Wednesday, July 21, 2010

மதுரையில் நைஜீரியா ராகவன் 3

       "மனித குலத்தை எது ஒன்றுபடுத்துமோ , அதுவே நல்லது. மேலானது. அழகானது. எது பிரித்துச் சிதைக்குமோ , அது கேடானது. தவறானது , இழிவானது"- டால்ஸ்டாய்
  

       வலைப்பக்கங்கள் மனித குலத்தை ஒன்றுபடுத்துவதுடன் , நல்ல உதவிகளையும் , நல்ல நண்பர்களையும் அறிமுகப்படுத்துகின்றன.

        "வாழ்வு ஒரேயொரு நொடி அல்ல .ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும். ஒவ்வொரு  நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும் "- புத்தர் .


     ராகவன் தன் வாழ்வை ஒவ்வொரு  நொடியிலும் வாழ தெரிந்தவர். அவர் அதை பிறருக்கும் பழகி தருகிறார். நாம் அதை ஒரு நான்கு சுவருக்குள் அடங்கிய இறுக்கமான கற்றல் செயலாக  அமையாமல்   கற்றுத் தருவதை உணராமலே கற்கிறோம். வகுப்பறைகளும் இம்மாதிரியான எளிமையான கற்றலை வெளிபடுத்தினால் மிக அருமையாக இருக்கும்.
  
        ராகவன் அப்படி என்ன கற்றுத்தருகிறார். ..? வாழ்வியல் எதார்த்தங்களை தன் வாழ்வு முறைகளில் , தன்னை வெளிப்படுத்துதலில் , மகனுடனான உறவு முறைகளில் , மனைவியை தோழியாக பாவிக்கும் எண்ணங்களில்  , தன் காரோட்டியிடம் கட்டும் இனிமையான புன்முறுவலில் கண்டித்தலில் , இளையவர்களை வழிநடத்துதலில் , நினைவலைகளில் , இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

         ராகவன் இறந்தகாலத்தில்  வாழாமல், அதே சமயம் தன் இறந்தகாலத்தை மறக்காமல் , அந்த நினைவுகளை நிகழ்காலத்தில் பொருத்தி , புதுமைகளுடன் வாழ்கிறார்.எதிர்காலத்தை நினைத்து நிகழ்கால நிஜத்தை இழக்காமல் , எக்காலத்தையும் வென்றவராய் நிகழ்கால புத்தரை வாழ்கிறார்.

        இன்றைய சந்ததியினருக்கு தாத்தா , கொள்ளு தாத்தா, எள்ளு  தாத்தா வரை தான் தெரிகிறது...என பேச ஆரம்பித்தவர் தன் நகைச்சுவை உணர்வால் அனைவரயும் பேச்சில் தன் பக்கம் கட்டி இழுக்கிறார். உண்மை ..நாளைய புதிய தலைமுறை அப்பா, அம்மா என்ற வரிசையுடன் நின்றாலும் ஆச்சரியம். ஆனால் அவர் பணிபுரியும் நைஜீரியாவில் பெயரை வைத்து அவனின் சந்ததியினரை கண்டு பிடித்து விடலாம் என்கிறார். உ.ம் பாத்திமா பெர்னாண்டோ என்றால் இரண்டாவது வரும் பெயர் அவரின் குடும்ப பெயர் . என்கிறார்.

       சௌராஷ்டிரா மக்களுக்கு இது போன்று குடும்ப பெயர்கள் உண்டு. அவை ஒருவனின் பூர்விகத்தை கண்டு பிடிக்க உதவும். இன்றும் நடைமுறையில் உள்ளன. குமரனிடம் கேட்டால் இன்னும் விளக்கமாக தெரியும்.

       டாக்டர்  தேவன் மாயன் அவர்கள் தன் பூர்விக கோவிலை பற்றி சொல்லி வியப்பூட்டினார். அதாவது நம் முன்னோர்கள் பணம் சம்பாதிக்க தங்கள் பூர்விக இடம் விட்டு வந்து விட்டாலும் , அவர்களில் பழக்க வழக்கங்களை அப்படியே விட்டு விடுவதில்லை, அவர்கள அதை சுமந்து வந்து, அவர்கள் குலதெய்வங்களை அவர்கள் குடிபெயர்ந்த இடங்களுக்கு எடுத்து சென்று தம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்கின்றனர் என்றார். இது ராகவன் இறந்தகாலத்தை நிகழ காலத்தில் கொண்டுவந்து    பொருத்தி வாழ்வதற்கு உதாரணம். 

         கற்றல் இனிமையாக இருக்க தருமி அய்யா என் கல்லூரி பருவத்தில் இப்போது போன்றே நெருங்கி இருந்திருந்தால் , இன்னும் நிறைய கற்று இருக்க வாய்ப்பு உண்டோ என்று எண்ணத்தை  ஏற்படுத்தினார். மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள இடைவெளி குருவாக இருந்தால் கற்றல் எளிமையாக இருந்து , வாழ்வு செம்மை பட்டு இருக்குமோ..?
      
        அதனால் தான் இன்று செயல் வழிக்கற்றல் முறை , மாணவனை மையப்படுத்தி அமைந்து, ஆசிரியரை மாணவனுடன் அமரச் செய்தல் மூலம் பிரம்பை எடுத்து மிரட்டுதலை தடைசெய்வதாக உள்ளது.


       “நிற்காதே, அங்கே பார்க்காதே, வாய மூடி உட்கார் ” போன்ற அதட்டல்களை தடுத்து மாணவன்  ஆசிரியரை ஒன்றாம் வகுப்பு முதல் ஒரு நண்பனாக பார்க்க உதவி செய்கிறது. சுவருகளில் கிறுக்கல்கள் அன்று தடை செய்பட்டு இருந்தது. ஆனால் இன்று சுவர்கள் கீழ் மட்ட கரும்பலகைகளாக மாற்றப்பட்டு ,கிறுக்கல்களை நிஜமாக்கி உண்மையான கற்றலுக்கு வலுவுட்டுகிறது.

        ராகவன் தன் கும்பகோண பள்ளியை சென்று பார்த்ததை மிக அருமையாக சொல்கிறார். அதவும் ஆசிரியருக்குள்ள மரியாதையை தன் ஆசிரியரை பார்க்க சென்றபோது , அவரின் தந்தையின் மாணவன் என்றவுடன் தன் ஆசிரியரின் முக பாவங்களை செய்து காட்டியது அவர், தன் எதிர்காலத்தை நிகழ காலத்தில் கொண்டு வந்து வாழ்கிறார் என்பதை காட்டுவதாக இருக்கிறது..தம் பள்ளியின் கணினி வசதி பற்றி சொல்லும் போது அவரே அங்கு இன்னும் படிப்பது போன்ற உணர்வை வெளிபடுத்துகிறார்.

       எப்படி பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை யாரும் மறக்க முடியாது. ஆகவே , ஆசிரியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து , மாணவர்களை நான்கு சுவர்களுக்கு மத்தியில் புதைத்து விடாமல் , வாழும் இடமாக உணர்த்த செய்யுங்கள். இல்லை என்றால் நிகழ்காலத்திலேயே மாணவர் இதயங்களில் நாம்  புதைக்கப்பட்டு , வாழ்ந்த சுவடு இல்லாமல் மறைந்து விடுவோம்.


                ராகவன் அனுபவம் தொடரும்.......

12 comments:

http://rkguru.blogspot.com/ said...

நல்ல கலை ரசனை படைப்பு பதிவு...வாழ்த்துகள்

பத்மா said...

நடத்துங்க

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... ரொம்ப புகழறீங்க.. இதற்கான தகுதி எனக்கு இருக்கான்னு தெரியலை...

ஸ்ரீ.... said...

சரவணன்,

சக பதிவரைப் பாராட்டும் பண்பு அரிதாகிக் கொண்டிருக்கும் இன்றைய பதிவுலகச் சூழலில், அண்ணன் இராகவன் குறித்த பாராட்டு முக்கியமானது, அவசியமானது. உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. உங்கள் இடுகையின் பாராட்டுக்களை எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன்.

ஸ்ரீ....

தமிழ் உதயம் said...

நண்பர் குறித்து இவ்வளவு அழகாக தெரிந்து வைத்து, இவ்வளவு அருமையாக எழுதியுள்ளீர்கள். உண்மையில் ராகவன் சாரை நண்பராக பெற்றமைக்கு நாங்களும் பெருமைபடுகிறோம்.

Chitra said...

எப்படி பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை யாரும் மறக்க முடியாது. ஆகவே , ஆசிரியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து , மாணவர்களை நான்கு சுவர்களுக்கு மத்தியில் புதைத்து விடாமல் , வாழும் இடமாக உணர்த்த செய்யுங்கள். இல்லை என்றால் நிகழ்காலத்திலேயே மாணவர் இதயங்களில் நாம் புதைக்கப்பட்டு , வாழ்ந்த சுவடு இல்லாமல் மறைந்து விடுவோம்.

..... அருமையான கருத்து.

நண்பரின் சிறப்புகளை எல்லோரும் அறிந்து கொள்ளும் விதம் சொல்லி இருப்பது உங்கள் சிறப்பு. பாராட்டுக்கள்!

Thenammai Lakshmanan said...

எப்படி பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை யாரும் மறக்க முடியாது. ஆகவே , ஆசிரியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து , மாணவர்களை நான்கு சுவர்களுக்கு மத்தியில் புதைத்து விடாமல் , வாழும் இடமாக உணர்த்த செய்யுங்கள். இல்லை என்றால் நிகழ்காலத்திலேயே மாணவர் இதயங்களில் நாம் புதைக்கப்பட்டு , வாழ்ந்த சுவடு இல்லாமல் மறைந்து விடுவோம்.//
மிக அருமை சரவணன்., மேலும் னைவாஇப் பற்றியும் பகிர்ந்த விதம் சிறப்பு..

Balakumar Vijayaraman said...

அருமை அண்ணே, தொடருங்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அருமை..
ராகவன் அவர்களை பத்தி நிறைய, விசயங்க :-))
பகிர்வுக்கு நன்றி.. :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பகிர்வு நண்பா.. தொடருங்கள்..

தேவன் மாயம் said...

டாக்டர் தேவன் மாயன் அவர்கள் தன் பூர்விக கோவிலை பற்றி சொல்லி வியப்பூட்டினார். அதாவது நம் முன்னோர்கள் பணம் சம்பாதிக்க தங்கள் பூர்விக இடம் விட்டு வந்து விட்டாலும் , அவர்களில் பழக்க வழக்கங்களை அப்படியே விட்டு விடுவதில்லை, அவர்கள அதை சுமந்து வந்து, அவர்கள் குலதெய்வங்களை அவர்கள் குடிபெயர்ந்த இடங்களுக்கு எடுத்து சென்று தம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்கின்றனர் என்றார். இது ராகவன் இறந்தகாலத்தை நிகழ காலத்தில் கொண்டுவந்து பொருத்தி வாழ்வதற்கு உதாரணம். ///

சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லிவிட்டீர்கள் !!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

நண்பர் ராகவனைச் சந்தித்து மகிழ்ந்ததை தொடராக எழுதி வருவது நன்று நன்று - நல்ல நினைவாற்றல். வாழ்க

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Post a Comment