உன் பார்வை ...
குண்டுகளாய் பாய்ந்து ..
என்னை ....
உன் இதய அறைக்குள்
சுட்டு வீழ்த்துகின்றன....!
சுடப்பட்டாலும் ....
ஒவ்வொரு நிமிடமும்...
புதிதாய் பிறக்கின்றேன்...!
நானும்....
உன் நெஞ்சு குழியில்
மலர்ந்ததால்....
உன் நெற்றி பொட்டில்
துளைத்த குண்டுபோல் ...
திலகமிட துடிக்கிறேன்...
காலம் காலமாய்
அழியாமல் இருக்கவேண்டுமென்று...!
கண்ணாடி குவளை மீன்கள் போல் ...
உன் இதயக் கூட்டுக்குள்
என்னை அழகு பார்பவளே...!
கண்ணாடி உடைந்தால்
மீன் அல்லவா துடிக்க வேண்டும்...
நீ அல்லவா துடிக்கிறாய்...!
உன் காலடி கொலுசொலி ...
திறக்க வைத்தது ...
என் வீட்டு ஜன்னலை மட்டுமல்ல...
இதயக் கதவையும் அல்லவா...!
என் பேனா மை ...
கவிதையாய் ....
காகிதத்தில் கரைத்தாலும் ...
கரைந்தது உன் இதயம் அல்லவா...!
கவிஞன் ஆனதால் ....
என் வாழ்வும் ...
சோகமாய் ஆனதோ ...
மாமனை கரம் பிடித்து
எமனை எனக்கு துணையாக்கி ....
சென்றாயே ...
முல்லை தீவில் சுடப்பட்டவனாய் ....
சொத்து சுகம்
சொந்தம் பந்தம்
என அனைத்தையும் இழந்து
அநாதையாகி சாகிறேனே ...!
நீ ...
பார்வையில் சுடும்போதே....
ஓடி ஒளிந்திருக்க வேண்டும் ....!
1 comment:
ரொம்ப ஓவர் ....ம்ம் நல்லா இருக்கு
இங்கயும் கவிஞன் இருக்கான்
http://sidaralkal.blogspot.com/2009/10/blog-post_03.html
Post a Comment