Thursday, March 11, 2010

யாரடி நீ..?

யாரடி  நீ ..?

என் பாதையில்
நித்தம் வந்து ...
இதழ் விரித்து
புன்னகை சிந்தி ...
இதயத்தில் பூக்கிறாய்...!

யாரடி நீ..?


என்னிடம் எதோ சொல்ல
உன் இதழ் குவிகையில்...
என் இதயம் அல்லவா விரிகிறது...!

யாரடி நீ...?

பார்வையில் ஊடுருவி
இதய அறையில்
நகலாய் வந்தாலும் ...
என் உடல் செல்
அனைத்திலும் அல்லாவா...
உறைந்து இருக்கிறாய்...
உருவாய் கருவாய் ...!

யாரடி நீ...?

சொல்லி வருவதா...
சொல்லாமல் வருவதா...
ஆனால் ஒன்று மட்டும்
உறுதி ...
நீ வாராமல் போனால் ..
நான் நானாக இருப்பதில்லை..
நீ யாகவே மாறிவிடுகின்றேன் ..!

யாரடி நீ..?

அய்யா படிக்கும் உங்களுக்காவது
தெரிந்தால்  சொல்லிவிடுங்கள்..!
பார்த்த பின்
 நீங்களும்
இப்படி புலம்பி விடாதீர்...!

6 comments:

Jaafar said...

இந்த கவிதைகளோட தொடர்ச்சி தான் நம்ம கடையிலயும் வந்து கொஞ்சம் கலக்கிட்டு போனதா..? புரிஞ்சி போச்சி..!! ரொம்ப தான் உருகி இருக்கீங்க.. அதனால் தான் வார்த்தையில் உண்மை தெரியுது.. வாழ்த்துக்கள்..!!

நானும் இப்படி தான் நீ..நீன்னு புலம்பி தொலைச்சிருக்கேன்.. நேரமிருந்தா வந்து பாருங்க மக்கா..!!
http://idhayampesukirathu.blogspot.com/2010/03/blog-post_11.html

நீச்சல்காரன் said...

நல்லாயிருக்கிறது

பத்மா said...

enna saravana ithu?:))

Unknown said...

அழகு

ஸ்ரீராம். said...

எனக்குத் தெரியும்...ஆனால் நான் சொல்ல மாட்டேனே...

r.v.saravanan said...

அய்யா படிக்கும் உங்களுக்காவது
தெரிந்தால் சொல்லிவிடுங்கள்

தெரியும்...............ஆனா தெரியாது

Post a Comment