நான் ஆசிரியராகி பன்னிரண்டு வருடம் ஆகிறது...புதிதாய் வந்த ஆசிரியர்கள் 'துவக்கப் பள்ளி மாணவர்களை கவனிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்..."என அடிக்கடி கூறுவது உண்டு.
நமக்கு தான் சர்வீஸ் அதிகமாயிற்றே...சும்மா ஒத்துக்கொள்ள முடியுமா...?"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ..சரியான முறையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினாள் ... எல்லாம் ஈசியாக தான் இருக்கும் ..."
"இவரு என்னைக்கு தான் உண்மையாய் ஒத்துக்கொண்டார்...."என முனங்குவது உண்டு .
நான் காலை பிரார்த்தனை கூட்டத்தில் பேசப்போகிறேன் ....என்றால் மாணவர்கள் ஆவலோடு கவனிப்பார்கள்.
"சார் ஜோக்கு சொல்லுங்க ...சார் .."என கமண்டு வேறு கிடைக்கும் .கூட்டம் முடிந்து கலைந்து செல்லும் போது .."சார்...சுப்பர் சார்..ஒரே சிரிப்பு .."என மாணவர்கள் கூறுவது எனக்கு பெருமையாய் இருக்கும் .
நான் மாணவர்களை அடிக்கடி அடிப்பது கிடையாது. என்றாவது மாட்டினால் வாழ்வில் மறக்காத அளவு வெளுத்து விடுவேன்.(தற்சமயம் ...அதுவும் கிடையாது ...சட்டம் அப்படி)
ஆகவே எல்லாரும் என்னிடம் பயம் கலந்த மரியாதையுடன் ஜாலியாய் பேசுவது உண்டு. அப்படி தான் இருக்கும் என்று கருதுகிறேன்!
மாணவர்கள் பொய் கூற கூடாது,திருட கூடாது ,சண்டை போடக்கூடாது என்ற விசயங்களில் கண்டிப்புடன் இருப்பேன். அதற்க்கு தகுந்தார் போல் முன் மாதிரியாக இருப்பேன்.
என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் ...பள்ளிக்கு எட்டு ஐம்பது மணிக்கு தான் வருவது உண்டு. துவக்க பள்ளி மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் எட்டு முப்பது மணிக்கு வருவது தான் நலம். முயன்று பார்கிறேன் தினமும் வர முடியவில்லை.
பள்ளிக்கு விரைவாக வரும் மாணவர்கள் அதற்குள் என்ன என்ன செய்வார்கள் ...? யார் ..யார் மண்டையை உடைத்து விடுவார்கள் ...?என்பது யாருக்கும் தெரியாத சுனாமி ரகசியம்..!
சுனாமிக்கு கூட அறிகுறி உண்டு.விலங்குகள் அங்கும் இங்கும் அலையும் , மாறுபட்டு கத்துவது உண்டு . கடல் உள்ள வங்கி இருக்குமாம் ...
ஒரு சமயம் என் வகுப்பு மாணவன் ஒருவன் வேகமாக ஓடி வந்து இருக்கிறான் .பக்கத்து வகுப்பிலுள்ள மாணவனும் வேகமாக ...ஓடிவர ..இருவரும் மோதி கிழே விழா
..என் வகுப்பு மாணவன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்க ...மாணவர்கள் திகைத்தனர் .தெய்வச் செயல் ... அன்று தலைமை ஆசிரியர் ...பரிமளம் ஸ்டெல்லா அவர்கள் எட்டு பதினைந்து மணிக்கே வந்து விட .. .தண்ணீர் தெளித்து ...அவனை எழுப்பி ..டி வாங்கி கொடுத்து ...அவனை விசாரித்ததில் அவன் தினமும் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்தது தெரிந்தது . எப்பவும் போல வந்த எனக்கு மனதில் எதோ உறுத்தியது ...அன்றிலிருந்து துவக்க பள்ளி ஆசிரியர்கள் விரைவாக வருவது முக்கியம் என்று உணர்ந்தேன்.
சில சமயம் விரைவாக வரும் மாணவர்கள் பலே கில்லாடி வேலைகளை செய்வது உண்டு. மூன்றாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களை மிகவும் சுதாரிப்பாக கவனிக்க வேண்டும் . அதற்க்கு கீழ் உள்ள வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பிற மாணவனின் பொருட்களை எடுத்துக் கொண்டு , அவன் பார்த்து விட்டால்,அவசரத்தில் வேறு ஒருவனின் பையில் திணித்து விடுவார்கள். வகுப்பு ஆரம்பித்து எழுத சொல்லும் போது ...
"மிஸ் இவன் அப்பவே என் டப்பாவ எடுத்தான் மிஸ்..."
"மிஸ் ..இல்லை மிஸ் வேணும்ம்ன்னா....என் பையை எடுத்து பார்க்கட்டும்...மிஸ் "
"எல்லார் பையும் தேடுங்கடா..."
கடைசியில் ஒன்றும் அறியாதவன் பையில் இருக்கும் ...
"மிஸ் இவன் பையில் இருக்கு மிஸ் .."
"மிஸ் இது எப்படி என் பையில் வந்ததுன்னு எனக்கு தெரியாது மிஸ்.."
"ஆமா ...காலு , கையி முளைத்து ...உன் பயில வந்து உட்கார்ந்து இருக்கு ...திருடினது இல்லாம ..பொய் வேறு பேசுறியா ...?"
இப்படி மாட்டிவிட்டு அடிவாங்க செய்வது அதிகம்.
மூன்றாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் ..தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்கள் பையை விட்டு விட்டு வகுப்பு மாறி திருடுவது உண்டு. ஆசிரியர் கண்ணில் பட்டால் திருந்தி விடுவார்கள் ...இல்லை என்றால் அகப்படும் வரை திருட்டை தொடர்வது உண்டு.
நான் என் வகுப்பில் வித்தியாசமான மாணவனை சந்திக்க நேர்ந்தது . திடீர் என்று என் பக்கத்து வகுப்பு ஆசிரியை என்னிடம் வந்து ..."சார் உங்க வகுப்பு மாணவன் ..."பெயர் " ,என் வகுப்பில் தினமும் காலையில் வந்து மாணவர்களின் சாப்பாட்டை திருடி சாப்பிடுகிறான். ...என்னன்னு கேளுங்க .."
"இல்லை சார் ...அந்த வகுப்பில மட்டும் இல்லை சார் ...இவன் தினம் எல்லார் வகுப்பிலும் போயி சாப்பாட்டை திருடி சாப்பிடுகிறான்..."என மாணவி ஒருத்தி ஆசிரியைக்கு பக்க வைத்தியம் வாசிக்க...
"டேய் என்ன திருட்டு புத்தி ...அதுவும் அடுத்தவங்க சாப்பாட்டை ...சாப்பிடுற பழக்கம்..?"என அவனை அதட்டி ...காலில் நாலு போடு போடுவது மாதிரி பக்கத்து வகுப்பு ஆசிரியை முன் நடித்து ...அவர் சென்ற பின்பு விசாரித்தேன். அவன் பதில் ஆச்சரியத்தையும், நம் சமுகத்தை சிந்திக்க வைக்கும் விதத்திலும் இருந்தது.
"சார்...காலையில சாப்பிடல சார்..."
"தினமுமா ...சாப்பிடாம வர ...உங்க அம்மாவ ...கூட்டிக்கிட்டு வா ..!"
"!!!"
"என்னடா ..பேசாம நிக்குற ...சொத்த போட்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டியது தானே..."
"சார் ...அவனுக்கு அம்மா கிடையாது சார்..."
"டேய் ..மன்னுச்சுக்கட...அப்பா இருக்காருல்ல... அவர கூட்டுகிட்டு வா ..."
அவன் அழ தொடங்கினான் ." டேய் நான் ஒண்ணும் தப்பா சொல்ல மாட்டேன் டா...கவலை பட்டதே..."
"அப்பாவும் கிடையாது..."என அழுகையுடன் கூறினான்.
"தம்பி என்னடா ...சொல்லுறே..."
"அம்மா ...அம்மா ..(குரல் கம்மி ) வேறு ஒருத்தர் கூட ..ஓடி போய்டாங்க ...அதனால அப்பா ..வேறு ஒருத்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வரல ..."என அழ தொடங்கினான்.
"சார்..இப்ப இவன் ஆச்சி வீட்டில இருந்து தான் ...வரான்..அவுங்க ஆச்சி சித்தாள் வேல பாக்குது ...காலையிலேயே ...போயிடுவாங்க..."என சக மாணவன் கூற...அனிவரையும் அவரவர் இடத்திற்கு போக சொன்னேன்.
என் இதயம் கனத்தது ...என் பொறுப்பு எவ்வளவு பெரியது என உணர்ந்தேன். சக ஆசிரியர்கள் சொல்வது உண்மை. துவக்க பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புடன் நடக்காவிட்டால் நிச்சியம் மாணவர்கள் வழி தவறி போய் விடுவர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் மன நலம் உணர்ந்து செயல் படுங்கள்.
10 comments:
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
நண்பரே ! உங்கள் இதயம் மட்டும் இல்லை . இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் இதயமும் கனத்துபோகும் என்பது மட்டும் உண்மை . மிகவும் அருமையான பதிவு .
பகிர்வுக்கு நன்றி
நல்ல பதிவு....
அந்த பையனின் நிலை நினைத்தால் மிக பாவமாய் இருக்கிறது.
அப்பையன் நிலை மிகக் கொடுமைங்க...அவன் படிப்புக்கு எதாவது உதவித் தேவைன்னா சொல்லுங்க...
அருமை சரவணன்..
நல்ல பதிவு...
பையனின் நிலைமை மனதை சங்கடபடுதியது.
;;;;துவக்கப் பள்ளி மாணவர்களை கவனிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்.’’’’
முற்றிலும் உண்மை....
உங்கள் கண்ணாடியே பயமுறுத்துகிரதே சார்.....
மிகவும் வருத்தமாக இருக்கிறது சரவணன். பொறுப்பற்ற பெற்றோர்களினால் பிள்ளைகள் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள் பாருங்கள்? உங்கள் அனுபவங்கள் யாவும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன!
நல்ல கருத்து மதுரை சரவணன்! 'மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும்
முன்னதாகவே பள்ளிக்கு வரவேண்டும்' என்ற கருத்தும் 'ஆசிரியர்கள்
மாணவர்களை கண்காணித்து, கவனித்து, அவர்களை நல்வழிப் படுத்த
வேண்டும்' என்ற கருத்தும் வரவேற்கப்பட வேண்டியவை.
எதையும் விசாரிக்காமல் தண்டணை கொடுத்துவிடும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Post a Comment