தெருவில் இறங்கி ஆசிரியர்கள் காலம் காலமாய் போராட்டம் நடத்துவது கதையாகி போய்கொண்டு இருக்கிறது .இன்று இவர்கள் போராடுவது எதற்கு என்றால் மாணவர் ஆசிரியர் சதவீதம் மாற்றி அமைக்கப்பட வேண்டி, களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் தமிழக அரசு அரசாணை எண் 525 ன்படி ஒரு ஆசிரியருக்கு நாற்பது மாணவர்கள் இருக்க வேண்டும் .
அதிகமான மாணவர் எண்ணிக்கை வைத்து , சிறப்பான தரமான கற்றல் நடை பெறாது என்பது போராடும் இவர்களின் வாதம். மேலை நாடுகளில் தொடக்க கல்வியில் மாணவர்கள் ஆசிரியர் எண்ணிக்கை பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆகும் . அயர்லாந்தில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப் படுகிறது எனஉதாரணங்களை அடுக்கி கொண்டே போகிறார்கள்.
தமிழக அரசு கொள்கை அளவில் ஆசிரியர் மாணவர் விகிதம் ஒன்றுக்கு முப்பதுக்கு என்று கூறுகிறது. ஆனால் அதை நடை முறை படுத்தவில்லை அதுவும் இவர்கள் குமுறல்களுக்கு காரணம். இன்று பிறப்பு விகிதம் குறைந்துள்ளது , அரசு கிராமம் தோறும் சென்று குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லுகிறது. ஆசிரியர்களும் அதன் அவசியத்தை வரும் பெற்றோர்களிடம் எடுத்து கூறும் நிலையில் பள்ளிகளில் மாணவர் பதிவு சதவீதம் குறைந்துள்ள நிலைமையில் , ஆங்கில பள்ளிகளின் ஆதிக்கம் எல்லாம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி கல்வி பள்ளிகளின் ஆசிரியர்களை கவலை அடைய செய்துள்ளது.
மாணவர் நிலைமை சற்று எண்ணிப் பார்ப்போம் . அதிகமான மாணவர்களை கொண்டு கற்று தரப்படும் கல்வி , முழுமையாக அவனை சென்று அடைவதில்லை. கல்வி தரம் அதிகரிக்க நினைக்கும் அரசு இதை ஏன் கவனத்தில் கொள்வதில்லை . இன்று செயல் வழி கற்றல் வந்தவுடன் ஒவ்வொரு மாணவர்களும் அவனின் கற்றல் தன்மைக்கு ஏற்ப , கற்றலை தொடரலாம். ஆசிரியரின் தனிப்பட்ட கவனம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு நாளைக்கு இருபது மாணவர்களுக்கு மேல் கற்று தர இயலவில்லை .அதாவது கற்றல் செயல் இருபது மாணவர்களுக்கே கொண்டு செல்லப்படுகிறது. குறைந்த அடைவு நிலையிலேயே மாணவன் உள்ளான்.இது அரசு எடுக்கும் புள்ளி விவரங்களில் தெளிவாக தெரியும். அதனால் பள்ளிகூடங்களில் குறைந்த கற்றல் செயல் பாடுகளுடைய மாணவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையால் ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
எது எப்படியோ மாணவர்களுக்கு பிடித்த செயல் வழி கல்வி திட்டத்தில் உள்ள குறைகள் நீக்க , மாணவர் எண்ணிக்கை குறைத்தால் இன்னும் தமிழகத்தில் நல்ல கல்வி தொடக்க கல்வியில் கிடைக்கும் என்பது நிச்சயம்.
7 comments:
தேவையான நேரத்தில் தேவையான பதிவு
உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன் நண்பரே
கல்வி என்பதன் அவசியத்தை நமது ஆட்சியாளர்கள் என்றும் உணர்வார்கள் என்று தோன்றவில்லை. ஒரு வேளை உணர்ந்ததால், படித்து விட்டால் எல்லாம் விழிப்புணர்வு அடைந்து விடுவான் என்பதாலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வைத்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
நல்ல சிந்தனை.
சரிதான்..ஆனால் இந்த எண்ணிக்கை சமாச்சாரங்கள் அரசிடம் எடுபடுவதில்லை..
//எது எப்படியோ மாணவர்களுக்கு பிடித்த செயல் வழி கல்வி திட்டத்தில் உள்ள குறைகள் நீக்க , மாணவர் எண்ணிக்கை குறைத்தால் இன்னும் தமிழகத்தில் நல்ல கல்வி தொடக்க கல்வியில் கிடைக்கும் என்பது நிச்சயம்.//
நல்லதொரு கருத்துகள்.
இருபது மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்பது சரியான அளவாக இருக்கும் என்பது என் கருத்து.
குழந்தைப் பருவத்தில் நாம் செய்யும் முதலீடு மிக முக்கியமானது.. அதற்குப் பின் செய்யப்போகும் முதலீடுகளுக்கு இதுவே தேவை..
ஆகவே.. அரசே..? பருவத்தே பயிர் செய்.. குழந்தைகளுக்கு முழுக் கல்வி கொடு..கல்வியின் மூலமே அனைத்து மாற்றங்களும் நிகழும் என்பது என் தாழ்மையான கருத்து..
நன்றி..
இருங்க முழுசாபடிச்சிட்டு வரேன்..
Post a Comment