காசு பணம் கரைத்து
நிர்வாணமாகி தந்தை
கல்லூரி அனுப்பினால் ...
கற்றுத்தர வேண்டிய கல்வி
சுனாமிக்கு பயந்து
கரை ஒதுங்கிய படகாய்
திருப்பி அனுப்பியது ...
ராக்கிங் என்ற பெயரில் !
காகம் கூட ...
கா... கா ....
என கரைந்து உண்ணும் ...
அதன் மனம் கரைந்து
அழைப்பதால் தான்
அதன் குரலை . ..
கரைகிறது என்றனரா... !
நீ என்ன நாயா ?
தூக்கி எறியும்
எச்சிலை திண்ணவரும்
தன் இனத்தை விரட்டும்
நாயா ...?
நன்றி கெட்ட நாயே
கல்வி ஒன்னும்
பணம் தரும்
டெல்லெர் மிசின் அல்ல ..
பண்பு கற்றுத்தரும்
பணிவு கொடுக்கும்
பண்பாடு போற்றும்
மனித நேயம் தந்து
அன்பு கூட்டும்
அகிலம் சேர்க்கும்
ஐயோ இது எங்கே ..
புரியபோகிறது ...?
தந்தையும் பொருள் இழந்து
நிர்வாணம் ...!
மகனும் கல்வி இழந்து
நிர்வாணம் ....?
7 comments:
//ஐயோ இது எங்கே ..
புரியபோகிறது ...?
தந்தையும் பொருள் இழந்து
நிர்வாணம் ...!
மகனும் கல்வி இழந்து
நிர்வாணம் ....?// மனசு வலிக்கிறது
//தந்தையும் பொருள் இழந்து
நிர்வாணம் ...!
மகனும் கல்வி இழந்து
நிர்வாணம் ....?//
அருமையான சாடல் இது சரவணன்
ரொம்ப சூடா வந்து விழுந்திருக்கு வார்த்தைகள், கவிதை எளிமையான அழகு சரவணன்.
பண்பு கற்றுத்தரும்
பணிவு கொடுக்கும்
பண்பாடு போற்றும்
மனித நேயம் தந்து
அன்பு கூட்டும்
அகிலம் சேர்க்கும்
..........இந்த அடிப்படை கல்வி, எப்பொழுது கிடைக்கும்? கவிதையில், நன்கு உங்கள் கோபங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
அன்பின் சரவணன்,
இருவரும் நிர்வாணம் - ம்ம்ம்ம்
த்ற்பொழுது ராகிங் மிகவும் குறைந்திருக்கிறது
விரைவினில் முழுவதும் ஒழியும்
நல்ல சிந்தனை நன்று
நல்வாழ்த்த்கள் சரவணன்
:((
அருமை
Post a Comment