Monday, March 29, 2010

வாழ்வை ரசிப்போம்

   என் உயிர் தோழி வீட்டிற்கு சென்ற சனிக் கிழமை சென்றேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் கணவர் ரவி பூண்டு , வெங்காயம் உரித்து கொண்டு இருந்தார். நான் இதுவரை என் வீட்டிற்கு அவ்வாறு எந்த செயலும் செய்தது கிடையாது . நேரமும் இல்லை என்பது தான் உண்மை. செய்யக் கூடாது என்று ஒன்றும் இல்லை.

      மிகவும் சந்தோசமாக அதுவும் சவுகாசமாக டி.வி பார்த்து கொண்டு , இருவரும் பேசி கொண்டு , குழந்தைகள் அருகில் உள்ள அறையில் அமைதியாக படித்துக்கொண்டு மிகவும் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.  வாழ்க்கை நாம் ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
  
         என் தோழி அடிக்கடி என்னை கலாய்ப்பார். தினமும் என் கணவர்தான் எனக்கு பெட் காப்பி கொடுத்து எழுப்பி விடுவார். நீ உன் மனைவியை இப்படி எழுப்பி பார். வாரம் ஒரு நாள் உன் மனைவிக்கு காய் நறுக்கி கொடு. என் சார் எனக்கு தினம் காய் நறுக்கி கொடுப்பார். முடியவில்லை என்றால் சமைத்தும் கொடுப்பார் என்பார்.
         அவர் கணவர் ரவி மதுரையின் பிரபல வழக்கறிஞர் ,வீட்டில் பார்ப்பது என்பது அரிது. இருப்பினும் அதற்கு என தனி நேரம் ஒதுக்கி , தன் மனைவிக்கி மட்டும் அல்ல தன் குழந்தைகளுடன் அன்பாக பேசி ஒரு நண்பர்கள் போல் பழகுவது இன்று அபூர்வமே.

        "என்ன சார் இது ஓவரா தெரியலையா ?" என்றேன். "என்ன சார் செய்ய இப்படி எல்லாம் செய்யாட்டி சோறு போடா மாட்டாங்களே...?" என்று தமாசாக சொன்னார். ஆனால் அன்று அவர் சமைக்கவில்லை என்றால் அனைவருக்கும் சோறு கட் தான். என்பது என்னுடன் அவர் பேசிக் கொண்டே செய்த வேலையில் தெரிந்தது. ஒரு மணி நேரம் ஆனவுடன் அவரின் குழந்தைகள் ரினேஷ்(ஒன்பதாம் வகுப்பு), மற்றும் பவானி(ஆறாம் வகுப்பு) வந்தார்கள் .அவர்களும் பெற்றோர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு என்னையும் கேலி செய்து கொண்டு , அவர்களும் சமையல் வேலை செய்தனர். இப்படி நான் பார்த்ததே கிடையாது. குழந்தைகள் பொதுவாக யாரும் வந்தால் வெளியில் சென்று விடுவர். அல்லது தனியாக செல்ல செய்து விடுவர். அனுபவம் மாறுபட்டு இருந்தது. தோழி மட்டும் இருக்கும் சமயத்தில் நன்றாக பேசி சிரிப்பார் , அதுவே எனக்கு பொறாமையாக இருக்கும் . தற்போது பயமின்றி அவர்கள் தந்தையுடனும் அரட்டை அடிப்பது ஆச்சரியமாக தான் இருந்தது. தனியாக பெற்றோர்களுடன் அரட்டை அடிப்பது வேறு, மற்றொருவர் வந்திருக்கும் போது அரட்டை அடிப்பது என்பது புதிது, அதுவும் பேசிக் கொண்டே வீட்டு வேலைகளை செய்வது மிகவும் கடினம்.

         என் தோழி என்னிடம் "சரவணா வாழ்க்கை என்பது ஒருமுறை தான் வரும் , அதை நாம் ரசித்து ,நம் குழந்தைகள் , வீட்டில் உள்ளவர்களுடன் அன்பாக சண்டை சச்சரவுகள் இன்றி, அவர் அவர் தேவைகளை புரிந்து நாம் வேலை செய்தால் , குடும்பத்தில் சண்டை வராது. என்கணவர் என்னை புரிந்து வைத்துள்ளார், அதனால் தான் எனக்கு தேவையான காப்பி , உடம்பு சரியில்லை எனில்  சமையல் வேலை , துணி துவைப்பது , அயர்ன் செய்வது, குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வது , என்பன போன்ற வேலைகளை செய்கிறார். அதுபோல் அவருக்கு பிடித்த் மாதிரி வேலைகளை நான் சிறிதும் தயக்கமின்றி செய்கிறேன்.    குழந்தைகளும் எங்களை புரிந்து மிகவும் நன்றாக படிக்கின்றனர்.எங்களுடன் மட்டும் அல்லது அவர்களும் சண்டை போடுவது கிடையாது."

  நானும் என் குடும்பத்தில் வாரம் ஒருமுறை சமைக்க வேண்டும் என்று சபதம் எடுத்தாலும் ,முடிவதில்லை. நேரம் எல்லாம் கிடைக்கிறது . ஆனாலும் அதற்க்கான முயற்சி எடுத்தால் , "என்ன புதுசா .. யாரு உங்க தோழி சொல்லுச்சா...தோழி சொல்லி வரக்கூடாது ...தானா வரணும் "என்று சண்டை தான் வருகிறது.  நானும் என் குழந்தையை அடுத்தவர் இருக்கும் போது இருக்க சொன்னால் , வெளியில் ஓடி விடுகிறாள். காரணம் புரியாமல் நான் அவரிடம் கேட்டபோது ,"தன் கணவர் எப்போதும் சொல்லவார் வாழ்க்கையை நாம் தினமும் ரசிப்பு தன்மையுடன் எடுத்துக் கொண்டு ,நாம் நம் வேலைகளை செய்தால் நம்மை பார்த்து உலகம் திருந்தும், நாமும் உலகத்திற்கு முன்னோடியாக  இருக்கலாம்.வாழ்கையை ஒரு சோதனை கூடமாக நினைத்து ஒவ்வரு நிகழ்வையும் பரிசோதித்தால் வாழ்க்கை வேதனை ஆகி , சோகம் ஆகிவிடும் . அதுபோல நீ, வீட்டில் எங்களை  போல் இருக்க பரிசோதித்தாய் ஆகவே , அது சோகத்தில் கொண்டு செல்கிறது."என்றார்.

       வாழ்வை ரசித்தால் நமக்கு வாழ்வு வசப்படும் . ஆம் உண்மை . நாம் நமக்கு வேண்டாத சினிமா படமாக இருந்தாலும் , பொழுது போக வேண்டுமே என்று அதை டி . வி. யில் பார்த்து பழகி விட்டோம். ரசித்து பார்க்க வேண்டிய  சினிமாவையே நாம் கடமையாக பார்க்க பழகி விட்டோம். மனைவி காப்பி கொடுத்தால் அதை நாம் ருசித்துக் குடிக்காமல், கடமையாக குடிக்கிறோம். "டீ சூப்பரா இருக்கு ...என்ன டீ த்தூள் போட்டே ...உன் கை பக்குவம் தான் ..."  என பாராட்டுங்களே  வாழ்க்கை நமக்கு ருசிக்க ஆரம்பிக்கும்.


   "டெய்லி நீ சமைக்கிற இன்று ஒருநாள் நான் சமைக்கட்டா...சும்மா ஒரு சேஞ்சுக்கு..." என ரசித்து பேசுங்கள் . வாழ்வு நம் வசம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அரும்பும். நல்லதை நாம் பாராட்டுவதை போல் கெட்டதையும் ரசித்து நிராகரிக்க வேண்டும் ."என்ன  உப்புமா செய்திருக்க ...உப்பாய் இருக்கு மனுஷன் திம்பான...?"என்று கூறுவதைதவிர்த்து விட்டு ,"எம்பா .. , போன வாரம் செய்த  உம்புமா போல வரலையே...அது தேனா வாய்க்குள்ள போச்சு... இதுல்ல உப்பு கொஞ்சம் அதிக மாகிடுச்சு போல , இருந்தாலும் பரவாயில்லை , உன் கை யால  சாப்பிடுகிற பாக்கியம் கிடைச்சுதே...."  என சொல்லி பாருங்கள்."சாரிங்க , இதோ ...வாய்க்கு ருசியா புதுசா சமைத்து வருகிறேன்..."என்று புன்னகையுடன் உங்கள் மனைவி புதுசா சமைக்க கிளம்பிவிடுவாள்.   வாழ்வு ருசிக்கும் . வாழ்வை ரசியுங்கள்.


போஜராஜா காளிதாசனின் ரசிகன் . அவரின்  எல்லா பாடல்களுக்கும் ரசித்து பொற்காசுகள் தருவார். ஒருமுறை தன்னை பற்றி இரங்கல் பாடலை பாட சொன்னார். அதற்கு காளிதாசர் தான் பாடினால் பழித்து விடும் என மறுத்து நாடு கடந்து சென்றார். ஒருநாள் காட்டில் இருக்கும் காளிதாசர் தான் என அறிந்த  மன்னன் மாறு வேடமிட்டு , காளிதாசனிடம் போஜ ராஜா இறந்து விட்டதாக கூற , காளிதாசர் இரங்கல் பாவை படித்தார். தான் இறந்து விடுவோம் என்ற பாயமின்றி,கவிதையை ரசிக்க சென்ற போஜ ராஜாவை  நாம் ரசிக்க வேண்டும்.  கவிதை ரசிப்பதால் நல் இலக்கியம் பிறக்கிறது. நாம் வாழ்வை ரசிப்போம் ,நம் குடும்பம் மகிழ்ச்சியில்  தளைக்கும்.

    "எனக்கு வாழ்வை ரசிக்க கற்றுக்  கொடுத்த என் தோழி, அவரின் கணவர் ரவி மற்றும்  குழந்தைகளுக்கு மனமார்ந்த நன்றி."நீங்களும் ரசித்து, கருத்திடவும்."

6 comments:

dheva said...

Really true....saravanan...we should liveour live....in such a way! Thanks for the nice experience!

marketbala said...

superb saravanan..
by
pollachi bala..

கண்ணகி said...

beauthiful....

Unknown said...

very interested things in this article

Radhakrishnan said...

உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன்.

பனித்துளி சங்கர் said...

"நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்"
வாழ்வை ரசித்தால் நமக்கு வாழ்வு வசப்படும்


அழகான பதிவு பகிர்வுக்கு நன்றி!!!

Post a Comment