Monday, July 26, 2010

பசுமை பாரதம் ....!

மரங்களை  விறகுகளாக்கும்
விரல்களை நெருப்பிலிடுவோம்
கோடரி பிடிக்கும் மனிதா...
தன்னை காப்பாற்றவே
பல மரங்கள் பாவாடை கட்டி
மூட நம்பிக்கையின் சின்னமாக ...!

நரகம் தேடி
மா நகரும் ...
காற்றில்லாமல்,
காய்ந்த வெளியாய்
வெப்புக் கூட்டி
பால் வெளியில்
இதய ஓட்டை....
பல்லாக்கில் பவனி
பாடை என்று அறியாமல் ...!

மானிடா தேவை
உடனடி அறுவை சிகிச்சை
மர அறுவை நிறுத்தி
மனித சரிவை தடுக்க
விதைப்போம் ...
அறம் செய்
மரம் செய்
பசுமை பாரதம் ....!

6 comments:

Unknown said...

மரம் வளர்ப்போம்.. மனிதம் வளர்ப்போம்

Karthick Chidambaram said...

//அறம் செய்
மரம் செய்//
Nice :)

Unknown said...

மரம் வளர்ப்போம்......

http://rkguru.blogspot.com/ said...

கண்டிப்பா மரம் வளர்ப்போம்......வாழ்த்துகள்

அன்புடன் நான் said...

மிக நல்ல சமூதாய சாடல் கவிதைக்கு என் பாராட்டுக்கள்.
மரம் காப்போம்.

ஹேமா said...

மரங்களை வளர்ப்போம் வளர்ப்போம் என்று சொல்லிக்கொண்டே வெட்டித் தள்ளுகிறார்கள் !

Post a Comment