"தான் ஒரு பேச்ச்சாளர் இல்லை "என்று தொடங்கினாலும் குழந்தைகளுக்கு காமராசரின் கல்வி பணிகளை மிக அருமையாக சொன்னதுடன் , இம்மாதிரி விழாக்களில் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் . அனைத்து வகுப்பிலும் பேச்சுக் கலை வளர்க்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளை பிறப்பித்தார் .
"ஆசிரிய பணி அறப்பணி அதற்கே நீ உன்னை அற்பணி" சீனாவின் வார்த்தைகளின் உண்மை நிலைமையை நான் நினைத்ததன் விளைவு இந்த பதிவு.
இன்று அற்பணிப்பு என்பதை விட ஆசிரிய பணியை ஒரு தொழிலாக கொண்டு காசுக்கு வேலை பார்க்கும் ஒரு தொழிலாக நினைப்பதன் விளைவு தான் ஆசிரியர்களை பற்றி தவறான செய்திகள் பத்திரிகையில் வருகின்றன. ஆசிரியர்கள் கருத்து திணிப்பாக பாடம் கற்பிப்பதை கருதாமல் , ஒரு சிறந்த குடிமகனை , நல்ல ஒழுக்க சீலனை உருவாக்குவதாக தம் பணியை நினைத்தால் ,கருத்து திணிப்பு என்பது மறைந்து உண்மை உணர்த்துதல் என்ற நிலை பிறக்கும்.
ஒரு கொத்தனார் போல் காலை ஒன்பது மணிக்கு கரண்டி பிடித்தோம் , மாலை ஐந்து மணிக்கு கரண்டி கீழே வைத்தோம் என்ற நிலையில் ஆசிரியர்கள் காலை சாக்பீஸ் பிடித்தோம் கருத்துகளை , கொத்தனார் கலவையை அள்ளி பூசுவது ,திணிப்பது போல் மாணவர்களிடம் திணித்தோம் என்று இருப்பார்களேயானால் , கல்வி திட்டத்தில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் கல்வி வளராது , பின் கல்வி வளர்ச்சி நாள் எப்படி உண்மையாகும் .
நான்கு பாட திட்டம் ஒருங்கிணைந்து சமசீர் கல்வி முறை கொண்டுவந்தாலும் ,கல்வி சென்று அடையும் முறையிலும் சமசீர் வேண்டும் அல்லவா...?
தனியார் பள்ளி ஆசிரியர்களை போல் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் பணி புரிய வேண்டும் . குறைந்த சம்பளம் அதிக உழைப்பு தரும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் காட்டும் அற்பணிப்பு போல் அனைத்து போர்டு ஆசிரியர்களும் உழைக்க வேண்டும் .அதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி முறையிலும் , பாடதிட்டத்திலும் பொதுவான கட்டமைப்பை நோக்கும் கல்வியாளர்கள் தரமான கற்றல் மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமச்சீர் என்பது எல்லா விதத்திலும் இருக்க வேண்டும் .
சமீபத்தில் மாறுதலுக்கு சென்று வந்துள்ள என் நண்பர் ," பணியிடங்கள் மறைக்கப் பட்டு , அரசியல் செல்வாக்குடன் பணம் கொடுத்து ஆசிரியர்கள் தனக்கு வேண்டிய இடம் பெறுகின்றனர் "என்று கூறினார். '' நான் அரசு எந்தவித ஒளிவு மறிவு இல்லா மாறுதலை நடத்துவதாகவும் , இது போதுமான பணியிடம் இல்லாததால் , கிடைக்காதவர்கள் சொல்லும் கருத்து" எனவும் கூறி சமாதானப் படுத்தினேன்.
சரி நீங்கள் கூறுவதையும் ஒப்புக் கொள்கிறேன் .நான் சென்றபோது ஒரு ஆசிரியருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை , அது அவருக்கு கிடக்கும் பணியிடம் தான் ஆனாலும் காசு கொடுத்து பெற்றுள்ளார். ஆணை அவர் கலந்துகொண்டு பெற்றதாக அந்த மாலையே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு இன்னும் பணி மாறுதலுக்கான ஆர்டர் வரவில்லை என்று ஆதங்கப்பட்டு சொன்னாலும் அவரின் வாதம் எனக்கு பிடித்தது.
காசு கொடுத்து மாறுதல் பெறும் ஒரு நபர் அரசு இயந்திரம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று நினைத்து , பள்ளிக்கு செல்லாமல் சம்பளம் வாங்கும் வாய்ப்பு இருக்கும் , அல்லது நீங்கள் அடிக்கடி சொல்லுவது போல் கொத்தனார் வேலை மாதிரி தொழிலாக செய்வான், உண்மையான அற்பணிப்பை கொடுத்த காசு எடுக்க டுயுசன் வரச்சொல்லி பிழைப்பு நடத்துவார்.அல்லது காசு கொடுத்து வாங்கிய சோகத்தில் பாடமே நடத்த மாட்டார். அதை விடுங்கள் உண்மையான இடம் கிடைக்காதவன் இதே மன நிலையில் பாடம் கர்ப்பித்தலில் ஆர்வம் காட்ட மாட்டான். கல்வி இதனாலும் பின் தங்கும் என்கிறார் . அவரின் பேட்ச்சில் உண்மையும் உள்ளாது . அரசும் இது மாதிரி தவறுகள் நடக்காமல் பர்ர்க்க வேண்டும் . கல்வி வளர்ச்சியில் இதுவும் தேவை .
மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற, சரியான பாதையை தேர்ந்த்தெடுக்க , காமராசர் போன்ற நாட்டுக்குளைத்த பெரியவர்கள் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப் பட வேண்டும். தலைவர்களின் இளமை வரலாறு தான், அவர்களை பிற்காலத்தில் தேசத்திற்கு உழைக்கும் தலைவர்களாக உயர்த்தியது என்பதை உணர்த்த வேண்டும்.
காமராசர் பிறரை பார்த்து எழுத்தாத (காப்பி யடிக்கத) இளமை பழக்கம், வரிசையில் சுண்டல் வாங்கிய பழக்கம், சுதந்திர போராட்ட பேச்சுக்களை கேட்க கடையை அடைத்து சென்றது, சமயோகித புத்தியால் யானையை அடக்கியது போன்றவைகள் தான் காமராசரை பெரும் தலைவராக்கியது என்பதை குழந்தைக்களுக்கு உணர்த்த வேண்டும் .
"பள்ளிக் கூடம் சோறு போடுமா...? ஆடு மாடு சோறு போடும் ." என்று சேரன்மாதேவி ரயில்வே கிராசிங்கில் ஆடு மேய்ப்பவன் மூலம் கிராசான வியாசம் ,காமராசர் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி , மதிய உணவு திட்டமாக உருவாக்கியது. குல கல்வி முறை எதிர்த்த காமராசர் பட்டி , தொட்டி எல்லாம் பள்ளிகளை நிறுவ கட்டளையிட்டவர். அண்மைய கல்விக்கு அச்சாணியாக விளங்கியவர் நம் கருப்பு காந்தி காமராசர்.
காமராசர் பிறந்த நாளில் அரசு வயது மூப்பு கருத்தில் கொண்டு பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் . அதற்கு தனி திறமை வெளிப்படுத்த , பிராஜெக்ட் தயாரித்தல் தான் பதவி உயர்வு என ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும் .அனுபவம் மட்டுமே ,அதாவது பணியின் எண்ணிக்கையை கொண்டு மட்டுமே , பதவி மூப்பு என்பது தவறானது ,மேலும் முட்டாள் தனம் என்பதை ஆசிரியர்களும் உணர்ந்து செயல் பட வேண்டும் .அனுபவத்துடன் ஆசிரியர்கள் திறமையை நிருபிக்க வேண்டும் .
காமராசரின் கே பிளான் போல் இளையவர்களுக்கு வழிவிடும் திட்டம் ஏற்படுத்த வேண்டும். வயது ஒரு தடையாக இருக்க கூடாது. குறைவும் ,கூடுதலும் கல்வி பணியில் பார்க்க கூடாது.நேரடி கல்வி அலுவலர் பணிக்கு குறைந்த பட்சம் வயது நிர்ணயம் பணி அனுபவம் உள்ளவர்களை தடுப்பதாக உள்ளது. இக் குறைகள் கல்வி வளர்ச்சி நாளில் குறைக்க பட வேண்டும்.
காமராசர் பிறந்த நாளிலாவது நாம் நம் பணியை சிறக்க சமச்சீராய் பணி புரிந்து, மாணவர் அறிவு கண் திறப்போம்.
7 comments:
///தனியார் பள்ளி ஆசிரியர்களை போல் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் பணி புரிய வேண்டும் . குறைந்த சம்பளம் அதிக உழைப்பு தரும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் காட்டும் அற்பணிப்பு போல் அனைத்து போர்டு ஆசிரியர்களும் உழைக்க வேண்டும் .அதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.///
பெரும்பாலான சரசரி மக்களின் எதிர்பார்ப்பு இதுதான் சார். பள்ளி, கல்லூரி என்று கடந்துவந்த என் அனுபவத்தில், எனக்கு இருவகையான ஆசிரியகளின் பரிச்சயம் உண்டு.
1. ஆசிரிய வேலையை சம்பளத்திற்காக மட்டுமே பார்ப்பவர்கள், இவர்கள் அரசுதரும் எல்லா சலுகைகள் எதையும் விட்டுவிடக்கூடாதென்று, பட்டியல் போட்டு அனுபவிப்பவர்கள், உடல் நலத்திற்கு எந்த பிரச்சினை இல்லையென்றாலும், கனக்கு போட்டு மெடிக்கல் லீவு எடுப்பார்கள், சைடு பிஸினஸ் பன்னுவார்கள், சம்பளம் அதிகம் கேடு மற்றும் பல சலுகைகள் கேட்ட்ப் போராடுவதிலேயே இவர்கள் உழைப்பையும், கவனத்தயும் செலுத்துவார்கள்.
2. இவர்கள் உன்னதமானவர்கள், ஆசிரியப்பணியை இறப்பணியாக கருதுபவர்கள், தான் அறிந்தவற்றை தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு எந்த வ்ழியிலாவது சேர்த்துவிட துடிப்பவர்கள், இந்த பணியை விரும்பி செய்பவர்கள்.
இந்த 2 வது வகை ஆசிரியர்களிடம் எனக்கு இப்போதும் நல்ல தொடர்புகள் உண்டு.
உங்கள் எழுத்துகளிலிருந்து, நீங்கள் 2 வகையை சேர்ந்தவர் என்று தெரிகிறது.
நன்றிகள் பல.
//காமராசர் பிறந்த நாளிலாவது நாம் நம் பணியை சிறக்க சமச்சீராய் பணி புரிந்து, மாணவர் அறிவு கண் திறப்போம்//
இந்தியா வல்லரசாகும்.
மாணவர் வாழ்வு சிறக்க..
உங்க ஐடியா நல்லா இருக்குங்க..
நல்ல பகிர்வு.. நன்றி..
உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
அருமையான பதிவு சரவணன் சார்.
அருமை சரவணன்
ஆரோக்கியமான பதிவு சார்
Post a Comment