Sunday, March 28, 2010

திருப்தியான மனம்

"நம்மை கெடுப்பதும்  உயர்த்துவதும் , நமது எண்ணம் தானே தவிர எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது."- வாரியார்.

     நான் நிறைய நபர்களை சந்தித்து இருக்கிறேன் . அனைவரும் "அவன் சேர்க்கை சரியில்லை சார்.. அதனால் தான் மதிப்பெண் குறைந்து வருகிறான்" என்று அடுத்தவர்களை குறை கூறுவதையே கடமையாக கொண்டுள்ளனர்.
  
    தன் மீது உள்ள குறைகளையோ அல்லது தன் குழந்தைகளிடம் உள்ள குறைகளை போக்குவது கிடையாது.நம் சமுகம் அடுத்தவர்கள் மீது பழி போட்டே வாழக் கற்றுக்கொடுக்கிறது. தயவு செய்து நம் தவறுகளை உணர்ந்து , திருத்தக் கற்றுக் கொண்டால் நாம் சந்தோசமாக வாழ்வோம்.

"மைல் கல்லும் மடையனும் தான் நின்ற இடத்திலேயே நிற்பார்கள். அறிவுள்ளவன் முன்னேறிக் கொண்டே இருப்பான்."-ப. ஜீவானந்தம் .

     நம் எண்ணங்களை மைல் கல்லை போல் அசையாமல் வைத்த்திருப்பதை தவிர்த்து , தயவு செய்து அசை போடா செய்யுங்கள் , வாழ்வின் தடுமாற்றங்களுக்கு காரண , காரியங்களை தேடுங்கள் .முட்டாள்களை போல் இல்லாமல் , நம் குற்றங்களை ஒப்புக்கொண்டு ,அவற்றை திருத்த முயற்ச்சிகள் எடுப்போம் .

"பிறருடைய குற்றம் குறைகளை கவனித்துக்கொண்டே போனால் ,நாளடைவில் அது நம்மிடம் தொற்றிக் கொள்ளும்."இங்கர்சால்.

      எது எப்படியோ என்று விட்டுவிடச்   சொல்ல வில்லை ...அநியாயத்தை கண்டு ,வெகுண்டு எழுங்கள்,ஆனால் அடுத்தவர்களை குற்றம் காணுவதையே வேலையாக கொண்டிராமல் , தயவு செய்து , நம் குற்றங்களை திருத்த முயற்சி மேற்கொண்டு , அக் குற்றம் மீண்டும் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறர் தவறுகள் , நாம் சொல்ல சொல்ல அதுவே நம் செய்யலாக மாறி விடும்.

"இருளை நொந்து கொள்வதற்குப் பதிலாக ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுவது மேலானது."-கன்ப்புயுசியஸ்

    ஆகவே , நம் குற்றங்களுக்காக நம்மை நாமே நொந்து கொள்வதை தவிர்த்து, நாம் நம்மை ஒரு தாழ்வு மனப்பான்மையில் பார்க்கக் கூடாது.நம் வாழ்வுக்கு ஒளி ஏற்றும் வண்ணம் நாம் நம் வாழ்வை மாற்றிக் கொள்ளவேண்டும். அது போல் பிறர் குற்றங்களை நாம் மறந்து, அவர்கள் வாழ வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நாம் அவர்களை ஒதுக்க கூடாது.

   "ஒரு இதயம் உடைவதை என்னால் தடுக்க முடிந்தாலும் நான் வாழ்வது வீணல்ல. ஒரு வாழ்வின் வழியையும் என்னால் குறைக்க முடிந்தால், காயத்தை ஆற்ற முடிந்தால் , மயக்கமுறும் ஒருவனுக்கு உதவ முடிந்தால் , மறுபடி , நான் வீடு திரும்பும் போது நான் வாழ்ந்தது வீணாக இருக்காது" -எமிலி டிகன்சன்

   நம் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாற்ற , நாம் நம் தவறுகளை திருத்தி , பிறரை குறை கூறுவதை விட்டுவிட்டு ,நம் வாழ்வை பயனுள்ளதாக மாற்ற , பிறர் மனம் புண் படாத வாறு நடத்தலே போதுமானதாகும்.நாம் நம் சமுகத்திற்கு செய்யும் நன்மை, பிறர் மனம் புண்படாத வாறு நடத்தலே  ஆகும். ஆகவே நாம் நம் மனதை திருப்ப்திகரமாக வைத்திக் கொள்ள வேண்டும் . அதுவே , நாம் பிறரை குறை கூறுவதை தடுக்கும், நம் குறைகளை கண்டு பிடித்து நம் வாழ்வை செம்மை படுத்தும்.

"திருப்தியான மனம் தான் உலகில் ஒருவனுக்கு கிடைக்க கூடிய உயர்ந்த ஆசிர்வாதம் ."
-சாமுவேல் ஜான்சன்.

ஆம், திருப்தியான மனம் தான் , நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மனதை புரிந்து நாம் நம் குற்றங்களை உணர்ந்து, அடுத்தவரை பழிபோடாமல் , வாழ முயற்சி   மேற்கொள்வோம்.

3 comments:

Ramesh said...

-எமிலி டிகன்சன்-சாமுவேல் ஜான்சன்.
இவை நம்மளக்கவர்ந்தவை. நல்ல நிம்மதியான பதிவு. தொடருங்கள்
///திருப்தியான மனம் தான் , நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மனதை புரிந்து நாம் நம் குற்றங்களை உணர்ந்து, அடுத்தவரை பழிபோடாமல் , வாழ முயற்சி மேற்கொள்வோம்.///
நெகிழ்ந்து போனேன் முடிந்தளவு வாழமுயற்சிக்கிறேன்.
புரிதலும்
வாழ்தலும்
போதும் என்ற மனதில்

ஸ்ரீராம். said...

ஆம், திருப்தியான மனம் தான் , நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மனதை புரிந்து நாம் நம் குற்றங்களை உணர்ந்து, அடுத்தவரை பழிபோடாமல் , வாழ முயற்சி மேற்கொள்வோம்//

சொல்லுதல் யார்க்கும் எளிய...

நிகழ்காலத்தில்... said...

\\நம் குற்றங்களுக்காக நம்மை நாமே நொந்து கொள்வதை தவிர்த்து, நாம் நம்மை ஒரு தாழ்வு மனப்பான்மையில் பார்க்கக் கூடாது.நம் வாழ்வுக்கு ஒளி ஏற்றும் வண்ணம் நாம் நம் வாழ்வை மாற்றிக் கொள்ளவேண்டும். \\

ஆழம் மிக்க வரிகள்..

வாழ்த்துகள் சரவணன்

Post a Comment