Saturday, March 6, 2010

8ட்டாத அறிவு

உணவும் பழமொழியும்

(ஒருவர் தட்டு நிறைய சாதம் வைத்து , பல வகை குழம்பு வைத்து கொண்டு , தன் கைக்கும் வாய்க்கும் விடாது வேலை கொடுத்துக்   கொண்டிருந்தார். அவரை பார்க்க வந்தவர்...)

"டேய்..ராமு !'அகப்பை குறைந்தால் கொழுப்பை அடக்கலாம்'.. "

"எப்ப பார்த்தாலும் ஏதாவது பழமொழி சொல்லிட்டு போயிற ...ஒரே..குழப்பமாய் இருக்கு ...இப்பவாவது அர்த்தத்தை சொல்லுறியா..."

"நீ திண்ணு திண்ணு கொழுத்து போயிருக்க...அதனால அகப்பையான இரைப்பைக்கு செல்லும் உணவோட ..அளவை குறைத்தால் மட்டும் கொழுப்பை அடக்கலாம்..."

"குறைத்து பார்த்தாலும் வாயை கட்டுப்படுத்த முடியலையே ...அது சரி நம்ம குப்பண்ணே...கல்யாண வீடில்ல ..., வேலைக்காரன் சோமுவை பார்த்து ...'இன்று விருந்து நாளை உபவாசம்'...ன்னு சொன்னீயே ...அதுக்கு என்ன அர்த்தம்.."

"அவனும் உன்னை மாதிரிதான் ...கண்டபடி பண்ணையார் வீட்டில திங்குறான் ..ஒரு நாள் உபவாசம்... அதாவது பட்டினி கிடந்தால் ...வயிறு உப்புவது ,செரியாமல் இருப்பது ,அதனால ஏற்படும் வயிற்று புண் நோய் இவை எல்லாம் வராது. "

"அது சரி... நீ நம்ம ஒல்லியான பார்த்து எள்ளு ...கொள்ளு ..ன்னு எதோ சொன்னியே ...அது என்ன ...?"

"அதுவா ..இளைத்தவனுக்கு எள் கொடு ; கொழுத்தவனுக்கு கொள்...கொடு "

"ஒல்லியானுக்கு அர்த்தாம் புரியாம அண்ணே என்னை திட்டுதுன்னு வருத்தப் பட்டான்..."

"அட பாவி ...அதுக்கு அர்த்தம் தெரியலைன்னா ...கேட்க வேண்டியது தானே...ஒல்லியானவன் குண்டாகனும்ன்னா ...நல்லெண்ணெய் கொடுக்கும் எள்ளை திண்ண வேண்டும் ...உன்ன மாதிரி தடியன் எடை குறையனும்ன்னா ...கொள்ளு பயறு திண்ணனும் ...புரிஞ்சுதா..."

"'ஆயுளை நீட்டிக்க உணவினை குறை '...அப்படிதானே...?"

"ஒரு வேலை உண்பவன் யோகி ...இருவேளை உண்பவன் ...போகி ...மூன்று வேலை உண்பவன் ...ரோகி ...உன்னை மாதிரி ...பொழுதுக்கும் சாப்பிடுறவன் ....துரோகி ..."

"!!!!"

"பசித்து புசித்து அளவறிந்து உணப்து நீண்ட ஆயுளை தரும்"

"என்னை கேலி பண்ணினது போதும்...நம்ம சோழனை பார்த்து ..வாழை வாழ வைக்கும்..ன்னு சொன்னியே..."

"அதுவா...அவனுக்கு ...சிறுநீரக கல் இருக்கு ...அதனால வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது ...உடலுக்கு ஊட்டம் தரும் ..வாழை பூ சிறு நீராக கல்லை நீக்கும் ...வாழை சாறு ..சிறுநீரக கல்லை வெளியேற்றும்...தண்டு சிறுநீரை பெருக்கும்...புரிஞ்சுதா.."

"நீ மதுரை காரன் தானே ...உன் ஊருக்கு எத்த பழமொழி சொல்லு பார்ப்போம் .."

"உடம்பை முறித்து கடம்பில் போடு .."

"இதுக்கும் மதுரைக்கும் என்ன சம்பந்தம் ..."

"அதுவா..மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி உள்ள இடம் கடம்பவனம்..கடம்பு மரம் நிறைந்த ஊர்...மதுரை ..உடல் வலியை போக்கி ...ஓய்வையும் ,உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்ப மரத்துக்கு உண்டு. ..அதனால தன் மதுரை காரன் எல்லாம் சோர்வின்றி ..எப்போதும்..பிரெஷ் ஆக இருக்கிறோம் ..."

"அது சரி கடைசியா ஒரு சந்தேகம் ..."

"கேளு ..பிரெஷ் ஆக இருக்கும் போதே ...கேளு சொல்லுகிறேன்..."

"உன் பொண்ட்டாடிக்கு   அடிக்கடி ...மருதாணி கை , கால் ள்ள வச்சு நீயே விடுகிறதா ...கேள்வி பட்டேன் உண்மையா..."

"ஆ மாம் ...உன்னை மாதிரி எதாவது  சொல்லி உதையும் , மிதியும் வாங்க சொல்லுறியா...நான் திட்ட நினைக்கிறப்ப எல்லாம் மருதாணி வைத்து விடுவேன்..."

"!!!!!"

5 comments:

பத்மா said...

சரவணன் உங்கள் எல்லா பதிவையும் விருப்பத்தோடு வாசிக்கிறேன் .உங்கள் மாணவியாக நான் இல்லையே என்ற குறையுடன் .நல்லாசிரியர் கிடைப்பது பூர்வ ஜென்ம புண்ணியம் .உங்கள் மாணவர்கள் நிறைய செய்துள்ளார்கள் .

settaikkaran said...

சூப்பர் பதிவு! நாளையிலிருந்து எள்ளுருண்டை சாப்பிடணும். :-))

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு சரவணன்...

Unknown said...

எள்ளு கொள்ளு அருமை இதே போல் ஒரு பதிவு விரைவில் வரும்
பழமொழிகளும் அர்த்தங்களும்

விக்னேஷ்வரி said...

நல்ல பழமொழிகளும் விளக்கங்களும். அதென்ன மருதாணி கடைசில?

Post a Comment