Saturday, March 20, 2010

காதலில் வெற்றி பெற டிப்ஸ் ...

       மூன்று எழுத்து கெட்ட வார்த்தை 'காதல்'என்றாகிவிட்டது. இன்றைய சமுகத்தால்  இளைஞர்கள் காதல் என்ற வார்த்தைக்கு தவறுதலான அர்த்தம் கொண்டுள்ளனர்.  ஆண், பென் இனக் கவர்ச்சி ...,உடற்கவர்ச்சியின் ஈர்ப்பு  ...என்பது காதலாகி போனது. தயவு செய்து அன்பு உள்ளம் கொண்ட அன்பர்களே ,காதலை தவறுதலாக நினைக்காதீர்.
       அன்பின் உச்ச நிலையின் வெளிப்பாடு காதல் ஆகும். அன்பு யார் மீதும் வரலாம் . அன்பு சுயநலம் இல்லாத ஒன்று. உண்மையான அன்பு உடல் சம்பந்தம் பட்டது அன்று. அன்பு பெருகி காதல் ஆகும் போது , யாரை காதலிக்கிறோமோ ..அவர்களின் நலமும் , மகிழ்ச்சியும் தான் காதலிப்பவரின் குறிக்கோளாக இருக்கும் .அதுதான் 'காதல்'  ஆகும்.

       இறைவனிடம் காதல் கொண்ட கதைகள் பல . ஆண்டாள் ,மீரா...போன்றோர்கள் காதலித்தார்கள் .பெண்கள் இறைவனை மனிதனாக பாவித்து காதலித்தார்கள்.  அதுபோல திருஞான சம்பந்தர் போன்றோர்கள் பெண்ணாக இறைவனை பாவித்து காதலித்தனர். அதுபோல் காதலுக்கு வயது தடையல்ல....'முளைச்சு மூணு  இலை விடல ...இவனுக்கெல்லாம் காதல் ஒரு கேடா...' என பலர் திட்டி பார்த்து இருக்கிறோம். திருஞான சம்பந்தர் தனது ஐந்து வயதில் இறைவனை காதலனாக நினைத்து பாடுகிறார். அப்பாடலில் தன் காதலன் சிவ பெருமானை பிரிந்த துயரத்தால் தனது உடல் இளைத்து , கைவளையல்கள் கையிலிருந்து நழுவி விட்டதாகப் பாடுகிறார்.

         பெண் அடியார்கள் இறைவனை காதலிக்கலாம் .ஆனால் , எப்படி மாணிக்கவாசகர் போன்ற ஆண்கள் இறைவனை காதலானாக ஏற்பது ? ஏற்க்க முடியுமா ? என்ற வினாவிற்கு மீரா ஒரு சாதுவிடம் கூறிய பதில் ...
      
          மீரா ஒருமுறை ஒரு சாதுவை சந்திக்க சென்றிருந்தார். அப்போது அவர், 'தான் பெண்களை பார்ப்பது கிடையாது' என்று கூற . ..மீரா அதற்க்கு ,"இவுலகில் கண்ணன் ஒருவனே ஆண். மற்றவர்கள் எல்லாரும் அவனை அடையக் கூடிய பெண்களே...
உங்கள் குருவிற்கு இன்னும் தன் ஆண் என்ற பேத உணர்வு இருக்கிறதே.."கூறினாராம்.

         இறைவனிடத்தில் தோன்றிய இந்த காதல் , அன்பின் நம்பிக்கையாய் இன்று வரை அனைவரிடத்திலும் நிலவுகிறது. "'எதிர்பார்த்து' கொண்ட அன்பு 'காதல்' அல்ல...அது 'கருமாந்திரம்' .அன்னை மகன் மீது கொண்ட அன்பு எதிர்பார்க்காத அன்பு ஆகும். ஆசிரியர் மாணவன் மீது கொண்ட அன்பு அவன் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. உண்மையான காதல் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறது. உண்மை. கண்ணன் ராதையின் மீது கொண்ட அன்பு நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.நான் கூறும் மேரியின் அன்பினை      பாருங்கள், காதலின் மகிமை புரியும் . காதல் உண்மையானால் அது நிலைக்கும் , நீங்கா புகளைத்தரும் .., வெற்றியினை தேடி தரும் ...ஆதலினால் காதலிப்பீர்.

    பிரான்ஸ் நாட்டில் நடந்த உண்மை காதல் கதை. ஒரு ஆயாவின் கதை . பதினெட்டு வயது இளம் ஆயாவின் கதை.பணி செய்ய வந்த இடத்தில் அவளின் அன்பை பெற்றான் வீட்டின் மூத்த பையன்  .காதல் என்றால் வில்லன் இல்லாமலா..,"அண்ணலும் நோக்கியால், அவளும் நோக்கினால், அவளின் அப்பாவும் நோக்கினார்...".விளைவு ..,கேவலப்படுத்தப்பட்டு ,வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டாள்.  வெளியேறிய மேரி ,பரிசுக்கு சென்று தனது நீண்ட நாள் கனவான விஞ்ஞான ஆராய்ச்சியை தொடர்ந்தாள். இருந்தும் தம் காதலனை புறக்கணிக்க வில்லை. விடா முயற்ச்சியினால் யுரோனிய எக்ஸ் கதிர் வீச்சை கண்டு பிடித்தாள். முடிவில் நோபல் பரிசும் பெற்றார்.
தன் காதலனையும் கரம் பிடித்தார். வைராக்கியம் , எதையும் எதிர்பார்க்காத தன்னலம் , ஆம்! சுயநலம் அற்ற அன்பு , அவள் காதலை வெறி பெறச் செய்தது.

        காதலிப்பவரே ..நீங்கள் காதலிப்பவரின் மகிழ்ச்சியில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

4 comments:

பத்மா said...

இது பிப்ரவரி பதினாலாம் தேதி வர வேண்டிய பதிவா ? எப்போ வந்தால் என்ன காதல் காதல் காதல் காதல் போயின்? பின் வேறொரு காதல் காதல் காதல்

Kandumany Veluppillai Rudra said...

யாருங்க இப்ப உன்மையாகக் காதலிக்கிறாங்க?வாத்தியார் மாணவனைக் காதலிச்சா வீடு போய் சேர மாட்டார்,அதிக கவனம் எடுத்தா.முழு மாணவர்களயும்
கூற முடியாது என்றாலும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா

ஸ்ரீராம். said...

காதலிப்பவரே ..நீங்கள் காதலிப்பவரின் மகிழ்ச்சியில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.//

நன்றிங்க...

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'விட்டுக் கொடுக்கும் காதல் வெற்றி பெறும்'
வெற்றி பெறும் காதல் விட்டுக் கொடுக்கும்'
நீங்கள் சொன்னது போல் பரஸ்பரம் புரிந்துணர்வே காதலை வெற்றி பெறச் செய்யும்.

Post a Comment