Saturday, February 27, 2010

8டாத அறிவு ..

காப்பி 

ஒருவர் தன் நண்பரை புதுமனை புகு விழாவிற்கு அழைக்க சென்றிருந்தார்.

"அவசியம் வந்துவிடுகிறேன்...கொஞ்சம் காபி சாப்பிடுங்களேன்..."

"ஐயோ!மன்னிச்சுடுங்க ....காப்பி சாப்பிடுகிறது கெட்டப் பழக்கம் ...அதனால உடம்புக்கு தான் கெடுதி..."

"என்ன கெடுதியா..?"

"ஆமா!ஆரம்பத்திள்ள சுறுசுறுப்ப கொடுக்கிற மாதிரிதான் இருக்கும் ....நாளடைவில் மூளையின்   செயல்பாட்டை மந்தமாக்கிடும்..."

"அப்ப  ...காப்பி பத்தி முழுவிபரமும் தெரியும்ன்னு சொல்லுங்க...."

"காப்பி..ரூபியெசி...தாவர குடும்பத்தை சேர்ந்தது....காப்பி மரமா வளர்ந்தா ...பதினைந்து அடி உயரம் கூட வளரும்....ஆனா ...நாம வியாபார நோக்கத்தில் ...அதை வளர விடுகிறது இல்லை ...காப்பி கொட்டைகளை பறிக்கிற விதமா...ஐந்து அடிகளிலே....அடிகடி வெட்டி விடுகிறோம்..."

"அப்படியா?"

"அபிசிநியாவில் ...கப்பா (caffa )  ...என்ற இடத்தில தான் காப்பியை முதன் முதலில் பயன் படுத்தினாங்க ...காப்பி கண்டுபிடிச்சதில்ல...சிறு கதையே இருக்கு ..."

"கதையா...சொல்லுங்களேன்..."

"அரேபிய பள்ளத்தாக்கில் ஆடு மேய்க்கும் சிறுவன் ...தன் ஆடுகள் ...ஒரு வித செடியின் காய்களை சாப்பிட்டால் ..உற்சாகத்துடன் குதித்து விளையாடுவதை கவனித்தான்...அப்புறம்...அவனும் ..அந்த காய்களை சுவைத்து பார்த்தான்....ஒரு விதமான தெம்பும்  . .. உற்சாகமும் ...கிடைக்க பெற்றான்...தான் பெற்ற இன்பத்தை பிறரிடமும் கூற ...காப்பி கொட்டையை பானமாக்கி பருகும் பழக்கம் ஏற்பட்டது."

"அப்ப அரேபியாவில தான் காப்பி கடை ஆரம்பிச்சாங்கள...?"

"இல்லை...லண்டன்ல...ஜார்ஜ் யார்டு என்ற இடத்தில் தான்....1652    ல்ல முதன் முதல்ல காப்பி கடை ஆரம்பிச்சாங்க ,,,அயல் நாடுகளில் பால் சேர்க்காம...இனிப்பு குறைவா ...சாப்பிடுவாங்க ..."

"அப்படி சாப்பிட்டா...நல்லதா...?"

"அப்படி சாப்பிடிகிறது...தான் சரியான முறையாக அவுங்க கருதுறாங்க...ஆனா மருந்தாகவும் காப்பி பயன்படுகிறது..."

"மருந்தா...?"

"ஆமா..மலேரியா காச்சலின் போது ... உடல் நடுக்கத்தையும் , குளிரையும் குறைக்க சுடன காப்பி சாப்பிடலாம்...அது போல் ஆஸ்துமா தொல்லைய  குறைக்க ...கக்குவான் இருமல் ..ஹிஸ்டீரியா...போன்ற பயணிகளின் கடுமையை  குறைக்க காப்பி சாப்பிடலாம்.."

"என்னை குழப்பிறீங்க...காப்பி சாபிடலாமா...வேண்டாமா...?"

"கப்பியினால ...நன்மையை விட ..தீமைகள் தான் அதிகம்...இரத்த குழாய்களின் சீரான செயல்பாட்டை குழப்பத்துக் குள்ளாக்கி ..நரம்பு தளர்ச்சி விரைவில் வந்து விடும்...இதய நோய்க்கு வாய்ப்பு அதிகம்....அஜீரணம் ...மலசிக்கல்...உறக்க கேடு ...போன்ற தொல்லைகள் கொடுக்கும் ..உடலின் ஜீவா அணுக்களின் வளர்ச்சியை  கெடுக்கும் ..."

"அப்ப ...இனிமே ..காப்பி சாப்பிட நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன்...சொல்லவும் மாட்டேன்..."

"அப்ப நான் கிளம்புறேன்...அவசியம் வந்துடுங்க..."

"அது சரி ...இப்ப நீங்க என்ன தொழில் பண்ணுறீங்க..."

"அதுவா...மதுரையில ..காப்பி கடை இரண்டு வச்சுருக்கேன்....சென்னையில ...காப்பி தூள் ஏரியா டிஸ்ட்டிரிபுஷன் ....எடுத்து பண்ணுகிறேன் ..."

"!!!!!"



6 comments:

Kandumany Veluppillai Rudra said...

இந்த அறிவு கூடிய வேலைகளெல்லாம்,மனிதர்களைத் தவிர,வேறு சீவராசிகள் செய்வதில்லையே ஐந்தறிவைவிட எட்டாவது அறிவு விசேசமானதுதான்

Muruganandan M.K. said...

மிகச் சுவையாக இருக்கு உங்க கடைக் காப்பி. நிறைய விடயம் சொல்லியிருக்கிறீர்கள்.

DREAMER said...

காஃபி சூப்பர்...

-
ட்ரீமர்

அன்புடன் நான் said...

பயனுள்ள பகிர்வு.... தென்கச்சி பாணியில படிக்கவும் சுவையா இருக்கு.
பாராட்டுக்கள்.

settaikkaran said...

:-))

இனிமேல் காப்பி குடிக்கிறபோதெல்லாம்...! :-))

மதுரை சரவணன் said...

உருத்திரா,சேட்டைக்காரன்,டாக்.எம்.கே.முருகானந்தம்,சி.கருணாகரசு,டிரீமர், அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரும் அனைவ்ருக்கும் . சைவ கொத்துப்புரெட்டா அவர்களுக்கும் நண்றி!

Post a Comment