Saturday, February 20, 2010

முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாணவர்கள் சந்திப்பு !

            முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாணவர்கள் சந்திப்பு !
1977 ல் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு , மிகவும் சுவாரசியாமாக இருந்தது.ஆண்டுகள் பலவாயினும் , நினைவுகள் பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி வந்து , நண்பர்களிடம் அதே முறையில் நலம் விசாரித்தது , பரவசம் ஊட்டியாது , பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அன்று கற்று தந்த ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.அனைவரும் தற்போது இருந்தது , இம்மாணவர்கள் செய்த புண்ணியம் என்று தான் நினைக்க வைக்கிறது என்றாலும் , அவர்களின் கடமை தவறாமை தான் இன்றும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு காரணம் .(இன்றைய ஆசிரிய சமுகம் கவனிக்க வேண்டியது )


 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஓய்வு நிலையில் , தம் மாணவர்களை நல்ல நிலையில் பார்க்கும்போது மிகவும் சந்தோசம் அடைந்தனர். அதிலும் தாம் மாணவர் போல் அமர்ந்து , தம் மாணவனின் பேச்சை கேட்பதில் மற்றட்ட  மகிழ்ச்சி என்பதை மேலே உள்ள  புகை படத்தில் பார்பவர்களுக்கு புரியும்.நினைவுகளை பகிர்வது எவ்வளவு மகிழ்ச்சி என்பதை தம் சக மாணவர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கும் போது தான் புரியும்.    


மேலே உள்ள படம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குரூப் போட்டோ .

    இச்சந்திப்பின் முக்கியம் என்வென்றால் இனி வரும் காலங்களில் இவர்கள் அனைவரும் வருடம் தோறும் ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தினங்களில் சந்திப்பது எனவும், அச் சந்திப்பின் போது சமுக தொண்டுக்கு உதவுவது என முடிவெடுத்துள்ளனர். நல்ல விஷயம் எங்கு நடந்தாலும் சமுக அக்கரையுடன் , அதை உரியவர்களுக்கு எடுத்து செல்வது நம் கடமை.
    நாமும் இதே போன்று சந்திப்பை ஏற்படுத்தி, நம் நினைவுகளுக்கு தீணி போடுவதுடன்   ,சமுதாய நோக்குடன் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும். ஏழைகளுக்கு முறையான வழிகளில் கல்வி கொடுக்க உதவுங்கள் ,அதுவே நம் நாட்டை வல்லரசு ஆக்கும் . இச் சந்திப்பிற்கு பெறும் முயற்சி செய்தவர்கள் திரு .மோகன் ராஜ் மற்றும்  திரு குண சேகரன் ஆவார்கள் என்பதை சுட்டி காட்ட கடமை பட்டுள்ளேன்.

   (பின் குறிப்பு : எனக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தம் உண்டு  என்று நினைத்து என் வயதை எடைபோட்டு விடாதீர்கள் . என்னை போன்று கல்வியில் அக்கறை உள்ள என் மூத்த சகோதரர் திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்காக உண்டாக்கியது. நானும் இது போன்று என் பள்ளியில் சந்திக்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறேன் நீங்களும் ....)

6 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அட, என் பள்ளி நினைவுகளையும் கிளறுகிறதே இந்த பதிவு.

நாடோடி said...

//எனக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தம் உண்டு என்று நினைத்து என் வயதை எடைபோட்டு விடாதீர்கள் . //
ரெம்ப உஷார இருக்கீங்க போல..நல்ல விசயம் வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

நாங்க வயசக்கேக்கலையே!

ரொம்ப சந்தோஷமான விசயம் வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

நல்லாருக்கு!

எனக்கும் ஆசைதான். சொல்லிக்கொடுத்தவங்களை இப்படி குரூப்பா பார்க்கணும்னு. கூட படிச்சவங்களையே தேட முடியலையே...

Raghu said...

//எனக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தம் உண்டு என்று நினைத்து என் வயதை எடைபோட்டு விடாதீர்கள்//
நீங்க‌ யூத்துதான் ந‌ம்பிட்டோம்:)

"எங்கே தேடுவேன், நான் எங்கே தேடுவேன்"னு ஒரு பாட்டுதான் ஞாப‌க‌ம் வ‌ருது!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

கொசு வத்தி சுத்த வச்சீட்ட்ங்க

நாங்களும் 1972ல் மார்ச் 10 ல் - இறுதி ஆண்டு இறுதி நாள் - நவரத்தினங்களாக ஒன்பது பேர் கூடிக் களித்து, இரவு சாப்பாடு அம்சவல்லியில் அட்டகாசமாக உண்டு, நடு நிசிக் காட்சி கல்பனாவில் "திக்குத்தெரியாக காட்டில்" திரைப்படம் கண்டு - செண்ட்ரல் பஸ் நிலையம வரை நடு இரவினில் நடு ரோட்டில் சத்தம் போட்டுப் பேசிக் கொண்டு நடந்து சென்று - ஒவ்வொரு ஆண்டும் இதே மார்ச் திங்கள் பத்தாம் நாள் நாம் அனைஅவ்ரும் ஒன்று கூட வேண்டும் என சபதம் எடுத்து ............ இன்று வரை ஒரு முறை கூட அச்சபதம் நிறைவேறவில்லை. பல சந்தர்ப்பங்களில் பல நன்பர்கள் தனித்தனியாகச் சந்தித்திருந்தாலும் - மார்ச் 10 இன்னும் ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

ம்ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Post a Comment