கோடை வெயில் கொளுத்தியது...பெரியவர் தள்ளாடியபடி நடக்க ...திடீரென்று கீழே விழுந்தார்..கூட்டம் கூடியது.
"வெளிச்சத்தை மறைக்காதீங்க ...காற்று படட்டும்...அப்படி மர நிழலில் கொண்டு போங்க ..."கூட்டத்தில் ஒரு குரல்.
"தண்ணீர் கொடுங்கப்பா...குடிக்க .."மற்றொரு குரல்.
"தண்ணீரோட கொஞ்சம் உப்பு சேர்த்து கொடுங்க ..."என நடுத்தர வயது இளங்கற் கூறினார் .
"ஏன் உப்பு கொண்டு வர சொல்லுறீங்க ..."என கல்லூரி செல்லும் மாணவன் வினவ...
"இது சண் ஸ்டோர்க் (sunstrock ) அதுனால உப்பு தண்ணீர் தான் கொடுக்கணும்"
"சன்ஷ்டோர்க் .அப்படின்னா..."
"பெரியவர் வெயில்ல நெடு நேரம் நடந்து வந்ததால ...உடம்பில இருக்கிற நீர் அதிகமா வெளியேறி இருக்கு ....அதனால தலை வலி,வயிற்றில் சங்கடம் ,காலமல் வலிமை இழந்து விடல், தலை சுற்றல் ..ஆகியன ஏற்படும் . இது எல்லாம் ஆரம்ப அறிகுறிகள் ..தான் இத டாக்டர்கள் .."சால்ட் டிபிசியன்சி ஹீட் எச்ஷாஷ்டன் " ன்னு சொல்லுவாங்க.."
"அப்ப உப்பு ..தண்ணி அடிகடி குடிக்கணும்..அப்புறம் என்ன சார் ஆகும்?"
"லோ பிபி ...குறைந்த இரத்த அழுத்தம் ...நோயாளி மயங்கி விழ நேரிடலாம்...இரத்தத்தில நீர் சத்து குறைந்து ..தலை சுற்றல் ஏற்படும் ..இருபத்தி நான்கு மணி நேரத்தில ஐந்து லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் ...இருபத்தைந்து கிராம் உப்பு நீருடன் கலந்து தரவேண்டும்...வெயில்ல இல்லாம பார்த்துக்கணும்..."
"அதனால தான் பெரியவர ...மர நிழலில கொண்டு போக சொன்னீங்களா..."என கல்லூரி மாணவன் நக்கலாக கேட்க ..
"ஆமாம்பா ..அதன்னால தான் அந்த காலத்தில சாலை ஓரத்தில மரம் நட்டாங்க..."
"ஆமா ஆமா..சாலை நடுவில மரம் நட்டா ..வாகனங்கள் போக முடியாதில்லை .." என மாணவன் கூற அனைவரும் சிரித்தனர்.
"தம்பி உன்கிட்ட சின்ன கேள்வி கேட்கலாமா...?"என நடுத்தரவயதினன் கேட்க...
"ஓ, தாரளம கேளுங்க ..."
"பாகிஸ்தான் தூரம்மா..?சூரியன் தூரமா. ...?"
"என்ன சார் சூரிய வெயில்ல பத்தி இவ்வளவு அருமையா சொன்னீங்க...எப்படி கேட்டு புட்டீங்க ...சூரியன் தான் தூரம்..."
"அது எப்படி தம்பி ...சூரியனை கண்ணால பார்க்க முடியுது...ஆனா பாகிஸ்தான் பார்த்த தெரிய மாட்டிங்கீது..அப்பா பாகிஸ்தான் தான் தூரம்.."
"!!!!!"
(கல்லூரி மாணவன் கூ ட்டத்திலிருந்து நழுவ...
கூட்டம் "நல்ல பதில் அடி கொடுத்தீங்க..."
5 comments:
ம், வித்தியாசமா நல்ல தகவ்ல் சொல்லிருக்கீங்க.
Old is gold.
அந்த தூரம் மேட்டர் ஹா....ஹா....
எனக்குக்கூட "சூரியன் தான் தூரம்,"னு உடனே தோணிச்சு! :-((
காப்பியைப்பற்றி புதிய தகவலை புதிய கோணத்தில் கொடுத்து இறுதியில் நகைச்சுவையாகவும் முடித்து இருக்கின்றீர்கள்.
Post a Comment