தனக்கு கல்யாணம் செய்து வைத்த பெரியவரிடம் ஒரு இளைஞன் ...
"நல்லா கல்யாணம் பண்ணி வச்சீங்க ...எப்ப பார்த்தாலும் தேள் மாதிரி கொட்டிகிட்டே இருக்கிறா..."
"தேள் தானே...பரவாயில்லை...சிலந்தி பூச்சி இல்லையே...?"
"சிலந்தி பூச்சின்னா ஒரு நசுக்கு நசுக்கிட மாட்டேன்..."
"அட கிறுக்கா...பெண் சிலந்தி....உருவத்தில பெரியது...அதனால் ஆண் சிலந்தியை கல்யாணம் பண்ணின மறுநாளே கொண்னு திண்ணிடும் ...."
"சிலந்தி தான் வலை பின்னுமே...தப்பிச்சுடாதா....?"
"எல்லா சிலந்தியும் வலை பின்னுறது இல்லை ...அப்புறம் வலை பின்னுறது தப்பிக்க மட்டுமில்ல ....இரையை பிடிக்கவும் தான் ..."
"அப்ப வலை பின்னாத சிலந்தி என்ன செய்யும்...?"
"பூச்சிகளை பிடித்து உண்ணும் ...நெப்பந்தஸ் , வீனஸ் போன்ற மரங்களின் இலை ஜாடி போல இருக்கும் ....அதன் ஜாடிக்குள் உள்ள அமிலம் பூச்சியை செரித்து கிரகித்துக் கொள்கின்றன..."
"சிலந்தி பத்தி கேட்டா...பூச்சி உண்ணும் தாவரம் பத்தி சொல்லுறீங்க..."
"அந்த ஜாடிக்குள் ...'நண்டு சிலந்தி' ...வாழ்ந்து அதில் வாழும் பூச்சிகளை கொன்று தின்று ...எஞ்சினதையே செடிக்கு உணவாக்குகிறது...அந்த சிலந்தி அமிலத்தில் கால் தவறி விழுந்தாலும் ஒன்றும் ஆகாது..."
"'நண்டு சிலந்தி' மட்டும் தானா வலை பின்னாது ...?"
"வரிசையா சொல்லுறேன் ...'ஈப்புலி சிலந்தி'ன்னு இருக்கு ...அது முட்டைகளை பட்டு பையில் இட்டு தான் செல்லும் இடத்தில் எல்லாம் ...எடுத்து செல்லும்...முட்டை பொறித்து தன் குஞ்சுகள் வெளி வந்துடன் தன் முதுகில் சுமந்து செல்லும்..."
"அதிசயமா இருக்கே ....!"
"எதிருல ...இது போல மற்றொரு சிலந்தி வந்தா..அதோட சண்டை போடும் ...கடைசியில யாராவது ஒன்று இறக்க வேண்டியது வரும் ... அப்புறம்...இறந்த சிலந்தியின் குஞ்சுகளும் வெற்றி பெற்றதன் மீது ஏறி சவாரி செய்யும் ..."
"ஒரு பத்து குஞ்சு இருக்குமா....?"
"நீ வேற..ஒவ்வொன்றும் இருநூறு குஞ்சுகள் பொரிக்கும் ....இது ஈக்களை ...புலி போல பதுங்கி புடிப்பதால இதற்கு 'ஈப்புலி'ன்னு ... பேரு..."
"பச்சோந்தி மாதிரி நிறமாறும்...சிலந்தி இருக்கா....?"
"இருக்கு ..'மிலாமீனா'என்ற சாதியை சார்ந்த சிலந்தி...தன் நிறங்களை வெள்ளை, மஞ்சள் , ரோஜா , பச்சை என மாற்ற கூடியாது..."
"அப்ப இந்த சிலந்தி இலை மீது இருந்தால் பச்சை நிறமாக மாறிடும்....அப்படி மாறுவதால...எதிரிக்க கண்ணில பாடாம ...மலருக்கு வரும் பூச்சிகளை ஈசியா உண்ண முடியும் ...அப்படி தானே...?"
"ஆமா ...'கோந்து சிலந்தி'ன்னு மற்றொன்று இருக்கு ...அது தூரத்தில்ல ...நின்றுகிட்டு ...வாயிலிருந்து கோந்தை பீச்சும் ...பூச்சி மீது விழும் கோந்து...உலர்ந்து இலைகளாக மாறி ...கெட்டியாக பிடித்து கொள்ளும் ...அப்புறம் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கும்..."
"நீங்க சொல்லுறத பார்த்தா ...நம்மளையே..கொல்லும் போல இருக்கே...."
"தென் அமெரிகாவில ...'மைகேல் 'எனும் சாதி சிலந்தி ..ரீங்கார சிட்டுக்களை கொன்று...கூட்டிலிருந்து வெளியே இழுத்து கொண்டு வந்து திங்கும்...அதனால இதுக்கு 'பறவை திண்ணி' சிலந்தின்னு பேரு ."
"சிலந்தியில பட்டு எடுக்கிறாங்கன்னு சொல்லுறது உண்மையா...?".
"ஆமா...இந்த பட்டு வலிமையானதாகவும்...மென்மையானதாகவும் இருக்கும்..."
"சரி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க ...எப்படி....?"
"நானும் ..உன்னை மாதிரி தான் ..பொண்டாட்டி திட்டுராலேன்னு...சோர்ந்து போயிருந்தேன்....விசயமா பெருசு...இத சொல்லி என்மனதை தேத்திகிட்டேன்....அது மாதிரி நீயும் மனதை தேத்திக்க...."
"!!!!"
5 comments:
தேள் கூட பிரசவத்துல சாகும்ன்னு சொல்லுவாங்க .ஒருசமயம் முதுல பத்து தேள் குஞ்சுகளோட ஒரு பெரிய தேள் நா பாத்துருக்கேன் .அது ஆண் தேள்ன்னு எங்க அப்பா சொன்னார்
முற்றிலும் புத்தம் புது செய்திகள். இத்துனை வகை சிலந்தியா என்று வியந்து ஓட்டிட மறந்து சென்று, மீண்டும் வந்து ஓட்டிட்டுள்ளேன். கொடுத்த விதம அருமை. அறியத்தந்தமைக்கு நன்றி சரவணன்.
சுவாரஸ்யமாகத் தெரிந்து கொண்டேன்.
சுவையா சொல்லி இருக்கீங்க.... புதுசா நிறைய தெரிஞ்சுகிட்டேன்.... நன்றி
பத்மா,ஆதிரா,ஸ்ரீராம்’பிச்சைக்காரன் மற்றும் வருகைபுரிந்துள்ள அனைவருக்கும் நன்றி.
Post a Comment