Monday, February 15, 2010

தமிழில் மாணவர்களுக்கு கற்பனை திறனுடன் கூடிய நல்ல பேச்சு திறனை வளர்ப்பது எப்படி?

       தமிழில் மாணவர்களுக்கு கற்பனை திறனுடன் கூடிய நல்ல பேச்சு திறனை வளர்ப்பது எப்படி?

        தமிழில் சகஜமாக பேச கற்று கொடுப்பது எப்படி? தமிழ் மொழியில் பேசும் திறனை வளர்ப்பது  எப்படி ?

        தொடக்க கல்வியில் அல்லது நடு நிலை பள்ளி அளவில் உள்ள குழந்தைகளுக்கு , யா பிற இடங்களுக்கு சென்று தகவல் பறி மாறுவது தொடர்பான சூழலை ஏற்படுத்தி தருவதன் மூலம் , அவர்களிடம் உள்ள தமிழ் மொழி அறிவை நாம் வெளிபடுத்தலாம்.

 
        நம் மாணவர்களுக்கு கற்பனையில் அவனுக்கு பிடித்த தொழில் அல்லது ஏற்கனவே படித்த பாடம் சம்பந்தமான தொழில் சார்ந்த நபராக நினைத்து உரையாடக் கூடிய சூழலை   
உருவாக்க கூறவும்.  முடிந்த வரை உதவி செய்யவும் .மாணவர்களை குழுக்களாக பிரித்து ,குழுக்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்குள் உரையாடலை அமைத்திடும் வகையில் , சூழலை அவர்களாக தேர்ந்தெடுக்கவும்.உதாரணத்திற்கு , ஒரு குழுவில் உள்ள மாணவர்கள் இரயில் வண்டியில் ஒரு பெட்டியில் அமர்ந்து இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்குள் அறிமுகம் ஆகி , தங்கள் தொழில் சம்பந்தமான தகவல்களை பறி  மாறுவதாக ஏற்பாடு செய்யவும்.


          மற்றொரு குழு மாணவர்களை , இரயில் பெட்டியில் அறிமுகம் ஆகி , அவர்கள் ஊர் திருவிழாக்கள்,ஊர் பெருமை பற்றி பேச செய்யவும். உதாரணத்திற்கு ,
"ஐயா, தாங்கள் எந்த ஊருக்கு செல்கிறீர்கள் ? ". "நான் சென்னையில் இருந்து மதுரை செல்கிறான். தாங்கள் எந்த ஊர் தம்பி ?". "ஐயா , நான் மதுரை காரன் தான் , மதுரைக்கு என்ன விசயமாக செல்கிறீர்கள்?". " வயதான காலத்தில எங்க போவோம் கோவிலுக்கு தன் , இரயில் நிலையம் இறங்கியவுடன் ,மீனாக்ஷி கோவிலுக்கு எப்படி தம்பி போறது?"
"அய்யா போகிற வழியில தான் என் வீடு இருக்கு நான் உங்களை கூட்டி கிட்டு போறேன் , நடக்கிற தூரம் தான் ...." " தம்பி , மதுரையில் வேறு என்ன என்ன கோவில் தளங்கள் உள்ளன ?, எவ்வாறு செல்வது என எனக்கு உதவ முடியுமா ?" என பேச்சை தொடங்க உதவலாம் .

       இருவர் சேர்ந்து செய்யும் செய்யலாக நாம் அமைத்து மாணவர் கற்பனையுடன்,கூடி 
பேச்சு திறனை வளர்க்கலாம். இரண்டு நாற்காலிகளை இருவர் முதுகுக்கு பின்னால் அமர்வது போல் அமைத்து, இருவரும் முகம் பார்க்காமல் அமர்ந்த உடன், ஒருவனை , தான் அமைக்க இருக்கும் ஊராட்சி மன்றம் பற்றி தகவல்களை கொடுக்கச் செய்யும், பின் மற்றவனை அவ்வாறு கூறுவது சம்பந்தமாக வினாக்களை கேட்டு ,பதிலை பெற செய்யவும். "நான் தெருக்களை குப்பைகள் அற்று உள்ளதாக மாற்றுவேன்?". "எவ்வாறு குப்பைகள் இல்லாமல் தெருக்களை உருவாக்குவே?"." தெருக்கள் தோறும் தன் ஆர்வ தண்டர்களை ஏற்படுத்தி , அவ்வப்போது கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன், அவ்வாறு கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுவோர்க்கு,அறிவுரை கூறி ,குப்பைகள் கொட்டுவதை தடுப்பேன்". இவ்வாறாக நாம் மாணவர்களிடம் கலந்து பேசும் திறமையை வளர்க்கலாம். வெவ்வேறு விதமான சூழலை உருவாக்கலாம். இதில், ஜோடிகளை மாற்றிகொண்டே இருக்க வேண்டும்.

      
        "குற்றம் நடந்தது எப்படி?" என்ற விளையாட்டு  மூலம் மாணவர்களில் , புத்திசாலிதனத்துடன்,  சமயோசித அறிவு திறமையை வளர்க்கலாம். இரண்டு அல்லது நான்கு மாணவர்களை வெளியில் , அனுப்பிவிடுவது, பின்பு அவர்கள் தொடர்பில்லாமல் , வகுப்பில் உள்ள மாணவர்களை குழுவாக சுமார் நான்கு அல்லது ஆறு பேர் கொண்டதாக பிரித்து, ஒரு அசம்பாவிதம் அல்லது கொலை நடந்ததாக விவரிக்க செய்யவும், அதற்க்கு உரிய சூழலை மாணவர்களிடம் கூறி ,அதற்கு  வெளியில் உள்ள மாணவர்கள் தான் குற்றவாளி அவனை குழுவில் உள்ள யாரவது ஒருவர் குறுக்கு விசாரணை செய்து அவனை குற்றவாளி ஆக்க வேண்டும் என விளக்கம் அளிக்கவும் . இப்போது வெளியில் உள்ளல மாணவன் ஒருவராக அழைத்து குறுக்கு விசாரணை ஆரம்பிக்கலாம் . அந்த மாணவர்கள் புத்திசாலிதனமாக பதில் கூறி தப்பிக்க வேண்டும் . இதுதான் விளையாட்டு.       

இப்படி உங்கள் வகுப்புகளை நல்ல கல கலப்புள்ளதாக மாற்றி , வகுப்பில் மாணவர்களை குஷி படுத்தி வகுப்பறைகளை உயிரோட்டம் உள்ளதாக மாற்றவும். மாணவர் பேச்சு , சிந்திக்கும் திறன், பதில் கூறும் திறன், புத்திசாலி தனம் வெளிப்படும் விதமாக அமையட்டும்.

7 comments:

சிநேகிதன் அக்பர் said...

அருமையான யோசனைகள் சார்.

முயற்சி தொடரட்டும்.

மற்ற பதிவர்களிடமும் பின்னூட்டமிட்டு உங்கள் பதிவை தெரியப்படுத்துங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை சரவணன், உங்களிடம் பயிலும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஹாய் அரும்பாவூர் said...

இப்படி எல்லாம் படித்து இருந்தால்
என்னதை சொல்லி என்னதை ஆகா போகுது
நல்ல பதிவு நாலு பேர் இதை பின்பற்றினால் நிச்சயம் நல்ல வெற்றியே

ஹேமா said...

நான் அறிந்த ஒரு ஆசிரியரும் உங்களைப்போலவேதான்.இப்படியான யோசனைகளோடு நண்பன்போலவும் பழகி மாணவர்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டேயிருப்பார்.

மதுரை சரவணன் said...

saiva koththu purotta , hema, arumbavur , akbar akiyor thotarnthu vanthu enaakku ookkamalipatharrkku nanri

கே. பி. ஜனா... said...

தமிழில் நன்கு பேசப் பயில்வது இன்றைய காலத்தில் மிகவும் தேவையானது. அதற்கான தங்கள் வழிகள் மிகவும் பயனுள்ளவை.
-- கே. பி. ஜனா

ராமகிருஷ்ணன் த said...

I did D.T.Ed.
I like your way of teaching.
I also did your way in my teaching period.
I will follow your way when i got teaching post.
Good Blog.

All the best.

Thanks
Ramakrishnan t

Post a Comment