Monday, July 12, 2010

வெறிக்கான விதை

இருள் கவ்வி ....
ஒளி மங்கும்
வாழ்வினில் கஷ்டம்
மட்டும் நினைப்பவனுக்கு ....!
கஷ்டமாகினும் நஷ்டமாக
கருதாமல் ...
படிப்பினையாக கருதுபவனுக்கு
இருள் மங்கி
ஒளி பெருகும்
வாழ்வினில் கஷ்டம்
இஷ்டமாய் நினைப்பவனுக்கு ...!

பாதைகள்
வெண்சாமரம் வீசி அழைப்பதில்லை ...
முட்களாலும்  கற்களாலும்
நிரம்பி ...
நம் கால்களை ரணப்படுத்தியவை
இருப்பினும்...
நாம் நடைபயில பயில
உருவானவை தான்
இன்றைய பளிங்கு சாலைகள்
வெற்றியாளனின்  முகம் போல ...

சூரிய கதிரும்
மேகக் கூட்டத்தை கிழித்து தான்
பூமியை முத்தமிடுகின்றன...

பூமியில் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தையும்
அழுகிறது ....
வலியுணர்த்தும்
சுவாசம் சீர்படவே ...

நீயும்
அவதாரமெடு
அக்கினி பிழம்பாய்
தடைகளை பொசுக்கி....
நடைகளில் வேகம் கூட்டி
விடை காண் தோல்விக்கு ...!

தோல்வியும் பயந்து நடுங்கும்
உன் வியர்வை வெப்பில்
நீராவி விசைபோல்
மன ரயிலை இயக்கு
வெற்றியே உன் இலக்கு ...!

உன் உழைப்பு
விழலுக்கு இறைத்த நீரா..?
இல்லை... இல்லை ...
அது
இலை விடும் நீராவி போக்கு
ஒளி சேர்க்கைக்கு உதவும் பச்சையம்
 உனக்கு வெற்றி நிச்சயம் ...!  
  
இலை உதிர்தல்
இழப்பல்ல
இளவேநீர்க்கான ஆரம்பம்
நீ இழப்பதெல்லாம்
 புது பொலிவுடன்
பெறுவதற்காகவே ...
தோல்வி வெற்றிக்கான சூரியான்
ஆகவே
உதிக்க விடு
மன அழுத்தத்தை பறக்க விடு ..!


வெறிக்கான  விதை
மனதில்  புதை
தோல்வி களை நீக்கி

உளி பட்ட கல்லாய்
குயவன் கை பட்ட
களிமண்ணாய்
தோல்விகளால் உன்னை உருவாக்கு ...!

 

2 comments:

'பரிவை' சே.குமார் said...

//வெறிக்கான விதை
மனதில் புதை//

Super..! super..!! super..!!!

r.v.saravanan said...

உளி பட்ட கல்லாய்
குயவன் கை பட்ட
களிமண்ணாய்
தோல்விகளால் உன்னை உருவாக்கு ...!

குட் குட் நல்லாருக்கு சரவணன் வாழ்த்துக்கள்

Post a Comment