Friday, February 26, 2010

உனக்கு என்ன கவலை ...?

      நான் வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகள் ஆகி  இருக்கும் ....அந்த சமயம் நடந்த சம்பவம் இது ...

      பொதுவாக அனைவரும் கூறும் விஷயம் "உனக்கு என்னையா கவலை ...?மணி அடிச்ச காசு ...கவலை இல்லாத வேலை...கலையில போக வேண்டியது ...மலையிலே வர வேண்டியது ..அப்புறம் ஜாலி  தான்..."

எல்லா தொழிலும் ஆபத்து உண்டு . ஆனந்தமும் உண்டு . கண்ணுக்குத் தெரியும் விஷயத்தை தான் நாம் கூறுவது உண்டு. ஒருவருக்கு சாதகமாக அமைந்திருப்பது ,அடுத்தவருக்கு அவர் பார்வையில் பாதகமாகத் தெரியும்.இது உலக உண்மை. மனித வாழ்வு எப்போதும் நம்மில் இல்லாத ஒன்றையே தேடும்.

    சூரியனின் 'அல்ட்ர வயலட்' கதிர்கள் நம் கண்ணுக்கு தெரியாது. ஆனால், நமக்கு தெரியாமல், நம் உடலின் மேல் படிந்து தாக்கும் நோய் கிருமிகளை அழித்து விடுகிறது. 'சூரிய நமஸ்காரம் ' செய்யும் போது அழிகின்றன. இது போல் நம் கண்ணுக்கு தெரியாத  பல நல்ல விசயங்கள் நடக்கின்றன. மனிதன் எப்போதும் தன்னை அடுத்தவருடன் ஒப்பிட்டே வளர்கிறான் அல்லது  தாழ்கிறான்.

"சார் , வியாபாரம் ன்னு எடுத்துகிட்டா லாபம்,நஷ்டம் இருக்கு ...ஆனா ..உங்களுக்கு ஆபத்தோ ...நஷ்டமோ  இல்லியே..."

"விவசாயிக்கு கூட மழை பெய்யவில்லைன்னாலும் நஷ்டம்..பெய்தாலும் கஷ்டம் ...ஆன ..உங்களுக்கு மழை பெஞ்சா என்ன ..?வெயிலடித்தால் என்ன...?டான்னு தேதி பிறந்தா சம்பளம் .."

"கவர்மெண்டு வேலையிலும் வாத்தியார் வேலைன்னா ரெம்ப ஈசி , வாய்க்கு  வந்தத சொல்லி தர வேண்டியது ..வசதிக்கு தகுந்த மாதிரி ..மனசுக்கு பிடிச்ச மார்க்க போடவேண்டியது...மாசம் மாசம் சம்பளம் ..."  

மேலே கூறிய அனைத்து விசயங்களும் பல சமயங்களில் ஆரம்பத்தில் "ஆமா ,ஆமா "; என மறுக்க முடியாத உண்மை தான் என்று  நினைப்பு இருந்தது. இச்சம்பவம் நடக்கும் முன்பு வரை ....
 
பல வியாபாரிகள் கஷ்டம் இல்லாமல் பணம் சாம்பாதிக்கும் தொழில் 'கல்வி' என்று பள்ளிகூடங்களை ஆரம்பித்த பின் ..கல்வியின் தரம் மக்கி விட்டது . கல்வி நிலையில் மாற்றமும் மாறிவிட்டது.

   அன்று காலை என்  தாயிடம் மதிய உணவு பெற்றுக் கொண்டு  ...பள்ளி விரைந்தேன் . அந்த சம்பவம் நடந்த போது...' நான் பத்தாம் வகுப்புக்கு ஆசிரியர்'.காலை எட்டு முப்பது மணிக்கே வந்து விட்டேன்.    
  
    காலையில் பூத்த மலராய் ...மங்காத புன்னகையின் மலர்கள் பள்ளித் தோட்டத்தில் பூக்கத் தொடங்கின . மொட்டுக்கள் அரும்பு விட ஆரம்பித்தன.

     காலை சூரியன் என் உடலுக்கு எரிச்சலூட்டியது ..எதோ நடக்கப்  போகிறது என்பதற்கு கான எச்சரிக்கையோ..!

     எங்கள் பள்ளி நாடார் சமுகத்தை சார்ந்த ..கமிட்டி பள்ளி ...பள்ளி நிர்வாகிகளும் ஆனந்தமாய் பள்ளியை  பார்வையிட வந்தனர்.

     எங்கள் பள்ளி மூன்று தளங்களை உடையது .நான் இரண்டாவது மடியில் பாடம் நடத்த சென்றேன்.    பள்ளிக்கு ஒரு அகலமான பனிரெண்டு அடி வாசல் கதவு உண்டு . அதற்கு பத்தடி தொலைவில் மற்றொரு ஆறடி வாசல் கதவு உண்டு. பள்ளி ஆரம்பித்த உடன் அகலமான வாசல் கதவு மூடப்படும். பின்பு குறுகிய வாசலை தான் பயன்படுத்த வேண்டும்.

       மணி ஒன்பது முப்பது . பள்ளி நிர்வாக அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது . 'பாபு' இணைச்செயலர் என்னை அலுவலகத்திற்கு  அழைத்தார்.

"சார் , நீங்க பாடம் நடத்தினது போதும் ...இன்னைக்கு லீவு..."

""சார்..."
"மிஸ்டர் ...வேகமாக போய் ....அமைதியாக ..முதல் வகுப்பு மாணவர்களை ..கேட் வெளியில் நிற்க வை ..."

"சார் ..விளையாடாதீங்க ....நிஜமாக தான் சொல்லுறீங்களா ..."


பாபுவின் முகத்தில் படபடப்பு காணப்பட்டது.முகம் வியர்த்து இருந்தது...விளக்கம் கூறாமலே ...தரை தளத்திற்கு விரைந்தார்.முதலாம் வகுப்பு மாணவர்களை வரிசையாக காலை பிரார்த்தனைக்கு வர செய்வது போல் ...வருசையாக வர செய்தார்..நானும் பிற ஆசிரியர்களுடன் மாணவர்களை வரிசையாக கேட் வெளியில் நிற்க செய்தோம். என்னை போல் பிற ஆசிரியர்களும் அவரின் செயல் கண்டு புரியாமல் முழித்தோம்.

    அவர் ஒவ்வரு வகுப்பாக சென்று பர பரப்பாக அனுப்புவது தெரிந்து எனக்கு சுழல் மெதுவாக புரிய ஆரம்பித்தது.

முதல் தளத்தில் மூன்று நிமிடத்தில் மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.இரண்டாவது தளம் ...ஓடும் பாபுவை பார்த்து ..ஆசிரியர் ஒருவர் .."எனா நடக்குதுன்னு  தெரியலை ...பிள்ளைகளை பையை வைத்து விட்டு கேட்டுக்கு வெளியில் அனுப்ப சொல்றார்..."

 "கிறுக்கு பிடிச்சு போச்சா...விஷயம் என்னான்னு சொல்லாம...வரிசையா கூட்டிகிட்டு aபோகனுமா..." மற்றொரு ஆசிரியர் புலம்பல்.
அத்தனையும் பாபு காதில் விழுந்தாலும் மாணவர்களை அனுப்புவதில் தான் மும்மரமாக இருந்தார்..அவருடன் தற்சமயம் மேலும் சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டனர்..

"சரவணா ...கூடவே இரு..எங்கையும் ..போகாத ...இனிமேல் தன் வேலை இருக்கு..."

"அனைத்து துவக்க பள்ளி மாணவர்களும் வெளியில் சென்று விட்டனர்.மெதுவாக என்னை அழைத்தார்..

"ரக்சியம்மா வச்சுக்க...இன்னும் பத்து நிமிடத்தில .....இங்க 'பாம்' வெடிக்க போகுதாம் .போன்  வந்தது..."

"சார் ...உண்மையுமா..." பயத்துடன்...கேட்டேன்.

"வாய பிளக்கத்தே..வேகமா...பெரிய பையலுகள...அனுப்பு ..."

"பக்கத்துக்கு பள்ளி கூடத்தில அறிவியல் காண்காட்சி நாடக்குதாம் அனைத்து மாணவர்களும் விரைந்து கேட் வெளியில் நிற்கவும்..."என சமயோசித புத்தியை பயன்படுத்தி அனைவரையும் வெளியேற்றினேன்.

இப்படி நடக்கும் போதே...பள்ளியின் வாயிலில் கூட்டம் கூட தொடங்கியது..
ஆண்டவன் புண்ணியத்தில் அனைவரையும் அனுப்பிவிட்டோம்..பாம் விஷயம் தெரியும் ஆதலால் எனக்குள் பயம் பரவியது...இன்னும் வகுப்பறை விட்டு நான் வெளியில் செல்லவில்லை .உள்ளுக்குள் பயம் பரவியது .உண்மையிலே ...பாம் இருந்தால் ...நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது...

 
     விஷயம் தலைமை ஆசிரியர் மூலமாக பிற ஆசிரியர்களுக்கு பரவ ..பலர் எஸ்கேப் ..
  
     பாபு என்னை அழைத்து ...(மிகவும் தைரிய சாலி ...எனக்கு தானே ..மனசு தெரியும்..)

"ஒவ்வரு வாகுப்பா பார்க்கணும் ..ஏதாவது மாணவர்கள் உள்ளே இருக்கிறார்களா...?"

"சார்..எல்லாரையும் அனுபிவிட்டேன் .. "

"அவசரபடாதே...பதட்டபடாதே...நானும் உன்னோடு தான் வருவேன்..."
"ம்ம்ம்ம்...சரிங்க சார்.."

"உள்ளே..சந்தேகத்திற்கு இடமான பொருள்கள் இருந்ந்தா...அதை கவனிக்கணும்...வித்தியாசமா எது இருந்தாலும் ..சொல்லு .."


அவருடன் சில நிர்வாகிகளும் உடன் வந்தனர்...அனைவரும் அச்சமின்றி ..அனால் அச்சத்துடன் ..தேடினோம்..
 
   விஷயம் காட்டு தீ போல் பரவி பெற்றோர்கள் பள்ளிமூன் தன் பிள்ளைகளை அழைத்து செல்ல வருகை புரிந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமே...? பாம் வெடித்து எத்தனை குழந்தைகள் பலி யோ...? என்ற வதந்தியுடன் ...பதட்டத்துடன் தங்கள் குழந்தைகளை வாரி அனைத்து சென்றனர்.

      'பாம் ஷ்குவார்டு ' வந்தது...எங்கள் யாரையும் அனுமதிக்க வில்லை . கடைசியில் புஷ் வானம் ஆகிவிட்டது.டெலிபோன் புரளி அன்று அனைவரையும் வாட்டி எடுத்து விட்டது.
  
     அந்த மூன்று மணி நேரம் பட்ட மன உளைச்சலை யாரும் வர்ணிக்க முடியாது.பணத்தை அள்ளி கொட்டி இலவசமாக கல்வி தரும் நிர்வாகிகளுக்கு தான் எத்தனை மன வருத்தம் , மன உளைச்சல் . பெற்றோர்களுக்கு தன் எத்தனை பெரிய பட படப்பு ...பயம் ...சிரமம் ...

    அன்று மாலை பேபரில் பாம் ஷ்குவர்டு தேடுதலுடன் படம் வந்தது..நிர்வாகத்துக்கு தான் எத்தனை கெட்ட பெயர் .."புரளியே இவ்வளவு பாடு படுத்தினால்..."

   அன்று நிர்வாகிகள் சமயோஜித புத்தியுடன் செயல் பட்டதால் ...மாணவர்கள் நெரிசலில் சிக்கி காயம் படாமல் ...மாணவர்களும் , ஆசிரியர்களும் பத்திரமாக வெளியில் செல்ல முடிந்தது.அன்று செயல் பட்ட நிர்வாகிகள் அனைவரும்  பாராட்டப்பட வேண்டியவர்கள்.
 
   தயவுசெய்து ஆசிரியர் பணி எவ்வளவு கடினமானது...ஆபத்தானது...கவனமுடன் செய்யல் பட வேடியது என்பதை உணர்ந்து ..மணி அடிச்ச காசு என்று பேசுவதை நிறுத்துங்கள்.
 
வருங்கால தூண்களை உருவாக்கும் வழமையான அறப்பணி ஆகும்.இது அர்பணிப்புடன் செய்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். 

 

12 comments:

ஸ்ரீராம். said...

அப்பாடி...ஒரு தகவல் தெரிந்தது...மீனாட்சி திரை அரங்கு பக்கத்தில் உள்ள நாடார் உறவின் முறை பள்ளியா?
கஷ்டம்தாங்க...

Rekha raghavan said...

பதிவை படிக்கும் போது மனம் திக்...திக்...பக்...பக்... படித்த பின்பு உங்களை போன்றவர்களை கையெடுத்து கும்பிடத் தோன்றியது.

ரேகா ராகவன்.

எல் கே said...

ஆசிரியர் பணி மிக புனிதமானது . இன்றைய சூழ்நிலையில் ஆபத்தானதும் கூட

அனுஷா சித்ரா said...

நல்ல திட்டம். ஆசிரியர் பணி​யை பற்றி நீங்கள் எழுதியிருப்பது மிக நன்று.

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரு மர்ம நாவல் படிப்பது போல் இருந்தது, ஆனால் வேதைனையான விசயம், சமயோசிதமாக
செயல் பட்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க . இன்னும் நெஞ்சில்
திகில் ! திகில் ! நீங்கவில்லை .

Kumar said...

salute you sir..

ஆடுமாடு said...

நல்ல விஷயம் பண்ணுனீங்க...

வாழ்த்துகள்.

மதுரை சரவணன் said...

ராம் அதுவல்ல அபிராமி தியேட்டர் அருகில் உள்ள பள்ளி.ஆடுமாடு,சைவ கொத்துபுரோட்டா,அனுசா சித்ரா,பனித்துளி சங்கர்,எல்.கே,குமார்,ராம் ,கல்யாணராமன் ராகவன் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஊற்சாகப் படுத்தி வரும் அனைத்து வாசர்களுக்கும் நன்றி.

வெங்கட் said...

ஆசிரியர் தொழிலில் இவ்வளவு
ஆபத்து இருக்கிறதா..?
இதை படித்த உடனே ஆசிரியர்கள்
மேல் மரியாதை கூடுகிறது...

Kandumany Veluppillai Rudra said...

மாதா,பிதா,குரு,தெய்வம்

Unknown said...

proud to be the daughter of Mr.surendran & hats off to you teacher thanks for remembering your memories and giving regonition to hardworkers-by daughters of Mr.surendran @ babu........

Post a Comment