"போடா ..வெங்காயம் ...சிகிரெட் குடிக்காதேன்னா ...கேட்கிறியா ...?நீ உருப்பட மாட்டே..நூரையீரல் பாதிச்சு ...சாகப்போறே..."
அண்ணே...ஏன் திட்டுறீங்க ...அதுவும் வெங்காயம் ன்னு ....வேற திட்டுறீங்க ...வெங்காயம்ன்னா.. அவ்வளவு கேவலமா போச்சா.."
"ஆமாப்பா...சின்னபிள்ளை மாதிரி நீ கேட்கிற ..இவனும் வளர வளர ஒண்ணுமில்லாம போறான்.. எப்படி வெங்காயம் உரிக்க உரிக்க ஒண்ணும்மில்லையோ ...அப்படி.."
"அப்படி யாருண்ணே சொன்னா.."
"என்ன சொல்றே..?"
"ஒரு நாளைக்கு அரை அவுன்சு விதம் நான்கு நாளைக்கு வெங்காய சாற்றை கொடுத்தா..நூரையீரல் திடப்படும்....அது மட்டுமில்லை ..இருமல் , காப வாந்தி ,நாள் பட்ட சளி நீக்கும் ..தெரியுமா..."
"அப்படியா..?"
" வெங்காயத்தை தினமும் உணவில் சேர்ப்பது மூலம் உடல் உஷ்ணம் ,உஷ்ணபேதி ,தலைவலி ,கண் மங்கல் ,விடா தும்மல், முழங்கால் வீக்கம் குணமாவதுடன் திரும்பவும் வராது ...இனி வெங்காயம்ன்னு ..திட்டு வீங்க...?"
"இனிமே 'வெங்காயம்ன்னு ..' யாரையும் திட்ட மாட்டேன்..இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்க..?"
"வெங்காயச் செடியின் இலை, தாள்,பூ,கிழங்கு ,விதை...அனைத்தும் மருத்துவ பயனுடையன...பூவ பருப்போட சமைத்து சாப்பிட்டா..வயிற்று வலி , மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்..அப்புறம்...வெங்காய இலை தாகம் ,மூலச் சுடு, உடல் வெப்பம் தணிக்கும் ...."
"வேறு சிறப்பான விஷயம் எதுவும் உண்டா...?"
" வெங்காய விதை பொடியை சக்கரையுடன் சேர்த்து மூன்று வேளை சாப்பிட குண்ம நோய் தனிவதுடன்..ஆண்மை உண்டாகும்.."
"வெங்காயத்தை பச்சையா திண்ணா இரத்தம் மிகுதியாகும்ன்னு ...கேள்விபட்டேன்..."
"ஆமாம் ..ஆமாம்..அதை விடு ...நான் வெங்காயத்தை பத்தி பேசுறப்ப ..எதோ ..வெங்காயத்தை உரித்த மாதிரி ..கண்ணில இருந்து தண்ணியா வருது.."
"வெங்காயத்தோட விலையை நினச்சுட்டேன்..அதான் ..அழுகையா வருது..."
6 comments:
வெங்காயம் பற்றிய தகவல்கள், அதன் விலையை போல அதிகம்தான்.
சரியாதான் சொல்லி இருக்கீங்க.
Thanks for giving me boost to write .Especially to aravinth-n,saiva koththu purottaa.
வெங்காயம் பற்றிய அருமையான தகவல்களை இரண்டு பேர் பேசும் நடையில் வித்தியாசமாக கொடுத்துள்ளீர்கள்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
அருமை!
வெங்காயத்தில் இவ்வளவா... தங்ஸ் சரவணா
Post a Comment