Monday, February 19, 2018

பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்!





தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள். காதல் குறித்து அறியாமலே எல்லா தவறுகளும் நடைப்பெறுகின்றன. பாலியல் கல்வி பள்ளி அளவிலே கொடுக்கப்பட வேண்டும். எதிர்பால் கவர்ச்சி குறித்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேச வேண்டும். மாணவர்களை மதிப்பெண் நோக்கி நகர்த்துவது போன்று நற்பண்புகள் போதித்து திருத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். கள்ளிப்பாலில் தப்பிய குழந்தைகள் ஒருதலைக்காதலில் மாட்டிக்கொண்டு பள்ளி படிப்பை நிறுத்துவதுடன், திருமங்களம் போன்று 
உடல் எரிந்து அவதிக்குள்ளாகின்றனர்.



ஒருபுறம் சேர்ந்து சுற்றினால் கட்டி வைத்துவிடுவோம் என்று காட்டுமிராண்டிதனத்துடன் காதல் அணுகப்படுகின்றது. மறுபுறம் காதல் குறித்த புரிதல் இன்றி வலுக்கட்டாயம், வன்முறை இவற்றின் பெயரால் ஆதிக்க ஆண் வர்க்கம் பெண்குழந்தைகளின் வாழ்வை சூறையாடுகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் குழந்தைகளிடம் தொடர்ந்து பேசி அவர்களின் பால் சார்ந்த புரிதல் இன்மையை நீக்க வேண்டும். காலத்தின் அவசியம் பாலியல் கல்வியும் , எட்டாம் வகுப்புக்கு மேல் கவுன்சிலிங்கும் என்பதை கல்வித்துறை உணரவேண்டும்.