"வாய்ப்பு தானாக வருவதில்லை .மனிதன் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும்,"பெர்னார்ட்ஷா சொல்லுவது போல் எதுவும் தானாக நிகழ்ந்து விடாது.வாழ்வில் எதுவு தானாக வராது. எதையும் தேடிச் செல்பவருக்கு வாய்ப்பு கிட்டும் .நல்ல வழியில் நாம் எதையும் அணுகினால் அதை அடைந்துவிடலாம்.தெளிந்த சிந்தனை ,நல்லது எது?கெட்டது எது ? என அறிந்திட உதவும் அறிவு. இவையே வெற்றியின் ரகசியம்.
"எழுதிருங்கள், விளித்து கொள்ளுங்கள் இனியும் தூங்க வேண்டாம் .எல்லாத் துன்பங்களையும் நீங்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."
சுவாமி விவேகனந்தரின் இவ்வரிகள் வெற்றி பெற்றவரின் வாழ்கையின் உண்மை சம்பவங்கள் ஆகும். தூங்குபவனிடம் விடியலை பற்றி பேசிவிட முடியாது. விடியலின் அருமை தூங்குபவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
"அதிகாலையில் சென்று இரைதேடும் பறவை போல் நான் விழித்தி செயல் பட வேண்டும்."
""என்ன சார் ...என்னதான் உழைச்சாலும் ...அதுக்கான ஊதியம் ..வரமாட்டீங்கதே..."
"மாங்கு மாங்கு ன்னு வேலை பார்க்கிறேன்...ஆனா ..கம்பெனியில எனக்கு மட்டும் புரமோஷன் தரமாட்டுகிராங்களே.."
"என்ன தான் கூவி கூவி வந்தாலும் ..அந்த காலணா லாபத்தை தவிர வேற இதை பார்க்க முடியுது..."
"வாங்கிற சம்பளம் ..கைக்கும் வாய்க்கும் பத்தல இதில என்னத்தை சேமிக்கிறது..."
இப்படியாக பல விதமாக புலம்புவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
எதுலையும் புதுமை வேண்டும் ,உழைப்பில் புதுமை ,கடினம் ..நிரந்தரமான வெற்றியை பெற்று தரும்.
என் அருமை நண்பர் திரு. சுரேந்திர பாபு அவர்கள் கூறிய கதையை சொன்னால் ஆச்சிரியப்படுவீர்கள். கதை என்பதை விட உண்மை சம்பவம் என்று தான் கூறவேண்டும்.எதார்த்தமாக ஒருநாள் பேசும் போது நடந்தது...
"சார்..என்னதான் சொல்லுங்க உழைச்ச உழைப்பு என்னைக்கும் வீண் போகாது.."
"ஆமா..சரவணா..நீ சொல்லுறது..நிஜம் தான் .என் கண் முன்னாடி நடந்த சம்பவத்தை சொன்ன நம்ப மட்ட..."
"சொல்லுங்க..."
"ரவி ௮ய்ஸ் கம்பெனி தெயரியுமில்ல .."
"தெரியும் சொல்லுங்க..."
"அதன் ஓனர் அய்யா ..வயதானவர் ...அவர நீ பார்த்திருப்ப ..."
"ஆமா தெரியும்.."
"அவர் கடவுள் இல்லை என்பாரு ...சாமி கும்பிட மாட்டார்..உழைப்பு மேல நம்பிக்கை வச்சிருக்கிராவரு ...ஆனா இப்ப அவரு மகன் கவனிக்கிறான் ஆனா எதிர்மறை ..."
"அப்படியா.."
"தவறாக சொல்லவில்லை .சாமி சாமி ன்னு ஊர்ல உள்ள எல்லா கோவிலுக்கும் போறவன் அப்பாவை விட அதிகமாக உழைகிறவன் ... "
""அது தானே நல்லது ..."
"அன்ன ..அவங்க அப்பா ...தன் கொள்கையை விட்டு கொடுக்காம கடைசி வரை வாழ்ந்தார்..தெரியுமா.."
"சாகிற வரைக்கும் சாமி கூம்பிட மாட்டாரா.."
"அது இல்லப்பா ..பேசும் போது குறுக்க குறுக்க பேச கூடாது ...அப்புறம் சொல்லமாட்டேன்..பொறுமையா கேளுங்க வாத்தியாரே..."
"சரி குறுக்கிடல ...சொல்லுங்க..."
"கம்பெனிக்கு முன்னால போர்டு வச்சிருப்பார்...தினமும் ஒரு தத்துவம்எழுதி போடுவாரு...படிச்சா நமக்கு புல்லரிக்கும்..."
”"சிலநேரம் நான்..போர்டுல எழுதாவான்னுக் கேட்பேன்...”
“எழுது ...நல்ல விசயம் நாலு பேருக்கு தெரியனும்ன்னு தானே போர்டு வச்சுருக்கேன் ...நான் எழுதுனா என்ன நீ எழுதுனா என்னா ..."
"நான் எழுதி முடிப்பதர்ர்க்குள் வந்து இந்தா அயிஸ் என்று கொடுப்பார்..சந்தோசமா இருக்கும் "
"இதை விட பிரமாதம் என்னன்னா ..அவரிடம் வேலை பார்ப்பவன் எல்லாம் வாழ்கையில் மிகவும் மோசமானவர்கள் ...உதவி காசு கொடுங்க அப்படி சொன்னா...உடனே ..அயிஸ் வண்டிய கொடுத்து...வித்திட்டு வா...அப்படின்னு அனுப்புவார்...வந்த பின்னாடி ...அவன் விற்றாலும் விற்க்கா விட்டாலும் ..பத்து ரூபா தருவார்....அய்ந்து ரூபா தந்தா ஜனதா சாப்பாடு ...வயிறு நிறைய சாப்பிடலாம்..உழைத்து தினம் சாப்பிட நினைக்கிறவங்க...அவர் ஒரு வழிகாட்டி ...வாழ்கையில் மோசமானவங்களுக்கு அயிஸ் வண்டியோட ஓடி போக மாட்டானான்னு கேட்டா..."
"நிச்சயமா வருவான் ...உழைக்க வழி காட்ட வேண்டியது நம் கடமை ...என்ன ஆரம்பத்தில் வண்டிய கொண்டு எங்கயாவது போட்டு கச்சா அடிச்சுட்டு படுத்திருப்பான்...சாயங்கலம் வந்து வண்டிய கொடுத்திட்டு என்கிட்டே பத்து ரூபா வாங்கிட்டு போவான்...அவன் வண்டி கொடுக்கும் போது நாலு பேரு ..அண்ணனே...காசுக்கு அயிஸ் கொடுங்க அப்படி சொன்னா....உழைப்பின் அருமை தெரிந்து ...திருந்த மாட்டானா ..நம்பிக்கை தான்..."
அவர் கூறிய அந்த விசயம் எனாக்கு ஆச்சரியமாக தான் இருந்தது .வாழ்க்கையில் கொள்கைபிடிப்புடன் உழைப்பவர்கள் அதிகம் ...அவர்களுக்கு தான் சமுதாயம் அங்கிகாரம் கிடைகிறது...அவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
எங்கள் ஆசிரியர் வாழ்விலும் பலர் தங்கள் கொள்கைகளுக்கு மாணவர்களை கண்ணடிப்பது கிடையாது.
எங்கள் பள்ளியில் ஒரு சமயம் தொடர்ந்து ஆசிரியர் பையில் இருந்து பணம் காணாமல் போனது.மாணவர்கள் பலர் கேட்டு பார்த்தும் கிடைக்க வில்லை...விசாரித்தால்...
"மிஸ் ...நான் எடுக்கவில்லை ..மிஸ் "
"மிஸ் யாரும்...டேபிள் பக்கத்துல போகல..."
"
திடீர்ன்னு ஒரு நாள் ...மாணவன் ஒருவன் மீது சந்தேகம் வர ..அவனை அழைத்து விசாரிக்க ...
"நான் டேபிள் பக்கத்தில்ல வரலை சார் ..."
"கேண்டீன்ல அம்பது ரூபாய்க்கு வங்கி சாப்பிடையாமே ..."
"இல்லை சார் .."
"டேய் பொய் சொல்லுறியா... சார் இவனுக்கு டி. சி. கொடுங்க அப்பத்தான் இவன் அடங்குவான்...அவுங்க அம்மா அப்பாவ அழைத்து வர சொல்லுங்க ...இல்லைனா போலிசுக்கு போன் போட்டு ..மைனர் ஜெயில்ல போடுங்க ...அப்பா தான் சரிபட்டு வருவான்..."
"பொறுமையா இருங்க மிஸ் ..டேய் யாருக்கு எல்லாம் மிட்டாய் வாங்கி கொடுத்த ..."
"சார் ...சிவா...பி கிளாஸ் ராமு ..ஐந்தாம் வகுப்பு கார்த்தி "என சக மாணவர்கள் அடுக்கினார்கள்.
கார்த்தி..."சார் நூறு ரூபா வச்சுருந்தான் சார் ...எனக்கு மிட்டாய் வாங்கி கொடுத்தான்...சாப்பிட்டேன்...கேட்டதுக்கு மாமா தந்ததா சொன்னான்.."
"சார் ..எனக்கு ஒரு பேனா , சாக்கிலேட்..." என அடுத்தவன்.
"சரி அவன் பையை தேட சொல்லுங்க..."
"சார்..மிஸ் நல்ல பார்த்திட்டாங்க ...ஒண்ணும் இல்லை ....."
"டேய் ..உண்மைய சொல்லுடா......"
"சார்...எங்க அம்மா மேல சாத்தியமா...நான் திருடல சார்...எங்க மாமா கொடுத்தது தான்...சார்.."என அடம் பிடித்தான்.கடைசி வரி உண்மையாய் சொல்ல வில்லை .
"டீச்சர் அவுங்க அம்மாவை நாளை வர சொல்லுங்க ..அப்புறம் முடிவு எடுப்போம்."
என கூறிவிட்டு என்வகுப்பிற்கு சென்றேன்.
சிறிது நேரத்தில் .."சார்...அவன்கிட்ட இருந்து பானம் கண்டு பிடிச்சாச்சு ..."
எப்படி என விசாரித்த போது ...அதிர்ந்தேன்.
"அவன் பேனாவை ஆசிரியர் கேட்டார் ...தரவில்லை ..சந்தேக பட்டு ..பேனாவை புடிங்கி ...பார்த்த போது ..பேனா ரீபில் உடன் ஐம்பது ரூபாய் நோட்டை ...சுற்றி வைத்து இருந்தான்..."
"பலே ..கில்லாடி ...திருடன் தோர்த்து போயிட்டான்..."
"சார் இவன் சாதாரண திருடன் இல்லை ..பலே..திருடன்.." என மாணவர்கள் சொன்னார்கள்.
அவன் வாங்கி கொடுத்த மற்றொரு பேனாவை பார்த்த போது அதிலும் ஒரு ஐம்பது ரூபாய் இருந்தது .
"சார்..பாவம்..தெரியாம செய்துட்டான்..இனிமே திருட கூடாதுன்னு சொல்லி அனுப்புங்க ..என் நேரமே ..சரி இல்லை...எதோ இந்த மட்டுமாவது என்பணம் கிடைத்ததே.. இனமே யாரி பயிலும் திருடாம இ ருந்தாலே ..போதும்..."என்று அந்த ஆசிரியர் மன்னித்தார்.
வங்கி கடன் கட்ட மூத்த ஆசிரியர் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தார்.தலைமை ஆசிரியர் ஆளைபின் பெயரில் அவரை பார்த்து வந்த ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பணம் காணாமல் போகியது ..தலைமை ஆசிரியரிடம் கூ றியதோடு சரி...யாரையும் விசாரிக்கவில்லை.அவரிடம் காரணம் கேட்டபோது ...
"சார்..என்ன்ன செய்யுறது ...நம்ம அஜாக்கிரதை...பையன குத்தம் சொல்ல கூடாது...அப்படி சொல்லி என்ன ஆகிட போறது..."என மாணவர்களுக்காக தனக்குள்ளே அழுதுகொண்டார்கள்.
"மாணவர்களை நன்முறையில் கொண்டு செல்லவது தான் தன் இலச்சியம் என தன் இலச்சியத்தின் மீது பிடிப்பு உள்ளவர்கள் ...ஜீவன் போக சொல்லி கொடுப்பதுடன்...ஆவி போக கற்று தருவதுடன் , பல நேரங்களில் தன் பொருளையும் பறிகொடுக்க நேரிடும்.
குடும்பம் மறந்து, தன் சுற்றம் மறந்து,தன் வகுப்பு மாணவர்களையே தன் குடும்பமாக வின், சுற்றமாகவும் எண்ணி தன் வாழ்வையே தியாகம் செய்து வாழும் பல ஆசிரியர்கள் என்றும் இருக்கிறார்கள்.
இவர்கள் லியோ டால்ஸ்டாய் சொல்ல்வது போல் வாழ்பவர்கள்.
"வாழ்வதில் தான் இன்பம் ,உழைப்பதில் தான் வாழ்வு "
ஆம் ...உண்மையே.
1 comment:
வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு பாடம்
வாழத் தெரியாதவர்களுக்கு இல்லை இது வேதம்
Post a Comment