"செக்ஸ் கல்வி குழந்தைகளுக்கு தேவையா..?"
"சார் , மறைக்க வேண்டியதை ...வெளிப்படையாக பேசினால் இப்படிதான் தப்பு நிறையா பெருகி ...எயிட்ஸ் என எல்லாம் வரும்.."
"தப்பு நடக்குறது ..முக்கியமில்ல...பாதுகாப்பா இருக்குறது தான் ....முக்கியம்."
"கையில காண்டம் கொடுத்துட வேண்டியது தானே..."
"சார்...அமெரிக்கால ...மூன்றாம் வகுப்பு மாணவன் நிரோத் வச்சுருக்கான்..."
"அவன் கலாச்சாரமும் ..நம்ம கலாச்சாரமும் ...ஒண்ணா...இதெல்லாம் நம்ம பசங்களுக்கு ...தேவையில்லை..."
"நான் எயிட்ஸ் கேம்ப் போயிருந்தேன்..அதுல பதினொன்றாம்...வகுப்பு மாணவன் ...என்னை விட வயசுல மூத்த பெண்ணுடன் உறவு கொண்டால் ..எயிட்ஸ் வருமா...?ன்னு கேட்கிறான்..."என அனைவரையும் ஆச்சரிய படுத்தினார்...ஆசிரியர் ராம சுப்பு.
"தமிழ்நாட்டை பொறுத்தவரை லாரி டிரைவர்களிடம் தான் ...எயிட்ஸ் அதிகம் காணப்படுகிறது...அதுவும் அறிகுறி முற்றிய நிலையில் தான் காய்ச்சல் , தலைவலி, உடல் பருமன் குறைவு போன்றவை தோன்றும்...ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது..."என கல்லுப்பட்டி பயிற்சிக்கு சென்ற ராம சுப்பு கூறினார்.
"சார்...ஏழாம் வகுப்பு மாணவனுக்கு எயிட்ஸ் உண்டு..பத்தாம் வகுப்பு போறதுக்கு முன்னாடியே செக்ஸ் தொடர்பு ஏற்பட்ட பல பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்...அவர்களுக்கு அறியாமலேயே எயிட்ஸ் பரவுகிறது ..."என பல உண்மைகளை கொண்டு எங்கள் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு எயிட்ஸ் விழிப்புணர்வு கொடுத்தார் கல்லுபட்டி முதல்வர்.
அதை விட முக்கியமான விஷயம் என்னுடன் பணியாற்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் பரமசிவம் கூறிய விஷயம் என்னை மேலும் சிந்திக்க வைத்தது.
பரமசிவம் ..அதிகாலை எட்டு மணி பதினைந்து நிமிடம் தாண்டாமல் வரும் , கைவிரல் விட்டு எண்ணிவிடக்கூடிய வெகு சில ஆசிரியர்களில் ஒருவர். பழகுவதற்கு இனிமையானவர். சிரித்த முகத்துடன் காணப்படுவார். அதிகாலை வந்தவுடன் மைதானத்தை சுத்தபடுத்தி மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல செய்வார்.(காக்கா பிடிக்க தலைமையாசிரியருடன் யாரும் வரும் முன் வந்து பலரை குறை கூறி ,காரியம் சாதிப்பவர் என அவருடன் பழகும் பலரும் பேசி சிரிப்பதை பார்த்திருக்கிறேன் . பாருங்கள் நல்லது செய்தால் இப்படியும் பெயர் வாங்க வேண்டும் . அய்யா நான் அவன் அல்ல ...)
ஒருநாள் விரைவாக வந்த ஆசிரியர் பரமசிவம் ...எதார்த்தமாக வகுப்பறை நோக்கி சென்றுள்ளார். நான்கு ஐந்து மாணவர்கள் கூட்டமாக நிற்க ...பெஞ்ச்சுக்கு கீழே பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர். 'என்ன நடக்கிறது ?' என இவரும் அவர்களுக்கு தெரியாமல் பின்னால் நின்று உற்று நோக்கினால் ...'சொல்ல வாய் கூசுகிறது '....இருந்தாலும் எயிட்ஸ் விழிப்புணர்வு விஷயம் ...சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உணர்த்த வேண்டியது.
விசயம் என்னவென்றால் ... நான்காம் வகுப்பு மாணவன் ..தன் சக வகுப்பு மாணவனை குப்புற படுக்க வைத்து ...அது என்ன வென்றே அறியாமல் ..'உறவு ' கொள்ள முற்பட்டு கொண்டிருக்க பிற மாணவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அனைவரையும் விரட்டிய ஆசிரியர் ...அவனை கண்டித்துள்ளார். இதை பிறரிடம் மற்றும் என்னிடம் எயிட்ஸ் பற்றி விவாதம் வரும்முன் ...கூட கூறியது கிடையாது. எயிட்ஸ் அவசியத்தை உணர்ந்து கூறினார் . எனக்கு அந்த மாணவனை பார்க்க வேண்டும் போல் ஆசை. உடனே அவரிடம் அவனை காட்டும் படி கேட்டுக்கொண்டேன்.
"சார் ..அத போயி விசாரிக்க ஏதாவது எடாக்குடமா ஆகிட போகுது...சனியன போயி விசாரித்து ....நீங்க ஏதாவது கேட்டு ...அது பிரச்சனை ஆக போகிறது. இத எப்படி விசாரிக்கிறது...."
"பரவாயில்லை ...நான் அவனை பார்த்தே ...ஆகணும்...என்ன ஆகிட போகுது...வராத பார்ப்போம் ..."(வற்புறுத்த அவர் அந்த இருவரையும் என் வகுப்பிற்கு அனுப்பினார் )
"என்னடா ...என்ன தப்பு பண்ணினே...?"
"சார் நான் இல்லை சார்...இவன் தான் என்னை ...."(தவறு என்ற உணர்வுடன் ...நிறுத்தினான்)
"என்னடா இவன் தான் ...நடந்தத சொல்லுகிறையா ..? இல்லை போலிச கூபிடட்ட..."(எங்களை போன்ற துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பிசாசு பூதம் எல்லாம் அவர்கள் தான் ... ஆபத்தாண்டவர்கள் )
"அது சார் ...தப்பான விஷயம் ...."
"என்ன தப்பு ...அது ஒண்ணும் தப்பு இல்லையே ...யார் சொன்னது...?"
"இல்லை சார்...தப்பு ..."(என அழுகும் குரலில் )
"ஏன் அழுக்கிற...ஒன்ன என்ன அடிச்சேனா ...? யாருடா தப்புன்னு சொன்னது..?யார் இப்படி கற்று கொடுத்த ...?"
(அதற்குள் எதுவும் தெரிய வில்லையே ....பிரச்சனை ஆகிவிட போகிறது என பயந்து என் வகுப்பறைக்கு வந்தார் ஆசிரியர் பரமசிவம்)
"சார் விடுங்க ...இத போயி கேட்டுகிட்டு ..."
"சொல்லுடா...சார் வந்தா விட்டுடுவேனா...?"
"சார் ...அப்பா ...சொல்லி கொடுத்தாரா ...?"
"படவா...ராஸ்கல் ... பேசாம இருக்கிற...பல்ல தட்டினா சரிப்படுவ.."
"பெரியப்பா...தான்" என அருகில் இருந்தவன் சொல்ல...
"பெரியப்பா விட்டுக்கு போனியா....இனி போகாத....கதவ தட்டிகிட்டு போ ...இனிமே ..அதெல்லாம் பார்க்க கூடாது....பார்த்தாலும் தெரியாத மாதிரி வீட்டுக்கு வந்திடனும்..."
"சார் ...பெரியப்பாவும் அவுங்க அம்மாவும்..."என சம்பந்தம் இல்லாமல் அருகில் உள்ளவன் சொல்ல ..."போடா ...நீ வகுப்புக்கு போகலாம் ...இத பத்தி இனி போசினது தெரிந்தது ...டி .சி. வாங்கி கையில கொடுத்துடுவேன்..."என அவனை விரட்டினேன்.
"அன்னிக்கு நான் சீக்கிரமா வீட்டுக்கு போனேனா...அப்ப எங்க பெரியப்பாவும்...."
"நிறுத்து ...இனிமேல் இதை பத்தி யாரிடமும் சொல்ல கூடாது ...இந்த தப்பை இனி செய்யக் கூடாது ...புரிந்ததா...உங்க வீடு ஒரு ரூம் மட்டும் தான...."
"சார் அவுங்க வீடு குடிசை வீடு ..."என பரமசிவம் சொல்ல ...அவனையும் விரட்டினோம்.
"சார் பெரிய கதை ..." என பரமசிவம் ஆசிரியர் கூறிய கதை என்னை மேலும் ஆச்சரிய படுத்தியது.
"சார் ...முதல்ல பயன்னுக்கு அப்பா கிடையாது ....இரண்டு பசங்க ...அம்மா மட்டும் தான் ...பெய்யப்பா தயவுல இருக்காங்க ...அம்மா கஞ்சா வியாபாரி ....இவங்க இரண்டு பெறும் பள்ளிகூடம் வருவதே...பெரிசு ..இல்லன்னா இவனும் கஞ்சா விற்க போயிடுவான்..."
ஏழை குடும்பங்களில் அனைவருக்கும் மத்தியில் நடக்கும் தாம்பத்திய உறவு ...என்னவென்று புரியாமல், தவறு என்று உணராமல்,சற்றும் யோசிக்க சொல்லாமல் அதையே திரும்ப செய்ய சொல்லும் பிஞ்சு உள்ளங்களின் மனது, அவனுடன் சக மாணவனையும் தவறு என்று உணர்த்தாமலோ தவறு செய்ய தூண்டுகிறது மிகவும் வருத்தமளிக்கிறது .
பள்ளிகூடம் அனுப்பினால் மட்டும் கடமை முடிந்து விடுகிறது என நினைக்கும் பெற்றோர்களே ...வீட்டில் உங்களை அறியாமலே நிகழும் தவறுகளை உணர வேண்டும் ...தாம்பத்தியம் தவறு அல்ல ...அதிலும் நேர்மை , கவனம் வேண்டும். தன் குழந்தைகளின் மனதை புண்படுத்தாத வண்ணம் பாதுகாத்து உறவு கொள்ளுங்கள். பாதுகாப்பு என்பது உறையில் மட்டும் அல்ல ....மனித உணர்விலும் பாதுகாப்பு தேவை, அதுவும் குழந்தைகள் உணர்வு பாதிக்கா வண்ணம் உங்கள் எண்ணம் ஈடேற வேண்டும் .
நான்கு சுவர் விஷயம் ...நாலு பேருக்கு அறியும் வண்ணம் மாறும் போது ...நாளுக்கு நாள் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் தான். "பாதுகாப்பான உறவு " என்று கூறுவதே ...(எல்ல வழியிலும் பாதுகாப்பு என்பது தான் அர்த்தம் ) ...ஆட்கொல்லி எயிட்சுக்கு மருந்தாகும் .அதை தொடக்கபள்ளியிலே கொடுப்பது மிக முக்கியம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும்.
ஆண் ஆசிரியர்கள் இருவர் இருந்ததால் நிலைமை வெளி கொணர முடிந்தது.ஒருவர் மட்டும் எனில் புதைந்து போயிருக்கும் இதை எப்படி சொல்லுவது என்று மறைத்து இருப்போம்.
அரசு தொடக்க கல்வியில் பெண் ஆசிரியர்களை நியமனம் செய்வது ...இது போன்ற விசயங்களை தாய் உள்ளத்துடன் அணுகுவதற்கு தான் என்பது புரிகிறது.
7 comments:
காண்டம் பற்றியே மக்களுக்கு இன்னமும் இரு வாதங்கள் இருந்து கொண்டே இருக்கின்றது.
சிலர் அதை நோய் தடுப்பானாக பார்க்கின்றார்கள்.
சிலர் அதை கலாச்சார சீரழிவாக பார்க்கின்றார்கள்.
நான் படித்த அரசுப் பள்ளியில் ஆசிரியர் இல்லாத சமயங்களில் இது போல பல தெரியாத புரியாத தவறுகள் நடந்ததுண்டு. அதைப் பற்றி கூட எழுத வேண்டும் போல.
நல்ல இடுகை, வாழ்த்துக்கள் சரவணன்.
//பாதுகாப்பு என்பது உறையில் மட்டும் அல்ல ....மனித உணர்விலும் பாதுகாப்பு தேவை//
ஆமாம் நண்பா...நல்லப் பொறுப்பான பதிவு..
ஐயோ.. நீங்க இவ்வளவு கடுமையான வாத்தியா..?
இனிமே உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கணும்...
உங்க கருத்துக்கு நிச்சயம் ஒரு ஓ போடலாம்...
அக்கறையோடு எழுதப்பட்ட அருமையான பதிவு! பாராட்டுக்கள்!!
நல்ல விதமாகக் கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
சிறு வயதில் மனதில் பதிவதை வாழ்நாள் முழுவதும் அகற்ற முடியாது.
நல்ல பதிவு.
Post a Comment