Sunday, February 14, 2010

கலாச்சார வன்முறை ....

    குழந்தைகள் வளர்ப்பு என்பது இன்று மிக முக்கியம் , காதல் என்ற பெயரில் கலாச்சார வன்முறை பெருகி வரும் இத்தருணத்தில் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம். அதற்காக நான் காதலுக்கு எதிரியல்ல . பாரதி சொன்னது போல் ஆதலினால் காதலிப்பீர்.

     தமிழன் வாழ்வில் அகமும் , புறமும் இணைந்தே இருப்பது. காதல் அன்று வெட்கம் அறிந்து வந்தது .ஆனால் இன்று அது சேலை அவுத்து விட்டு அம்மணமாக திரிக்கிறது
ஆம், அனைத்து ஹோட்டல்களிலும் காதலர் தின கொண்டாட்டம், என்ற பெயரில் குடி , கற்பு என்ன விலை என்ற நிலைமை வந்து விட்டது.  பயந்து , நயந்து வளர்ந்த காதல் , பகிரங்கமாக ஊரறிய மோகம் கூடி , அருவருக்க செய்கிறது .

     இதை பார்க்கும் குழந்தைகளும் காதல் என்பது ஆணும் . பெண்ணும் கலந்து கை கோர்த்து திரிவது என்று நினைத்து , ஆரம்ப கல்வி நிலையிலே , பால் கவர்ச்சியால் , தன் உடன் படிக்கும் மாணவனுக்கு அல்லது மாணவிக்கு  காதல் கடிதம் கொடுக்க தூண்டுகிறது. அதோடு நின்று விடாமல் , 'சார் , அவனுக்கு பத்து பிள்ளைகள் லவ் பண்ணுது சார் 'என்று சக மாணவன் பெருமை பேசுவது அபத்தமாக தெரிந்தாலும் இச் சமுகத்திற்கு காதல் , மற்றும் காதலர்கள் விட்டு சென்ற செய்தி எவ்வளவு மடத்தனமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

       நம் குழந்தைகளுக்கு அன்பு,கருணை,பரிவு, நட்பு, உண்மை, நன்மை, நல்வழி, மன்னித்தல் , அறவழி , எளிமை முதலியவற்றை நம் நடத்தையால் கற்றுத்தாருங்கள்,நிச்சயமாக அவர்கள் மனதில் பகை, வெறுப்பு , வஞ்சகம்,வன்முறை, தீமை,பொய்மை, என கெட்ட குணங்கள் அறவே நீங்கி நல்முறையில் வளர்வார்கள். 

        அன்றும் , இன்றும் ,என்றும் ரோல் மாடல் என்பது குழந்தைகளுக்கு பெற்றோர்களும் , உற்றோர்களும் தாம் பார்க்கும் அனைத்து உருவங்களிலும் இருந்து பெறுவதாக அமைந்து ,  குழந்தைகள் மனதில் பதிந்து அதையே நிஜ வாழ்க்கையில் கடைபிடித்து , பிரதிபலிப்பதாக வாழ்வு அமையும். அதனால் தான் விஜய், அஜித், ரஜினி, சிம்பு, கமல் என அனைவரயும் குழந்தைகள் ரோல்  மாடலாக பாவித்து இன்றும் வாழ்வதை பார்க்கிறோம்.

           ஆகவே, தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு முன்னாள் சண்டையிடுவது, ஆபாசமாக பேசுவது,தவறான எண்ணத்தில் கட்டிபிடிப்பது, முத்தமிடுவது ஆகியவற்றை தவிர்த்து, நல்ல சிந்தனை தூண்டும் விசயங்களை பேசுங்கள், நல்ல பழக்கங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள்.நல்ல திரை படங்களுக்கும் , நல்ல டிவி சீரியல்களும் (சாரி , எந்த சீரியலும் வேண்டாம்) பார்க்க அனுமதிங்கள்.  

              ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருந்தது , நல்ல விஷயங்களை மட்டும் பேசி, தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகளை எடுத்து கூறி , நல்வழிப்படுத்துங்கள்.

                அன்பான காதலர்களுக்கு , உங்களை பார்த்து இந்த சந்ததியினர் தவறான முன் உதாரணங்களை மேற்கொள்ளாமல் இருக்க , காதல் என்பதை புனிதமாக்கி ,அது யாரும் அறியாத தன்மையிலே, அன்பை மட்டும் பரிமாறுவதாக அமைந்து இருக்க தாழ்மையான வேண்டுகோள் வைத்து, காதல் தெரு கூத்தாகி விடாமல் பார்த்து கொள்ளுங்கள். காதலர் தினம் என்ற பெயரில் தெரு கூத்து அரங்கேறி வருவதை தடுத்து , காதல் புனிதம் காப்பீர். 

5 comments:

goma said...

ஒவ்வொரு வரியிலும் சமுதாய நலம் நாடுவது அழகாக ஆணித்தரமாக தெரிகிறது.
சம்பந்தப் பட்டவர்களுக்கு வாசிக்க நேரம் இருக்காது..

சிநேகிதன் அக்பர் said...

சரியா சொன்னீங்க பாஸ்.

வெட்கம் என்பது சிறிதும் இல்லாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கிறது.

பயனுள்ள பதிவு.

திவ்யாஹரி said...

நல்ல பதிவு. "காதல் கலாச்சார வன்முறை ...."ன்னு தலைப்புல சேர்த்துகோங்க சரவணன்.. அப்போ தான் கூகுள் சர்ச் பண்ணும் போது படிப்பாங்க.. வெறும் கலாச்சார வன்முறைனா பார்க்காம போக சான்ஸ் இருக்கு.. என்ன அவ்ளோ பொறுப்பா இருக்காங்க இப்போ காதலர்கள்.. நன்றி..

துபாய் ராஜா said...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் நினைவில் கொள்ள வேண்டிய நியாயமான கருத்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

இப்ப எல்லாம் கேர்ள் பிரெண்ட், அல்லது பாய் பிரெண்ட் இல்லாமல் இருந்தால் அது பெரிய இழுக்கு
என்ற ரீதியில் இருக்கிறது நிலைமை, சரியான நேரத்தில் சரியான நினைவூட்டல் சரவணன்.

Post a Comment