இனி வரும் குழந்தை ...
அழிகின்ற மரத்தோடு
அழிவது அணிலுமே ...!
அலைபேசி
கோபுரங்கள் சாய்வதில்லை
சாய்ப்பதெல்லாம்
காக்கை ,குருவிகள் தான்
குயில் பாட்டும்
அனிமேசன் காட்டும்
குயில் குரல் இனிமை அறியா
வளரும் நம் சந்ததி ...!
மனித முயற்சி
இனி
இயற்க்கைக்கு ஏற்படுத்துமோ அலர்ச்சி..?
அறிவியல் வளர்ச்சியில்
கடல் நீரும் குடிநீராய்
ஆறு , ஏரி , குளத்து நீரும்
மீன்களின் கண்ணீராய்
சில துளிகள் மட்டும் ...!
மரங்களின் நிழலில்
இயற்கையோடு சுதந்திரமாய்
இருந்த மனிதன்
நிலை கதவுகளாலுக்கும்
ஜன்னல்களுக்கு இடையே
அடைபட்டு கிடக்கிறான்
வெயிலின் வெப்பு தாங்காமல் ...!
மரங்களின் வேர்காளால்
துளைக்கப்பட்ட பூமி
பிரசவித்தது
தூய காற்றையும் ,மழையையும்
மேகம் கூடாமல்
கலைந்ததால் .....
பூமியும் மலடியாய்
வெடித்து பிளவுபட்டு
எரிமலை குளம்பாய்
சுனாமியாய்
வடிக்கிறது கண்ணீர் ....
மனிதா மாறிவிடு
இல்லை இயற்க்கை
உன்னையே மாற்றி விடும்
புதைத்து விடும் ...!
5 comments:
///அறிவியல் வளர்ச்சியில்
கடல் நீரும் குடிநீராய்
ஆறு , ஏரி , குளத்து நீரும்
மீன்களின் கண்ணீராய்
சில துளிகள் மட்டும் ...!
//////
உண்மைகளில் சிந்தனை செதுக்கிய வார்த்தைகள் . அருமையானக் கவிதை நண்பரே . பகிர்வுக்கு நன்றி
கவிதை ரொம்ப அருமையா இருக்கு சரவணன் சார் ..எல்லா வரிகளும் உண்மை தான் என்னிக்கு தான் எல்லோரும் தெரிந்த போறார்களோ
நல்லா இருக்கு:)
அம்மா அணில் பாடுமோ
இனி வரும் குழந்தை ...
அழிகின்ற மரத்தோடு
அழிவது அணிலுமே ...!
பிடித்தது.
மரங்களின் நிழலில்
இயற்கையோடு சுதந்திரமாய்
இருந்த மனிதன்
நிலை கதவுகளாலுக்கும்
ஜன்னல்களுக்கு இடையே
அடைபட்டு கிடக்கிறான்
வெயிலின் வெப்பு தாங்காமல் ...!
ரசித்தேன் இவ் வரிகளை
Post a Comment