குளறுபடி நடந்த இடத்தில் ஒரு தலைமை ஆசிரியர் ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வு அலுவலர் மற்றும் பறக்கும் படை என அனைத்து மதிப்புக்குரியவர்களும் இருந்தனர். விடை தாள் கொடுக்கப்பட்ட உடனே ,மாணவர்கள் தங்களுக்கு உரிய கேள்வி தாள் இல்லை...மாற்றித்தரவும் என வற்புறுத்தியுள்ளனர். ஆசிரியர் இது தான் உனக்குரியது என்று கூறி அமரச் செய்துள்ளார், மீண்டும் தேர்வு கண்காணிப்பாளர், தனி அலுவலர் , பறக்கும் படை என அனைவரிடமும் சொல்லியும் கேள்வி தாளை மாணவர்களால் மாற்ற முடிய வில்லை என்பது செய்தித்தாள் வழியாகவும், நண்பர்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.
பாதிக்கப்பட்ட 29 மாணவர்கள் தேர்வு நடந்த பள்ளியில் , மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ். எல். சி. மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். அப்படி இருக்கும் போது அருகில் உள்ள அரை மாணவர் விடை தாளை பார்த்து இருந்தாலே , இத் தவறை மாற்றி இருக்க முடியும். தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அலுவலர் முறையான பயிற்சி எடுத்திருப்பின் அல்லது நான்கு வகை வினாத்தாள் பற்றி போதுமான அறிவு பெற்று இருப்பின் மாணவர்களுக்கு சரியான விடைத்தாளை தந்திருக்க முடியும்.
" தேர்வு பணியினை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவது இல்லை.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் 'ஆளை விட்டால் போதும்'என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். " தினமலர்.(25 மார்ச் 2010 ) .
அரசு கவனத்திற்கு ....ஏன் மூத்த ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர். ?
இளம் ஆசிரியர்கள் ஏன் பார்க்க துடிக்கின்றனர்...? இதுதான் வயது வித்தியாசம் ....அனுபவ முதிர்ச்சி . இன்று ஆசிரியப் பணி என்பது எலி வாங்கித்தந்த வேலை போல ஆகிவிட்டது. எலி வேலை வாங்கி தந்த கதையை கூறும் முன் ....மூத்த ஆசிரியர்களின் மன நிலை சொல்லி விடுகிறான்.
தங்கள் மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் மற்றும் தேர்வு பணிக்கு சென்றால் மதியம் தம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வர முடியாது. தேர்வு பணிக்கான பள்ளியின் தூரமும் அதிகமாக இருக்கிறது, பணியினை முடித்து வகுப்புக்கு வர முடியாத நிலையில் மாணவன் படிப்பு பதிக்கப் படும் என்ற எண்ணத்தில் அநேகம் ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர் . இளம் ஆசிரியர்கள் எப்படி மதியம் இந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து தப்பிப்பது,மதியம் ஓய்வு எடுப்பது என்று நினைத்து தேர்வு பணியினை விரும்பி வாங்கி பார்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த வகையில் உண்மை .
அரசு தேர்வு பணி முடிந்த பின்னும் பள்ளி செல்லும் ஆசிரியர்கள் பற்றி சர்வே நடத்தினால், நான் சொல்லுவது போல் மாணவர்கள் மீதும் , பள்ளியின் நன் மதிப்பின் மீதும் அக்கறை மற்றும் பற்றுள்ள ஆசிரியர்கள், அதுவும் மூத்த ஆசிரியர்கள் தான் அதிகம் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவர்.இது எல்லா நிலை மாணவர்களுக்கும் பொருந்தும் . பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே பிற மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்த வேண்டிஉள்ளது.
அதுவும் தேர்வு பணி வாங்க மறுப்புக்கு காரணம் ஆகும்.
அரசு எல்லா விசயங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற விடை தாள் மாற்று குளறுபடி ஆகாமல் தடுக்க , தேர்வுக்கு முன்னே அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்துவது எப்படி?விடைத்தாள் வகைகளை அறிவது எப்படி? மாணவனுக்கு உரிய விடை தாளை வழங்குவது எப்படி ?மாணவனின் முறையிடுகளை உடனே அரசு கவனத்திற்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி ? என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவது அவசியம் ஆகும் .
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அவன் முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து , மதிப்பெண் தருவதால் மட்டும் பாதிக்கப் பட்ட மாணவனின் மன நலனை திருப்பி தரமுடியுமா? அதனால் அவன் பிற தேர்வுகளில் பின் தங்கி போவதற்கும் வாய்ப்பு உள்ளதே! . கல்வியாளர்கள் மாணவன் நலம் பற்றி சிந்தித்தால் இது போன்ற தவறுகள் நடக்காது.
ஆசிரியர்களை தண்டிப்பதால் மட்டும் இனி வரும் காலங்களில் இத்தவறுகள் நடக்காது என்பதற்கு என்ன உறுதி? தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் செல்லாததனால் தான் கேள்வி தாள் குளறுபடியை சரி செய்ய முடியவில்லை என்று கூறும் முதன்மை தேர்வு அதிகாரியின் பேச்சையும் கவனிக்க வேண்டும். தண்டனை பெற்று அப்பணியினை தொடருவதை விட தவிர்ப்பது நல்லது என்ற மனநிலையும் தேர்வு பணி மறுப்புக்கு காரணமாகவும் அமையலாம். ஆகவே , முறையான பயிற்சி , தேர்வு பணி குறித்து அச்சம் போக்குதல் போன்றவற்றால் மட்டுமே நாம் சரி செய்திட முடியும் .
மத்திய அரசினை போன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்து, பனிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வினையும் நடத்தி , உயர் கல்வியில் மாணவன் சேர்வதற்கு , மாணவனின் அனைத்து திறன் வெளிப்படும் வகையில் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி , மாணவன் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அவனுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் பிற துறை சார்ந்த படிப்புகள் தொடர நடவடிக்கை எடுத்தால் , ஆசிரியர்களும் மாணவனுக்கு மதிப்பெண் சார்ந்த கல்வியை தராமல் , மாணவன் திறன் சார்ந்த கல்வியை தந்து மாணவனின் முழு திறமை வெளிப்பட உழைப்பார். ஆசிரிய பணியும் எலி கொடுத்த வேலையாக அமையாது.
அது என்ன எலி கதை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஊரில் எலி அதிகம் தொல்லை தந்தது , அந்த கிராமம் முழுவதும் ஒன்று கூடி, அனைவரும் பூனை வளர்ப்பது என முடிவெடுத்தனர். பூனை வளர்க்க பால் தேவை பட்டது , அனைவரும் வீட்டிற்கு ஒரு பசுமாடு பாலுக்காக வளர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. பசு வளர்க்க அனைவரும் புல் வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து வயலுக்கு உழைக்க செல்வது என முடிவெடுத்து , வேலைக்கு சென்றனர். அப்போது தம் குழந்தைகள் தேவையிலாமல் சண்டை போடுவது கண்டு , கிராமம் அந்த ஊருக்கு அருகில் உள்ள படித்த இளைஞருக்கு வேலை தருவது எனவும் அதற்க்கு சம்பளம் கிராம பொது சபை கொடுப்பது எனவும் முடிவெடுத்து , வேலை கொடுக்கப்பட்டது. மாணவனுக்கு அதாவது தம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க ஆசிரிய பணி அல்ல , குழந்தைகளை கண்காணிக்க , சண்டைபோடாமல் பாதுகாக்க தரப்பட்ட வேலை . இது கிராம குழந்தைகள் நலம் கொண்டு ,அறிவு வளர்க்க ஏற்படுத்தப்பட்ட வேலை அன்று. எலி கொடுத்த வேலை.
சமச்சீர் கல்வி கொண்டுவரும் நம் தமிழக அரசு தயவு செய்து மத்திய அரசை போன்று பொது தேர்வினை ரத்து செய்து ,மாணவன் நலனில் அக்கறை கொண்டு மாணவன் அனைத்து திறன் பேரம் வகையில் அட்டை கல்வி கொண்டுவந்ததை போன்று , மதிப்பெண் கல்வி முறையை நீக்கி , கல்லூரி கல்வியில் அவனின் அனைத்து திறனும் சோதிக்கும் வகையில் பொது தேர்வு நடத்தி, அதில் அவன் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவனுக்கு உரிய படிப்பினை கொடுப்பதன் மூலம் தமிழக கல்வி துறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழலாம்.
அரசு கவனத்தில் கொண்டு வர நீங்களும் நல்ல கருத்துகள் பகிர்ந்து , தமிழக மாணவர்கள் கல்வி நலனில் பாடுபட அனைவருக்கும் விஷயத்தை எடுத்து செல்லுவோம் , சொல்லுவோம்.
13 comments:
நல்ல பதிவு அரசு கவனத்தில் எடுக்குமா?
நல்ல பதிவு அரசு கவனத்தில் எடுக்குமா?mullaimukaam.blogspot.com
அருமையான யோசனை!
நானும் ஒரு டீச்சர் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.இதில் அரசையோ மூத்த/ இளைய ஆசிரியரையோ குற்றம் சொல்ல அவசியமில்லை.அது தனிக் கதை.
விடைத்தாள் மாறியது பற்றி ச் சொல்லும் போது முழுக்க முழுக்க chief supdt மற்றும் departmental officer இவர்களின் தவறே.
எத்தனை அறைகள் எத்தனை மாணவர்கள் என்ன பாடங்கள் என வகைப் படுத்தி தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்பே கவர்களில் போட வேண்டியது யார்.
இன்ன தேர்வு நடக்கிறது என இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க வேண்டியதும் அவர்களே.
சரி சரியாகத்தான் வைத்திருக்கட்டும்.
ஆனால் தேர்வு தொடங்கிய சில நிமிட நேரங்களில் அறை அறையாகச் சென்று கண்காணித்து தவறு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டியதும் அவர்களே.
அனுபவன் இல்லாத் அ நான் டீச்சிங் தேர்வரோ அல்லது அனுபவம் மிக்க ஆசிரியரோ யாராயினிம் மாணவர்களுக்கு முறையான வினாத்தாள் கொடுக்கப் பட்டிருக்கிறதா பதிவெண் சரியானதா அடையாள அட்டை உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
மாணவர்களே தவறைச் சுட்டிக் காட்டியும் அலட்சியப் படுத்திய அனைவரும் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி புரிந்து கொள்ளுதல் இருந்து தவறு நடந்திருக்கிறது.
என்னைக் கேட்டால் முழுக்க முழுக்கத் தேர்வு பொறுப்பாளர்கள்தான் காரணம்.
இந்த இடத்தில் பணிக்கு வராதவர்கள் பற்றியோ தங்களுக்குள்ள பணி மற்றும் பர்சனல் டென்ஷன் பற்றியோ கூறுவதில் அர்த்தமில்லை.
1.கண்டிப்பாக ஒட்டு மொத்தமாக தங்கள் சந்தேகத்தை முன் வைத்து கேட்காத மாணவர்கள்
2.தேர்வு நடப்பை முழுமையாக கண்காணிக்காத சீஃப் மற்றும் துறை அலுவலர்
3.தனக்கு ஒதுக்கப் பட்ட தேர்வறையில் எல்லாம் சரியாக இருக்கிறதா எனச் சோதிக்காத அறைக் கண்பாணிப்பாளர்
என எல்லோர் மீதும் குறை இருக்கிறது.
அனுபவக் குறைவு மட்டுமே காரணமில்லை .25 அல்லது 30 வருடம் அனுபவம் இருந்தால் மட்டும் தவறுகள் நடக்காதா?
அவரவர் வேலையில் கடமை உணர்ச்சியும் பொறுப்பும் இருந்தாலே போதும்
இதில் அனுபவமும் அரசும் செய்ய என்ன இருக்கு சரவணன் சார்
அருமையான கட்டுரை . தொடர்ந்து செயல்பட எனது வாழ்துக்கள்
அருமையான பதிவு!!
பகிர்வுக்கு நன்றி!!!!
உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்
கண்மணி அவர்களே, அரசு எதற்கு எதற்கோ பயிற்சி தருகிறது ....தேர்வு நடத்த பயிற்சி தந்தால் , தேர்வில் குளருபடிகள் இருக்காது மற்றும் மாணவர்களுக்கு தெளிவானக் கல்வி தந்திருந்தால் , தைரியமாக எதிர்த்து , தேர்வுதாள் முதலிலே பெற்று , முறைப் படி தேர்வு நடந்து இருக்கும். மேலும் அரசு பொதுத் தேர்வையும் ரத்துசெய்து , முழுமையடைந்த திறனை சோதிக்க வேண்டும். ஆசிரியர்களைக் குறைக்கூறுவதை தவிர்த்து , தண்டிப்பதை தவிர்த்து , முறையானப் பயிற்சி மூலம் மட்டுமே , தேர்வு குளருபடிகளை நாம் தவிர்க்க முடியும்.
ஜெ.கே.ஆர்.,ஆர்.கே. சதீஸ்குமார், பனித்துளி சங்கர், nidurali,பத்மா,கண்மணி ஆகியோருக்கு நன்றி. என்றும் ஆதாரவு தந்து என்னை ஊக்குவிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்றும் நன்றி!
பத்மா உங்கள் அன்புக்கு மிக்க நன்றி உங்கள் வார்த்தைகளே விருது கொடுத்தது போன்று... மிக்க மகிழ்ச்சி.
உங்க கருத்து ஏற்புடையது அல்ல.சார் மன்னிக்கவும்.நீங்க ஆசிரியரா தெரியலை.அரசின் மீது குறைபாடுகள் இருந்தாலும் தேர்வு நடத்த பயிற்சி அளிக்கிறது.இல்லையென்று யார் சொன்னது.சீஃப் மற்றும் துறை அலுவலர்களுக்கு கல்வித்துறை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிறது.
//தெளிவானக் கல்வி தந்திருந்தால் , தைரியமாக எதிர்த்து , தேர்வுதாள் முதலிலே பெற்று , முறைப் படி தேர்வு நடந்து இருக்கும்.//
யாருக்கு?ஒரு முழு வருடம் படித்து பலமுறை மாடல் தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தங்கள் வினா பேட்டர்ன் மதிப்பெண் பேட்டர்ன் தெரியாமலிருக்குமா?
ஸ்டேட்போர்டுக்கும் மெட்ரிக்குக்கும் ஒரே மாதிரி வினா பேட்டர்ன் இல்லையே...தப்புனு தெரிஞ்சு கேள்வி கேட்டு தெளிவு பெற தைரியம் தானே வரனும்.
//ஆசிரியர்களைக் குறைக்கூறுவதை தவிர்த்து , தண்டிப்பதை தவிர்த்து , முறையானப் பயிற்சி மூலம் மட்டுமே , தேர்வு குளருபடிகளை நாம் தவிர்க்க முடியும்.//
அரசு தப்பு செய்தால் போராடுகிறோம் .ஆசிரியர் தப்பு செய்தா கேட்கக் கூடாதா?மாநிலத்தின் அனைத்துப் பகுதியிலும் சரியாக நடக்கும் போது ஒரு சில இடத்தில் நடப்பதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு.எடுத்ததெற்கெல்லாம் அரசை சாடுவதே நம் வேலையாக இருக்காமல் யார் மீது தப்புன்னு பார்க்கனும்.
இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு குளறுபடியைப் பொறுத்தவரை தவறியது ஆசிரியர்களே.இதற்கு அரசு என்ன செய்யும்.
good write up.
கண்மணி அவர்களே! தயவு செய்து தவறு ஆசிரியர் மீது என்பதை மட்டுமே பார்த்து வார்த்தைகளைக் கொட்டி விட வேண்டாம்.
நான் நீங்கள் எதிர்பார்க்கும் ஆசிரியராக இல்லாததால் தான் , நம் கல்வி முறையை சாடுகிறேன். கல்வி என்பது வெறும் விசயங்களை மட்டுமே தருவதல்ல.மாணவனுக்கு தெளிவான அறிவு, நல்லது , கெட்டது எது என்பது பற்றி தெளிவு,எதையும் தைரியமாக எதிர்க்கொள்ளும் பக்குவம்,தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பது போன்ற விசயங்களை நம் கல்வி முறைக் கற்றுக் கொடுக்க தவறியதன் விளைவு தான்,மாணவர்கள் கொடுத்த வினாத்தாளில் தேர்வு எழுதியுள்ளனர். அதே கல்வி முறையில் வளர்ந்த ஆசிரியர் என்பதால் தான் பேட்டன் மட்டும் தெரிந்து வைத்துள்ளனர். தவறு வரும் போது அதை சரிசெய்ய தவறி விட்டனர். இடர்பாடு மேலாண்மையை பயன்படுத்த தெரிய வில்லை. நான் அரசை சாடவில்லை , அரசு கவனத்திற்க்கு சில விசயங்களை கொண்டு சென்று மாணவர்களுக்கு பொது தேர்வு தேவையில்லை என்பதும் மதிப்பெண் அடிப்படைக்கல்வி தேவையில்லை என்பதுமே என் வாதம். மேலும் தண்டனைமட்டுமே தவறைக் குறைத்துவிடும் என்பதும் தவறான கண்ணேட்டம் , கல்வியாளர்கள் நாம் அப்படி சிந்திக்கக் கூடாது. தவறு செய்தால் தண்டனை என்பது தவறு என்பதால் தான் மாணவனுக்கு நம் காலத்தில் கொடுக்கும் கார்போரல் தண்டனை இன்று தவறு ஆகிவிட்டது. மாணவர்களை கண்டிப்பதுவே கூடாது என்னும் போது , ஆசிரியர்கள் செய்த தவறை உணர்த்த , ப்யிற்சி தேவை என்பதில் என்ன் தவறு. தண்டனை பிற ஆசிரியர்களை பணிக்கு செல்ல விடாமல் தடுக்குமே தவிர , தவறுகளைத் திருத்தாது. உங்கள் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி!
anne super
Post a Comment