குழந்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தை கற்று தருவது எப்படி?
குழந்தைகளை வட்டமாக நிற்க செய்யவும். தற்போது செயல் வழி கற்றல் முறையில் மாணவர்களுக்கு சின்னங்கள் அறிமுக படுத்துவதற்க்கும் இம் முறை உதவும்.நாய் , சிங்கம் , ஆடு ,யானை , குரங்கு ,அணில் (விலங்குகள் -தமிழுக்கு ) , கிளி , புறா, காகம் , குயில், வாத்து (பறவைகளுக்கு -கணிதம் ) , சைக்கிள், ஆட்டோ, கார், லாரி, பஸ் , விமானம் (வாகனம்-ஆங்கிலம் ) இவ்வாறாக குழுவில் எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும் என தீர்மானித்து அத்தனை கார்டுகளை தாயார் செய்த பின் ஆசிரியர் வகுப்புக்குள் செல்ல வேண்டும்.தங்கள் கைகளில் உள்ள கார்டை மாணவர்களுக்கு வரிசையாக மாறி மாறி வரும் படி கொடுக்கவும் .இப்போது தங்களுக்கு வந்த கார்டை யாருக்கும் காட்டாமல் கார்டில் உள்ள விலங்கு மாதிரி குரல் கொடுக்கவும். மாணவர்கள் குரலை அடிப்படையில் குழு சேர வேண்டும். உதாரணத்திற்கு , நாய் அட்டை வைத்துள்ள மாணவன் நாய் மாதிரி வோவ் , ஒவ், ...என குரல் குடுப்பான். இதன் மூலம் நாய் குரைக்கும், சிங்கம் கர்ஜிக்கும் , புலி உறுமும், நரி ஊளையிடும் , குரங்கு கத்தும் என்ற குரல் ஒலியின் அர்த்தங்களை கற்று தரலாம். எளிதில் மாணவர்களை சின்னங்கள் கற்று கொள்ள செய்யலாம் .குழுவில் அனைவரும் சேர்ந்த உடன் எனக்கு நாய் பிடிக்கும் என கூற செய்யலாம். விலங்குகள் மீது அன்பு உண்டாக்கலாம்.
மாணவர்களுக்கு சின்னம் அல்லது விலங்குகள் , பறவைகள் , வாகனங்கள், பூச்சிகள் பெயர்கள் சாரியாக தெரிகிறதா என பார்க்க இப்போது கூறும் செயல் பயன்படும். ஒரே மாதிரி இரு பட அட்டைகளை தாயார் செய்தது , அவற்றை நான்றாக குலுக்கி , வட்டமாக அமர்ந்துள்ள மாணவர்களில் ஒருவனை அழைத்து ஏடுக்க செய்து , பிறர் பார்க்காத வண்ணம் பார்த்து , இரண்ண்டு படமும் ஒன்றாக இருப்பின் , அனிவருக்கும் காட்டி , அதன் பெயரை சொல்ல வேண்டும் . சுற்றி உள்ள மாணவர்கள் அப்படத்திற்கு ஏற்ற விலங்கின் குரலை கொடுக்க வேண்டும். முயன்று பாருங்கள் விரைவில் பறவைகள், விலங்குகள், வாகனங்கள், பூச்சிகள் பெயர்களை பிழையின்றி சொல்லுவார்கள்.
எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளவும் மாணவர்கள் சரியாக செய்யும் ஒவ்வரு முறையும் பாராட்டுங்கள். அருமை. சபாஷ், மகிழ்ச்சி நன்றாக சொன்னாய் ,தவறில்லை மீண்டும் முயற்ச்சிக்கலாம், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என கூறவும் .
இந்த செயல் மூலம் மாணவனுக்கு பறவைகள் , விலங்குகள் இருப்பிடத்தை தெரிய செய்யலாம். விலங்குகள் மற்றும் அவற்றின் இருப்பிடம் குறித்த படங்களை எடுத்து கொள்ளவும். நான்கு படங்களையும் , அவரின் இருப்பிடம் படத்தையும் தரையில் அல்லது டேபிளில் வைக்கவும். ஒவ்வொரு மாணவனாக வந்து விலங்குகள் அவற்றின் இருப்பிடத்தை பொருத்தி வைக்க செய்யவும். இருப்பிட பெயர்களை சொல்ல செய்யவும். உதாரணத்திற்கு , சிங்கம் குகையில் வாழும். நாய் வீட்டில் வளரும். குதிரை லாடத்தில் இருக்கும்.மாட்டு தொழுவத்தில் இருக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று கொள்வர்.
நிறங்களின் பெயர்களை சொல்லி தர எளிதான வழி உள்ளது. மாணவர்களுக்கு நிறம் இல்லாத வெள்ளை தாளில் நாய் , சிங்கம் வெளி புற கொடு ( அவுட் லைன் ) மட்டும் வரைந்த படத்தை கொடுத்து , ஒவ்வொருவரும் தனி தனியே கலர் செய்ய சொல்லவும் இப்போது மாணவனிடம் தான் வைத்துள்ள படத்தை நிறத்தை சொல்லி , ஊதா நிற நாய், கருப்பு நிற நாய்... என கூரச்செய்யவும். வகுப்பறை கல கலப்பாக நேரம் போவது தெரியாமல் மாணவனும் இடை நிற்றல் இன்றி கற்று கொள்வான்.
தொடர்ந்தது படித்து பெற்றோர்களும் வீட்டில் நம் குழந்தைகளுக்கு கற்று தரலாம்.
இதை படிக்கும் ஆசிரியர்களும் தங்கள் வகுப்பில் பயன் படுத்தி எனக்கு அதன் பயன் பாட்டை தெரிய படுத்தவும். பெற்றோர்களும் , கல்வியாளரும் கருத்திட்டு ஊக்கபடுத்தவும். கற்றல் உத்திகள் தொடரும்/.
5 comments:
நீண்ட நாட்களாகிறது...இப்படியெல்லாம் ஒரு பதிவினைக்கண்டு... வாழ்த்துகள்...தொடர்க...பணி சிறக்க...
ஐயா! தாங்கள் ஆசிரியரா? உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.மாணவர்கள் குறித்த அனைத்துப்பதிவும் நடைமுறைப்படுத்துமளவில் உள்ளது.
நல்ல பதிவு
தங்களின் இந்தப்பதிவு விகடனின் குட் பிளாகில் இடம் பிடித்துள்ளது.
sugumarje, santhi lekshmanan akiyorukku nanri.thangkal thakavalukku nanri. thotarnthtu karuththittu ookkapatuththunkal. naan oru thalamai aasiriyar.
நல்ல பதிவு சரவணணன்.
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் வேலன்.
Post a Comment