காய்ந்துபோன தூரிகைகளைக் கொண்டு ...
கற்பிழந்த கன்னியாய்
இந்த பூமி ....
சல்லடை துளையாக்கி
ஒசோனை உடைத்து
சிவப்பு தீ கக்கி
கொல்லி வைக்க வருகிறான்
சூரியன் நகைத்து ....
தனக்கு தானே கொல்லி வைக்கும் மனிதன் .
பிறக்கும் முன்னே தன்
சந்ததிக்கு பால் ஊற்ற
படைத்தானோ பாலித்தீன் ...!
அடித்தானோ மண் துளையை
தண்ணீருக்கான யுத்தம்
தடுக்கத்தானோ வேற்றுக் கிரக பயணம்..!
கார் கக்கும் புகை
சூடாக்கும் ....
சுட்டிலே புகைகிறது
மனித இஞ்சினும் ...!
பதைக்கிறான் உண்மை மனிதனும்
விதைக்கிறான் மரங்களை ...
இன்னும் நம்பிக்கையில்
நாளைய உலகமாவது நலமாய் இருக்கட்டும்..!
நகரமையமாதல்
நரகமையமாதலாய்
ஆறு , ஏரி , குளம் , கம்மாய்
மூடி ...
காய்கிறேன்
நுனி நாக்கு வறட்சி போக்க...!
4 comments:
சமுதாயக் கோபம் கொப்பளிக்கும் கவிதை.. வலைச்சரத்தில் உங்களைப் பற்றி எழுதி இருக்கிறேன் நண்பா...
http://blogintamil.blogspot.com/2010/07/blog-post_08.html
பச்சையான வார்த்தைகள்... ;-)
ரசித்தேன்
சொல்வது அனைத்தும் சாத்தியம்தான் நண்பரே...
நல்ல கருத்து
கருத்துள்ள கவிதை..
வாழ்த்துக்கள்..சரவணன்..
Post a Comment