாட்டிலில் தண்ணீர்....
என்னை பார்த்து பல் இளித்தது ...
காசு இல்லாத எனக்கு
பாட்டில் தண்ணீரும் ...
தூரத்து நிலவாய் தெரிந்தது...!

Monday, March 29, 2010

வாழ்வை ரசிப்போம்

   என் உயிர் தோழி வீட்டிற்கு சென்ற சனிக் கிழமை சென்றேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் கணவர் ரவி பூண்டு , வெங்காயம் உரித்து கொண்டு இருந்தார். நான் இதுவரை என் வீட்டிற்கு அவ்வாறு எந்த செயலும் செய்தது கிடையாது . நேரமும் இல்லை என்பது தான் உண்மை. செய்யக் கூடாது என்று ஒன்றும் இல்லை.

      மிகவும் சந்தோசமாக அதுவும் சவுகாசமாக டி.வி பார்த்து கொண்டு , இருவரும் பேசி கொண்டு , குழந்தைகள் அருகில் உள்ள அறையில் அமைதியாக படித்துக்கொண்டு மிகவும் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.  வாழ்க்கை நாம் ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
  
         என் தோழி அடிக்கடி என்னை கலாய்ப்பார். தினமும் என் கணவர்தான் எனக்கு பெட் காப்பி கொடுத்து எழுப்பி விடுவார். நீ உன் மனைவியை இப்படி எழுப்பி பார். வாரம் ஒரு நாள் உன் மனைவிக்கு காய் நறுக்கி கொடு. என் சார் எனக்கு தினம் காய் நறுக்கி கொடுப்பார். முடியவில்லை என்றால் சமைத்தும் கொடுப்பார் என்பார்.
         அவர் கணவர் ரவி மதுரையின் பிரபல வழக்கறிஞர் ,வீட்டில் பார்ப்பது என்பது அரிது. இருப்பினும் அதற்கு என தனி நேரம் ஒதுக்கி , தன் மனைவிக்கி மட்டும் அல்ல தன் குழந்தைகளுடன் அன்பாக பேசி ஒரு நண்பர்கள் போல் பழகுவது இன்று அபூர்வமே.

        "என்ன சார் இது ஓவரா தெரியலையா ?" என்றேன். "என்ன சார் செய்ய இப்படி எல்லாம் செய்யாட்டி சோறு போடா மாட்டாங்களே...?" என்று தமாசாக சொன்னார். ஆனால் அன்று அவர் சமைக்கவில்லை என்றால் அனைவருக்கும் சோறு கட் தான். என்பது என்னுடன் அவர் பேசிக் கொண்டே செய்த வேலையில் தெரிந்தது. ஒரு மணி நேரம் ஆனவுடன் அவரின் குழந்தைகள் ரினேஷ்(ஒன்பதாம் வகுப்பு), மற்றும் பவானி(ஆறாம் வகுப்பு) வந்தார்கள் .அவர்களும் பெற்றோர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு என்னையும் கேலி செய்து கொண்டு , அவர்களும் சமையல் வேலை செய்தனர். இப்படி நான் பார்த்ததே கிடையாது. குழந்தைகள் பொதுவாக யாரும் வந்தால் வெளியில் சென்று விடுவர். அல்லது தனியாக செல்ல செய்து விடுவர். அனுபவம் மாறுபட்டு இருந்தது. தோழி மட்டும் இருக்கும் சமயத்தில் நன்றாக பேசி சிரிப்பார் , அதுவே எனக்கு பொறாமையாக இருக்கும் . தற்போது பயமின்றி அவர்கள் தந்தையுடனும் அரட்டை அடிப்பது ஆச்சரியமாக தான் இருந்தது. தனியாக பெற்றோர்களுடன் அரட்டை அடிப்பது வேறு, மற்றொருவர் வந்திருக்கும் போது அரட்டை அடிப்பது என்பது புதிது, அதுவும் பேசிக் கொண்டே வீட்டு வேலைகளை செய்வது மிகவும் கடினம்.

         என் தோழி என்னிடம் "சரவணா வாழ்க்கை என்பது ஒருமுறை தான் வரும் , அதை நாம் ரசித்து ,நம் குழந்தைகள் , வீட்டில் உள்ளவர்களுடன் அன்பாக சண்டை சச்சரவுகள் இன்றி, அவர் அவர் தேவைகளை புரிந்து நாம் வேலை செய்தால் , குடும்பத்தில் சண்டை வராது. என்கணவர் என்னை புரிந்து வைத்துள்ளார், அதனால் தான் எனக்கு தேவையான காப்பி , உடம்பு சரியில்லை எனில்  சமையல் வேலை , துணி துவைப்பது , அயர்ன் செய்வது, குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வது , என்பன போன்ற வேலைகளை செய்கிறார். அதுபோல் அவருக்கு பிடித்த் மாதிரி வேலைகளை நான் சிறிதும் தயக்கமின்றி செய்கிறேன்.    குழந்தைகளும் எங்களை புரிந்து மிகவும் நன்றாக படிக்கின்றனர்.எங்களுடன் மட்டும் அல்லது அவர்களும் சண்டை போடுவது கிடையாது."

  நானும் என் குடும்பத்தில் வாரம் ஒருமுறை சமைக்க வேண்டும் என்று சபதம் எடுத்தாலும் ,முடிவதில்லை. நேரம் எல்லாம் கிடைக்கிறது . ஆனாலும் அதற்க்கான முயற்சி எடுத்தால் , "என்ன புதுசா .. யாரு உங்க தோழி சொல்லுச்சா...தோழி சொல்லி வரக்கூடாது ...தானா வரணும் "என்று சண்டை தான் வருகிறது.  நானும் என் குழந்தையை அடுத்தவர் இருக்கும் போது இருக்க சொன்னால் , வெளியில் ஓடி விடுகிறாள். காரணம் புரியாமல் நான் அவரிடம் கேட்டபோது ,"தன் கணவர் எப்போதும் சொல்லவார் வாழ்க்கையை நாம் தினமும் ரசிப்பு தன்மையுடன் எடுத்துக் கொண்டு ,நாம் நம் வேலைகளை செய்தால் நம்மை பார்த்து உலகம் திருந்தும், நாமும் உலகத்திற்கு முன்னோடியாக  இருக்கலாம்.வாழ்கையை ஒரு சோதனை கூடமாக நினைத்து ஒவ்வரு நிகழ்வையும் பரிசோதித்தால் வாழ்க்கை வேதனை ஆகி , சோகம் ஆகிவிடும் . அதுபோல நீ, வீட்டில் எங்களை  போல் இருக்க பரிசோதித்தாய் ஆகவே , அது சோகத்தில் கொண்டு செல்கிறது."என்றார்.

       வாழ்வை ரசித்தால் நமக்கு வாழ்வு வசப்படும் . ஆம் உண்மை . நாம் நமக்கு வேண்டாத சினிமா படமாக இருந்தாலும் , பொழுது போக வேண்டுமே என்று அதை டி . வி. யில் பார்த்து பழகி விட்டோம். ரசித்து பார்க்க வேண்டிய  சினிமாவையே நாம் கடமையாக பார்க்க பழகி விட்டோம். மனைவி காப்பி கொடுத்தால் அதை நாம் ருசித்துக் குடிக்காமல், கடமையாக குடிக்கிறோம். "டீ சூப்பரா இருக்கு ...என்ன டீ த்தூள் போட்டே ...உன் கை பக்குவம் தான் ..."  என பாராட்டுங்களே  வாழ்க்கை நமக்கு ருசிக்க ஆரம்பிக்கும்.


   "டெய்லி நீ சமைக்கிற இன்று ஒருநாள் நான் சமைக்கட்டா...சும்மா ஒரு சேஞ்சுக்கு..." என ரசித்து பேசுங்கள் . வாழ்வு நம் வசம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அரும்பும். நல்லதை நாம் பாராட்டுவதை போல் கெட்டதையும் ரசித்து நிராகரிக்க வேண்டும் ."என்ன  உப்புமா செய்திருக்க ...உப்பாய் இருக்கு மனுஷன் திம்பான...?"என்று கூறுவதைதவிர்த்து விட்டு ,"எம்பா .. , போன வாரம் செய்த  உம்புமா போல வரலையே...அது தேனா வாய்க்குள்ள போச்சு... இதுல்ல உப்பு கொஞ்சம் அதிக மாகிடுச்சு போல , இருந்தாலும் பரவாயில்லை , உன் கை யால  சாப்பிடுகிற பாக்கியம் கிடைச்சுதே...."  என சொல்லி பாருங்கள்."சாரிங்க , இதோ ...வாய்க்கு ருசியா புதுசா சமைத்து வருகிறேன்..."என்று புன்னகையுடன் உங்கள் மனைவி புதுசா சமைக்க கிளம்பிவிடுவாள்.   வாழ்வு ருசிக்கும் . வாழ்வை ரசியுங்கள்.


போஜராஜா காளிதாசனின் ரசிகன் . அவரின்  எல்லா பாடல்களுக்கும் ரசித்து பொற்காசுகள் தருவார். ஒருமுறை தன்னை பற்றி இரங்கல் பாடலை பாட சொன்னார். அதற்கு காளிதாசர் தான் பாடினால் பழித்து விடும் என மறுத்து நாடு கடந்து சென்றார். ஒருநாள் காட்டில் இருக்கும் காளிதாசர் தான் என அறிந்த  மன்னன் மாறு வேடமிட்டு , காளிதாசனிடம் போஜ ராஜா இறந்து விட்டதாக கூற , காளிதாசர் இரங்கல் பாவை படித்தார். தான் இறந்து விடுவோம் என்ற பாயமின்றி,கவிதையை ரசிக்க சென்ற போஜ ராஜாவை  நாம் ரசிக்க வேண்டும்.  கவிதை ரசிப்பதால் நல் இலக்கியம் பிறக்கிறது. நாம் வாழ்வை ரசிப்போம் ,நம் குடும்பம் மகிழ்ச்சியில்  தளைக்கும்.

    "எனக்கு வாழ்வை ரசிக்க கற்றுக்  கொடுத்த என் தோழி, அவரின் கணவர் ரவி மற்றும்  குழந்தைகளுக்கு மனமார்ந்த நன்றி."நீங்களும் ரசித்து, கருத்திடவும்."

Sunday, March 28, 2010

திருப்தியான மனம்

"நம்மை கெடுப்பதும்  உயர்த்துவதும் , நமது எண்ணம் தானே தவிர எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது."- வாரியார்.

     நான் நிறைய நபர்களை சந்தித்து இருக்கிறேன் . அனைவரும் "அவன் சேர்க்கை சரியில்லை சார்.. அதனால் தான் மதிப்பெண் குறைந்து வருகிறான்" என்று அடுத்தவர்களை குறை கூறுவதையே கடமையாக கொண்டுள்ளனர்.
  
    தன் மீது உள்ள குறைகளையோ அல்லது தன் குழந்தைகளிடம் உள்ள குறைகளை போக்குவது கிடையாது.நம் சமுகம் அடுத்தவர்கள் மீது பழி போட்டே வாழக் கற்றுக்கொடுக்கிறது. தயவு செய்து நம் தவறுகளை உணர்ந்து , திருத்தக் கற்றுக் கொண்டால் நாம் சந்தோசமாக வாழ்வோம்.

"மைல் கல்லும் மடையனும் தான் நின்ற இடத்திலேயே நிற்பார்கள். அறிவுள்ளவன் முன்னேறிக் கொண்டே இருப்பான்."-ப. ஜீவானந்தம் .

     நம் எண்ணங்களை மைல் கல்லை போல் அசையாமல் வைத்த்திருப்பதை தவிர்த்து , தயவு செய்து அசை போடா செய்யுங்கள் , வாழ்வின் தடுமாற்றங்களுக்கு காரண , காரியங்களை தேடுங்கள் .முட்டாள்களை போல் இல்லாமல் , நம் குற்றங்களை ஒப்புக்கொண்டு ,அவற்றை திருத்த முயற்ச்சிகள் எடுப்போம் .

"பிறருடைய குற்றம் குறைகளை கவனித்துக்கொண்டே போனால் ,நாளடைவில் அது நம்மிடம் தொற்றிக் கொள்ளும்."இங்கர்சால்.

      எது எப்படியோ என்று விட்டுவிடச்   சொல்ல வில்லை ...அநியாயத்தை கண்டு ,வெகுண்டு எழுங்கள்,ஆனால் அடுத்தவர்களை குற்றம் காணுவதையே வேலையாக கொண்டிராமல் , தயவு செய்து , நம் குற்றங்களை திருத்த முயற்சி மேற்கொண்டு , அக் குற்றம் மீண்டும் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறர் தவறுகள் , நாம் சொல்ல சொல்ல அதுவே நம் செய்யலாக மாறி விடும்.

"இருளை நொந்து கொள்வதற்குப் பதிலாக ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுவது மேலானது."-கன்ப்புயுசியஸ்

    ஆகவே , நம் குற்றங்களுக்காக நம்மை நாமே நொந்து கொள்வதை தவிர்த்து, நாம் நம்மை ஒரு தாழ்வு மனப்பான்மையில் பார்க்கக் கூடாது.நம் வாழ்வுக்கு ஒளி ஏற்றும் வண்ணம் நாம் நம் வாழ்வை மாற்றிக் கொள்ளவேண்டும். அது போல் பிறர் குற்றங்களை நாம் மறந்து, அவர்கள் வாழ வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நாம் அவர்களை ஒதுக்க கூடாது.

   "ஒரு இதயம் உடைவதை என்னால் தடுக்க முடிந்தாலும் நான் வாழ்வது வீணல்ல. ஒரு வாழ்வின் வழியையும் என்னால் குறைக்க முடிந்தால், காயத்தை ஆற்ற முடிந்தால் , மயக்கமுறும் ஒருவனுக்கு உதவ முடிந்தால் , மறுபடி , நான் வீடு திரும்பும் போது நான் வாழ்ந்தது வீணாக இருக்காது" -எமிலி டிகன்சன்

   நம் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாற்ற , நாம் நம் தவறுகளை திருத்தி , பிறரை குறை கூறுவதை விட்டுவிட்டு ,நம் வாழ்வை பயனுள்ளதாக மாற்ற , பிறர் மனம் புண் படாத வாறு நடத்தலே போதுமானதாகும்.நாம் நம் சமுகத்திற்கு செய்யும் நன்மை, பிறர் மனம் புண்படாத வாறு நடத்தலே  ஆகும். ஆகவே நாம் நம் மனதை திருப்ப்திகரமாக வைத்திக் கொள்ள வேண்டும் . அதுவே , நாம் பிறரை குறை கூறுவதை தடுக்கும், நம் குறைகளை கண்டு பிடித்து நம் வாழ்வை செம்மை படுத்தும்.

"திருப்தியான மனம் தான் உலகில் ஒருவனுக்கு கிடைக்க கூடிய உயர்ந்த ஆசிர்வாதம் ."
-சாமுவேல் ஜான்சன்.

ஆம், திருப்தியான மனம் தான் , நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மனதை புரிந்து நாம் நம் குற்றங்களை உணர்ந்து, அடுத்தவரை பழிபோடாமல் , வாழ முயற்சி   மேற்கொள்வோம்.

Saturday, March 27, 2010

தமிழக அரசின் கவனத்திற்கு ....

    பத்தாம் வகுப்பு பொது  தேர்வில் தமிழ் முதல் தாளில் கேள்வித்தாள் மாற்றிக்கொடுக்கப்பட்ட விவகாரத்தினை விவாதிக்கும் முன் ,சில விசயங்களை அலச வேண்டிஉள்ளது. 

குளறுபடி நடந்த இடத்தில் ஒரு தலைமை ஆசிரியர் ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வு அலுவலர் மற்றும் பறக்கும் படை என அனைத்து மதிப்புக்குரியவர்களும் இருந்தனர். விடை தாள் கொடுக்கப்பட்ட உடனே ,மாணவர்கள் தங்களுக்கு உரிய கேள்வி தாள் இல்லை...மாற்றித்தரவும் என வற்புறுத்தியுள்ளனர். ஆசிரியர் இது தான் உனக்குரியது என்று கூறி அமரச் செய்துள்ளார், மீண்டும் தேர்வு  கண்காணிப்பாளர், தனி அலுவலர் , பறக்கும் படை என அனைவரிடமும் சொல்லியும் கேள்வி தாளை மாணவர்களால் மாற்ற முடிய வில்லை என்பது செய்தித்தாள் வழியாகவும், நண்பர்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

   பாதிக்கப்பட்ட 29 மாணவர்கள் தேர்வு நடந்த பள்ளியில் , மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ். எல். சி. மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். அப்படி இருக்கும் போது அருகில் உள்ள அரை மாணவர் விடை தாளை பார்த்து இருந்தாலே , இத் தவறை மாற்றி இருக்க முடியும். தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அலுவலர் முறையான பயிற்சி எடுத்திருப்பின் அல்லது நான்கு வகை வினாத்தாள் பற்றி போதுமான அறிவு பெற்று இருப்பின் மாணவர்களுக்கு சரியான விடைத்தாளை தந்திருக்க முடியும்.


   " தேர்வு பணியினை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவது இல்லை.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் 'ஆளை விட்டால் போதும்'என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். " தினமலர்.(25 மார்ச் 2010 ) .
   
      அரசு கவனத்திற்கு ....ஏன் மூத்த ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர். ?
இளம் ஆசிரியர்கள் ஏன் பார்க்க துடிக்கின்றனர்...?  இதுதான் வயது வித்தியாசம் ....அனுபவ முதிர்ச்சி .  இன்று ஆசிரியப் பணி என்பது எலி வாங்கித்தந்த வேலை போல ஆகிவிட்டது. எலி வேலை வாங்கி தந்த கதையை கூறும் முன் ....மூத்த ஆசிரியர்களின் மன நிலை சொல்லி விடுகிறான். 

      தங்கள் மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் மற்றும் தேர்வு பணிக்கு சென்றால் மதியம் தம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வர முடியாது. தேர்வு பணிக்கான பள்ளியின் தூரமும் அதிகமாக இருக்கிறது, பணியினை முடித்து வகுப்புக்கு வர முடியாத நிலையில் மாணவன் படிப்பு பதிக்கப் படும் என்ற எண்ணத்தில் அநேகம் ஆசிரியர்கள் தேர்வு பணியினை    வாங்க மறுக்கின்றனர் . இளம் ஆசிரியர்கள் எப்படி மதியம் இந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து தப்பிப்பது,மதியம் ஓய்வு எடுப்பது என்று நினைத்து தேர்வு பணியினை விரும்பி வாங்கி பார்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த வகையில் உண்மை . 

     அரசு தேர்வு பணி முடிந்த பின்னும் பள்ளி செல்லும் ஆசிரியர்கள் பற்றி சர்வே நடத்தினால், நான் சொல்லுவது போல் மாணவர்கள் மீதும் , பள்ளியின்  நன் மதிப்பின் மீதும் அக்கறை மற்றும்  பற்றுள்ள ஆசிரியர்கள், அதுவும் மூத்த ஆசிரியர்கள் தான் அதிகம் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவர்.இது எல்லா நிலை மாணவர்களுக்கும் பொருந்தும் . பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே பிற மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்த வேண்டிஉள்ளது. 
அதுவும்  தேர்வு பணி வாங்க மறுப்புக்கு காரணம் ஆகும்.  

     அரசு எல்லா விசயங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற விடை தாள் மாற்று குளறுபடி ஆகாமல் தடுக்க , தேர்வுக்கு முன்னே அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்துவது எப்படி?விடைத்தாள் வகைகளை அறிவது எப்படி? மாணவனுக்கு உரிய விடை தாளை வழங்குவது எப்படி ?மாணவனின் முறையிடுகளை உடனே அரசு கவனத்திற்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி ? என்பது போன்ற பயிற்சிகளை  வழங்குவது அவசியம் ஆகும் .  

        பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அவன் முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து , மதிப்பெண் தருவதால் மட்டும் பாதிக்கப் பட்ட மாணவனின் மன நலனை திருப்பி தரமுடியுமா? அதனால் அவன் பிற தேர்வுகளில் பின் தங்கி போவதற்கும் வாய்ப்பு  உள்ளதே! . கல்வியாளர்கள் மாணவன் நலம் பற்றி சிந்தித்தால் இது போன்ற தவறுகள் நடக்காது. 

          ஆசிரியர்களை தண்டிப்பதால் மட்டும் இனி வரும் காலங்களில் இத்தவறுகள் நடக்காது என்பதற்கு என்ன உறுதி?  தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் செல்லாததனால் தான் கேள்வி தாள் குளறுபடியை சரி செய்ய முடியவில்லை என்று கூறும் முதன்மை தேர்வு அதிகாரியின் பேச்சையும் கவனிக்க வேண்டும். தண்டனை பெற்று அப்பணியினை தொடருவதை விட தவிர்ப்பது நல்லது என்ற மனநிலையும் தேர்வு பணி மறுப்புக்கு  காரணமாகவும் அமையலாம்.         ஆகவே , முறையான பயிற்சி , தேர்வு பணி குறித்து அச்சம் போக்குதல் போன்றவற்றால் மட்டுமே நாம் சரி செய்திட முடியும் . 

             மத்திய அரசினை போன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்து, பனிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வினையும் நடத்தி , உயர் கல்வியில் மாணவன் சேர்வதற்கு , மாணவனின் அனைத்து திறன் வெளிப்படும் வகையில் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி , மாணவன் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அவனுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் பிற துறை சார்ந்த படிப்புகள் தொடர நடவடிக்கை எடுத்தால் , ஆசிரியர்களும் மாணவனுக்கு மதிப்பெண் சார்ந்த கல்வியை தராமல் , மாணவன் திறன் சார்ந்த கல்வியை தந்து மாணவனின் முழு திறமை வெளிப்பட உழைப்பார். ஆசிரிய பணியும் எலி கொடுத்த வேலையாக அமையாது. 


           அது என்ன எலி கதை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஊரில் எலி அதிகம் தொல்லை தந்தது , அந்த கிராமம் முழுவதும் ஒன்று கூடி, அனைவரும் பூனை வளர்ப்பது என முடிவெடுத்தனர். பூனை வளர்க்க பால் தேவை பட்டது , அனைவரும் வீட்டிற்கு ஒரு பசுமாடு பாலுக்காக வளர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. பசு வளர்க்க அனைவரும் புல் வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து வயலுக்கு உழைக்க செல்வது என முடிவெடுத்து , வேலைக்கு சென்றனர். அப்போது தம் குழந்தைகள் தேவையிலாமல் சண்டை போடுவது கண்டு , கிராமம் அந்த ஊருக்கு அருகில் உள்ள படித்த இளைஞருக்கு வேலை தருவது எனவும் அதற்க்கு சம்பளம்    கிராம பொது சபை கொடுப்பது எனவும் முடிவெடுத்து , வேலை கொடுக்கப்பட்டது. மாணவனுக்கு அதாவது   தம் குழந்தைகளுக்கு  கல்வி கொடுக்க ஆசிரிய பணி அல்ல , குழந்தைகளை கண்காணிக்க , சண்டைபோடாமல் பாதுகாக்க தரப்பட்ட வேலை . இது கிராம குழந்தைகள் நலம் கொண்டு ,அறிவு வளர்க்க ஏற்படுத்தப்பட்ட வேலை அன்று. எலி கொடுத்த வேலை. 

             சமச்சீர் கல்வி கொண்டுவரும் நம் தமிழக அரசு தயவு செய்து மத்திய அரசை போன்று பொது தேர்வினை ரத்து செய்து ,மாணவன் நலனில் அக்கறை கொண்டு மாணவன் அனைத்து திறன் பேரம் வகையில் அட்டை கல்வி கொண்டுவந்ததை போன்று , மதிப்பெண் கல்வி முறையை நீக்கி , கல்லூரி கல்வியில் அவனின் அனைத்து திறனும் சோதிக்கும் வகையில் பொது தேர்வு நடத்தி, அதில் அவன் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவனுக்கு உரிய படிப்பினை கொடுப்பதன் மூலம் தமிழக கல்வி துறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக  திகழலாம்.


            அரசு கவனத்தில் கொண்டு வர நீங்களும் நல்ல கருத்துகள் பகிர்ந்து , தமிழக மாணவர்கள் கல்வி நலனில் பாடுபட அனைவருக்கும் விஷயத்தை எடுத்து செல்லுவோம் , சொல்லுவோம். 

Friday, March 26, 2010

8டாத அறிவு ..

அப்துல் கலாம்

(முதுமலையில் பயிற்சி முகாமிற்கு வந்த யானையை பார்க்க காட்டிலிருந்து யானை ஒன்று இரவு வந்திருந்தது)

"நண்பா ! என்னை தெரிகிறதா? நான் தான் ...ராகவேந்தர் ...சின்ன வயதில் நாம் விளையாடியது ஞாபகம் இருக்கா...?"என்றது காட்டு யானை.

"(முகாம் யானை ஆழ்ந்த சிந்தனையில் இருக்க )
"நண்பா !என்ன கனவா ?"

"ஆமாம்பா ராகவேந்திர ...நல்லா இருக்கியா...?"

"நான் வந்தது தெரியாம அப்படி என்ன  கனவு ...?"

"ஆமாம் ...நான் சென்னை மாநிலக் கல்லூரியில் வரவேற்புக்கு சென்றிருந்தப்ப ....அப்துல்  கலாம ..பார்த்திருக்கிறேன்...அவரு கனவு காண சொல்லிருக்காரு....அவரு தன் கனவை நினைவாக்கி ...செயல்படுத்தியதால ...இந்தியாவோட ஜனாதிபதியாக உயர்ந்திருக்காறு..."

"என்னப்பா ...டவுனுக்கு போனப்புறம் ...ரெம்பவே..மாறிட்ட மாதிரி தெரியுது...?யாரு அந்த கலாம் ?"

"அவரு அவுல் பக்கீர் ஜெய்னுலஸ்தீன் அப்துல்கலாம் ...இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரா பணிபுரிந்தவர் ...பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகரா பணியாற்றியவரு...இப்படி  சொல்லிகிட்டே...போகலாம் ..."

"என்ன சாதனை புரிஞ்சுருக்காறு...?"

"இந்தியாவின் முதல் செயற்கை ஏவுகலனான எஸ்.எல்.வி.3 உதவியுடன் ரோகிணி என்னும் செயற்கை கோளை விண்ணில் ஏவியவர்...முடநீக்கியல் துறையில் ...300 கிராம் எடையுள்ள இலேசான நடைசாதனத்தை உருவாக்கியவர்..."

"சென்னை..அப்பிடின்னு...ஏதோ..சொன்னியே ...?"

"அதுவா...இவரு ..மாணவர்கள் மத்தியில் இந்தியா முழுவதும் சென்று உரையாற்றுகிறார்...கனவு காணச் சொல்லுகிறார்....கனவை செயல் படுத்த செய்கிறார்...இப்படி செய்யுறதால...லட்சத்தில் ஒரு சாதனையாலனாவது உருவாக மாட்டானா...?இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறாதா...?என்பது இவர் கனவு..."

"1975  ல் ஆர்ய பட்டா என்ற செயற்க்கைக்கோள் உருவாக்கினாங்கன்னு என் அம்மா சொல்லி கேள்விப்பட்டுருக்கேன் அது யாரு ...?"

"அவரு ஆரியபட்டீயத்தை உருவாக்கியவர் ...அப்ப அவருக்கு வயது 25 தான்..முக்கோணம் மற்றும் வட்டத்தின் பரப்பளவு சூத்திரத்தை தந்தவரு...வட்டத்தின் சுற்றளவு காணப்பயன்படும்..பை (II ) யின் மதிப்பு 3.1416   என தோராயமாக நிர்ணயித்தவரு  .... "

"அதனால தான் வரு பெயரில ஆரியபட்டான்னு செயற்க்கைக்கோள் அனுப்பினாங்களா ...அப்ப பாஸ்கரான்றது  ...?"

"அவரும் ஒரு கணித மேதை ...அவரு தான் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்...அதனாலதான் அவரு பேருல 1979 ல்ல பாஸ்கரா-I மற்றும் பாஸ்கரா-II ஏவப்பட்டது...."

"நகரத்துல ஜாதி கலவரம் , மத கலவரம் ..நடக்குதாமே..கிராமத்து வாசிகள் பேசக் கேட்டேன்.."

"அப்படியெல்லாம் ..பெரிசா கிடையாது...பெரிசான விஷயம் பெரிசாவும் வெளி வராது..."

"என்ன சொல்லுற...?"

"அட..பூமத்திய ரேகை பகுதியில்ல...விண்வெளி ஆய்வு மையம் நிறுவ ...கேரளாவில தும்பா..என்ற இடத்தில  அதுவும் ஒரு தேவாலயம்... கிருத்துவ பிசப் வீடும் தேர்வு செய்யப்பட்டது ..."

"கிருஸ்த்துவ ஆலயமா...?"

"கேட்டவுடனே...பிசப் ரெவரென்ட் டாக்டர் பீட்டர் பெர்னார்ட் பெரைரா ...மறுநாள் ஜெப ஆராதனையில் 'குழந்தைகளே...அறிவியல் இலட்சிய திட்டத்திற்கு இறைவனின் இருப்பிடத்தை கொருக்கலாமா..?'என கேட்க ..."

"என்னாச்சு...?"

"'ஆமென்'என எல்லாரும் சொல்லிட்டாங்க..."

"பாபா ..இந்துவும் கிருத்தவரும் ...சண்டை போட மாட்டாங்களா ...முஸ்லிம் இந்துவுமா...சண்டை போடுவாங்க ...?"

"அட முட்டாள் ...அப்படி எல்லாம் கிடையாது...காஞசி மடத்து பக்கம் ...ஒரு மசூதி இருந்ததாம்...காஞ்சி காமகோடி அத மாத்த வேணாம்ன்னு சொல்லிட்டாராம் ..."

"அப்ப சின்ன விசயங்களை பெரிசு படுத்துராங்கன்னு ..சொல்லு றாங்களா ...?அது சரி நம்ம மாணவர்கள் எப்படி ?"

"அது தாம்பா கவலையா இருக்கு ...வானவியல் ..கணிதவியல்ன்னு நம்ம கலாம் ஆசைபடுகிறார்...ஆனா... "

"என்ன இழுக்கிற...?"

"ஆமாம்ப்பா...இரண்டு மாணவன் பேசுறத கேட்டேன்..."

"என்ன...அப்படி பேசினாங்க...?"

" டேய் ..நீல் ஆம்ஸ்ட்ராங்க்குக்கும் ...நமக்கும் என்ன வித்தியாசம் ...?அப்படி ன்னு ...கேட்க..."

"என்ன சொன்னான்...?"

"'அவரு நிலவுக்கு போனவரு...நாம நிலவுக்கு போகாதவங்க ..' ன்னு சொன்னான்..."

"இதில் என்ன தப்பு ...?அவன் கரக்டா தானே சொன்னான்..."

"அவசர படாதே ...வித்தியாசம் அப்படின்னு கேட்டா...ஒற்றுமை வேற்றுமை இரண்டும் சொல்லணும் என்று பதிலை திரும்ப கேட்டான்..."

".அப்ப இவன் தெரியாது அப்படி சொல்லி இருப்பனே...சரி அவன் சொன்ன பதில... சொல்லு"


"அத ஏன் கேட்கிற ..'நாம எல்லாம் 1க்கு...2க்கு  தான் போவோம் ..ஆனா அவரு ..3(மூன்)க்கே போனவரு...'அப்படின்னு சொல்லுறான்..."

"!!!!!"

(நிச்சயம் கலாம் கனவு பலிக்கும் இந்தியா வல்லரசாக மாறும். ஆசிரியர்களும் பொறுப்பு உணர்ந்து செயல் படுவர்...மாணவர்களும் தம் நிலைமை உணர்ந்து தம்மையும் , தாய் நாட்டையும் உயர்த்துவர் ...நானும் உங்களை போன்று கனவுகளுடன் ...)  

Thursday, March 25, 2010

மனம் விரும்புதே...!

இன்றைய கல்வி
களவும் கற்று மற...
சொல்லிக்கொடுத்தது
கற்றதை மறந்தேன்
களவை அல்ல ...!

-----------------------------------
கால் வயிறு
அரைவயிராய்....
காட்டிலும் மேட்டிலும்
மழையிலும் வெயிலிலும்
கஷடப்பட்டு உழைத்து ....
பள்ளிக்கு அனுப்பி வைத்தாய் ...
முதுகில் சுமக்கும் புத்தகத்துடன்
உன் கனவையுமல்லவா ...
ஏற்றி வைத்தாய் .....
கால் உயிரு ...
அரை உயிராய் ....
கரைகிறது அவன் கனவு....!
நம் கண்ணீர்
கதை சொல்லவதை நிறுத்தி  ...
பிள்ளைகளின் கண்ணீர் போக்க
மனம் பிடித்த ....
நல் கல்வி தர உதவுவோம்...!

Wednesday, March 24, 2010

மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் தேவைதானா?

மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் தேவைதானா?

மதுரை மாவட்டத்தில் அனைத்து சரகத்திலும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்  , தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ,பள்ளி தலைமை ஆசிரியர்களால் மற்றும் பள்ளி ஆசிரியர்களால் மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மை கல்வி அலுவலரின் சீரிய தலைமையில் ,அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தொடக்கக் கல்வி அலுவலர்களின் முயற்ச்சியில் , ஆசிரிய பயிற்றுனர்கள் உதவியோடு பல இடைநிற்றல் (drop out student )மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு , மாற்று பள்ளிகள் மற்றும் இணைப்பு மையத்தில் சேர்த்து மீண்டும் நல்ல கல்வியை தந்து , அவர்களின் படிப்பு தொடரவும் , பிற மாணவர்களை போன்று , நடைமுறை பள்ளி கூடங்களில் சேர்ந்து படிக்க உதவி செய்கிறார்கள்.

             இப்படிப்பட்ட மாணவர்களுக்கு 19 .03 .2010 அன்று  மதுரை தென்சரகத்தில் , என்.எம் .எஸ் .எம் மாநகராட்சி பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது . அந்த வகுப்பு மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் வகுப்பு நடத்த சென்றேன். அங்கு சென்றபிறகு தான் ஏன் நடைமுறையில் உள்ள(ரெகுலர் )  பள்ளிகளில் இந்த வாழ்வியல் திறன் தரக்கூடாது ?   என்ற சிந்தனை தோன்றியது .
  
          மாணவர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கையும் , தங்களின் வாழ்வின் மீது பற்று ஏற்படுத்தி , தன் காலில் தானே சுயமாக நிற்க கற்று தர இப்படிப்பட்ட வாழ்வியல் திறன்கள் அவசியம் . மூத்த ஆசிரிய பயிற்றுனர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் பல சமயங்களில் கல்வி முறை ,கற்றல் மற்றும் கற்பித்தல் இடர்பாடுகள் ,இன்றைய கல்வி தேவைகள் குறித்து ஆலோசனை மற்றும் விவாதங்கள் என்னுடன் செய்வதுண்டு.  நானும் அவரும் முதல் நாள் ஆலோசனையில் ஈடுபட்ட போது ," மாணவன் தன் சுய தேவைகளை அடுத்தவர் உதவி இல்லாமல் , தானே தன் தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற வாழ்வியல் திறன்களை மாணவர்கள் பெறவேண்டும் , அதன் அடிப்படையில் நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டும் "என்றார்.

               வாழ்வியல் திறன் என்பது மாணவர்கள் குறித்த நேரத்தில் வருகை புரிய வேண்டும், வரிசையில் செல்லவேண்டும் , எடுத்த முடிவில் தோல்வி கண்டாலும் துவளக்கூடாது, எங்கும் எதிலும் ஒழுக்கம் தவறாமை , பொய் பேசாமை , கோபம் தவிர்த்தல் இவற்றின் அவசியத்தை நிச்சயம் கூற வேண்டும்  , அதனுடன் இன்று போஸ்ட் கார்டு , ரயில் டிக்கெட் எடுப்பது, மணி ஆடர் பாரம் பூர்த்தி செய்தல் போன்றவைகள் நல்லது. மிக பெரியவர்கள் என்றால் சோப்பு தயாரித்தல் , சாம்புராணி , பத்தி ,சூடம் தயாரித்தல் போன்றவைகளை கொடுக்கலாம் என்றேன்.

               இரண்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் வருகை தருகிறார்கள் சுமார் நூற்று நாற்பது மாணவர்களுக்கு மேல் வருகை தருவார்கள் , அவர்களுக்கு இப்பயிற்சி முக்கியமானதாக இருக்க வேண்டும் , மேலும் அது அவர்களின் வாழ்வாதாரத்தை தேடி தருகிறதோ  இல்லையோ ,அவசியம் அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

      பின்பு அவரே பயிற்ச்சிகளை தேர்வு செய்தார் .  சட்டையில் பட்டன் தைக்க கற்று தருதல், சைக்கிள் ரிப்பேர் சரி செய்தல் , புத்தக பைண்டிங் செய்ய கற்றுத் தருதல் போன்ற பயிற்ச்சிகள் ஆகும் . அனைத்திற்கும் ஏற்பாடுகளை செய்தாயிற்று. இனி பயிற்சிக்கு வருவோம்.

         காலை பத்து மணிக்கு தொடங்கியது . மாணவர்கள் சுறு சுறுப்பாக காணப்பட்டனர். கனவுகளுடன் காட்சியளித்தனர். அவர்களின் முகத்தில் நம் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயம்  செய்யும் சக்தி தெரிந்தது. குடும்பச்சுழல் , தவறான சகவாசம் , இடமாற்றம் ,  பள்ளி சுழல் சரியில்லாமை, ஆசிரியர் பிடிக்காமை போன்ற பல காரணங்களுக்காக பள்ளி படிப்பை நிறுத்தி,இன்று இணைப்பு மையத்தில் சேர்ந்து, உறைவிட பள்ளியில் படித்து , சாதாரண மாணவர்களை போல் பள்ளி செல்லும் இவர்களுக்கு இது போன்ற ஒரு வாழ்வியல் திறன் வகுப்பு தேவை என்பது புரிந்தது.
இந்த தருணத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் ஒரு தெய்வ திட்டம் என்பதை உணர்த்த கடமைப்பட்டுள்ளேன்.  தமிழக கல்வி துறையின்  செயல்பாடு ' ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு  பதம்' என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்  பள்ளி செல்லாக் குழந்தைகளின் மீது கொண்டுள்ள அக்கறை ,அவசியம் புரிந்தது.   செயல் வழி கல்வி திட்டத்தின் முன்னோடி என   என்போன்றோர்களால்  அழைக்கப்படும்  'திரு.எம்.பி. விஜயக் குமார்  அவர்கள் நிச்சயம் நம் தமிழக மாணவர்களின் சீரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பது மிகையாகாது.

          பயிற்சியில் மாணவர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் கொடுக்கப்பட்டு ஆம் இல்லை பதில்கள் பெறப்பட்டு அவர்களுக்கு தன் மீது நம்பிக்கை பிறக்கச் செய்தேன்.

1. எனக்கு சுத்தமாக இருப்பது பிடிக்கும். என் சுற்று புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வேன்.
2. என்னை எனக்கு பிடிக்கும்.
3. எனக்கு கோபம் வாராது.
4. நான் பொறுமையை எப்பொழுதும் கடைபிடிப்பேன்.
5. அடுத்தவர் செய்யும் நல்ல காரியத்தை பாராட்டுவேன். என்னையும் நான் பாராட்டி கொள்வேன் .
6. சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவேன்.
7. மதிப்பெண் குறைவாய் எடுத்ததற்கு வருந்த மாட்டேன். அதற்காக என்னை வருத்திக் கொள்ள மாட்டேன்.
8. பிறருக்கு உதவி செய்வேன். அருகில் உள்ள மாணவனுக்கு புத்தகம் , பென்சில் , பேனா கொடுத்து உதவுவேன்.
9.போட்டி போட்டு படிக்க விரும்புகிறேன்.
10௦. நான் சந்தோசமாக இருக்க விரும்புகிறேன்.

அனைத்திற்கும் ஆம் என்றால் மாணவன் தன் நம்பிக்கை கொண்டுள்ளான் என்று அர்த்தம். எந்த வினாவிற்கு மதிப்பெண் கொடுக்க வில்லையோ , அதற்க்கான விளக்கம் தந்து கதை மூலம் மாணவனுக்கு அப்பண்பு உணர்த்தப்பட்டது.

       மாணவனுக்கு சோம்பேறி தனம் உண்டு என்று கண்டுபிடிக்க கீழ் கண்ட வினாக்கள் கேட்கப்பட்டு அவற்றை போக்க விளக்கம் கொடுக்கப்பட்டது.
1. நான் காலை இதுவரை எழுந்து சூரிய உதயத்தை பார்த்ததே கிடையாது.
2.நான் வகுப்பில் பாட புத்தகத்தை எடுத்து படித்த பின் மீண்டும் பையில் வைக்க மாட்டேன். மாணவனோ, ஆசிரியரோ தான் எடுத்துக் கொடுப்பார்கள்.
3.தினமும் குளிக்க கஷ்டப்படுவேன். பள்ளிக்கு சீருடையில் வருவது கடினம்.
4.மதிய உணவு தட்டை சாப்பிட்ட இடத்திலேயே போட்டு விடுவேன்.
5.தலை வாரி பள்ளிக்கு வர கஷ்டமாக இருக்கும்.
அனைத்திற்கும் ஆம் என்றால் அட்டு சோம்பேறி என்று அர்த்தம். சோம்பலை மாற்ற கதைகள் கூறப்பட்டன.

தனி திறமைகள் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டது. தனி திறமைகள் எவை என்பதற்கு கீழ் கண்ட வினாக்கள் கேட்கப்   பட்டன.
-என் கையெழுத்து அழக்காக இருக்கும்.
-நான் வேகமாக ஓடுவேன்.
-புத்தகத்தை தலைகீழாக பிடித்து படிப்பேன்.
-எனக்கு சுவையாக சமைக்க தெரியும்.
-தலைகீழாக நடப்பேன்.
அவைகள் மேம்பட்ட நாம் முயற்சி எடுத்திட வேண்டும். இன்று சாதனையாளர்கள் எல்லாம் தம் தனி திறமைகள் அறிந்து அதில் கவனம் செலுத்தியவர்கள் தான் என்பது மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
   பயிற்சியின் போது மாணவர்கள் சிலர் பித்தான் இல்லாமல் சட்டை அணிந்தது தெரிந்தது. அப்போது தன் அவர்களுக்கு பித்தான் தைக்க கற்று தருவதன் அவசியம் புரிந்தது. அன்றே அனைவரும் பித்தான் தைக்க கற்று தரப்பட்டது .
    மாணவர் பலரும் தன் புத்தகத்தை கிழித்து , அட்டைகள் போயி இருந்தது. ஆகவே நாம் மாணவருக்கு புத்தக பயிண்டிங் கற்று தருவது பிடித்தது.

   மாணவர்கள் அனைவர் வீட்டிலும் சைக்கிள் வைத்துள்ளனர் . அரசும் இலவச சைக்கிள் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.ஆகவே சைக்கிள் ரிப்பேர் கற்று தருவதும் அவர்கள் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவே அமைந்துள்ளது. அன்று அவர்களுக்கு பயனுள்ள வாழ்வியல் திறன்கள் பெற்றனர் என்பது மட்டும் உண்மை.
     பயிற்சியின் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில அகராதி கொடுக்கப் பட்டது .மேலும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதும் கற்று தரப்பட்டது. ஆங்கில மொழி வளர்ச்சியின்  துவக்கமாக இருந்தது.


     இன்று நடைமுறை பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள் கற்று தரப்படுகிறாதா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அரசும் , ஏன் அனைவர்க்கும் கல்வி திட்டமும் இப்படிப்பட்ட வாழ்வியல் திறன்களை அனைத்து மாணவர்களுக்கும் கற்று தரக் கூடாது ?
மாணவர்களின் அன்றாடத் தேவைகளான கிழிந்த சட்டை தைக்க கற்று தருதல் , புத்தகத்தை அட்டைபோட்டு பாதுகாக்க கற்று தருதல், உடல் நலம் பேணுதல், சடை அலங்காரம், மேக்கப் செய்தல், புத்தகம் பைண்டிங்க் ,சைக்கிள் ரிப்பேர், போஸ்ட் கவர் தயாரித்தல்,செடி வளர்த்தல்,தோட்டம் பராமரித்தல் போன்ற திறன்களை நாம் கற்று தரலாமே?அரசு முயற்சி எடுக்குமா...?
         பள்ளி செல்லா குழந்தைகளின்  பள்ளி படிப்பை தொடர முயற்சி எடுத்துள்ள நம் அரசுக்கு பாராட்டுக்கள்.இந்தியாவில் தமிழகம் பள்ளிகல்வியில் பிற மாநிலங்களுக்கு முநோடியாக திகழ்கிறது என்பதற்கு இதுவே சான்று.

Monday, March 22, 2010

8டாத அறிவு ..

சிலந்தி

தனக்கு கல்யாணம் செய்து வைத்த பெரியவரிடம் ஒரு இளைஞன் ...

"நல்லா  கல்யாணம் பண்ணி வச்சீங்க ...எப்ப பார்த்தாலும் தேள் மாதிரி கொட்டிகிட்டே  இருக்கிறா..."

"தேள் தானே...பரவாயில்லை...சிலந்தி பூச்சி இல்லையே...?"

"சிலந்தி பூச்சின்னா ஒரு நசுக்கு நசுக்கிட மாட்டேன்..."

"அட கிறுக்கா...பெண் சிலந்தி....உருவத்தில பெரியது...அதனால் ஆண் சிலந்தியை கல்யாணம் பண்ணின மறுநாளே கொண்னு திண்ணிடும் ...."

"சிலந்தி தான் வலை பின்னுமே...தப்பிச்சுடாதா....?"

"எல்லா சிலந்தியும் வலை பின்னுறது இல்லை ...அப்புறம் வலை பின்னுறது தப்பிக்க மட்டுமில்ல ....இரையை பிடிக்கவும் தான் ..."

"அப்ப வலை பின்னாத சிலந்தி என்ன செய்யும்...?"

"பூச்சிகளை பிடித்து உண்ணும் ...நெப்பந்தஸ் , வீனஸ் போன்ற மரங்களின் இலை ஜாடி போல இருக்கும் ....அதன் ஜாடிக்குள் உள்ள அமிலம் பூச்சியை செரித்து கிரகித்துக் கொள்கின்றன..."

"சிலந்தி பத்தி கேட்டா...பூச்சி உண்ணும் தாவரம் பத்தி சொல்லுறீங்க..."

"அந்த ஜாடிக்குள் ...'நண்டு சிலந்தி' ...வாழ்ந்து அதில் வாழும் பூச்சிகளை கொன்று தின்று ...எஞ்சினதையே செடிக்கு  உணவாக்குகிறது...அந்த சிலந்தி அமிலத்தில் கால் தவறி விழுந்தாலும் ஒன்றும் ஆகாது..."

"'நண்டு சிலந்தி' மட்டும் தானா வலை பின்னாது ...?"

"வரிசையா சொல்லுறேன் ...'ஈப்புலி சிலந்தி'ன்னு இருக்கு ...அது முட்டைகளை பட்டு பையில் இட்டு தான் செல்லும் இடத்தில் எல்லாம் ...எடுத்து செல்லும்...முட்டை பொறித்து தன் குஞ்சுகள் வெளி வந்துடன் தன் முதுகில் சுமந்து செல்லும்..."

"அதிசயமா இருக்கே ....!"

"எதிருல ...இது போல மற்றொரு சிலந்தி வந்தா..அதோட சண்டை போடும் ...கடைசியில யாராவது ஒன்று இறக்க வேண்டியது வரும் ... அப்புறம்...இறந்த சிலந்தியின் குஞ்சுகளும் வெற்றி பெற்றதன் மீது ஏறி சவாரி செய்யும் ..."

"ஒரு பத்து குஞ்சு இருக்குமா....?"

"நீ வேற..ஒவ்வொன்றும் இருநூறு குஞ்சுகள் பொரிக்கும் ....இது ஈக்களை ...புலி போல பதுங்கி புடிப்பதால இதற்கு 'ஈப்புலி'ன்னு ... பேரு..."

"பச்சோந்தி மாதிரி நிறமாறும்...சிலந்தி இருக்கா....?"

"இருக்கு ..'மிலாமீனா'என்ற சாதியை சார்ந்த சிலந்தி...தன் நிறங்களை வெள்ளை, மஞ்சள் , ரோஜா , பச்சை என மாற்ற கூடியாது..."

"அப்ப இந்த சிலந்தி இலை மீது இருந்தால் பச்சை நிறமாக மாறிடும்....அப்படி மாறுவதால...எதிரிக்க கண்ணில பாடாம ...மலருக்கு வரும் பூச்சிகளை ஈசியா உண்ண முடியும் ...அப்படி தானே...?"

"ஆமா  ...'கோந்து சிலந்தி'ன்னு மற்றொன்று இருக்கு ...அது தூரத்தில்ல ...நின்றுகிட்டு ...வாயிலிருந்து கோந்தை பீச்சும் ...பூச்சி மீது விழும் கோந்து...உலர்ந்து இலைகளாக மாறி ...கெட்டியாக பிடித்து கொள்ளும் ...அப்புறம் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கும்..."

"நீங்க சொல்லுறத பார்த்தா ...நம்மளையே..கொல்லும் போல இருக்கே...."

"தென் அமெரிகாவில ...'மைகேல் 'எனும் சாதி சிலந்தி ..ரீங்கார சிட்டுக்களை கொன்று...கூட்டிலிருந்து வெளியே இழுத்து கொண்டு வந்து திங்கும்...அதனால இதுக்கு 'பறவை திண்ணி' சிலந்தின்னு பேரு ."

"சிலந்தியில பட்டு எடுக்கிறாங்கன்னு சொல்லுறது உண்மையா...?".

"ஆமா...இந்த பட்டு வலிமையானதாகவும்...மென்மையானதாகவும் இருக்கும்..."

"சரி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க ...எப்படி....?"

"நானும் ..உன்னை மாதிரி தான் ..பொண்டாட்டி திட்டுராலேன்னு...சோர்ந்து போயிருந்தேன்....விசயமா பெருசு...இத சொல்லி என்மனதை தேத்திகிட்டேன்....அது மாதிரி நீயும் மனதை தேத்திக்க...."

"!!!!"

Sunday, March 21, 2010

8டாத அறிவு ..

சினிமா சினிமா  ..."அண்ணே ..!யாரு அண்ணே...அது ?தொட்டில்ல போறவங்க வரவங்கள எல்லாம் கூப்பிட்டு எதோ சொல்லிக்கிட்டு...இருக்கிறாரு .."

"அட ..கடையில இருந்து வேடிக்கை பார்ப்ப போல ...அவரு ஒரு சினிமா எடுத்துருக்காரு...அந்த படத்தை பார்க்க எல்லாரையும் சிபாரிசு பண்றார்..."

"பாவம் ..தோத்துருவோம்ன்னு பயத்தில ஒவ்வொருவரையும் கூப்பிட்டு சொல்றாரு...படம் எடுத்தா நடு த்தெருவில வந்துடுவாங்கன்னு சொல்லுறாங்கலே ..அது இது தானா.."

"அப்படி இல்ல ...ஒரு படம் எடுத்துட்டு ...அடுத்த படம் எடுக்கிறது வெட்டி செலவு அப்படின்னு நினச்சா ...நஷ்டம் தான் வரும் ..நம்ம எடிசன் மாதிரி...."

"யாரு பல்ப கண்டு பிடிச்சார்...அந்த தாமஸ் ஆல்வாய் எடிசனா..!விவரமா சொல்லுங்கண்ணே...."

"எடிசன் இயங்கும் படத்திற்கான காமிராவை கண்டு பிடிச்சதோட நிற்கவில்லை ...பேசவும் செய்தால் மக்களை கவருமேன்னு ..'போனோ கிராப்' கண்டு பிடிச்சாரு...ஒளியையும், படத்தின் அசைவையும் இணைக்க முடியுமான்னு ..ஆராய்ச்சியில்ல  இறங்கினாறு..."

"வெற்றி பெற்றாரா...?"

"இந்த ஆராய்ச்சியில்ல ..ஐம்பது அடி நீள செல்லுலாயிட் பிலிம்ல படமெடுத்தா ஒலி ஒத்திகை வெற்றி பெறவில்லை..."

"அப்ப எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அண்ணே...? "

"ஆராய்ச்சியில்ல இருபத்துநான்கு  ஆயிரம் டாலர் செலவிட்ட அவர் தமது வழிமுறைகளு பதுவு செய்ய நூற்று ஐம்பது டாலர் வெட்டியா செலவழிக்க வேணுமான்னு விட்டு விட்டார்..."

"தோல்விய வெட்டியா செலவு செஞ்சு பதிய மாட்டங்க தானே ...அண்ணே..."

"சரி தான்... அனா அவரு வழியிலேயே முயற்சி செய்த பலர் ....கடைசியில்ல வெற்றி பெற்று விட்டனர். அவர் பதியாத ...னால... ஆயிரம் கோடி வருமானத்தை இழந்து விட்டார்....முயற்சி திருவினை ஆக்கும்..."

"சினிமா பத்தி நிறைய விஷயம் தெரிந்து வச்சுருகீங்க...எப்படின்னே...சினிமா தோன்றியது  ...?"

"ஒருவன் நரந்துஸ் செல்லும் போது ஒவ்வொரு அடியாக படம் எடுத்து ..அதை  வரிசையாக அடுக்கி , பின் "மாய சக்கரம்" என்னும் விளையாட்டு சாதனத்தில் சுழல விட்டால்  ...அது அந்த வேகத்திற்கு தகுந்த மாதிரி படத்தில் உள்ளவர்  நடந்து செல்வது போல் தோன்றும் "

"அப்படியா..?"

""இத வச்சி தான் லூமியர் சகோதரர்கள் எளிதில் எடுத்துச்   செல்லும் காமிராவையும் ,பட சுருளையும் பெரிய திரையில் காட்டும் இயந்திரத்தையும் கண்டு பிடிச்சாங்க .."

"(இருவரும் பேசி கொண்டிருக்கையில் திரை பட அதிபர் அருகில் வந்தார்.)

"சரியாய் சொன்னீங்க ...பிரான்சின் லூயி லுமியரும், அகஸ்டோ லுமியரும் 1895 டிசம்பர் 28 ல் சினிமா வரலாற்றை தொடக்கி வைத்தனர்."

"அப்புறம்  முதல் சினிமாவின் பெயர் என்னங்க...?"

" அது 'ரயில் கொள்ளை' 1903 ஆம் வருடம் எட்டு நிமிடம் மட்டும் ஓட கூடிய படம் .இதில் பதிமூன்று வெவ்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன...இதை தயாரித்தவர் 'எட்வின் போர்ட்டர் 'எடுத்து கொடுத்தவர் தாமஸ் எடிசன் "

"பேசும் படம் தயாரிக்கும் முன் படம் எப்படி இருந்தது...?"

"லாஸ் எஞ்சலில் பல ஸ்டுடியோ உருவாகின....நடிகர்களும் உருவாகினார்கள் ...இதன் விளைவாக  முன்று மணி நேரம் படம் உருவாககப்பட்டது...1915 ல் 'கீரிமித்' என்பவர் 'ஒரு  நாட்டின் தோற்றம் ' என்ற படத்தை எடுத்தார்..."

"இது பேசும் படமா...?"

"இல்லை படம் ஓடும் போது எழுபத்தைந்து பேர் கொண்ட இசை குழு முன்னாள் அமர்ந்து வாசித்தது ."

"ஆச்சரியமாக இருக்கிறதே...!"

"1927 ல் தான் முதல் பேசும் படம் 'ஜாஸ் சிங்கர் ' வந்தது..மனித கற்பனை ...புதிய கண்டுபிடிப்புக்கள் இன்று 'இந்திரன் 'வரை தொடர்கிறது...."


"அது சரி சார் நீங்க எடுத்த சினிமா தியேட்டருக்கு எப்படி போகணும்...?"

"கையில காசோட தான் போகணும் ..."

"!!!!"(இருந்தும் சமாளித்து கொண்டு...)

"இப்பதான் தெரியுது நீங்க ஏன் தெருவில்ல நின்று கூவுரேங்கன்னு ...."

"!!!"

Saturday, March 20, 2010

காதலில் வெற்றி பெற டிப்ஸ் ...

       மூன்று எழுத்து கெட்ட வார்த்தை 'காதல்'என்றாகிவிட்டது. இன்றைய சமுகத்தால்  இளைஞர்கள் காதல் என்ற வார்த்தைக்கு தவறுதலான அர்த்தம் கொண்டுள்ளனர்.  ஆண், பென் இனக் கவர்ச்சி ...,உடற்கவர்ச்சியின் ஈர்ப்பு  ...என்பது காதலாகி போனது. தயவு செய்து அன்பு உள்ளம் கொண்ட அன்பர்களே ,காதலை தவறுதலாக நினைக்காதீர்.
       அன்பின் உச்ச நிலையின் வெளிப்பாடு காதல் ஆகும். அன்பு யார் மீதும் வரலாம் . அன்பு சுயநலம் இல்லாத ஒன்று. உண்மையான அன்பு உடல் சம்பந்தம் பட்டது அன்று. அன்பு பெருகி காதல் ஆகும் போது , யாரை காதலிக்கிறோமோ ..அவர்களின் நலமும் , மகிழ்ச்சியும் தான் காதலிப்பவரின் குறிக்கோளாக இருக்கும் .அதுதான் 'காதல்'  ஆகும்.

       இறைவனிடம் காதல் கொண்ட கதைகள் பல . ஆண்டாள் ,மீரா...போன்றோர்கள் காதலித்தார்கள் .பெண்கள் இறைவனை மனிதனாக பாவித்து காதலித்தார்கள்.  அதுபோல திருஞான சம்பந்தர் போன்றோர்கள் பெண்ணாக இறைவனை பாவித்து காதலித்தனர். அதுபோல் காதலுக்கு வயது தடையல்ல....'முளைச்சு மூணு  இலை விடல ...இவனுக்கெல்லாம் காதல் ஒரு கேடா...' என பலர் திட்டி பார்த்து இருக்கிறோம். திருஞான சம்பந்தர் தனது ஐந்து வயதில் இறைவனை காதலனாக நினைத்து பாடுகிறார். அப்பாடலில் தன் காதலன் சிவ பெருமானை பிரிந்த துயரத்தால் தனது உடல் இளைத்து , கைவளையல்கள் கையிலிருந்து நழுவி விட்டதாகப் பாடுகிறார்.

         பெண் அடியார்கள் இறைவனை காதலிக்கலாம் .ஆனால் , எப்படி மாணிக்கவாசகர் போன்ற ஆண்கள் இறைவனை காதலானாக ஏற்பது ? ஏற்க்க முடியுமா ? என்ற வினாவிற்கு மீரா ஒரு சாதுவிடம் கூறிய பதில் ...
      
          மீரா ஒருமுறை ஒரு சாதுவை சந்திக்க சென்றிருந்தார். அப்போது அவர், 'தான் பெண்களை பார்ப்பது கிடையாது' என்று கூற . ..மீரா அதற்க்கு ,"இவுலகில் கண்ணன் ஒருவனே ஆண். மற்றவர்கள் எல்லாரும் அவனை அடையக் கூடிய பெண்களே...
உங்கள் குருவிற்கு இன்னும் தன் ஆண் என்ற பேத உணர்வு இருக்கிறதே.."கூறினாராம்.

         இறைவனிடத்தில் தோன்றிய இந்த காதல் , அன்பின் நம்பிக்கையாய் இன்று வரை அனைவரிடத்திலும் நிலவுகிறது. "'எதிர்பார்த்து' கொண்ட அன்பு 'காதல்' அல்ல...அது 'கருமாந்திரம்' .அன்னை மகன் மீது கொண்ட அன்பு எதிர்பார்க்காத அன்பு ஆகும். ஆசிரியர் மாணவன் மீது கொண்ட அன்பு அவன் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. உண்மையான காதல் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறது. உண்மை. கண்ணன் ராதையின் மீது கொண்ட அன்பு நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.நான் கூறும் மேரியின் அன்பினை      பாருங்கள், காதலின் மகிமை புரியும் . காதல் உண்மையானால் அது நிலைக்கும் , நீங்கா புகளைத்தரும் .., வெற்றியினை தேடி தரும் ...ஆதலினால் காதலிப்பீர்.

    பிரான்ஸ் நாட்டில் நடந்த உண்மை காதல் கதை. ஒரு ஆயாவின் கதை . பதினெட்டு வயது இளம் ஆயாவின் கதை.பணி செய்ய வந்த இடத்தில் அவளின் அன்பை பெற்றான் வீட்டின் மூத்த பையன்  .காதல் என்றால் வில்லன் இல்லாமலா..,"அண்ணலும் நோக்கியால், அவளும் நோக்கினால், அவளின் அப்பாவும் நோக்கினார்...".விளைவு ..,கேவலப்படுத்தப்பட்டு ,வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டாள்.  வெளியேறிய மேரி ,பரிசுக்கு சென்று தனது நீண்ட நாள் கனவான விஞ்ஞான ஆராய்ச்சியை தொடர்ந்தாள். இருந்தும் தம் காதலனை புறக்கணிக்க வில்லை. விடா முயற்ச்சியினால் யுரோனிய எக்ஸ் கதிர் வீச்சை கண்டு பிடித்தாள். முடிவில் நோபல் பரிசும் பெற்றார்.
தன் காதலனையும் கரம் பிடித்தார். வைராக்கியம் , எதையும் எதிர்பார்க்காத தன்னலம் , ஆம்! சுயநலம் அற்ற அன்பு , அவள் காதலை வெறி பெறச் செய்தது.

        காதலிப்பவரே ..நீங்கள் காதலிப்பவரின் மகிழ்ச்சியில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

Friday, March 19, 2010

கண்திறக்க வருவாயா...?

மதிப்பெண் மட்டுமே
கல்வி என்று ...
கற்பனைகளை
கல்லறை ஆக்கி....
சில்லறைகளை
கல்வியின் கருவறைகளாக்கி....
கல் கல் என ...
சொல்லி சொல்லியே ...
பிள்ளைகளின் மனதை
கல்லாக்கும்  கல்வி முறை
மாற ....மற்றம் உண்டாக்க ...
கல்லாய் இருக்கும்
சரஸ்வதியே ...
உண்மையாய் கல்வி ...
கண்திறக்க வருவாயா...?  

Thursday, March 18, 2010

என்னுள் நீ...!

லைட் ஹவுசாய் இருந்து ...
உன்னை அறிமுகம் செய்த
உன் தோழிகள் ....
போட் ஹவுசுக்கு அழைத்து
பேச செய்த போது ...
என் வார்த்தைகள்
மோர்ஸ் கோடுகளாய்
தந்தியடிக்க...
யாருக்கு புரிந்ததோ ...
இல்லையோ ...
உனக்கும் எனக்கும் மட்டும் புரிந்தது...!
நம் பார்வையின் ஈர்ப்பு...
பெருவெடிப்பு ஏற்படுத்தி  ...
நமக்குள் தனி பிரபஞ்சத்தையே...
அல்லவா உருவாகியுள்ளது...!

நம் அன்பு
பிளவிப்பெருகி  ...
மொருலா போன்று ...
அன்பு நீண்டு ...
நியுருலா நிலையில் 
நம்முள் முழுமையாய்...
முழு உருவம் அடைந்து ...
நீருக்குள் நெருப்பாய்
என்னுள் நீ..
உன்னுள் நான்...!

நீராய்  பூத்து...
என் வாழ்வில் சுவையூட்டி ....
எனக்கு முழு உருவம் கொடுத்து...
என்னை கடலாக்கி ...
சமுகத்திற்கு காட்டிய
நீயே...
என் அனைத்து ஜென்மத்திற்கும்
உயிராவாய் ...!

Wednesday, March 17, 2010

8டாத அறிவு ..

கோக்கோ 
"என்ன பெரியவரே ...நான்கு நாளா..ஆளை காணாம்..?"

"அட ...அடிக்கிற ஊத காத்து...உடம்புக்கு சேர மாட்டீங்குது ..."

"அட நீங்க கோக்கோ மரம் மாதிரின்னு சொல்லுங்க  ..."

"அது என்ன கோக்கோ மாதிரி ..?"

"கோக்கோ மரம்   அதிகம் காத்து அடித்தா பட்டு போகும் ...இதற்கு பசுமையான மண் ,நீர் தேங்காத பூமியும் தேவை , அதனால தான் ....இலங்கையில ...கற்று வீச்சை தருக்கும் இயற்க்கை பாதுகாப்பான ...'டம்paரா' பள்ளதாக்கில பயிரிடுராங்க ...  "

"அட.. வாதுமை கொட்டை மாதிரி இருக்கும் ..ஓடு பழுப்பு நிறமாகவும் ...பருப்பு வெள்ளையாகவும் இருக்குமே...முந்திரி மாதிரி இதை வறுத்து ..ஓட்டை உடைத்து பருப்ப எடுப்பாங்களே ..அது தானே ..."

"ஆமா ..பெரிசு சரியா சொன்ன ...இது 'ஸ்ட்டோக்கூலியேஸி ' என்னும் இரட்டை விதை தாவரத்தை சேர்ந்த ...'தியோப்ரோமா 'வகையை சார்ந்தது..."

"அது என்னப்பா ...'தியோப்ரோமா '..."

"சரியா ..கேட்ட ..வகைப்பாட்டியலின் தந்தை ...'லின்னேயஸ்' தான் இந்த பெயரை வச்சாரு ...அதுக்கு ..'தெய்வ உணவு 'என்று அர்த்தம் ..."

"அப்ப ...கோக்கோ பானம், சாக்லேட், ஐஸ்கீரிம் ...எல்லாம் சாப்பிடலாம் .."

"நல்லா சாப்பிடலாம் ...இதுல பல விட்டமீன்கள் இருக்கு ...புரோட்டீன் 18 சதவீதம் ,கார்போஹைட்டிரேட் 40 சதவீதம் ,கொழுப்பு 27 சதவீதம்,தாதுப் பொருட்கள் 6 சதவீதம் இருக்கு ..."

"அதனால தான் இது புத்துணர்வு தருதா..!அது சரி இத கண்டுபிடிச்சவன் யாருப்பா...?"

"முதன் முதல்ல இந்த பொணத்தை மெக்சிகோ ...நாட்டினரே..தயாரிச்சு பருகினாங்க ...அதுக்கப்புறம்...அவங்கட்ட இருந்து ...ஸ்பெயின் நாட்டு காரன் ...கோக்கோ தயாரிக்க கற்று கொண்டு ..நூறு ஆண்டுகளாக ரகசியம்மாக வச்சிருந்தாங்க..அவுங்க தான் சாக்லேட் கண்டுபிடிச்சாங்க ...அப்புறம் இத்தாலி , பிரான்சு , ஜெர்மனி ன்னு எல்லாரும் தயாரிக்க கத்துகிட்டாங்க ..."

"ரெம்ப சந்தோசம் ...அப்ப நான் வரவா.."

"எனக்கே ...'சாம்புராணி 'புகை போடுற பார்த்தியா...?

""'சாம்புராணி'பத்தி கூட உனக்கு தெரியுமா...?"

"அத பத்தி எல்லாம் தெரியாது ..எப்பவும் போல ..."(என முடிப்பதற்குள் )

"தம்பி ...சாம்புராணி பல நோய்க்கு மருந்தா பயன்படுது ..."

"ஓ ...அப்படியா..!"

"சுமித்ரா.. ஜாவா வில் உயர்ந்து வளரும் ...'ஸ்டைராக்ஸ் பென்சோமான் 'என்ற மரத்தின் பட்டியில துளையிட்டு ..வெண்மையான பாலை எடுத்து ...உலர்த்தி ..சாம்பு ராணி பிசின் எடுக்கிறாங்க..."

"ஓ..!அப்படியா...?எதுக்கு வீட்ல தூபம் போடுறாங்க ...?"

"அதுவா..வீட்டில இருக்கிற விச பூச்சிகளை  அது கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது...அதனால தான் ..."(என முடிப்பதற்குள் )

"ஓ! அதுதான் உன்னை குளுப்பாட்டி தூபம் போடுறாங்களா....தொல்லை தாங்க முடியல போல."        

Tuesday, March 16, 2010

8டாத அறிவு ..

கொல்கத்தா போறேன் ...
"அண்ணே ...நான் கொல்கத்தா போறேன்..."

"என்னடா...விஷயம்...?"

"அங்க பெரிய கம்பெனியில்ல வேலை கிடைச்சுருக்கு..."

"புது இடம்..கட்டாயம் போட்டி..., பொறாமை..அதிகமா தான் இருக்கும் ..சூழ்நிலைக்கு தக்க மாறிக்கணும்...அப்ப தான் மேலும் மேலும் வெற்றி பெற முடியும்..."

"என்ன அண்ணே சொல்லுறீங்க ...?"

"இப்ப அம்மை ஒருமுறை வந்தா ..மறுமுறை வதாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க...ஏன்னா ..அது நம்ம உலுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்திய கொடுத்து ..நிரந்தரமாக்கிடும்...அதுபோல நீ எந்த எதிர்ப்பு வந்தாலும் ..உன்னை காப்பாத்திக்க கத்துக்கணும் ..இல்ல எதிரி மாதிரியாவது நடிக்க கத்துக்கணும்..."

"விவரமா சொல்லுங்கண்ணே..."

"பெரியம்மை , டிப்திரிய்யா ,போலியோ,ராபீஸ் ,டெட்டனாஸ் ...கக்குவான் இருமல் ..(இருமி கொண்டே ..)போன்ற நோய்களுக்கு வேக்சிநேசன் செய்கிற மாதிரி ..."

"அது என்ன வாக்சிநேசன் ..."

"அப்ப சொன்ன வியாதிகளை உண்டாக்கிற ...வீரியமற்ற கிருமிகளை ..ஊசி மூலமாக நம்ம உடம்பில செலுத்தினா ...அந்த  நோயிக்கு எதிரான ...ஆண்டிபாடிஸ் உருவாக்கி ..நோய் வராம பாதுகாக்கலாம் ...புரிஞ்சதா ..."

"அதுக்கும் நான் ஊருக்கு போறதுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா..?"

"இருக்கு ..1680 ஆம் ஆண்டு ..இத்தாலியில..காஸ்திக் கிளியோனே ..என்ற சிறிய  ஊரில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப்பு பெஸ்க்கி என்பவர் 1709 ஆம் ஆண்டு குரு பட்டம் பெற்று ..1711   ஆம் ஆண்டு மேற்கு கடற்கரை யிலுள்ள  ..கோவா  வந்து இறங்கி ...கடைசியா.. மதுரை மிஷன் என்ற தலைமை நிலையம் உருவாக்கி நம்ம மதுரையில கத்தோலிக்க மதத்தை பரப்ப வந்தாரு ..."

"நம்ம வெள்ளைகாரங்க அப்ப நம்மளை ஆண்டாங்களா ...பறங்கிகள் மதம்ன்னு எசினாங்களே ..."


"கரக்டா ...சொன்னே ...ஆனா இவரு மட்டும் மதத்தை பரப்பினதுல வெற்றி பெற்றார் .."

"எப்படி அண்ணே ...?அது சரி இவரு யாரு..?"

"வரிசையா கேளு ..அவசரப்படாதே..."

"ம்ம்ம்"
"கி.பி. 1542 ல்ல போர்த்திகீசிய ..'புனித சவரியார் ' ஞான ஒளி ஊட்ட தமிழகம் வந்த வரலாறு 1606 ல்ல இத்தாலிய தத்துவ போதகரின்  திருமறை  தொண்டு போன்ற வரலாற்றை உன்னிப்பா கவனிச்சா  .."

"அண்ணே..இத்தாலிக்கும் ..தமிழகத்துக்கும் என்ன அண்ணே சம்பந்தம்..."

"புரியாத தன் பெயரை தமிழ் படுத்தினார்...'தைரிய நாதர் ' என்று பெயர வச்சாரு ...தமிழ் பயின்றாறு..ஈசியா நம்ம ஜானங்கள் மதம் மாற உதவினார் ..சாரி ...தன் மதத்தை பரப்பினார்..."

"யாருண்ணே இவரு...?"

"நம்ம பழனி 'சுப்புர தீபக் கவிராயரை ' ஆசிரியராக பெற்று ..'கூளப்பன் நாயக்கர் காதல் 'என்ற நூலை படைத்தவர் ...புரியுதா...?"

"புரியலை அண்ணே..."
"அட போப்பா ....கிருத்துவத்திற்க்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய வீரமா முனிவர் தான் ..அவரு தமிழ் மொழி கத்துகிட்ட மாதிரி நீயும் கொல்கத்தா மக்கள் பேசும் பெங்காலி மொழி கத்துகிட்டைன்னா...சீக்கிரமா முன்னுக்கு வரலாம்..."

"'புதியவனாக ஒரு நாட்டுக்கு போகும் போது ..அந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் கேட்டு தெரிந்து கொள் 'அப்படின்னு கான்பூசியஸ் சொன்ன மாதிரி ...மொழி கத்துக்க அறிவுரை சொன்னதற்கு நன்றி அண்ணே..."

"அது சரி ..நீ எந்த கம்பனிக்கு வேலைக்கு போற..சொல்லவே ..இல்லை ...?"

"நீங்க தான் சொல்லவிடாம பேசிகிட்டே ...இருக்கீங்க ..நிரோத் கம்பனிக்கு ..சேல்ஸ் மேனேஜர் .."

"இதுக்கு மொழி தேவையே இல்லை ...ம்ம்ம் உன் பெயரு மறந்து போச்சு ...?"

"தர்ம ராஜா ...அண்ணே.."

"நீ பெயர மாத்திக்கப்பா ..'புள்ளி ராஜா 'ன்னு..."

"!!!!"      
"

ஆசிரியர்கள் போராடுவது எதற்கு ..?

                                          


தெருவில் இறங்கி ஆசிரியர்கள் காலம் காலமாய் போராட்டம் நடத்துவது கதையாகி போய்கொண்டு   இருக்கிறது .இன்று இவர்கள் போராடுவது எதற்கு என்றால் மாணவர் ஆசிரியர் சதவீதம் மாற்றி அமைக்கப்பட வேண்டி, களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
          இன்றைய நிலையில் தமிழக அரசு அரசாணை எண் 525 ன்படி  ஒரு ஆசிரியருக்கு நாற்பது மாணவர்கள் இருக்க வேண்டும் .                                  

          அதிகமான மாணவர் எண்ணிக்கை வைத்து , சிறப்பான தரமான கற்றல் நடை பெறாது என்பது போராடும் இவர்களின்  வாதம். மேலை நாடுகளில் தொடக்க கல்வியில்  மாணவர்கள் ஆசிரியர் எண்ணிக்கை பத்து மாணவர்களுக்கு  ஒரு ஆசிரியர் ஆகும் . அயர்லாந்தில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு  மதிப்பூதியம் வழங்கப் படுகிறது எனஉதாரணங்களை அடுக்கி கொண்டே போகிறார்கள்.
     
          தமிழக அரசு கொள்கை அளவில் ஆசிரியர் மாணவர் விகிதம் ஒன்றுக்கு முப்பதுக்கு  என்று கூறுகிறது. ஆனால் அதை நடை முறை படுத்தவில்லை அதுவும் இவர்கள் குமுறல்களுக்கு காரணம். இன்று பிறப்பு விகிதம் குறைந்துள்ளது , அரசு கிராமம் தோறும் சென்று குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லுகிறது. ஆசிரியர்களும் அதன் அவசியத்தை வரும் பெற்றோர்களிடம் எடுத்து கூறும் நிலையில் பள்ளிகளில் மாணவர் பதிவு  சதவீதம் குறைந்துள்ள நிலைமையில் , ஆங்கில பள்ளிகளின் ஆதிக்கம் எல்லாம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி கல்வி பள்ளிகளின் ஆசிரியர்களை கவலை அடைய செய்துள்ளது. 
                     
           மாணவர் நிலைமை சற்று எண்ணிப் பார்ப்போம் . அதிகமான மாணவர்களை கொண்டு கற்று தரப்படும் கல்வி , முழுமையாக அவனை சென்று அடைவதில்லை. கல்வி தரம் அதிகரிக்க நினைக்கும் அரசு இதை ஏன் கவனத்தில் கொள்வதில்லை . இன்று செயல் வழி கற்றல் வந்தவுடன் ஒவ்வொரு மாணவர்களும்   அவனின் கற்றல் தன்மைக்கு ஏற்ப , கற்றலை தொடரலாம். ஆசிரியரின் தனிப்பட்ட கவனம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு நாளைக்கு இருபது மாணவர்களுக்கு  மேல் கற்று  தர இயலவில்லை .அதாவது கற்றல் செயல் இருபது மாணவர்களுக்கே கொண்டு செல்லப்படுகிறது. குறைந்த அடைவு நிலையிலேயே மாணவன் உள்ளான்.இது அரசு எடுக்கும் புள்ளி விவரங்களில் தெளிவாக தெரியும். அதனால் பள்ளிகூடங்களில் குறைந்த கற்றல் செயல் பாடுகளுடைய மாணவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையால்   ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
     
     எது எப்படியோ மாணவர்களுக்கு பிடித்த செயல் வழி கல்வி திட்டத்தில் உள்ள குறைகள் நீக்க , மாணவர் எண்ணிக்கை குறைத்தால் இன்னும் தமிழகத்தில்  நல்ல கல்வி தொடக்க கல்வியில் கிடைக்கும் என்பது  நிச்சயம்.    Monday, March 15, 2010

அடக்கி ஆள வேண்டியதா ....?

"டிசம்பர் 1" எயிட்ஸ் விழிப்புணர்வு நாள் ....இது அனைவரிடத்திலும் ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு  .பல நாட்களுக்கு முன் நடத்த விஷயத்தை உங்களுடன் பகிர்கிறேன் .

"செக்ஸ் கல்வி குழந்தைகளுக்கு தேவையா..?"

"சார் , மறைக்க வேண்டியதை ...வெளிப்படையாக பேசினால் இப்படிதான் தப்பு நிறையா பெருகி ...எயிட்ஸ் என எல்லாம் வரும்.."

"தப்பு நடக்குறது ..முக்கியமில்ல...பாதுகாப்பா இருக்குறது தான் ....முக்கியம்."

"கையில காண்டம் கொடுத்துட வேண்டியது தானே..."

"சார்...அமெரிக்கால ...மூன்றாம் வகுப்பு மாணவன் நிரோத் வச்சுருக்கான்..."

"அவன் கலாச்சாரமும் ..நம்ம கலாச்சாரமும் ...ஒண்ணா...இதெல்லாம் நம்ம பசங்களுக்கு ...தேவையில்லை..."

"நான் எயிட்ஸ் கேம்ப் போயிருந்தேன்..அதுல பதினொன்றாம்...வகுப்பு மாணவன் ...என்னை விட வயசுல மூத்த பெண்ணுடன் உறவு கொண்டால் ..எயிட்ஸ் வருமா...?ன்னு கேட்கிறான்..."என அனைவரையும் ஆச்சரிய படுத்தினார்...ஆசிரியர் ராம சுப்பு.

"தமிழ்நாட்டை பொறுத்தவரை லாரி டிரைவர்களிடம் தான் ...எயிட்ஸ் அதிகம் காணப்படுகிறது...அதுவும் அறிகுறி முற்றிய நிலையில் தான் காய்ச்சல் , தலைவலி, உடல் பருமன் குறைவு போன்றவை தோன்றும்...ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது..."என கல்லுப்பட்டி பயிற்சிக்கு சென்ற ராம சுப்பு கூறினார்.

"சார்...ஏழாம் வகுப்பு மாணவனுக்கு எயிட்ஸ் உண்டு..பத்தாம் வகுப்பு போறதுக்கு முன்னாடியே செக்ஸ் தொடர்பு ஏற்பட்ட பல பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்...அவர்களுக்கு அறியாமலேயே  எயிட்ஸ் பரவுகிறது ..."என பல உண்மைகளை கொண்டு எங்கள் உயர்  நிலை பள்ளி மாணவர்களுக்கு எயிட்ஸ் விழிப்புணர்வு  கொடுத்தார் கல்லுபட்டி முதல்வர்.

       அதை விட முக்கியமான விஷயம் என்னுடன் பணியாற்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் பரமசிவம் கூறிய விஷயம் என்னை மேலும் சிந்திக்க வைத்தது.

     பரமசிவம் ..அதிகாலை எட்டு மணி பதினைந்து நிமிடம் தாண்டாமல் வரும் , கைவிரல் விட்டு எண்ணிவிடக்கூடிய வெகு சில ஆசிரியர்களில் ஒருவர். பழகுவதற்கு இனிமையானவர். சிரித்த முகத்துடன் காணப்படுவார். அதிகாலை வந்தவுடன் மைதானத்தை சுத்தபடுத்தி மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல செய்வார்.(காக்கா பிடிக்க தலைமையாசிரியருடன் யாரும் வரும் முன் வந்து பலரை குறை கூறி ,காரியம் சாதிப்பவர் என அவருடன் பழகும் பலரும் பேசி சிரிப்பதை பார்த்திருக்கிறேன் . பாருங்கள் நல்லது செய்தால் இப்படியும் பெயர் வாங்க வேண்டும் . அய்யா நான் அவன் அல்ல ...)

       ஒருநாள் விரைவாக வந்த ஆசிரியர் பரமசிவம் ...எதார்த்தமாக வகுப்பறை நோக்கி சென்றுள்ளார். நான்கு ஐந்து  மாணவர்கள் கூட்டமாக நிற்க ...பெஞ்ச்சுக்கு கீழே பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர். 'என்ன நடக்கிறது ?' என இவரும் அவர்களுக்கு தெரியாமல் பின்னால் நின்று உற்று நோக்கினால் ...'சொல்ல வாய் கூசுகிறது '....இருந்தாலும் எயிட்ஸ் விழிப்புணர்வு விஷயம் ...சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உணர்த்த வேண்டியது.

       விசயம் என்னவென்றால் ... நான்காம் வகுப்பு மாணவன் ..தன் சக வகுப்பு மாணவனை குப்புற படுக்க வைத்து ...அது என்ன வென்றே அறியாமல் ..'உறவு ' கொள்ள முற்பட்டு கொண்டிருக்க பிற மாணவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அனைவரையும் விரட்டிய ஆசிரியர் ...அவனை கண்டித்துள்ளார். இதை பிறரிடம் மற்றும் என்னிடம் எயிட்ஸ் பற்றி விவாதம் வரும்முன் ...கூட கூறியது கிடையாது.    எயிட்ஸ் அவசியத்தை உணர்ந்து கூறினார் . எனக்கு அந்த மாணவனை பார்க்க வேண்டும் போல் ஆசை. உடனே அவரிடம் அவனை காட்டும் படி கேட்டுக்கொண்டேன்.

 "சார் ..அத போயி விசாரிக்க ஏதாவது எடாக்குடமா ஆகிட போகுது...சனியன போயி விசாரித்து ....நீங்க ஏதாவது கேட்டு ...அது பிரச்சனை ஆக போகிறது. இத எப்படி விசாரிக்கிறது...."

"பரவாயில்லை ...நான் அவனை பார்த்தே ...ஆகணும்...என்ன ஆகிட போகுது...வராத பார்ப்போம் ..."(வற்புறுத்த அவர் அந்த இருவரையும் என் வகுப்பிற்கு அனுப்பினார் )

"என்னடா ...என்ன தப்பு பண்ணினே...?"

"சார் நான் இல்லை சார்...இவன் தான்  என்னை ...."(தவறு என்ற உணர்வுடன் ...நிறுத்தினான்)

"என்னடா இவன் தான் ...நடந்தத சொல்லுகிறையா ..? இல்லை போலிச கூபிடட்ட..."(எங்களை போன்ற துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பிசாசு பூதம் எல்லாம் அவர்கள் தான் ... ஆபத்தாண்டவர்கள் )

"அது சார் ...தப்பான விஷயம் ...."

"என்ன தப்பு ...அது ஒண்ணும்  தப்பு இல்லையே ...யார் சொன்னது...?"

"இல்லை சார்...தப்பு ..."(என அழுகும் குரலில் )

"ஏன் அழுக்கிற...ஒன்ன என்ன அடிச்சேனா ...? யாருடா தப்புன்னு சொன்னது..?யார் இப்படி கற்று கொடுத்த ...?"
(அதற்குள் எதுவும் தெரிய வில்லையே ....பிரச்சனை ஆகிவிட போகிறது என பயந்து என் வகுப்பறைக்கு வந்தார் ஆசிரியர் பரமசிவம்)
"சார் விடுங்க ...இத போயி கேட்டுகிட்டு ..."

"சொல்லுடா...சார் வந்தா விட்டுடுவேனா...?"

"சார் ...அப்பா ...சொல்லி கொடுத்தாரா ...?"

"படவா...ராஸ்கல் ... பேசாம இருக்கிற...பல்ல தட்டினா சரிப்படுவ.."

"பெரியப்பா...தான்" என அருகில் இருந்தவன் சொல்ல...

"பெரியப்பா விட்டுக்கு போனியா....இனி போகாத....கதவ தட்டிகிட்டு போ ...இனிமே ..அதெல்லாம் பார்க்க கூடாது....பார்த்தாலும் தெரியாத மாதிரி வீட்டுக்கு வந்திடனும்..."

"சார் ...பெரியப்பாவும் அவுங்க அம்மாவும்..."என சம்பந்தம் இல்லாமல் அருகில் உள்ளவன் சொல்ல ..."போடா ...நீ வகுப்புக்கு போகலாம் ...இத பத்தி இனி போசினது தெரிந்தது ...டி .சி. வாங்கி கையில கொடுத்துடுவேன்..."என அவனை விரட்டினேன்.

"அன்னிக்கு நான் சீக்கிரமா வீட்டுக்கு போனேனா...அப்ப எங்க பெரியப்பாவும்...."

"நிறுத்து ...இனிமேல் இதை பத்தி யாரிடமும் சொல்ல கூடாது ...இந்த தப்பை இனி செய்யக் கூடாது ...புரிந்ததா...உங்க வீடு ஒரு ரூம் மட்டும் தான...."

"சார் அவுங்க வீடு குடிசை வீடு ..."என பரமசிவம் சொல்ல ...அவனையும் விரட்டினோம்.

"சார் பெரிய கதை ..." என பரமசிவம் ஆசிரியர் கூறிய கதை என்னை மேலும் ஆச்சரிய படுத்தியது.

"சார் ...முதல்ல பயன்னுக்கு அப்பா கிடையாது ....இரண்டு பசங்க ...அம்மா மட்டும் தான் ...பெய்யப்பா தயவுல இருக்காங்க ...அம்மா கஞ்சா வியாபாரி ....இவங்க இரண்டு பெறும் பள்ளிகூடம் வருவதே...பெரிசு ..இல்லன்னா இவனும் கஞ்சா விற்க போயிடுவான்..."

    ஏழை குடும்பங்களில் அனைவருக்கும் மத்தியில் நடக்கும் தாம்பத்திய உறவு ...என்னவென்று புரியாமல், தவறு என்று உணராமல்,சற்றும் யோசிக்க சொல்லாமல் அதையே திரும்ப செய்ய சொல்லும் பிஞ்சு உள்ளங்களின் மனது, அவனுடன் சக மாணவனையும் தவறு என்று உணர்த்தாமலோ தவறு செய்ய தூண்டுகிறது மிகவும் வருத்தமளிக்கிறது .
   
   பள்ளிகூடம் அனுப்பினால் மட்டும் கடமை முடிந்து விடுகிறது என நினைக்கும் பெற்றோர்களே ...வீட்டில் உங்களை அறியாமலே நிகழும் தவறுகளை உணர வேண்டும் ...தாம்பத்தியம் தவறு அல்ல ...அதிலும் நேர்மை , கவனம் வேண்டும். தன் குழந்தைகளின் மனதை புண்படுத்தாத வண்ணம் பாதுகாத்து உறவு கொள்ளுங்கள். பாதுகாப்பு என்பது உறையில் மட்டும் அல்ல ....மனித உணர்விலும் பாதுகாப்பு தேவை, அதுவும் குழந்தைகள் உணர்வு பாதிக்கா  வண்ணம் உங்கள் எண்ணம் ஈடேற வேண்டும் . 


        நான்கு சுவர் விஷயம் ...நாலு பேருக்கு அறியும் வண்ணம் மாறும் போது ...நாளுக்கு நாள் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் தான். "பாதுகாப்பான உறவு " என்று கூறுவதே ...(எல்ல வழியிலும் பாதுகாப்பு என்பது தான் அர்த்தம் ) ...ஆட்கொல்லி எயிட்சுக்கு மருந்தாகும் .அதை தொடக்கபள்ளியிலே கொடுப்பது மிக முக்கியம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும். 


     ஆண் ஆசிரியர்கள் இருவர் இருந்ததால் நிலைமை வெளி கொணர முடிந்தது.ஒருவர் மட்டும் எனில் புதைந்து போயிருக்கும் இதை எப்படி சொல்லுவது என்று மறைத்து இருப்போம். 

அரசு தொடக்க கல்வியில் பெண் ஆசிரியர்களை நியமனம் செய்வது ...இது போன்ற விசயங்களை தாய் உள்ளத்துடன் அணுகுவதற்கு தான் என்பது புரிகிறது. 

Thursday, March 11, 2010

யாரடி நீ..?

யாரடி  நீ ..?

என் பாதையில்
நித்தம் வந்து ...
இதழ் விரித்து
புன்னகை சிந்தி ...
இதயத்தில் பூக்கிறாய்...!

யாரடி நீ..?


என்னிடம் எதோ சொல்ல
உன் இதழ் குவிகையில்...
என் இதயம் அல்லவா விரிகிறது...!

யாரடி நீ...?

பார்வையில் ஊடுருவி
இதய அறையில்
நகலாய் வந்தாலும் ...
என் உடல் செல்
அனைத்திலும் அல்லாவா...
உறைந்து இருக்கிறாய்...
உருவாய் கருவாய் ...!

யாரடி நீ...?

சொல்லி வருவதா...
சொல்லாமல் வருவதா...
ஆனால் ஒன்று மட்டும்
உறுதி ...
நீ வாராமல் போனால் ..
நான் நானாக இருப்பதில்லை..
நீ யாகவே மாறிவிடுகின்றேன் ..!

யாரடி நீ..?

அய்யா படிக்கும் உங்களுக்காவது
தெரிந்தால்  சொல்லிவிடுங்கள்..!
பார்த்த பின்
 நீங்களும்
இப்படி புலம்பி விடாதீர்...!

8டாத அறிவு ..

சக்கரை

(கிணற்றிலிருந்து  குளித்து விட்டு வந்த ஒருவரை பள்ளி ஆசிரியர் சந்தித்தார்)

"என்ன மாடசாமி ...குளித்து துவட்டின பின்னாடி கையில சோப்பு போடுற...?"

"அத ஏன் கேட்கிறிங்க ..உடம்பு அரிக்குது வாத்தியாரே...தண்ணி சரியில்லேன்னு நினைக்கிறேன்..."

"அட தண்ணீரை குறை சொல்லாதிங்க ...சர்க்கரை வியாதி இருக்கு.. ன்னு சொல்லுங்க "

"என்ன சக்கரை வியாதியா ....?என்ன சொல்லுறீங்க...?"

"உடம்பு அரிப்பு அதுவும் அடிவயித்தில அதிகமான நமச்சல் ....இது நிச்சயம் சர்க்கரை வியாதிதான்...."

"அப்ப இது ஒரு அறிகுறி..."

"ஆமாம்ப்பா ஆமாம்....கண் பார்வை குறைதல் ,எப்பவும் துக்கம் வருதல், இரவில அடிக்கடி சிறுநீர் கழித்தல் ...நெடுநாளா  ... கால் புண் ஆறாமல் இருத்தல் ,சோர்ந்து போதல், எவ்வளவு தண்ணீர் தாகம் எடுத்தாலும் தண்ணீர் குடித்து கொண்டே...இருத்தல்,திடீர் என்று எடை குறைதல்..."

"இதெல்லாம் சர்க்கரை வியாதியின் ஆரம்ப அறிகுறி ...அப்படி தானே...ஒரே ..கவலையா இருக்கு ..."

"ஏன் ?"

"பொங்கல் வருதுல்ல..கரும்பு சாப்பிட முடியாதே...!"

"என்ன கரும்பில மட்டுமா...சக்கரை இருக்கு..."

"அப்புறம்..."

"பீட்ரூட்டில இருந்தும் சர்க்கரை எடுக்கலாம்..."

"வாத்தியாரே...நானே விவசாயி ....கொஞ்சம் பீட்ரூட்ட பத்தி தெளிவா சொல்லுங்க ..."

"1750 ஜெர்மனி காரங்க ...பீட்ரூட்டில இருந்து சர்க்கரை தயாரிக்கலாம்ன்னு ...ஆராய்ச்சி செஞ்சாங்க ...நெப்போலியன் 1811ல்ல ...ஐரோப்பா நாடுகள் பிரான்ஸ் உடன் தொடர்பை துடித்தப்ப ...அவரு பீட்ரூட் பயிரிடுவதை ஊக்கப்படுத்தினார்..."

" அப்ப பீட்ரூட்டுல்ல இருந்து இப்ப சர்க்கரை எடுக்கிறாங்க ..."

"பீட்ரூட்டில இருந்து சர்க்கரை தயாரிக்கலாம்ன்னு ...முதல்ல  கண்டு பிடித்தவர் ...(1747 ) மெர்லின் நாட்டை சேர்ந்தவர் .."  

"அப்படியா...?"

"செனப்போடியேசி ....என்னும் குடும்பத்தை சார்ந்தது...இடத்தின் தன்மைக்கு ஏற்ப வெள்ளை, சிவப்பு நிறமா இருக்கும்..."

"பீட்ரூட்டுல...சக்கரை சத்து மட்டும் தான் உள்ளதா  ... ?"

"பீட்ரூட்ல ...௦10.5    சதவீதம் சர்க்கரை பொருள் ....81 .5 சதவீதம் நீர் சத்து இருக்கு ..."

"அப்ப வேறு சத்து கிடையாதா...?"

"அவசர படாதீங்க ...ஒரு அவுன்சு 'பீட்ரூட்ல ...'குளுட்டன்'என்ற புரத சத்து .5கிராம் கொழுப்பு சத்து .1கிராம் ,கார்போஹைட்ரேட்...3.1கிராம்,37 மில்லி கிராம் சுண்ணாம்பு சத்து ...17 மிலி கிராம் பாஸ்பரஸ் ,.3மி.கிராம் இரும்பு சத்து ...இருக்கு , அது மட்டும் இல்ல விட்டமின் பி1,  பி2 , சி யும் உள்ளன..."

"அப்ப மருத்துவ குணம் கொண்டவை ...அப்படி தானே...?"

"ஆமா ,ஆமா...கல்லீரல் குறைபாட்டை நீக்கும் ...சரும எரிச்சலை போக்கும் ...கண் அலர்ச்சியை குணப்படுத்தும்...உள் மூலம், வெளி மூலத்தை குணபடுத்தும்..."

"இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீ ங்க...நீங்க பேசாம டாக்டர் ஆகி இருக்கலாம்..."

"அதல்லாம் ஒண்ணும் இல்லீங்க ...எனக்கும் சர்க்கரை வியாதி ...டாக்டரை பார்த்து பேசுறதால ..இவ்வளவும் தெரிஞ்சு இருக்கேன்.."

Wednesday, March 10, 2010

8டாத அறிவு ..

வால் பையன்

(திருமணத்திற்கு பின் மூன்று நண்பர்கள் சந்தித்து கொண்டனர்.)

"உங்க பையன் தங்கம்ன்னா ..என் பையன் படு சுட்டி ..பெரிய வாலுன்னா பார்த்துக்கங்களேன்  .. "

"தங்கம்ன்னா...சுத்த தங்கமா ...இல்லை...?"

"உனக்கு எப்பவும் கேலி தான் ...தங்கத்தில்ல..என்னப்பா சுத்தம் ..அது இதுன்னு ...?"

"இருக்கே ..24 காரட்டா...? 22 காரட்டா  ..?"

"நிறுத்துப்பா...அது என்ன ..காரட்டு ...கத்திரிக்காய்ன்னு ..."

"தங்கத்தையும் வைரத்தையும் ...'காரட்'என்ற அலகால் மதிப்பிடுகிறோம்...'காரட்' என்பது 200மில்லி  கிராமுக்கு சமமானது..."
  
"அப்ப ... இந்த 24 காரட்...?"

"அவசரப் படாதிங்க ....சொல்லுகிறேன்..."

"ம்ம்ம்ம்"

"வேறு உலோக கலப்பில்லாத தங்கம் ...சுத்தமான தங்கம் ...அது 24 காரட் ..22 காரட்டுன்றது ...22 பாகம் தங்கம் 2 பாகம் தாமிரம் கலந்தது...."

"அப்ப 18 காரட்டுன்னா ...18 பாகம் தங்கம் 6 பாகம் தாமிரம் அப்படிதானே ..." என வாலு பையனின் அப்பா கூற ...

"கரக்ட்டு ..."

"அது சரி ..தங்கத்துக்கு விளக்கம் சொன்னியே ....வாலுக்கு ...விளக்கம் சொல்லு ...பார்ப்போம்.?"என தங்கமான பையனின் தந்தை

"மனிதனுக்கு வால் இருந்ததன்  அடையாளம் ...முதுகெலும்பின் கடைசியில் உள்ள நான்கு எலும்புகள் ...அது தான் 'காக்சி '...இது பிராணிகளின் வால் பகுதியின் ஆரம்பத்திலுள்ள எலும்புகள் போன்றே... தோன்றும்..."

"அப்படியா..?"

"என்ன இது போதுமா..இல்லைன்னா..ராமகிருஷ்னர் சொன்ன ஆன்மிக விஷயத்தை சொல்லனுமா...?"

"என்ன அது ஆன்மிக அறிவியல் விஷயம்...?"

"1985 ல் பிரம சமாஜ தலைவர் ..கேசவ சந்திர சென் ..னை காண தன் சீடர்களுடன் சென்றார்...கேசவரின் ஆன்மீக சாதனைகளை பார்த்து ...வியந்தார். பின்பு...பக்தி  பாடல்களை பாடி கொண்டே ..ராமகிருஷ்ணர் ...சமாதி நிலை அடைந்தார்..."

"அப்புறம்..."

"அதை சென்னின் ஆட்கள் கேலி செய்தனர்..ராம கிருஷ்ணருக்கு பைத்தியம் பிடித்து விட்டது...என்று கூறினார்."

"ராமகிருஷ்ணரின் சீடர்கள் என்ன செய்தனர்...?"

"சீடர்..ஹிருதயர்...பிரணவ மந்திரத்தை ..சொல்ல ..புற நினைவு திரும்பினார்..அவரை கேலி செய்தவர்களை பார்த்து ...'உங்கள் வால் விழுந்து விட்டது ' என்றார் "

"அது என்ன வால் விழுந்து விட்டது...?"

"அவரே ..விளக்கமும் தந்தார்...'வால் இருக்கும் வரை தவளை நீரில் மட்டுமே வாழ முடியும் ...நிலத்திற்கு வர முடியாது... வால் விழுந்த பின் நிரிலும் நிலத்திலும் அந்த தவளையால் வாழ முடியும் ...அது போல மனிதனின் அறியாமை வால் விழுந்த பின் ..உலகவியல் வாழ்க்கை  என்னும் நீரில் மட்டுமின்றி ..சச்சிதானந்த பேருலகிலும் வாழ முடியும் ..எனக் கூறினார்'."

"நீ நிறைய விஷயம் தெரிந்து வைத்திருக்க.. இப்ப நான் உன்னை ஒரு கேள்வி கேட்கவா ...?"என வால் பையன் அப்பா  கேட்க...

"ம்ம்ம் தாராளமா ..."

"முனிவர்கள் ..ஏன் புலி தோல் மீது உட்காந்து இருக்காங்க ...?"

"தெரியலியே...தெரிஞ்சா ...சொல்லேன் ...தெரிஞ்சுக்கிறேன்  ..."

"அதுவா..புலி மேல உட்கார்ந்தா..புலி கடிச்சிடும்....அதுனால தான் புலி தோல் மேல உட்கார்ந்து இருக்காங்க ..."

"!!!"( மனதுக்குள்ளே...உன் பையன் மட்டும் வாலு இல்ல ...நீயும் தான் அதுவும் ஒரு சரியான வாலு ..)

Saturday, March 6, 2010

8ட்டாத அறிவு

உணவும் பழமொழியும்

(ஒருவர் தட்டு நிறைய சாதம் வைத்து , பல வகை குழம்பு வைத்து கொண்டு , தன் கைக்கும் வாய்க்கும் விடாது வேலை கொடுத்துக்   கொண்டிருந்தார். அவரை பார்க்க வந்தவர்...)

"டேய்..ராமு !'அகப்பை குறைந்தால் கொழுப்பை அடக்கலாம்'.. "

"எப்ப பார்த்தாலும் ஏதாவது பழமொழி சொல்லிட்டு போயிற ...ஒரே..குழப்பமாய் இருக்கு ...இப்பவாவது அர்த்தத்தை சொல்லுறியா..."

"நீ திண்ணு திண்ணு கொழுத்து போயிருக்க...அதனால அகப்பையான இரைப்பைக்கு செல்லும் உணவோட ..அளவை குறைத்தால் மட்டும் கொழுப்பை அடக்கலாம்..."

"குறைத்து பார்த்தாலும் வாயை கட்டுப்படுத்த முடியலையே ...அது சரி நம்ம குப்பண்ணே...கல்யாண வீடில்ல ..., வேலைக்காரன் சோமுவை பார்த்து ...'இன்று விருந்து நாளை உபவாசம்'...ன்னு சொன்னீயே ...அதுக்கு என்ன அர்த்தம்.."

"அவனும் உன்னை மாதிரிதான் ...கண்டபடி பண்ணையார் வீட்டில திங்குறான் ..ஒரு நாள் உபவாசம்... அதாவது பட்டினி கிடந்தால் ...வயிறு உப்புவது ,செரியாமல் இருப்பது ,அதனால ஏற்படும் வயிற்று புண் நோய் இவை எல்லாம் வராது. "

"அது சரி... நீ நம்ம ஒல்லியான பார்த்து எள்ளு ...கொள்ளு ..ன்னு எதோ சொன்னியே ...அது என்ன ...?"

"அதுவா ..இளைத்தவனுக்கு எள் கொடு ; கொழுத்தவனுக்கு கொள்...கொடு "

"ஒல்லியானுக்கு அர்த்தாம் புரியாம அண்ணே என்னை திட்டுதுன்னு வருத்தப் பட்டான்..."

"அட பாவி ...அதுக்கு அர்த்தம் தெரியலைன்னா ...கேட்க வேண்டியது தானே...ஒல்லியானவன் குண்டாகனும்ன்னா ...நல்லெண்ணெய் கொடுக்கும் எள்ளை திண்ண வேண்டும் ...உன்ன மாதிரி தடியன் எடை குறையனும்ன்னா ...கொள்ளு பயறு திண்ணனும் ...புரிஞ்சுதா..."

"'ஆயுளை நீட்டிக்க உணவினை குறை '...அப்படிதானே...?"

"ஒரு வேலை உண்பவன் யோகி ...இருவேளை உண்பவன் ...போகி ...மூன்று வேலை உண்பவன் ...ரோகி ...உன்னை மாதிரி ...பொழுதுக்கும் சாப்பிடுறவன் ....துரோகி ..."

"!!!!"

"பசித்து புசித்து அளவறிந்து உணப்து நீண்ட ஆயுளை தரும்"

"என்னை கேலி பண்ணினது போதும்...நம்ம சோழனை பார்த்து ..வாழை வாழ வைக்கும்..ன்னு சொன்னியே..."

"அதுவா...அவனுக்கு ...சிறுநீரக கல் இருக்கு ...அதனால வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது ...உடலுக்கு ஊட்டம் தரும் ..வாழை பூ சிறு நீராக கல்லை நீக்கும் ...வாழை சாறு ..சிறுநீரக கல்லை வெளியேற்றும்...தண்டு சிறுநீரை பெருக்கும்...புரிஞ்சுதா.."

"நீ மதுரை காரன் தானே ...உன் ஊருக்கு எத்த பழமொழி சொல்லு பார்ப்போம் .."

"உடம்பை முறித்து கடம்பில் போடு .."

"இதுக்கும் மதுரைக்கும் என்ன சம்பந்தம் ..."

"அதுவா..மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி உள்ள இடம் கடம்பவனம்..கடம்பு மரம் நிறைந்த ஊர்...மதுரை ..உடல் வலியை போக்கி ...ஓய்வையும் ,உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்ப மரத்துக்கு உண்டு. ..அதனால தன் மதுரை காரன் எல்லாம் சோர்வின்றி ..எப்போதும்..பிரெஷ் ஆக இருக்கிறோம் ..."

"அது சரி கடைசியா ஒரு சந்தேகம் ..."

"கேளு ..பிரெஷ் ஆக இருக்கும் போதே ...கேளு சொல்லுகிறேன்..."

"உன் பொண்ட்டாடிக்கு   அடிக்கடி ...மருதாணி கை , கால் ள்ள வச்சு நீயே விடுகிறதா ...கேள்வி பட்டேன் உண்மையா..."

"ஆ மாம் ...உன்னை மாதிரி எதாவது  சொல்லி உதையும் , மிதியும் வாங்க சொல்லுறியா...நான் திட்ட நினைக்கிறப்ப எல்லாம் மருதாணி வைத்து விடுவேன்..."

"!!!!!"

அவ்வளவு எளிதல்லா ...

.

       நான் ஆசிரியராகி பன்னிரண்டு வருடம் ஆகிறது...புதிதாய் வந்த ஆசிரியர்கள் 'துவக்கப் பள்ளி மாணவர்களை கவனிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்..."என அடிக்கடி  கூறுவது உண்டு.

     நமக்கு தான் சர்வீஸ் அதிகமாயிற்றே...சும்மா ஒத்துக்கொள்ள முடியுமா...?"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ..சரியான முறையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினாள் ... எல்லாம் ஈசியாக தான் இருக்கும் ..."

    "இவரு என்னைக்கு தான் உண்மையாய் ஒத்துக்கொண்டார்...."என முனங்குவது உண்டு .

      நான் காலை பிரார்த்தனை கூட்டத்தில் பேசப்போகிறேன் ....என்றால் மாணவர்கள் ஆவலோடு கவனிப்பார்கள்.

"சார் ஜோக்கு சொல்லுங்க ...சார் .."என கமண்டு வேறு கிடைக்கும் .கூட்டம் முடிந்து கலைந்து செல்லும் போது .."சார்...சுப்பர் சார்..ஒரே சிரிப்பு .."என மாணவர்கள் கூறுவது எனக்கு பெருமையாய் இருக்கும் .

    நான் மாணவர்களை அடிக்கடி அடிப்பது கிடையாது. என்றாவது மாட்டினால் வாழ்வில் மறக்காத அளவு வெளுத்து விடுவேன்.(தற்சமயம் ...அதுவும் கிடையாது ...சட்டம் அப்படி)
ஆகவே எல்லாரும் என்னிடம் பயம் கலந்த மரியாதையுடன் ஜாலியாய் பேசுவது உண்டு. அப்படி தான் இருக்கும் என்று கருதுகிறேன்!

    மாணவர்கள் பொய் கூற கூடாது,திருட கூடாது ,சண்டை போடக்கூடாது என்ற விசயங்களில் கண்டிப்புடன் இருப்பேன். அதற்க்கு தகுந்தார்  போல் முன் மாதிரியாக இருப்பேன்.
    
    என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் ...பள்ளிக்கு எட்டு ஐம்பது மணிக்கு தான் வருவது உண்டு. துவக்க பள்ளி மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் எட்டு முப்பது மணிக்கு வருவது தான் நலம். முயன்று பார்கிறேன் தினமும் வர முடியவில்லை.

    பள்ளிக்கு விரைவாக வரும் மாணவர்கள் அதற்குள் என்ன என்ன செய்வார்கள் ...? யார் ..யார் மண்டையை உடைத்து விடுவார்கள் ...?என்பது யாருக்கும் தெரியாத சுனாமி ரகசியம்..!

     சுனாமிக்கு கூட அறிகுறி உண்டு.விலங்குகள் அங்கும் இங்கும் அலையும் , மாறுபட்டு கத்துவது உண்டு . கடல் உள்ள வங்கி இருக்குமாம் ...
  
    ஒரு சமயம் என் வகுப்பு மாணவன் ஒருவன் வேகமாக ஓடி வந்து இருக்கிறான் .பக்கத்து வகுப்பிலுள்ள மாணவனும் வேகமாக ...ஓடிவர ..இருவரும் மோதி கிழே விழா
..என் வகுப்பு மாணவன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்க ...மாணவர்கள் திகைத்தனர் .தெய்வச் செயல் ... அன்று தலைமை ஆசிரியர் ...பரிமளம் ஸ்டெல்லா அவர்கள் எட்டு பதினைந்து மணிக்கே வந்து விட .. .தண்ணீர் தெளித்து ...அவனை எழுப்பி ..டி வாங்கி கொடுத்து ...அவனை விசாரித்ததில் அவன் தினமும் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்தது தெரிந்தது .  எப்பவும் போல வந்த எனக்கு மனதில் எதோ உறுத்தியது ...அன்றிலிருந்து துவக்க பள்ளி ஆசிரியர்கள் விரைவாக வருவது முக்கியம் என்று உணர்ந்தேன்.

     சில சமயம் விரைவாக வரும் மாணவர்கள் பலே கில்லாடி வேலைகளை செய்வது உண்டு. மூன்றாம் வகுப்புக்கு மேல் உள்ள  மாணவர்களை மிகவும் சுதாரிப்பாக கவனிக்க வேண்டும் . அதற்க்கு கீழ் உள்ள வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பிற மாணவனின் பொருட்களை எடுத்துக் கொண்டு , அவன் பார்த்து விட்டால்,அவசரத்தில் வேறு ஒருவனின் பையில் திணித்து விடுவார்கள். வகுப்பு ஆரம்பித்து எழுத சொல்லும் போது ...
"மிஸ் இவன் அப்பவே என் டப்பாவ எடுத்தான் மிஸ்..."
"மிஸ் ..இல்லை மிஸ் வேணும்ம்ன்னா....என் பையை எடுத்து பார்க்கட்டும்...மிஸ் "
"எல்லார் பையும் தேடுங்கடா..."
கடைசியில் ஒன்றும் அறியாதவன் பையில் இருக்கும் ...
"மிஸ் இவன் பையில் இருக்கு மிஸ் .."
"மிஸ் இது எப்படி என் பையில் வந்ததுன்னு எனக்கு தெரியாது மிஸ்.."
"ஆமா ...காலு , கையி முளைத்து ...உன் பயில வந்து உட்கார்ந்து இருக்கு ...திருடினது இல்லாம ..பொய் வேறு பேசுறியா ...?"
இப்படி மாட்டிவிட்டு அடிவாங்க செய்வது அதிகம்.

     மூன்றாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் ..தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்கள் பையை விட்டு விட்டு வகுப்பு மாறி திருடுவது உண்டு. ஆசிரியர் கண்ணில் பட்டால் திருந்தி விடுவார்கள் ...இல்லை என்றால் அகப்படும் வரை திருட்டை தொடர்வது உண்டு.

      நான் என் வகுப்பில் வித்தியாசமான மாணவனை சந்திக்க நேர்ந்தது . திடீர் என்று என் பக்கத்து வகுப்பு ஆசிரியை என்னிடம் வந்து ..."சார் உங்க வகுப்பு மாணவன் ..."பெயர் " ,என் வகுப்பில் தினமும் காலையில் வந்து மாணவர்களின் சாப்பாட்டை திருடி சாப்பிடுகிறான். ...என்னன்னு கேளுங்க .."

"இல்லை சார் ...அந்த வகுப்பில மட்டும் இல்லை சார் ...இவன் தினம் எல்லார் வகுப்பிலும் போயி சாப்பாட்டை திருடி சாப்பிடுகிறான்..."என மாணவி ஒருத்தி ஆசிரியைக்கு பக்க வைத்தியம் வாசிக்க...

"டேய் என்ன திருட்டு புத்தி ...அதுவும் அடுத்தவங்க சாப்பாட்டை ...சாப்பிடுற பழக்கம்..?"என அவனை அதட்டி ...காலில் நாலு போடு போடுவது மாதிரி பக்கத்து வகுப்பு ஆசிரியை முன் நடித்து ...அவர் சென்ற பின்பு விசாரித்தேன். அவன் பதில் ஆச்சரியத்தையும், நம் சமுகத்தை சிந்திக்க வைக்கும் விதத்திலும் இருந்தது.

"சார்...காலையில சாப்பிடல சார்..."

"தினமுமா ...சாப்பிடாம வர ...உங்க அம்மாவ ...கூட்டிக்கிட்டு வா ..!"

"!!!"

"என்னடா ..பேசாம நிக்குற ...சொத்த போட்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டியது தானே..."

"சார் ...அவனுக்கு அம்மா கிடையாது சார்..."

"டேய் ..மன்னுச்சுக்கட...அப்பா இருக்காருல்ல... அவர கூட்டுகிட்டு வா ..."

அவன் அழ தொடங்கினான் ." டேய் நான் ஒண்ணும் தப்பா சொல்ல மாட்டேன் டா...கவலை பட்டதே..."

"அப்பாவும் கிடையாது..."என அழுகையுடன் கூறினான்.

"தம்பி என்னடா ...சொல்லுறே..."

"அம்மா ...அம்மா ..(குரல் கம்மி ) வேறு ஒருத்தர் கூட ..ஓடி போய்டாங்க ...அதனால அப்பா ..வேறு ஒருத்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வரல ..."என அழ தொடங்கினான்.

"சார்..இப்ப இவன் ஆச்சி வீட்டில இருந்து தான் ...வரான்..அவுங்க ஆச்சி சித்தாள் வேல பாக்குது ...காலையிலேயே ...போயிடுவாங்க..."என சக மாணவன் கூற...அனிவரையும் அவரவர் இடத்திற்கு போக சொன்னேன்.

    என் இதயம் கனத்தது ...என் பொறுப்பு எவ்வளவு பெரியது என உணர்ந்தேன். சக ஆசிரியர்கள் சொல்வது உண்மை. துவக்க பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புடன் நடக்காவிட்டால் நிச்சியம் மாணவர்கள் வழி தவறி போய் விடுவர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் மன நலம் உணர்ந்து செயல் படுங்கள். 

Friday, March 5, 2010

இது காதல் அல்ல...பார்த்த்வுடன் ....
செல்வதா வேண்டாமா...?
அருகில் சென்றால் .....
சிறிது நடுக்கம் ...
சென்ற முறை போல்....
கதறல் கேட்டு ..
என்னை ஏளனமாக அனைவரும் பார்பரே...
இருந்தாலும் தைரியமாய் ..
அருகில் சென்றேன்...
என்னை பார்த்து விழகி செல்ல ....
நினைக்கையில் நான் ...
பின் வர...என் நோக்கி வர..
பயந்து அருகில் உள்ள ...
குழாய் அருகில் ஒதுங்க...
என் ஒளி பட்டு ..
வழி தொட்டு....இருவரும்
விளையாட்டாய் ....
முன் பின் செல்ல...
ஒரு வழியாய் முடிவெடுத்து
கால் எடுத்து அடி வைக்க...
என் மீது பாய்ந்து...
வீள் என காத்தினேன்...
என் மனைவி ...
விளககுமாறுடன் வந்தாள்..
நாலு சாத்து சாத்தினால் ...
கரப்பான் பூச்சியும்...நீங்களும்...!

செல்போன்

"சார்  ...'கரப்பான் பூச்சி'ஒரு கேள்வி கேட்கணுமா சார்..."
"என்ன ...நம்ம கரப்பான் பூச்சியா ...?"என ஆச்சரியத்துடன் அவன் இடம் நோக்கி பயணித்தேன்.
உலகிலேயே பரிமாண வளர்ச்சி இன்றி ...அன்றிலிருந்து இன்று வரை உள்ள உயிரினம் கரப்பான் பூச்சி. படிப்பில் முன்னேற்றம் இல்லாத மாணவனை அப்படி தமாசாக கொப்பிடுவது உண்டு . சிலர் எழுத வாசிக்க தெரியாதவனாக இருப்பதும் உண்டு. அவனை 'கண்ணிருந்தும் குருடன் ' என அழைப்போம். காசி சினிமா படம் வந்ததிலிருந்து மாணவர்கள் சார் ..'காசி' என என்னிடம் கூறியதிலிருந்து எழுத்து படிக்க தெரியாத மாணவர்கள் 'காசி' ஆகி போனார்கள். 
"என்னடா...சந்தேகம் ..?"
"சார் ..உங்க செல் போன்ல ....படம் எடுக்கலாமா..?"
அப்போது தான் நான் சி.டி.எம்.எ.கமிரா செல்போன் வங்கி இருந்தேன்.உடனே அவனை படம் பிடித்து அவனிடம் ஏன் செல்போனை காட்டினேன். 
"இதுல படம் (வீ டியோ) பிடிக்காலாமா சார் ...?"
"இதுல பிடிக்க முடியாது ...ஆனா ..இப்ப வருகிற இது போன்ற பிற எல்லா செல்போன்லையும் .... வீடியோ எடுக்கலாம் ...தொலைவில் உள்ளவர்களுக்கு ...இ.மெயில். கொடுக்கலாம் ..." என  எனக்கு  தெரிந்த விசயங்களை கூறினேன்.
செல்போனினால் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு.லாபகரமான வியாபாரிக்கு ஒரு தொழிலாளி. நஷ்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கு இது தொல்லை ஏற்படுத்தும் கடனாளி. அதிகாரிகளை பொறுத்தவரை தனக்கு கீழ் உள்ள பலரை தொலைவிலிருந்து வேலை வாங்கும் எஜமானி. 
        நான் செல்போன் வாங்கிய  சமயத்தில் ...என் நண்பர்களின் செல்போனுக்கு  எஸ் .எம்.எஸ் அனுப்புவேன் .அப்போது அதை அனுப்புவதில் எனக்கு பெருமையாய் இருக்கும். சிலர் அதை கவனிப்பார். பலர் பாராட்டுவர். சமீபத்தில் அனைத்து கம்பெனிகளும் எஸ்.எம்.எஸ். ப்ரீ என அறிக்கை விடவும். நானும் முப்பது ரூபாய்க்கு ரீச்சார்ச் வகுச்சர் வாங்கி எஸ். எம். எஸ் அனுப்பினேன்.நல்ல விசயங்கள் தான் ...பெரியவர்கள் பொன்மொழிகளை தான் அனுப்புவேன்.
    என் போன் புக்கில் உள்ள அனைத்து எங்களுக்கும் தவறாமல் காலை , மதியம் , இரவு என அனைத்து சமயங்களிலும் கருத்துக்களை அனுப்புவேன். இச் செயல் பல மாதங்களுக்கு தொடர்ந்தன...
என்னுடைய சகோதரன் (பெரியம்மா மகன் )பெய்யரில் ஒரு நாள் எஸ். எம் .எஸ் வந்தது. 
"ப்ளீஸ் டெல் மீ யுவர் நேம் .? கூ ஆர் யு..?"
"ஐ ஆம் யுவர் பிரதர் ...க்கேஸ் ? என அனுப்பினேன் .
"யு ஆர் தமிழ் , ஒக்கே ."
"நோ ,ஐ ஆம் தமிழன் ..."என அனுப்பினேன் .
"டோன்ட் கிவ் மீ திரில் ...டேல் யுவர் நேம் ..."என வந்தது. 
"ஐ ஆம் அட் மதுரை ..."என அனுப்பினேன். 
பதில் எதுவும் வரவில்லை. நீண்ட இடைவேளைக்கு பின் போன் வந்தது . போனில் பெண்ணின் குரல் ...(டிஷ் பிலேயில் என் சகோதரன் என காட்டியது...ஆனால் பெண் குரலா ...ஒரு வேலை அண்ணியாக இருக்குமா...!என மனம் கணக்கு போட தொடங்கியது)
"ஹலோ ..." சற்று அமைதிக்கு பின் "ஹலோ ...யாரு அண்ணியா ...?" போன் கட் ஆகியது. பின்பு சிறிது நேரம் கழித்து அதே குரல் ..."ஹலோ நீங்க யாரு...?"
"நீங்க தானே ..போன் பண்ணினீங்க ...நீங்க யாரு ..சொல்லுங்க ...?"(என் அண்ணன் ஊர் போன் நம்பர் ஆகவே..அண்ணி தான் என்ன நினைத்து ...)
"ஹலோ தினமும் எனக்கு இந்த எண்ணில் இருந்து எஸ்..எம்.எஸ் வருது ....நீங்க யாருன்னு தெரியல ..."(குரல் வேறு மாதிரி பேசுவதனால் )
"ஹலோ நீங்க ரவி அண்ணே அண்ணி தானே..?"
"ஹலோ , ராங் நம்பர் ..இனிமே எனக்கு எஸ். எம். எஸ் வந்தா ..நல்ல இருக்காது..."என மிரட்டவே...
"நான் ஒன்பது ஒன்பது ... (என நம்பர் சொல்லி )கடந்த ஆறு மாதமாக நான் அண்ணனுடன் பேசவில்லை ....என்பதால் விளையாடாதீங்க ...அண்ணி போதும் ...நான் சரவணன்..."
"ஹலோ நான் இந்த நம்பர் வாங்கி ...இரண்டு மாதம் தான் ஆகிறது ..."
"சார், மேடம் ...மன்னிச்சுக்கங்க,,,இனிமே எஸ், எம் .எஸ் வராது..."என மன்னிப்பு கேட்க 
என் அருகில் இருந்த என் நண்பர் பாபு என்னை முறைத்தார்.அதனுடன்..."எஸ். எம் .எஸ் விளையாட்டு இல்லை ...தேவையில்லாம அனுப்பாத ...அன்னிக்கே சொன்னேன் ...இப்ப பர்தீய்யா ..ஈவ் டீசிங் ன்னு உள்ளே தூக்கி ...போடாம போனாலே.."என கூற ...என் அறியாமையை உணர்ந்தேன். ஆபத்தை புரிந்து கொண்டேன்.
   நண்பர்களே...!  மாதம் ஒரு முறை நம்மிடம் உள்ள செல் போன் நம்பர் ...அந்த நம்பர் அவருக்கு உரியது தான் என்று ...சரிபார்த்து கொள்ளுங்கள். அதுவும் எஸ்.எம்.எஸ் விசயத்தில் சற்று அதிக கவனம் தேவை. விளையாட்டு வினை ஆகிவிடும் ...கடவுள் புண்ணியத்தில் நானாவது பிழைத்து கொண்டேன்.

Thursday, March 4, 2010

8டாத அறிவு ..

மம்மி 

ஒருவர் தன் மகனை விரட்டிக் கொண்டு தெருவில் ஓடி வந்தார்.

"உன்னை தோலை உரிக்காம விடமாட்டேன்டா ...."

"அட ..சின்ன பையன் அவன் விடுங்க...அப்புறம்..நீங்க என்ன தோலை உரிக்கிறது...அவன் வளர வளர அவனே தோலை உரித்துக்குவான்..."

"நீங்க வேற ...சும்மா இருங்க சார்...அவன..."

"அட தோலை உரிக்கிற .....இச் செய்யலுக்கு 'மோல்டிங்' ன்னு ....பேரு.."

"என்ன சார்..மோல்டிங் ..அது... இதுன்னு...."

"மான்...பழைய கொம்பை உரித்து ...புது கொம்பு வளரச் செய்யும் .."

"ஆமா ....பறவைகள் கூட ....தன் இறகுகளை ...உதிர்த்து ....புதிய இறகு முளைத்தாலும் ...அவனை விட போறது இல்லை...."

"பாம்பு ...தன் தோலை ...உள் வெளி சுருட்டல் மூலமாக உரிக்கிறது..."

"எடா கூடமா எதையாவது பேசாதீங்க ....அவனை வளர்க்கிறதுக்கு ...ஒரு நாயையாவது வளர்த்திருக்கலாம்...."

"அப்பாவும் உங்களுக்கு சிக்கல் தான்..."

"என்ன சொல்லுறீங்க...?"

"நாய் கடிச்சா ..'ஹைட்ரோ போபியா'ன்ற நோய் வரும்...தகுந்த சிகிச்சை தரலைன்னா...நாய் போல கத்தணும் ...அப்புறம் ...உணவு ..நீர் போன்றவற்றை நக்கி சாப்பிடனும்...கடைசியில...சங்கு ஊதிடுவான்...கடித்து ..."

"நாய் இல்லாட்டி ...பூனையை வளர்த்திட்டு போறேன்..."

"புனையாள...'டிப்திரீயா' வரும் ...அதனால ..கழுத்துப் பக்கம் ...காதுக்கு கீழ வீக்கம் ...ஏற்படும்..காய்சல் வரும் ...கண் எரிச்சல் தரும்...கடைசியா..மூச்சு விடுறது ...தடை பாடும்..."

"அட ..போங்க இவன..பெத்ததுக்கு ...பன்னி கூட ..மேய்ச்சுட்டு போறேன் ..."

"பன்றினால ...'பன்றி நாடா புழு 'நோய் வரும் ...பன்றி கறி சாப்பிடுறவங்களுக்கு ...நாடப் புழுவின் முட்டை ...நோய் பரப்பி மூளையை தாக்கி ...சுயநினைவு ...இழக்கச் செய்து....'ஏன் நெபலயிடீஸ் 'எனப்படும் வைரஸ் மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் ...இது குழந்தைகளை ..விரைவாக தாக்க வல்லது..."

"ஐயோ ...எலி வளர்த்தா ...'பிளேக் 'வரும்..அப்புறம் ....."

"அட குதிரை வளர்த்தா கூட ...'தனூர் வாதம் ' எனும் நோய் வருங்க..."

"அவனுக்கு வக்காலத்து வாங்காதீங்க ...அவன் என்ன செய்தான் தெரியும்மா ...?"

"அப்படி என்ன எல்லாரும் செய்யாத தப்ப அவன் செய்திருக்க  போறான் ....மிஞ்சி மிஞ்சி பூனை 'அம்மா ' இல்லாட்டி 'தங்கச்சி' கூட ...சண்டை போட்டுருக்க ...போறான்..."

"கரெக்டு ...அவன் அம்மா கூட   சண்டை போட்டு ...என்கிட்டே வந்தான்க ...என்னடா..இப்படி செய்யறன்னு கேட்டேன்...?"

"அதுக்கு அவன் என்ன செய்தான்..?"

"ஏன் அப்ப நீ எகிப்து க்கு ...எப்பவாவது  போயிருக்கியா ...? ன்னு கேட்டான்..."

"பாவம் பிள்ளை ...நீ எகிப்ப்துல எடுத்துகிட்ட போட்டவை பார்த்துருப்பான் அதுனால ...கேட்டு இருப்பான் ...."

"ஏன்டா...கேட்கிறேன்னு ...கேட்டேன்...''

"அப்புறம்.... "

"இந்த 'மம்மி'யை ...என்கிருந்து கண்டு பிடிச்சு ...எப்படி குடும்பம் நடத்துற...ன்னு கேட்கிறான்..."

"!!!!!".

Wednesday, March 3, 2010

8 ட்டாவது அறிவு

"என்ன ராமசாமி ...?வீட்டில யாரும் இல்லையா...?"

"வாப்பா..ரங்கசாமி ...உங்க அண்ணி ...அவுங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா...இன்னைக்கு சமையல் நான் தான்..."

"அடிக்கடி வெளிநாடு போறீங்களே...ஏதாவது புது விஷயம் இருக்கா...?"

"போன தடவ...நான் மலேசியா போயிட்டு வந்தப்ப.... நீ பக்கத்தில கூட வரல ...?"

"நீங்கள் ...முக்கில முகமுடி அணிந்து வந்ததா...சொன்னாங்க....எல்லாம் 'சார்ஸ் ' பயம் தான்.."

"அதுசரி ...,மூக்க பொத்தினா வரமாட்டீங்க...இப்ப முகமுடி இல்ல...சார்ஸ் பயம் போயிடுச்சா... ?"

"அது கிடக்கட்டும்...ராமா ..இப்ப இ.மெயில் அனுப்பும் போது ...வாசனையும் .சேர்ந்து அனுப்பலாம்...ன்னு  ...கண்டுபிடுச்சுருக்காங்கலாம் ...?"

"அது இன்னும் மார்கெட்டிங்  பண்ணல  ...வந்ததும் வாங்கிர வேண்டியது தான் ...இந்த முறை..நான் ரோம் நகரம் சென்றேன்..."

"என்ன விசேசம் ....?"

"ரோம் பல்கலை கழகத்திலுள்ள அறிஞ்ர்கள் சோதனை அடிபடையில ...புதிய மின்னணு மூக்கு கண்டு பிடுச்சுருக்காங்கலாம் ..."

"அப்படியா...? அப்ப அத வச்சு ..வாசனையை அறியலாம...?"

"அது வாசனையை கண்டுபிடிக்க இல்லை ...ஒருவனுக்கு புற்று நோய் இருக்கா...இல்லையா ன்னு ...கண்டுபிடிக்க உதவும்...."

"எப்படி ...முடியும்...?"

"ஒருவர் வெளிவிடுகிற மூச்சுல ....உள்ள பென்ஷின் அளவை வச்சு ...நுரையீரல் புற்று நோய் இருக்க இல்லையான்னு ..உறுதி செய்யலாம் ...அறுபது பேருக்கு ...சோதனை செஞ்சதிலா ...முப்பத்தைந்து பேருக்கு பாதிப்பு இருந்ததாக உறுதி செய்தது...."

"அப்ப அடுத்த கட்டமாக ...உள்ள உறுப்புகளில் கட்டி வந்தா..அறியும் சாதனத்தை கண்ண்டுபிடிப்பாங்க...?"

"ஆமாம் ....இந்த மின்னணு மூக்கு ....எட்டு வகையான நுகர் உணர்வு ஆற்றலை கொண்டுள்ளது..."

"அது சரி ...உங்க மூ க்க பத்தி என்ன நினைக்கிறீங்க ...?"

"ஏன் மூக்குக்கு என்ன குறைச்சல் ...?

"நீங்க அடுப்பில சாம்பார் வச்சது ...தீஞ்சு போயி ..வாசனை அடிக்கிறது தெரியலையா...? நானும் வந்ததுல இருந்து சொல்லனும்னு நினைக்கிறேன்..."

"!!!!"

  ட்டாவது அறிவு