Friday, February 19, 2010

ஞாபக சக்தி அதிகரிக்கும் மாத்திரைகளை மாணவர்கள் பயன் படுத்தலாமா?



       தமிழகத்தில் மட்டும் தான் இப்படி மாணவர்களை பெற்றோர்கள் பாடாய் படுத்துகிறார்கள்! பாடபுத்தகத்தை அப்படியே கரைத்து குடித்து மண்டையில் ஏற்றி , விடைத்தாளில் அப்படியே கொட்டி , வாந்தி எடுத்து , மதிப்பெண் பெற்று மருத்துவம், இஞ்சினியர் போன்ற துறைகளில் சேர்க்க வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள்.
அதற்க்கு புதிய யுத்தி தற்சமயம் , வல்லாரை , மூளை வளர்க்கும் அல்லது சக்தி தரும் உணவு பொருட்கள், மாத்திரைகள் என நித்தம் மாணவர் மனம் புரியாமல் ,திணித்து "டேய் , போனமாசத்துக்கு இப்ப எப்படிடா  இருக்கு ... இம்ப்ரோவ்மென்ட் தெரிகிறதா ? இன்னும் ரெண்டு  மாத்திரை சேர்த்து சாப்பிடு டா அப்பாதான் உன் மர மண்டையில் நல்ல ஏறும் ..."

       பிடிக்கிறதோ இல்லையோ , உமட்டளாக இருக்கிறதோ இல்லையோ , காலத்தின் கட்டாயம் இன்று மாத்திரைகளை மாணவர்கள் உணவை போல் மூன்று வேளை உட்கொள்கின்றனர். பாவம் மாணவர்கள் .
 
    பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பு மிக்கதாக அமைய , மனம் தான் கரணம் , மாத்திரைகள் மதிப்பெண் பெற்று தாராது என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.
மாத்திரைகள் மாணவனுக்கு தேம்புட்டி முளை செல்களுக்கு சக்தி தருகின்றன.
  
   பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கு காரணம் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள், உறவினர்கள் அனைவரும் படி , படி என மன அழுத்தத்தை தருவதால் , மாணவன் சோர்ந்து , உடலும் சோர்ந்து மனதில் படிப்பு பதியாமல் , தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டால் , நம்மை திட்டுவார்களோ  என்ற பயத்தில் , தேர்வில்  பாதி வினாக்களுக்கு விடை தெரியாமல் முழித்து, மதிப்பெண் குறைந்து விடுகிறான்.

    உடலுக்கு நல்ல ஆகாரத்தை கொடுங்கள், மனதிற்க்கு நல்ல அன்பை தாருங்கள் ,
படிப்பில் பயம் அகற்றுங்கள் ,மதிப்பெண் மட்டும் முக்கியம் இல்லை மனமும் முக்கியம் என்று உணர்ந்து செயல் படுங்கள். வெற்றி நிச்சயம். மருத்துவ சீட்டு தானாக வரும்.

    மீண்டும் கூறி கொள்கிறேன் மாத்திரைகள் அவை எந்த மருத்துவத்தை சார்ந்ததாக இருக்கட்டும் ,உடம்பிற்க்கு சக்தி தந்து , மூளை செல்களை சோர்வடைய செய்யாமல் , அவற்றிற்கு தேவையான சக்தியை மட்டுமே தருகின்றன . இதனால் மாணவன் நினைவு ஆற்றல் உயர்ந்து , யோர்ந்த மதிப்பெண் பெறுவான் என்பதெல்லாம் சுத்த பொய்.

   முறையான பயிற்சி , கடினமான உழைப்பு (அதாவது அன்றையா பாடங்களை அன்றே   முடித்து விடல் , அவற்றை எழுதி பார்த்து , தாமே தேர்வெழுதி திருத்தி பார்த்து , வகுப்பு ஆசிரியரிடம் தேர்வு வைக்க செய்து , உடனே திருத்தி கொள்ளுதல் },அன்பான அரவணைப்பு , மகிழ்ச்சியான சூழ்நிலை , பெற்றோரின் பக்குவமான எதிர்பார்ப்பு , உடம்பை வருத்தி படிப்பதை தவிர்த்தல் , நல்ல  தூக்கம் , அளவான சக்தி மிக்க சைவ உணவு போன்றவை மாணவனை நன்றாக படிக்க செய்து , படிப்பை நினைவில் நிறுத்தி , மாநில முதல் மாணவனாக திகழ செய்யும்.

    ஆகவே பெற்றோர்கள் மாணவர்களுக்கு சக்தி மிக்க ஆகாரம் கொடுத்து , படிப்பு படிப்பு என பயமுறுத்தாமல் , நல்ல படிக்கும் அன்பான சூழலை கொடுத்து ,பயம் நீக்கி , பாசம் காட்டுங்கள் . அதுவே நீங்கள் எதிர்பார்க்கும் நிலைமையை பெற்றுத்தரும்.

     விருப்பம் இல்லாமல் மாணவனுக்கு ஞாபக சக்தி மாத்திரைகளை கொடுப்பதை தவிப்போம் , மாணவன் மனம் புரிந்தது , முறையான எழுத்து பயிற்சி கொடுத்து , ஆசிரியர்கள் மாணவனுக்கு கற்றலில் இனிமையும் , எளிமையும் தந்து நல்ல புரிதலை ஏற்படுத்தி தருவோம், தானாக தமிழக மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண் பெற்று , நல்ல மேல் படிப்பு படிப்பார்கள்.
 

7 comments:

இளந்தென்றல் said...

உடலுக்கு நல்ல ஆகாரத்தை கொடுங்கள், மனதிற்க்கு நல்ல அன்பை தாருங்கள் ,
படிப்பில் பயம் அகற்றுங்கள் ,மதிப்பெண் மட்டும் முக்கியம் இல்லை மனமும் முக்கியம் என்று உணர்ந்து செயல் படுங்கள். வெற்றி நிச்சயம். மருத்துவ சீட்டு தானாக வரும்.

பொறுப்புள்ள ஆசிரியரின் பாங்கு தெரிகிறது தங்களிடம்..
பணி தொடரட்டும் ..வாழ்த்துக்கள் .

தாராபுரத்தான் said...

பயம் நீக்கி , பாசம் காட்டுங்கள்

ஹேமா said...

சரவணன் எனக்கு இது புதுத் தகவலாக இருக்கு.ஞாபகசக்திக்கு மாத்திரையா !

சைவகொத்துப்பரோட்டா said...

//படிப்பில் பயம் அகற்றுங்கள்//

உண்மையான வார்த்தை.

Ashok D said...

//முறையான பயிற்சி , கடினமான உழைப்பு (அதாவது அன்றையா பாடங்களை அன்றே முடித்து விடல் , அவற்றை எழுதி பார்த்து , தாமே தேர்வெழுதி திருத்தி பார்த்து , வகுப்பு ஆசிரியரிடம் தேர்வு வைக்க செய்து , உடனே திருத்தி கொள்ளுதல் },அன்பான அரவணைப்பு , மகிழ்ச்சியான சூழ்நிலை , பெற்றோரின் பக்குவமான எதிர்பார்ப்பு , உடம்பை வருத்தி படிப்பதை தவிர்த்தல் , நல்ல தூக்கம் , அளவான சக்தி மிக்க சைவ உணவு போன்றவை மாணவனை நன்றாக படிக்க செய்து , படிப்பை நினைவில் நிறுத்தி , மாநில முதல் மாணவனாக திகழ செய்யும்.//

உபயோகமான பத்தி :)

கண்மணி/kanmani said...

சாதாரண்மாக காய்ச்சல் உடல் உபாதைகளுக்குக் கொடுக்கும் மாத்திரைகளே பக்க விளைவுகளைக் கொடுக்கும்.இது வேறயா?
மைண்ட் சார்ப் னு பானம் வேறு இருக்கு.குடிச்சா அப்துல்கலாம் ஆகலாம்னு விளம்பரம் வேற...ஹூம்

அந்தக் காலத்துல [இப்பவும்] வல்லாரையை உணவில் சேர்ப்பாங்க.சரஸ்வதி மூலிகைன்னு சொல்வாங்க.ஞாபக சக்தி அதிகரிக்கும்.அதுதான் மாத்திரையா வந்துடுச்சி போல

Thiruvattar Sindhukumar said...

உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் முடிந்தவரை மாத்திரைகளை தவிர்த்து உணவுப்பழக்கத்திலேயே நோயைக்கட்டுக்குள் கொண்டுவர நான் முயற்சிப்பேன். இதிலும் கட்டுப்படாவில்லையெனில் டாக்டரை சந்தித்து மருந்து உட்கொள்வேன். குழந்தைகளுக்கு ஞாபகசக்தி கூடும் என்று கூறி மாத்திரை விற்பனை செய்பவர்களுக்கு விற்பனைகூடுமே தவிர மருந்து உட்கொண்டவர்களுக்கு ஞாபக சக்தி கூடியதாகத்தெரியவில்லை.

அன்புடன்,
திருவட்டாறு சிந்துகுமார்
kumudamsindhu@gmail.com

Post a Comment