ஒரு பெற்றோர் தன் மகளை இரண்டாம் வகுப்பு ஆசிரியை அடிக்கிறார் என்று புகார் செய்தார். அந்த ஆசிரியர் நிர்வாகத்துக்கு வேண்டப் பட்டவர். உடனே அருகில் இருந்த நிர்வாகி , பள்ளி செய்யலரையும் மீறி அந்த குழந்தையிடம் ஆசிரியர் உன்னை எதற்கு அடிக்கிறார் என்று வினவினார். அதற்கு அந்த குழந்தை பாவமாய் படிக்கலைன்னு அடிக்கிறார்கள் என்றார். நான் , "எந்த ஆசிரியரும் குழந்தைகளை அடிக்கக் கூடாது , இருப்பினும் கண்டிக்கிறேன் ..." என்றேன். உடனே அவர் உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா ...? அடித்தால் தான் படிக்கும் என்றார். உடனே .அருகில் உள்ள பெற்றோர்களும் "ஆமாம் , ஆமாம்...உன் பிள்ளை நல்ல படிக்கலைன்னா ...அடித்து படிக்க வைக்கிறது தான் சரி,,," என ஆமோதித்தனர்.
மாலை என் தோழியிடம்," குழந்தைகளை அடிக்கலாமா..? கூடாதா..?"என்றேன்.
அருகில் அவரின் பல ஆசிரிய தோழிகளும் இருந்தனர். "என் தோழி படித்தல் அடித்தலை சார்ந்தது அன்று. ஆனாலும் , இன்று செய்திகள் ஆசிரியர் அடிக்கிறார் என்பதை ஒரு சமுக குற்றமாகவே சித்தரிக்கின்றனர். குழந்தைகளும் டி.வி. மூலம் அடிப்பதை சமூகம் அங்கிகரிக்கவில்லை என்பதை உண்ர்ந்து ,வீட்டில் ஆசிரியர் அடிப்பதை பெரிது படித்துகின்றனர். "என்றார்.
அருகில் இருந்த மற்றொரு ஆசிரியர் ,"அடிக்கிறவங்க அடிச்சா ...குற்றமில்லை என்னை போன்ற ஏப்ப சாப்பைகள் அடித்தால் தான் தவறு ...அதுவே நிர்வாகத்தால், பெற்றோர்களால் , ஏன் சக ஆசிரியர்களால் கூட பெரிதுபடுத்தப்பட்டு ,, கை , கால், கண் , காது , மூக்கு முளைத்து செய்தியாகி விடுகிறது ..."
" சரி , முடிவா என்ன சொல்லுறீங்க ....அடிக்கிறது தவறா ..? சரியா..? ” மீண்டும் நான்.
"சார், இன்னைக்கு தின தந்தி செய்தி ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியர் ...தவறுதலாக எழுதிய மாணவியை திட்டி, 'எழுத்தே தெரியலை உனக்கு என்ன படிப்பு வரப்போகிறது ' என சொல்ல , அதை தவறாக புரிந்த மாணவி பெற்றோரிடம் வேதனை பட்டுள்ளது , பின் தனிமையில் தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டதாம் . அதே போல் ஒரு பள்ளியில் ஆசிரியர் படிக்கவில்லை இன்று காதை சேர்த்து கன்னத்தில் அரைய ...காது செவிடாகி விட்டது. அந்த பையனின் தந்தை போலிஷ் ஏட்டு ,வாத்தியார் மீது போலிஸ் கேஷ் ...இப்படி வாரச் செய்திகளை அடிக்கினால் , மாத செய்திகளை கொண்டு ஒரு தனி வார இதழ் நடத்தலாம் ...." என்றார் தோழி.
"சார் ... பட்டியலிட்டது உங்களிடம் ஒரு கேள்வியை கேட்பதற்கு தான்....அடிப்பது தவறு ஒத்துக் கொள்கிறேன். நானும் ஒரு ஆசிரியர் மாணவன் படிப்பிற்காக கண்டிப்பது வருந்த தக்கது ...ஆனால் மாணவன் சேட்டைகள் , ஒழுக்க கேடான விசயங்களை அன்பால் திருத்த முடியாத பட்ச்சத்தில், ஆசிரியர் மனம் ஒடிந்து அடிக்க வேண்டிய சுழலுக்கு தள்ளப்படுகிறார்.....மாணவனுக்கு ஆசிரியர் மீது பயம் என்பதே போய் விட்டது.... கண்டித்தல் தவறு என்பது ஆசிரியர் பணியினை செய்ய விடாமல் தடுப்பது போன்றதாகும் ..." என கடுமையாக பேசினார்.
" ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்தி பார்க்கட்டும் , அவன் நாய் குட்டி போன்று நாம் வீடு செல்லும் வரை நம்மை சுற்றியே வருவான். அவனை குச்சி எடுத்து தண்டித்தால் தான் படிப்பான் என்றால் , நாம் மந்திர வாதி போன்று ஒரு அழகான குச்சி வைத்து வித்தைகள் செய்யலாமே...! நம்மை பார்த்தாலே மரியாதை வர வேண்டும் , கை எடுத்து கும்பிட சொல்ல வேண்டும், அதை தவிர்த்து தலை தெறிக்க ஓடச் செய்யக் கூடாது .படிப்பு மீது ஒரு படிப்பு வர அன்பு ஒன்றே நல்லது ...கனிவான நாலு வார்த்தைகள் அவனை நம்மிடம் பேச வைக்கும் ,அதுவே கற்றல் சுழலை இனிமையாக்கி , நம்மை சாராமல் மன்னவனை சார்ந்த கற்றலை தரும்.." என்றேன் நான் .
" சார்...அடிக்காம இருந்தா இந்த சமுகம் வன்முறையான ஒரு பாதையை தேடுவதை போன்று உணர்கிறேன்... சாதாரண உனக்கு படிப்பு வராது எனக் கூறிய வார்த்தை மனதை பாதிக்கிறது ,அதனால் தன் வாழ்வையே தீ வைத்து பொசுங்கச் செய்கிறது . தண்டித்து வளர்க்காத பிள்ளை வன்முறையை ஒரு ஆயுதமாக எடுக்க இது வழிவகுக்கிறதோ என்ற பய உணர்வு உள்ளது . அரசும் ஆசிரியர்கள் மாணவனின் நலனில் அக்கறை கொண்டு தண்டிப்பது என்பது குற்றமல்ல என தீர்ப்பு கொடுத்து , வன்மையான தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள் மீது மட்டும் கடுமையான தண்டைனையை அளிக்க ஆவணம் செய்ய வேண்டும்... மாணவன் மனதில் அடித்தல் தவறு என விதைத்தால் அது நளைய சமூகத்தினை வன்முறையில் நாமே ஈடுபடுத்துவதாகும் ...." என்றார் தோழி .
a
"சார், மாணவனை தண்டிக்க , அடிக்க ஆசிரியருக்கு உரிமை உண்டு என பகிரங்கமாக கல்வித் துறை அறிவிக்க வேண்டும் .ஆசிரியர்கள் பயந்து பயந்து மாணவனை தண்டிப்பதால் ,மாணவன் அதை தவறான பாதையில் பயன்படுத்தி , ஆசிரியரை கண்டிக்கிறான் ..பெற்றோர்களும் இதை ஆமோதிப்பதாலும், மாணவன் சமுக பொறுப்புள்ளவனாக வாழ்வதை விடுத்து கோழைகளாய் தன்னை தானே அழிப்பவர்களாகவும் , ரவுடிகளை போன்று பிறரை காயப்படுத்துதளையும் நடத்துகின்றான். ஆசிரியர்கள் சுதந்திரமான கற்றலை கொடுப்பது போன்று ,வகுப்பில் மாணவனை நல்ல குடிமகனாக உருவாக்க தண்டித்தல் வேண்டும்...."என தோழி உரைத்தாள்.
"கற்றல் கருத்து திணிப்பாக இருக்காமல், கசக்கும் வேப்பங் கொழுந்தாக இல்லாமல்
மாணவன் விரும்பும் விதமாக , கருத்துகளை மையபடுத்தி பாடமுறை செயல் திட்டமாக படிக்கப்பட்டு, விளையாட்டு முறையில் ,மாணவனை மையபடுத்தி , கற்றல் இனிப்பாக மாறினால் பிரம்புக்கு வேலையில்லை. புரிந்து கற்றல் , ஆசிரியர் இடைவெளி குறைத்து ,மாணவனை நோக்கி நகர்தலை செயல்படுத்தும் " என்றேன் நான்.
"நம் கல்வி திட்டம் மாணவனை மையப்படுத்துவதாக அமையாவிட்டாலும் பரவாயில்லை மாணவனை கோழைகளாக வளர்க்கும் முறையாக இல்லாமல் இருந்தால் அதுவே நல்லதாகும் .இன்று ஒழுக்க கேடான தவறுகள் ஆசிரியர் மீத பயம் இல்லாததால் உண்டாகிறது. மாணவனை தண்டித்தல் ஆசிரியர் உரிமையாக்கப்பட வேண்டும் .அதற்காக இரத்தம் வழியும் வரை அடிக்கக் கூடாது .ஆசிரியர் மீது எக்காரணம் கொண்டும் மாணவனை அடித்தார் என்ப்தற்காக காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது குற்றம் பதிவு செய்தலை வன்மையாக கண்டிக்கிறேன் . எந்த ஆசிரியரும் மாணவன் மீது வன்கொடுமை நடத்துவதில்லை என்பதால் அரசு , பொதுநல அமைப்புகள் தம் நிலைமைகளை மாற்றி அமைத்து கொள்ளவேண்டும்..." என்றார் தோழி.
"என்னை பொறுத்தவரை கற்றல் இனிமையாக , செயல் வடிவில் இருந்தால், மாணவன் தன் பொறுப்புணர்ந்து படிக்க ஆரம்பிப்பான், மாணவன் ஆசிரியர்கள் மீது பாசம் பொழிவார்கள். அடித்தால் தான் படிப்பானா ? தவறு. உணர்ந்து படித்தால் நல்லது. உணர்த்துதலை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். கற்பனைக்கு வேலை கொடுத்தால் நாளைய சமுகம் நம்மை வாழ்த்தும். மாணவன் எப்போதும் எதாவது ஒரு ஆக்க பூர்வமான செயலை செய்ய , ஆசிரியர்கள் முயன்றால் , நாமும் வல்லரசாவோம்..." என்றேன்.
எது சரி...? எது தவறு....? கருத்திட்டு கல்வி கண் திறக்கவும்.
9 comments:
"என்னை பொறுத்தவரை கற்றல் இனிமையாக , செயல் வடிவில் இருந்தால், மாணவன் தன் பொறுப்புணர்ந்து படிக்க ஆரம்பிப்பான், மாணவன் ஆசிரியர்கள் மீது பாசம் பொழிவார்கள். அடித்தால் தான் படிப்பானா ? தவறு. உணர்ந்து படித்தால் நல்லது. உணர்த்துதலை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். கற்பனைக்கு வேலை கொடுத்தால் நாளைய சமுகம் நம்மை வாழ்த்தும். மாணவன் எப்போதும் எதாவது ஒரு ஆக்க பூர்வமான செயலை செய்ய , ஆசிரியர்கள் முயன்றால் , நாமும் வல்லரசாவோம்..." என்றேன்.
...... இங்கு எனது மகளின் பள்ளிகூடத்தில், அடிப்பதில்லை. இங்கு தவறு செய்பவர்களுக்கு, தண்டனை தருவதை விட, ஆசிரியர் சொல்படி கேட்டு நடக்கும் குழந்தைகளுக்கு சின்ன சின்ன பரிசு வழங்குகிறார்கள். ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தைகளை கண்டு, மற்ற குழந்தைகளும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
புகைபிடிப்பது தடை செய்ய பட்டு உள்ளது மாதிரி - அடிப்பதும் செய்யப்படவேண்டும்.
இந்தியாவில் இது தொடர்பா ஒரு சட்டம் வருத்துன்னாங்க ... இன்னம் வரலையா ?
ஆசிரியர் அடிக்கலாமா, கூடாதா என்று கேட்டால் அடிக்க கூடாது என்றுதான் சொல்லுவேன். ஆனால் ஆசிரியர் திட்டியதற்கு எல்லாம் தற்கொலை என்று கேட்கும் போது, சமுதாயம் எங்கு சென்று கொண்டு இருக்கின்றது, மழலைகள் மன நிலை எங்கு போய் கொண்டு இருக்கின்றது எனப் புரியவில்லை.
தொலைக்காட்சிகளின் தொடர்களின் தாக்கம் இந்த விஷயத்தில் குழந்தைகளின் மனநிலையின் பயங்கரதாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
பொருமை என்பது சிறிதும் இல்லாமல் போய்விட்டது.
//அவனை குச்சி எடுத்து தண்டித்தால் தான் படிப்பான் என்றால் , நாம் மந்திர வாதி போன்று ஒரு அழகான குச்சி வைத்து வித்தைகள் செய்யலாமே...! நம்மை பார்த்தாலே மரியாதை வர வேண்டும் , கை எடுத்து கும்பிட சொல்ல வேண்டும், அதை தவிர்த்து தலை தெறிக்க ஓடச் செய்யக் கூடாது //
அப்பட்டமான உண்மை..பயத்தால் ஒருவனை பணிய வேண்டுமானால் செய்யலாம். ஆனால் படிக்க செய்ய முடியாது. நல்ல பதிவு
அடித்து படிக்க வைத்தல் தவறு தான்.. குறிப்பாக ஆசிரியர்கள் அடிப்பது, முற்றிலும் தவறு..
குழந்தைகள் ஆசிரியரின் ஒரு சிறு பாராட்டுக்காகவே, விழுந்து விழுது வேலை செய்வாங்க..
அவர்களை உற்சாகப்படுத்தி, தட்டி கொடுத்து படிக்க வைக்கிறது, தான் நல்லது..
அதிலும், சக மாணவர்கள் முன்பு, அடித்தல் எல்லாம், அவர்களுக்கு மானப் பிரச்சினையாக இருக்கும்..
அது தவறான முடிவுகளுக்கு செல்ல தூண்டுகோல்..
""" குழந்தைகளை, அடித்து ஒடிக்காமல், அன்பால் வளைக்க முயற்சி செய்யலாம்.. """
நானும் ஆனந்தி சொன்ன கருத்தே பின்பற்றுகிறேன் ...அடிக்காமல் அன்பினால் பசங்களை திருந்த தான் பார்கனம் ..
குழந்தைகளை ஆசிரியரும் சரி பெற்றோரும் சரி அடிக்கவே கூடாது.
எனக்கு என்னை அடிக்காதா ஆசிரியர்கள் மேலே இன்று அன்பு பாசம் ஏற்படுகிறது. என் பெற்றோர் இது வரை அடித்தது இல்லை., இன்று நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல், நல்ல பதவியில் நல்ல செல்வ செழிப்போடு இருக்கிறேன். அதற்க்கு காரணம் பெற்றோர்கள் தந்த சுதந்திரமே.
சகோதரி சித்ரா சொல்வது போல பல பள்ளிகளில் இப்போது எல்லாம் அடிப்பதே இல்லை. ஏன் சகோதரியின் தந்தை போ ம ரா சார் கூட பள்ளியில் அடிப்பவர் என்று நான் கேள்விப் பட்டது இல்லை. வீட்டில் அடிப்பாரா என்று தெரிய வில்லை. (lol)
நல்ல ஆரோக்கியமான விவாதம்...
Post a Comment