Friday, February 12, 2010

இருப்பிடம்

உன் முகவரி கேட்டேன் ...
சிரித்தாய் ....
சரி உன் பிறப்பிடமாவது
சொல் என்றேன் ..
முழித்தாய் ...

நான் விழித்தேன் ...
அதே கேள்வியை
உன் தோழி
என்னிடம் கேட்டபோது...

உன் இதயத்தில் பிறந்து ...
ஆயிரம் மாயிரம் ......
கனவுகளுடன் ..
கை கூடி....
கரம் பிடித்து ...
பலாயிரம் ஆண்டுகள்
உன்னோடு வாழ ..
உன் பார்வை ஒன்றே
போதுமடி ..
என காத்திருக்கும்
என் இருப்பிடம்
உன் இருப்பிடம் தானடி ...
விலாசம் இல்லாமல் இருக்கும்
எனக்கு ....
உன் இதயக் கதவை
திறந்து ..
விலாசமிடு ...
பதினான்கு ராசியான எண்ணாம்
அதுவும் இந்த மாதத்தில்....
கத்திருக்கிறேன் ...
விலாசம் உள்ளவனாக மாற
கனவுகளுடன் ...!


..





 

10 comments:

பின்னோக்கி said...

உங்கள் காத்திருப்பு கை கூட என் வாழ்த்துக்கள் :)

கமலேஷ் said...

மிக நன்றாக இருக்கிறது...உங்களின் மற்ற சமுதாய அக்கறை கொண்ட பதிவுகளையும் படித்தேன்...உங்களின் முயற்சிகளை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை....வாழ்த்துக்கள் தொடருங்கள்...

ஹேமா said...

காதலர் தினக் கவிதையா ?காத்திருப்போடு மிக அழகு.வாழ்த்துக்கள் சரவணன்.

சைவகொத்துப்பரோட்டா said...

விலசாம் கிடைச்சதா? :)) கவிதை அழகு.

சுப்பு said...

கவிதை நன்ற உள்ளது நண்பரே.

அவளது பிறப்பிடம் பிரபஞ்சம்

ஸ்ரீராம். said...

"kaaththirundhu kaaaththirundhu..."paadal vendaam.

"kaaththirukken kadhavait thirandhu ullukku vaadi.." paattu ok.

வான்முகில் said...

///உன் பார்வை ஒன்றே
போதுமடி ..
என காத்திருக்கும்
என் இருப்பிடம்
உன் இருப்பிடம் தானடி ...\\\

ஆழமான வரிகள் வாழ்த்துக்கள்..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

காதலர் தினக்கவிதைகள் வலைப்பூக்கள் அனைத்திலும்.காதல் வாழ்க!

Ramesh said...

காத்திருப்புக்கள் காதலின் அற்புத வார்ப்புகள் .... கைகூடும் காதல்.
வாழ்த்துக்கள்

திவ்யாஹரி said...

//பதினான்கு ராசியான எண்ணாம்
அதுவும் இந்த மாதத்தில்....
கத்திருக்கிறேன் ...
விலாசம் உள்ளவனாக மாற
கனவுகளுடன் ...!//

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. இந்த கவிதைய படிச்சாலே ஓகே சொல்லிடுவாங்க..

Post a Comment