Thursday, February 11, 2010

குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை '     'குழந்தையும் தெய்வமும் ஒன்று' , என்று ஆரம்பிக்கும் 'உயிர் எழுத்து , பத்திரிக்கையின் பிப்ரவரி இதழில் 'குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை ' கட்டுரை பாலியல் ரீதியாக  குழந்தைகளின் உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது .

      கட்டுரையின் முக்கியாம்சம் 120 =060 இளங்கர்கள்+060 இளம் பெண்கள் இடம்   வினாத்தாள்கள்  கொடுத்து ஆராயப்பட்டதில் 72 .5%  மாணவ மாணவியர் தங்களுடைய குழந்தைப் பிராயத்தில் ஏதாவது ஒரு முறையில், ஏதாவது ஒரு சூழலில் பாலியல்ரீதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்  .மொத்தம் 27% மாணவ மாணவியர் 05   வயதாகும் பொது , வயதானவர்களின் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர். 28 % இளஞ்ர்கள் 37 % இளம் பெண்கள் மிரட்டலின் மூலம் பாலியல் தொந்தருவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

      இன்று பாலியல் கல்வியை துவக்கக் கல்வியில் எதிர்பவர்களுக்கு இந்த திருச்சி சர்வே ஒரு சவுக்கடியை கொடுத்திருக்கும். குழந்தைகள் எப்போதும் பாலியல் சம்பந்தமான அறிவு பெற்றவர்களாக  இருக்க வேண்டும். பாலுறவு என்பது வெறும் குழந்தை பெறும் விசயமாக இருக்கிறது .ஆணும் பெண்ணும் மனம் ஒத்து உடலால் இணைவது என்பது  இன்று போலியாக நம் சமுகத்தால் ஒதுக்கப்படுகிறது.

      காதல் என்ற பெயரில் களவாணித்தனம்  அதிகம் ஆகியிருப்பதால் நம் குழந்தைகளும் உறுப்பு தொடல் என்பது சகஜமாகி வன்முறை நடப்பது அறியாமலே பாலியல் ரீதியாக ஈ எமாற்றப்படுகிறார்கள் . குறிப்பாக பெரியவர்கள் தங்கள் பாலியல் ஆசைகளை நல்ல புரிதலின்றி , அடக்கிவைத்த ஆசைகளை நிறைவேற்ற துடிப்பதால் பச்சை பிஞ்சு உடல் மற்றும்  மனம் புரியாமல் பாலியல் வக்கிரமம் அரங்கேறுகிறது.

       தயவு செய்து, இந்த சமச்சீர் கல்விமுறையிலாவது பாலியல் கல்வி தொடக்கக் கல்வியில் அரங்கேறட்டும். என்னை போன்று உள்ள கல்வி சிந்தனையாளர்கள் பாடத்திட்டம் தீட்டித்தர தயாராக உள்ளோம். ஆசிரியர்களிடமும் இனி பாலியல் தொந்தரவுகள் குறையும் . ஆசிரியர்களும் பயமின்றி கற்றுத்தரலாம்.


  1. மாணவர்களுக்கு பால் உறுப்பு குறித்து கற்றுத்தாருங்கள். அவை நீ மட்டும் தொட கூடியவை என்பதை விரிவாக எடுத்துக் கூறுங்கள் .     
  2. பால் உறுப்புகளை அடுத்தவர்களுக்கு காட்டக் கூடாது என்று கண்டிப்பாக கூறுங்கள். 
  3. பால் உறுப்புக்களில் எதாவது பிரச்சனை என்றால் உங்கள் தாயிடம் கூறுங்கள் என அறிவுறுத்துங்கள் .
  4. பால் உறுப்புக்கு என்று தனி முக்கியத்துவம் தராமல் மற்ற உறுப்புக்கள் போன்று பராமரிக்க சொல்லுங்கள். 
  5. காதல் என்ற பெயரில் யாராவது தொடர்பு கொண்டாள் துணிந்து பதில் சொல்லுங்கள் .ஆம் அல்லது இல்லை என்பதை கூட்ச்சப்படாமல் துணிந்து சொல்லுங்கள்.  அடுத்து உங்கள் பார்வை ஒன்றே அவனை தடுத்து விடும் அருகில்  நெருங்க .
  6. உங்களுக்கு நம் உறவினர் யாராவது தவறாக அணுகுவதாக தெரிந்தால் தைரியமாக தாயிடம் சொல்லுங்கள். அம்மாவிடம் சொல்லி விடுவேன் என பயமுறுத்துங்கள்.
  7. கூடுமான மட்டும் ஆண்கள் தொட்டு பேசுவதை பெண் குழந்தைகள் தவிர்த்து விட செய்ய சொல்லவும் . அதே போல் இவர்களும் தொட்டு பேசுதலை தவிர்க்க சொல்லவும்.
  8. பாலியல் சம்பந்தமான சந்தேகங்கள் கேட்டால் தவிர்ப்பதை தவிர்த்து , அதற்கான விளக்கம் அவன் வயதுக்கு ஏற்ற வகையில் சொல்லவும்.
  9. ஆண் , பெண் குழந்தைகள் என்ன தானி தனியாக பிரித்து ஒதிக்கி தள்ள வேண்டாம்/. இருவரையும் ஒன்றாக வைத்திருப்பதால் கஷ்டம், நஷ்டம் இல்லை . பாலியல் சம்பந்தமான வினாக்கள் இருவருக்கும் பொதுவாக ஆனால் பால் உணர்வுகளை தூண்டாமல் கலந்துரை செய்யவும்.
  10. பாலியல் பிறழ்வு மனநிலை எப்போதும் ஏற்படாதவாறு தாய் கண்காணிக்க வேண்டும்.   

5 comments:

Sugumarje said...

தெளிவான விளக்கம்...
தன் (வாலிப வயசு)குழந்தைகளின், உடல் உறுப்புக்களை அப்படியே காட்டும் ஆடைகளை வாங்கித்தருவதில் ஆர்வம் இருக்கக்கூடிய பெற்றோர்கள், பால் இயல் குறி(!?)த்து சொல்ல மறுக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
எனது தளத்திற்கான வருகைக்கு நன்றி...

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா சொல்லி இருக்கீங்க சரவணன்.

jothi said...

கலக்கல்

Thekkikattan|தெகா said...

கிட்டத்தட்ட இதே லைனில் இங்கும் ஒரு கட்டுரை வாசித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள், மதுரை சரவணன், நன்றி.

மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து...

Thekkikattan|தெகா said...

sorry, the above link seemed to be broken, here is the URL ---

http://thekkikattan.blogspot.com/2010/02/blog-post_08.html

Post a Comment