அவர் ரிலீஸ் ஆனவுடன் , அவசர அவசரமாய் இலங்கைக்கு பிலைட் பிடித்து , மாணவனை பிலைட் தரை இறங்கியவுடன் ஆசை தீர அடித்துள்ளார்.
மதுரையில் உள்ள பார்வையற்றவர்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டு பிரைலி கணினிகளை திரு குமரன் சனியன்று வழங்கினார்கள். அது மட்டும் அன்று அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பிரியாணி வழங்கினார். அந்த நல்ல விசயத்திற்கு நம் சீனா அய்யா ஏற்பாடு செய்து இருந்தார்கள். உடன் என்னையும், மதுரை பிலாக்கர் ஜெய மாறன் அவர்களையும் அழைத்து சென்றார். பார்வையற்ற மாணவர்களைப் பார்க்கும் போது நாம் பார்வையிருந்தும் எவ்வளவு பார்வையற்றவர்களாக இருக்கிறேம் என்பதை உணர முடிந்தது.
அப்போது குமரன் அவர்களுடன் அமெரிக்க கல்வி முறையினை பற்றி பேசும் போது ,"அமெரிக்காவில் குழந்தைகள் ஐந்து வயது பூர்த்தி அடிந்தவுடன் தான் , இந்தியாவில் செர்ற்பது போன்று சேர்கின்றனர். வயது படிப்புக்கு ஒரு எல்லையாக இருக்காது . ஐந்து வயதில் சேரும் ஒருவன் கிரேடு முடித்துவிட்டால், அவன் ஆசிரியர் அவனை அடுத்த கிரேடுக்கு அனுப்பிவிடுவார். அதேபோல், ஆறு கிரேடு முடிய ஆசிரியரே வயது ஒரு பொருட்டாக கருதாமல் மாணவனுக்கு அனுமதி அளிக்கலாம். அதற்கடுத்து போர்டு வந்து விடும் முறையாய் பாஸ் செய்து மட்டுமே அனுமதிக்கப்படுவான், மேலும் அதிலும் வயது ஒரு பொருட்டல்ல . பதினான்கு வயதில் டிக்ரீ படித்தவர்கள் சாதாரணம். நம் திட்டத்தில் அது சாத்தியம் அன்று. " என்றார்.
பிறந்த தேதி தவறுதலாக கொடுத்து , பிறந்த சர்டிபிகேட் உள்ள தேதி போல் பள்ளி சான்றிதழை மாற்றி தர சொல்லி வரும் பெற்றோர்களை அதிகம் பார்த்திருக்கேறேன்.
பிறந்த தேதியில் தான் சரியாக மாணவனை சேர்க்க வேண்டும் ,பெற்றோர்கள் மாணவன் வீட்டில் தொதரவாக இருக்கிறான், அல்லது கவனிக்க ஆள் இல்லாததால் , பள்ளியில் தவறான தேதி கொடுத்து சேர்த்து விடுவது . பின்பு பத்தாம் வகுப்பு சேரும் போது பிறந்த சான்றிதல் கேட்கும் போது உண்மையான் சான்றிதழை கொடுத்து தொந்தரவு செய்வதை பார்த்திருக்கிறேன். இவை வயதுக்கு தகுந்த படிப்பு என்பதால் வரும் விளையுகலாகவே கருதுகிறேன்.
நம் கல்வி முறை மாணவனுக்கு வளைந்து கொடுப்பதாக மாற வேண்டும். மாணவனை மையப்படுத்துவதாக அமைய வேண்டும். மாணவனின் உண்மையான அறிவை வளர்பதாக இருக்கவேண்டும். மாணவனுக்கு அறிவு சார்ந்த விசயங்களுடன், உளவியல் சார்ந்த விசயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கவேண்டும்.
விஞ்ஞான அறிவு வளர்ச்சி எனபது அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், அதாவது செவ்வாய் கிரகம் நோக்கி சென்று கொண்டு இருக்கும் இவ்வேலையில்,மனித வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், உலக அமைதியை நிலை நாட்டவும், உளவியல் அறிவுகளை நாம் கற்றுத்தர வேண்டும்.
மாணவனை அடிக்கும் விஷயம் என்பது உளவியல் சார்ந்தது என்பதாலே சாதரணமாக அதட்டினாலே மாணவன் மனம் உடைந்து போகிறான். ஆகவே தான் ,கல்வி யாழ்வியல் சார்ந்த அறிவை வளர்ப்தாக இருந்தால், மாணவனும் , ஆசிரியரும் தம் எண்ணங்களை மாற்றி, உண்மையான புரிதலை , கற்றலை உருவாக்கித்தருவார். ஒரு தகப்பனுக்கே மகனை அடிக்க உரிமையில்லை என்னும் போது மூன்றாவது நபர்களாகிய
ஆசிரியர்களுக்கு படிக்கவில்லை என்பதற்கு உரிமை இருக்கிறதா...? அடிப்பதால் படிப்பு வரும் என்றால் ஒரு பிரம்பு போதுமே படிக்க வைக்க . ! ஆசிரியர்கள் உணர்வார்களா....?
u
2 comments:
இங்க எங்க நாடுள யுனிசெப் இந்த பணிய எடுத்து விடார்கள் .அடித்தால் அவர்களே போலீசில் கொண்டு சேர்த்துவிடுவார்கள்
பல பள்ளிகளில் (சென்னை சுற்றுப் புறங்களில்) ஆசிரியர்கள் அடிப்பது இல்லை என்று ஒரு நண்பர் சொன்னார்.
பெற்றோர்கள் , ஆசிரியர்கள் அடிக்காத பள்ளிகளை அரவணைக்க வேண்டும், அப்படி செய்தால் இட்ன்ஹா மாற்றம் விரைவில் வந்து விடும்.
சிவசங்கர் சொல்லி உள்ள தகவல் மிக அருமை
Post a Comment